1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர் குறித்த ஆவணங்கள்

"பங்களாதேஷ்க்கு எதிரான ஏகாதிபத்திய சதியை தோற்கடியுங்கள்"

16 April 2012

[இந்த அறிக்கை அனைத்துலக குழுவின் பெயரால், எந்த பிரிவுடனும் ஆலோசிக்காமல் நியூஸ் லைன் இல் December 6,1971வெளியிடப்பட்டது]

Michael Banda,

Socialist Labour League

காட்டுமிராண்டித்தனமான யாஹ்யா கான் ஆட்சி மற்றும் இந்தியாவில் ஏகாதிபத்திய பிரிவினையின் மரபுரிமை இவற்றிற்கு எதிரான வங்காள எதிர்ப்பு இந்திய இராணுவப் படைகளின் தலையீட்டை அடுத்து ஒரு தீர்மானிக்கும் கட்டத்தை எட்டியுள்ளது.

இனி, முக்தி பாஹினி மற்றும் இந்திய இராணுவத்தின் இணைந்த படைகள் பங்களாதேஷில் பாக்கிஸ்தான் படைகளை நசுக்கி விட்டு டாக்காவை ஆக்கிரமிப்பது என்பது, எவ்வளவு நேரம் பிடிக்கும் என்பது மட்டும் தான் அறியப்பட வேண்டியிருக்கிறது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டும் தான் பாக்கிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் பிரிந்து கொள்வதற்கான உரிமையை ஒரு கொள்கைரீதியாக ஆதரித்த ஒரே அமைப்பாகும்.

இது இப்போது சோசலிச அடித்தளங்களின் மீது சுயமாக மற்றும் புரட்சிகரமாக ஒன்றிணைக்கப்பட்ட இந்தியாவுக்கு முன் நிகழ்வாக வெறுக்கப்பட்ட பாக்கிஸ்தான் இராணுவத்தின் தோல்வி மற்றும் பங்களாதேஷின் விடுதலையின் பக்கம் நிபந்தனையின்றி நிற்கிறது.

பாக்கிஸ்தான் அடக்குமுறையை அகற்றும் தங்கள் போராட்டத்திற்கு முதலாளித்துவ மற்றும் தொழிலாளர் அரசுகளின் ஆதரவைப் பெற முயலும் கிழக்கு வங்காள மக்களின் உரிமையை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முழுமையாக ஆதரிக்கிறது.

பங்களாதேஷ்க்கு இராணுவ மற்றும் பொருளாதார உதவி அளிப்பதான இந்திய பூர்சுவா அரசாங்கத்தின் முடிவினை நாங்கள் விமர்சனரீதியாக ஆதரிக்கிறோம். இந்த சண்டையை ஐக்கிய நாடுகள் சபை தலையீடு மற்றும் இந்தியாவுக்கான பொருளாதார உதவியை கொஞ்சம் கொஞ்சமாய் நிறுத்துவதான அச்சுறுத்தல் இவற்றின் மூலம் நிறுத்துவதற்கான அமெரிக்க ஏகாதிபத்திய முயற்சியை நாங்கள் கண்டிக்கிறோம்.

ஆயுத விநியோகங்களை நிறுத்தும் அதன் முடிவு காட்டுவதைப் போல, இந்திய-பாக்கிஸ்தான் போரினை இந்திய பொருளாதாரத்தை பலவீனப்படுத்துவதற்கு பயன்படுத்திக் கொள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம் தீர்மானத்துடன் இருக்கிறது .

அமெரிக்க நிதி மூலதனம் இந்தியாவிற்குள் தங்குதடையின்றி ஊடுருவவும் டெல்லியில் ஒரு கூடுதலான அமெரிக்க ஏவல் ராஜ்ஜியத்தை நிறுவவும் ஏற்பாடு செய்வதற்கு இது விரும்புகிறது.

தென்கிழக்கு ஆசிய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் வளர்ந்து வரும் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களை அடக்கவும் பின்தள்ளவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய மூலோபாயத்தின் ஒரு அங்கமாகும் இது.

அதே சமயத்தில் இந்திய ஜனநாயகப் புரட்சியின் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு வங்காள மற்றும் இந்து பூர்சுவாக்களின் திறன் மீது எந்த ஒரு நம்பிக்கையும் வைக்க வேண்டாம் என்று இந்திய மற்றும் வங்காள சோசலிஸ்டுகளை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு வலியுறுத்துகிறது.

திருமதி இந்திரா காந்திக்குப் பின்னால், ஜன சங்கத்தின் இந்து வெறியரும், பிரிவினைக்கு பின்னர் தாங்கள் இழந்த இலாபமளிக்கும் சணல் மற்றும் தேயிலை தொழிலகங்களை திரும்பப் பெறும் பொருட்டு கிழக்கு வங்காளத்தை இணைத்துக் கொள்ள விரும்பும் பெரும் வணிக நலன்களும் இருக்கின்றன.

கல்கத்தாவில் உள்ள வலதுசாரி அவாமி லீக் தலைமையில் பெரும் பகுதியை வென்று விட்ட சூழ்நிலையில், இந்திய பூர்சுவாக்களும் நிலப்பிரபுக்களும், பாக்கிஸ்தானை வெற்றி பெற்ற பின்னர், அவாமி லீக் கூட்டணியினர் மூலமாக தங்களது அதிகாரத்தை திணிக்க முயலுவார்கள்.

அதே சமயத்தில் முக்தி பாஹினியை சுற்றிய எந்த புரட்சிகரமான போக்குகளையும் இரக்கமின்றி நசுக்கிடவும் கிழக்கு மற்றும் மேற்கு வங்காளத்தின் புரட்சிகர இணைவை நோக்கிய எந்த இயக்கத்தையும் தடுக்கவும் அவர்கள் முயற்சி செய்வார்கள்.

இதனால் தான் இதுவரை காங்கிரஸ் இயக்கம் பங்களாதேஷ் குடியரசை அங்கீகரிக்க மறுத்து வருகிறது.

தங்களை இந்து ஆளும் வர்க்கத்தின் பொருளாதார மற்றும் மூலோபாய நோக்கங்களுக்கு கீழ்ப்படியச் செய்து கொள்ள தயாராய் அல்லாத குழுக்களை தனிமைப்படுத்துவதற்கும் அழிப்பதற்கும் மௌலானா பஷானியின் தேசிய அவாமி கட்சியுடனான தந்திரங்களையும் அது விளக்குகிறது.

ஏப்ரலில் இலங்கையின் கிராமப்புற எழுச்சிக்கு எதிராக திருமதி பண்டாரநாயக்கவுக்கு ஆதரவான இந்திய அரசாங்கத்தின் தலையீடு உட்பட மேற்கு வங்காளத்தில் நக்சலைட்டுகளை தீவிரமாக நசுக்கியமை இந்திய பூர்சுவாக்களின் பிற்போக்கான தன்மைக்கு ஒரு உறுதிப்படுத்தும் சான்று ஆகும்.

இந்திய தலையீட்டுக்கான மற்றுமொரு, சொல்லப்போனால், இன்னும் கூடுதல் அடிப்படையான காரணம், பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு தூண்டி விட்டுள்ள மக்கள் எழுச்சி குறித்த பயங்கர பயமும், இந்த எழுச்சி மேற்கு வங்காளத்திற்கும் பரவக் கூடும் என்கிற அச்சமும் தான்.

வங்காள தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் புரட்சியாளர்களை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு எச்சரிக்கிறது.

அவர்கள் தங்களை தனியாக அமைப்புப்படுத்திக் கொண்டு, அவாமி லீக் பூர்சுவா மற்றும் ஸ்ராலினிஸ்டுகளிடம் இருந்தான தங்கள் அரசியல் சுயாதீனத்தை பராமரிக்க வேண்டும்.

முன்னர் அவர்கள் ராவல்பின்டி ஆட்சியை ஒப்புக் கொண்டதைப் போல, இந்த போக்குகள் அவர்கள் போராட்டத்தை சிதைத்து அவர்களை டெல்லியின் கருணையில் வாழுமாறு செய்து விடும்.

புரட்சியாளர்கள் தேசிய போராட்டத்தை, ஏழை விவசாயிகளின் நலனுக்குகந்த வகையில் சமரசமின்றி நிலங்களின் மறுபிரிப்புக்கான போராட்டம், ஆலைகளை தேசியமயமாக்குவது மற்றும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை அமைப்பது ஆகியவற்றுடன் இணைக்க வேண்டும்.

தொழிலாளர்களும் விவசாயிகளும் இந்திய பூர்சுவாக்களின் திட்டங்களுக்கு எதிராக போராடும் நிலைக்கு நிர்ப்பந்திக்கப்படுவார்கள். அவர்களுக்கு இந்தியா மற்றும் உலகின் பிற பகுதிகளின் தொழிலாள வர்க்கத்தின் ஆதரவு அவசியப்படும்.

பங்களாதேஷுக்குள் மக்கள் தங்களுக்குள்ளேயே தீர்மானமாய் திரள்வது, நடவடிக்கைகள் மேற்கொள்வது, தொழிலாள வர்க்கத்தின் ஒரு மாற்று புரட்சிகர தலைமையை கட்டுவது, இவையே பங்களாதேஷ் தொழிலாளர்களின் உடனடித் தேவைகளாகும்.

பங்களாதேஷ் குடியரசை அங்கீகரிக்க மறுத்துள்ள, வங்காள மக்களின் தேசிய இலட்சியங்களை வஞ்சித்துள்ள பீக்கிங் மற்றும் மாஸ்கோ ஸ்ராலினிச பங்கை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு திட்டவட்டமாக கண்டனம் செய்கிறது.

* பங்களாதேஷ் புரட்சி நீடுழி வாழ்க!

* இந்து முதலாளித்துவவாதிகளுடன் சமரசம் வேண்டாம்!

* இந்தியாவின் புரட்சிகர மற்றும் சோசலிச ஐக்கியத்தை நோக்கி நடைபோடு!

Revolutionary Communist League Statement


புரட்சிக்கம்யூனிஸ்ட் கழக அறிக்கை


December 8,1971

கிழக்கு வங்காளத்தில் பாக்கிஸ்தான் இராணுவப் படைகளின் தோல்விக்கு பின்னர் டாக்காவில் "பங்களாதேஷ்" அரசாங்கம் அதிகாரத்தில் அமர்த்தப்பட்ட நிலையில், ஏகாதிபத்தியத்தால் ஸ்ராலினிசம் மற்றும் இந்து, முஸ்லீம் தேசியவாத பூர்சுவாக்களின் மறைமுக அனுமதியோடு அமைக்கப்பட்ட போருக்குப் பிந்தைய அரசியல் நிலைமையானது மீளமுடியாதளவிற்கு உடைந்துகொண்டியுள்ளது. இப்போது முதல் ஆசியாவின் இப்பகுதியில் மாறாததென்று எதுவொன்றும் இருக்கப் போவதில்லை. ஒரு புதிய காலகட்டம் பிறந்திருக்கிறது.

துணைக்கண்டத்தில் ஏகாதிபத்தியத்தால் ஸ்தாபிக்கப்பட்ட அரசியல் கட்டமைப்பின் உடைவானது, கடந்த காலத்தில் உலக முதலாளித்துவத்தால் உணரப்பட்ட பணவீக்கத்துடனான வளர்ச்சியின் நீண்ட காலகட்டத்தின் முடிவுடனும், மற்றும் உலகளாவிய அளவில் புரட்சிகரப் போராட்டங்களுக்கான ஒரு காலகட்டத்தை திறந்து விட்டிருக்கக் கூடிய முன்கண்டிராத அளவிலான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் வளர்ச்சியுடனும் நேரடியாகவும், நெருக்கமாகவும் தொடர்புபடுத்தப்படுகிறது. பங்களாதேஷ் விடுதலைப் போராட்டம் மற்றும் இந்திய பாக்கிஸ்தான் போர், வர்க்க போராட்டத்தின் இந்த புதிய கட்டத்தின் விளைபொருள்கள் ஆகும். இவை இத்தகைய உலகளாவிய புரட்சிகர நெருக்கடிகள் தோன்றலுக்கு சமூகத்தின் குரோத வெளிப்பாட்டு வர்க்கங்களின் பதிலிறுப்பு ஆகும், இவற்றை நாம் வர்க்க மொழிகளின் மூலம் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ட்ரொட்ஸ்கிச இயக்கமானது இந்த அனைத்து இயக்கங்கள், போராட்டங்கள் மற்றும் சண்டைகள் தொடர்பான தனது நிலைப்பாட்டை சோசலிசத்திற்கான பாட்டாளி வர்க்க போராட்டம் என்கின்ற கோணத்திலிருந்து வரையறை செய்கிறது. பாட்டாளி வர்க்கத்தின் பணியானது பூர்சுவாக்களின் எந்த ஒரு பூசல் கோஷ்டியையும் ஆதரிப்பது அல்ல மாறாக வர்க்க எதிரியின் முகாமில் நடக்கக் கூடிய ஒவ்வொரு சண்டையையும், துணைக்கண்டத்தின் மில்லியன்கணக்கான உழைப்பாளிகளின் சமூக மற்றும் தேசிய அபிலாசைகளை பூர்த்தி செய்யத்தக்க ஒரே சாத்தியமான கூட்டமைப்பான சோசலிசக் குடியரசை அமைக்கும் முன்னோக்குடன், அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு பயன்படுத்திக் கொள்வது தான் என்பதை இது அழுத்தம் திருத்தமாகவும் ஒரே குரலிலும் அறிவிக்கிறது. போர் மற்றும் அதற்கு பிந்தைய காலத்தில் வளரக்கூடிய தவிர்க்க இயலாத புரட்சிகர வளர்ச்சிகளுக்கு தனது படைகளை தயார்படுத்திக் கொள்ள பாக்கிஸ்தான், இந்தியா, இலங்கை மற்றும் கிழக்கு வங்காளத்தில் உள்ள பாட்டாளி வர்க்கத்திற்கு இது அழைப்பு விடுக்கிறது.

எனவே, ட்ரொட்ஸ்கிசவாதிகள் தங்களது நிலைப்பாட்டினை கிழக்கு வங்காள மக்களின் சட்டபூர்வ இலட்சியங்களுக்கும், இராணுவ மற்றும் தேசியவாத அடக்குமுறையை முடிவுக்கு கொண்டு வருவதற்குமான ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கிறார்கள். வங்காள மக்கள், கிழக்கு மேற்கு இரண்டும், ஏகாதிபத்திய பிரிவினையை முடித்து ஒரே தேசமாக இணைவதற்கும், விரும்பினால் இந்தியா, பாக்கிஸ்தான் இரண்டிலும் இருந்து பிரிவதற்கும் பெற்றுள்ள உரிமையை நாங்கள் நிபந்தனையின்றி ஆதரிக்கிறோம். வங்காள மக்கள் இந்த உரிமையை முன்செலுத்துவதற்கு செய்யும் போராட்டமானது தவிர்க்க இயலாமல் புரட்சிப் போராட்டமாக மாறி விடுகிறது, ஏனென்றால் இது ஏகாதிபத்தியத்தால் வடிவமைக்கப்பட்ட இயல்பு நிலை அமைப்புகளின், ஒட்டுண்ணி இந்து மற்றும் முஸ்லீம் பூர்சுவாக்களின் ஆட்சிகளின் முடிவாக காட்சியளிக்கிறது. தேசிய ஒன்றிணைப்பு மற்றும் விடுதலைக்கான போராட்டத்தை வெற்றிக்கான ஒரே உத்தரவாதமாக சோசலிச புரட்சிக்கான போராட்டத்துடன் இணைக்க வங்காளத்தின் உழைக்கும் மக்களுக்கு ட்ரொட்ஸ்கிச இயக்கம் அழைப்பு விடுக்கிறது.

பங்களாதேஷ்க்கான போராட்டத்திற்கு நிபந்தனையின்றியும் ஒன்றுபட்ட குரலிலும் ட்ரொட்ஸ்கிசவாதிகள் நிற்பதால் தான், அவர்கள் முக்தி பாஹினி படைகளின் கரங்களில் பாக்கிஸ்தான் இராணுவம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் நிற்கிறார்கள். பாக்கிஸ்தானில் உள்ள பாட்டாளி வர்க்கத்தின் பணியானது தனது விதியை பங்களாதேஷ் போராட்டத்துடன் இணைத்துக் கொண்டு "தங்களது சொந்த" படைகளின் தோல்விக்காக போரிட வேண்டும் என்று நாங்கள் அறிவிக்கிறோம். பாட்டாளி வர்க்க அனைத்துலக வாதத்தின் தெள்ளிய மரபுவழியில் பாக்கிஸ்தான் பாட்டாளி வர்க்கம் புரட்சிகர தோற்கடிப்புவாதம் குறித்த லெனினிச நிலைப்பாட்டை எடுக்க வேண்டும், ஏனென்றால் பாக்கிஸ்தானின் ஆளும் வர்க்கத்தால் நடத்தப்படும் போர் ஏகாதிபத்திய இயல்பு நிலை நலன்களின் பொருட்டு நடத்தப்படும் தேசிய அடக்குமுறைக்கான போராகும்.

அதே சமயத்தில், கிழக்கிலும் மேற்கிலும், இந்தியர்களின் இணைப்புவாத மற்றும் எதிர்புரட்சி இலட்சியங்களை பங்களாதேஷ் இயக்கத்திற்கு ஆதரவளிப்பவர்கள் என்ற தோற்றத்தில் மறைக்க முயலுவோரிடம் இருந்து நாம் நம்மை தெளிவாகவும் கூர்மையாகவும் பிரித்துக் கொள்கிறோம். இந்திய முதலாளித்துவம் கிழக்கு வங்காளத்தின் விடுதலையாளர்கள் என்று கூறுவதை இந்திய பாட்டாளி வர்க்கம் நிராகரிக்க நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். கிழக்கு வங்காளத்தில் இந்தியாவின் இராணுவ தலையீடு ஒரே ஒரு நோக்கம் மட்டுமே கொண்டிருந்தது என்று ட்ரொட்ஸ்கிசவாதிகள் அறிவிக்கிறார்கள். அது பங்களாதேஷ் போராட்டத்தை புரட்சிகர அடிப்படையில் ஒட்டுமொத்த வங்காளத்தின் ஒன்றிணைப்புக்கான போராட்டமாக உருவெடுக்காமல் தடுப்பது என்பது தான். இந்திய இராணுவத் தலையீடானது புரட்சிகர வங்காள விடுதலைப் போரினை நொறுக்கும், வங்காள மக்களின் எழுச்சியை நசுக்கும், பங்களாதேஷ் அரசு என்னும் பெயரை மோசடியாகக் கூறிக் கொண்டு முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய நலன்களுக்காக மக்கள் இயக்கத்தை அடக்கக் கூடிய கட்டுப்படுத்தக் கூடிய ஒரு ஊதுகுழல் ராஜ்ஜியத்தை நிறுவும் எண்ணத்துடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனால் இந்திய பாட்டாளி வர்க்கமும் இந்திய முதலாளித்துவத்தின் எதிர்புரட்சி போர் தொடர்பான விவகாரத்தில், ஒவ்வொரு வகையிலும் முக்தி பாஹினியின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் அதே நேரத்தில், புரட்சிகர தோற்கடிப்புவாத நிலைப்பாட்டை எடுக்க நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

இந்திய துணைக்கண்டத்தில் பாட்டாளி வர்க்கத்திற்கான ஒரே ஒரு புரட்சிகர வேலைத்திட்டம் இது ஒன்றே ஆகும். இது துணைக்கண்டத்தின் போருக்குப் பிந்தைய ஒட்டுமொத்த வரலாற்றின் மார்க்சிச பகுப்பாய்வில் இருந்து மாற்றமின்றி தர்க்கரீதியாய் செல்கின்றது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் தனது விசுவாசமான சேவகர்களுக்கு, அதாவது இந்த நாடுகளின் பிறப்புரிமை, முதலாளித்துவங்களுக்கு மோசடியான "சுதந்திரம்" வழங்கப்பட்டது முதலாக கடந்த 25 ஆண்டு காலமாகவே விளங்கப்பட்டு வருவது என்னவென்றால், அடிப்படை பொருளாதார, தேசிய அல்லது சமூக பிரச்சினைகளை இந்த பூர்சுவாக்களால் தீர்வு காண முடியாது என்பது தான். இந்த வரலாற்றுப் பணிகளின் விவகாரத்தில் இவர்களின் முழுமையான திவால் நிலை, பாட்டாளி வர்க்கமானது ஒடுக்கப்பட்ட கிராம மக்களை தங்களுக்கு பின்னால் திரட்டிக் கொள்வதன் மூலம் சோசலிசப் புரட்சியின் பணிகளின் அங்கமாக இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்னும் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் மையக் கருத்துக்கான ஆதாரம் ஆகும். பிரித்தாளும் கொள்கைக்கு இசைவுடன், இந்து முஸ்லீம் பூர்சுவாக்களாலும் அனைத்துலக ஸ்ராலினிசத்தாலும் ஆதரிக்கப்படுவதான, இந்தியத் துணைக்கண்டத்தின் உருவாக்க வடிவமைப்பானது, ஏராளமான சமூக மற்றும் தேசியவாத முரண்பாடுகள் அடக்கப்பட்டதும் அமுக்கப்பட்டதுமான கட்டமைப்பாகும், ஒடுக்கப்பட்ட நூறு மில்லியன் கணக்கான மக்களுக்கு ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கம், பசி, பஞ்சம் மற்றும் துயரம் இவற்றையெல்லாம் உறுதி செய்யும் வகையிலாக. இந்த முரண்பாடுகள், அங்கமாக வளர்ச்சியுற்று ஒட்டுமொத்த அனைத்துலக ஏகாதிபத்திய அமைப்பின் வளர்ச்சியின் விளைவாகும் நிலையில், இதன் பின்னும் அடக்கப்பட முடியாது.

இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் இலங்கையில் புரட்சிகர நெருக்கடியின் ஒரேநேரத்தில் தோன்றியமை ஏகாதிபத்திய வடிவமைப்பினையும் அதனுடன் இணைந்த முதலாளித்துவ வர்க்க அதிகாரத்தையும் பாட்டாளி வர்க்க மேலாளுமையின் கீழ் ஒட்டு மொத்த துணைக்கண்டத்தின் புரட்சிகர ஒன்றிணைப்பின் மூலம் முடித்து வைப்பதை நாளாந்த நிகழ்ச்சி நிரலில் இருத்தியுள்ளது.

பூகோளத்தின் இந்தப் பகுதியில் "ஸ்திரத்தன்மை"யை மீளஸ்தாபிப்பதற்கான ஏகாதிபத்தியம் மற்றும் ஸ்ராலினிசத்தின் இயலாத முயற்சிகள் ஆரம்பம் முதலே அழிவிற்குரியதாக இருந்தன.

1969 இல் பாக்கிஸ்தானில் வெகுஜன புரட்சிகரப் போராட்டங்களின் வளர்ச்சி, இந்தியாவில் விவசாயிகளின் ஆயுதமேந்திய போராட்டங்கள் மற்றும் நாளுக்கு நாள் உழைக்கும் வர்க்கத்தின் அதிகரித்து வரும் தொடர்ந்த போராட்டங்கள், இலங்கையின் வேலைநிறுத்தப் போராட்டங்கள் - இந்த அபாய எச்சரிக்கைகளுடன் தான் 1970கள் இங்கே பிறந்தன. வேலையில்லா திண்டாட்டம், நிலமில்லாமை, தேசிய ஒடுக்குமுறை மற்றும் அதிகரிக்கும் வாழ்க்கை செலவுகள் இவையெல்லாம் தேக்க நிலை பொருளாதாரங்களுக்கான பொருளில் ஒவ்வொரு இடத்திலும் வெகுஜன போராட்டங்களுக்கு வித்திடுவதாக இருந்தது. முதலாளித்துவ வளர்ச்சியானது அதன் உச்சத்தில் இருந்த போதிலும் கூட பலவீனமான முதலாளித்துவ நாடுகள் உண்மையில் ஒருபோதும் வளமையுற முடியவில்லை, பூர்சுவாக்கள் அதிகாரத்தில் சமாளிக்க முடிந்ததென்றால் இதன் காரணம் உழைக்கும் வர்க்கத்தின் மரபுவழியான தலைமைகளான ஸ்ராலினிஸ்டுக்கள் மற்றும் சீர்திருத்தவாதிகளால் ஊழல் முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு வழங்கப்பட்ட அடிமைத்தன ஆதரவு தான். ஆனால் அனைத்துலக அளவில் பொருளாதார நெருக்கடி மோசமடைந்தது வர்க்க ஒத்துழைப்பிற்கான அடிப்படையை திறம்படச் சிதைத்து விட்டது. தலைமைகளின் திறந்த எதிர்புரட்சிகர கொள்கைகளுக்கு பின்னரும் மக்கள் போருக்குள் நகர ஆரம்பித்தனர், ஒவ்வொரு நிலையிலும் தங்களது சொந்த தலைமைகளுடன் மோதலில் நுழைந்து. உண்மையிலேயே வரலாற்று விதிகள் அதிகாரத்துவ எந்திரத்தை விட வலிமையாய் இருப்பதை எடுத்துக்காட்டிடவே செய்கின்றன.

தொழிலாள வர்க்கத்தை முன்னணியில் கொண்ட இந்த மக்கள் இயக்கம் தான், பொருளாதார நெருக்கடியால் இப்போது உந்தப்படும், ஒரு முக்கிய மந்தநிலையாக துரிதமாய் உருவெடுக்கும், தொழிலாள வர்க்கம் மற்றும் அதன் அமைப்புகளை தீர்மானமாய் நொருக்க தலைப்படும் ஏகாதிபத்தியம் மற்றும் பிறப்புரிமை மூலதனத்தின் தேவைப்பாடுகளுடன் நேரடியான மோதலுக்கு உள்ளானது. இயல்பு நிலையினை தங்களது சொந்த சாதகத்திற்கு மாற்றிக் கொள்ள முதலாளித்துவத்தின் மெய்நிலை விதிகளால் குரோதமிகு வர்க்க சக்திகள் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகின. பழைய நிலைக்கு திரும்பவியலாத இரண்டு குரோதமிகு முகாம்களாக பிளவுபட்ட சமுதாயம் இப்போது ஒரு உள்நாட்டு யுத்தத்தை எதிர்கொண்டது.

உள்நாட்டு யுத்தத்தின் அனைத்துலக நிகழ்வானது, 1970களில் இது முக்கிய அபாயமாக இருக்கும் என்று பிரிட்டிஷ் டோரி பிரதமர் ஹீத் கணித்ததை போல், தன்னை வெளிப்படுத்திக் கொள்வதாக அமைந்தது, இந்திய துணைக்கண்டத்திலும் வெளிப்படையாக எழுச்சியுற்றுக் கொண்டிருந்தது. இலங்கையில் ஏப்ரல் 1971 இல் கிராம இளைஞர்களின் எழுச்சி, பங்களாதேஷில் தங்களது பூர்சுவா தலைவர்களிடம் இருந்து விடுபட்டு மக்கள் நடத்திய முழுமையான தேசிய சுதந்திரத்திற்கான வலிமையான இயக்கம், மேற்கு வங்காளத்தின் புரட்சிகர போராட்டங்கள், இந்த போராட்டங்கள் அனைத்தும் நெருக்கடிக்கு வெகுஜனங்களின் பதிலிறுப்பை முக்கியமாக பிரதிநிதித்துவப்படுத்தின. உள்நாட்டு யுத்தமானது ஏற்கனவே எழுந்திருந்தது. வகைப்படுத்தலின் மிகவும் அடிப்படைக் கோடுகள் வரையப்பட்டன.

ஏகாதிபத்தியம் மற்றும் ஸ்ராலினிசத்தின் பதிலிறுப்பு சத்தமின்றியும் எதிர்பார்த்த வகையிலும் இருந்தது. சுதந்திரமான புரட்சிகரப் போராட்டங்கள் குறித்த பொதுவான அச்சம் மற்றும் குரோத உணர்வு குறித்த பொதுவான தங்கள் கருத்து வேறுபாடுகளை மறைத்து, மக்கள் இயக்கங்களுக்கு எதிரான தங்கள் முழு பலத்தையும் அவர்கள் பிரயோகப்படுத்தினர்.

ஏகாதிபத்தியம் ஒரே சமயத்தில் இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் இலங்கை முதலாளிகளை ஆயுதமயமாக்கியது. தங்களின் அரசியல் ஏஜென்டுகள் வெளிப்படையாக மக்கள் கிளர்ச்சிகளுக்கு எதிராக பூர்சுவாக்களுடன் கைகோர்த்துக் கொள்ளும் நிலையில் சோவியத் குடியரசு அவ்வரசுகளுக்கு ஆயுதங்கள் வழங்கியது, பங்களாதேஷ் மற்றும் இலங்கை போராட்டங்களை கண்டித்த சீனா, முதலாளித்துவ ஆட்சிகளுக்கு பணமும் ஆயுதங்களும் வழங்கியது, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்து கொள்ளும் தனது கொள்கையை அதிகப்படுத்தியது, ஐக்கிய நாடுகள் சபையுள் நுழைந்தது.

ஏகாதிபத்தியம் மற்றும் ஸ்ராலினிசத்தால் ஆதரிக்கப்பட்ட அடக்குமுறைக்கு பின்னரும், தங்களது சொந்த தலைமைகளால் வஞ்சிக்கப்பட்ட பின்னரும், மக்கள் இயக்கத்தின் வலிமை எதிர்ப்பு காட்டும், எதிர்த்து போரிடும் வலிமை பெற்றதாக இருந்தது. போராட்ட நெருப்பில் மக்களின் மன உறுதி புடம் போடப்பட்டது, தலைமைகள் போரில் சோதிக்கப்பட்டன, மக்கள் மேலும் மேலும் இடது நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள்.

இவ்வாறு பங்களாதேஷில், இராணுவ சர்வாதிகாரத்துடன் ஒரு சமரசத்தினை எட்ட முஜிபுர் ரஹ்மானின் தலைமையின் தொடர்ந்த முயற்சிகளுக்கு பின்னரும் விடுதலைப் போராட்டம் வளர்ச்சியுற்றது. பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர தலைமை இல்லாதிருந்தது இயக்கத்தின் தலைமையை அவாமி லீக் பூர்சுவாக்கள் கைக்கொள்ளுமாறு செய்தது என்றாலும் கூட, கூடுதல் தீவிரமான இடது சாரி சக்திகள் அவர்களை இடதின் பக்கத்தில் தந்திரோபாயத்தில் வெல்லும் அச்சத்தை ஏற்படுத்தினர். நீண்ட காலமாக மாவோவாதத்தின் பிடியில் இருந்த மேற்கு வங்காள தீவிரவாதிகள், கிழக்கு பிராந்தியத்தின் புரட்சிகர போராளிகளுடன் கைகோர்த்துக் கொண்டனர், பங்களாதேஷ் போராட்டத்திற்கு மாவோவாதிகள் ஸ்ராலினிசவாதிகள் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும். வங்காளம் ஒன்றுபடுத்தப்பட்டுக் கொண்டிருந்தது - ஒரு புரட்சிகரமான வழியில்!

கிழக்கு வங்காளத்தில் இருந்தான நூறாயிரக்கணக்கான அகதிகள் மற்றும் அதனைத் தொடர்ந்த அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகள், ஆகஸ்டு 15 நிக்சனின் உரைக்குப் பிந்தைய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய கொள்கையால் கூர்மையாக மோசமாக்கப்பட்ட நிலையை எட்டிய உள்நாட்டுப் பொருளாதார மந்தநிலையின் துரித வளர்ச்சி மற்றும் வங்காளத்தில் ஒரு புரட்சிகர சூழலின் வளர்ச்சி இவையெல்லாம் இந்தியா முழுவதும் பெரும் புரட்சிகர வளர்ச்சிகளை கட்டவிழ்த்து விடும் அபாயத்தை எழுப்பின. துல்லியமாக இந்த தருணத்தில் தான், பூர்சுவாக்கள் பொருளாதார நெருக்கடியால் மக்களை போராட்டத்திற்கு தூண்ட நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையின் போது, நாட்டின் வர்க்க உறவுகளை அடிப்படையாக மாற்றவும் தவிர்க்கவியலாத மக்கள் எழுச்சிகளை நசுக்கவும் முயல்வதற்கான சங்கடமான பணியை அவர்கள் எதிர்கொண்ட போது - துல்லியமாக இந்த தருணத்தில் தான் பங்களாதேஷில் நடைபெற்ற இயக்கமானது இந்தியாவுக்குள்ளும் புரட்சிகர எதிரொலியை காண ஆரம்பித்தது.

இந்திய முதலாளித்துவம் அவாமி லீக் தலைமையுடன் கைகோர்த்துக் கொண்டனர், பங்களாதேஷ் விடுதலை இயக்கத்தின் இடதுசாரி பிரிவை வேட்டையாடுவதற்கு, இடதுசாரி தலைவர்களை சிறையிலடைப்பதற்கு மற்றும் கிழக்கு வங்காளத்தின் புரட்சிகர படைகள் மேற்கில் உள்ளவற்றுடன் இணைப்பு ஏற்படுத்திக் கொள்வதை தடுப்பதற்கு. கிழக்கு மற்றும் மேற்கு இரண்டையும் ஒன்றிணைக்கும் ஒரு புரட்சிகர பங்களாதேஷினை இந்திய பூர்சுவாக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். பாக்கிஸ்தான் தோல்வியுறும் பட்சத்தில் கிழக்கு வங்காளத்தில் ஒரு நிலையான முதலாளித்துவ அரசாங்கத்திற்கு உறுதியளிக்கும் வகையில் அவாமி லீக்கின் பிடி வலிமையானதாக இல்லை.

மறு பக்கத்தில், கிழக்கு வங்காளத்தில் புறக்கணிக்கப்பட்ட வெறுக்கப்பட்ட பாக்கிஸ்தான் இராணுவ அரசாங்கமானது, மேற்கில் போராட்டத்திற்குள் நுழையும் தீவிரவாத தொழிலாள வர்க்கத்துடன் அதிகமான மோதலில் ஈடுபட்டுக் கொண்டு, பஞ்சாபி மற்றும் பதான் பூர்சுவாக்களிடம் தேசிய சிறுபான்மையினர் சரணாகதி அடைவதை இயலாமல் தொடர முயன்று கொண்டு, கிழக்கில் தோல்வியை எதிர்நோக்கிக் கொண்டிருந்தது. முக்தி பாஹினி போராளிகள் வெகுஜன ஆதரவை அனுபவித்தனர். அவர்கள் பொதுமக்களை அடிப்படையாக கொண்டு இயங்கினர், அவர்கள் போராட்டம் நோக்கம் கொண்டதாக இருந்தது.

இந்த சூழ்நிலையில் தான் இந்திரா காந்தி நேரடி இராணுவத் தலையீட்டிற்கு முடிவெடுத்தார். இந்திய முதலாளித்துவம், ஒரு உண்மையான சுதந்திரம் கொண்ட பங்களாதேஷ் உருவாவதையோ, கிழக்கு மற்றும் மேற்கு வங்காளத்தில் புரட்சிகர ஒன்றிணைப்பு தோற்றமளிப்பதையோ, இந்தியா மற்றும் பாக்கிஸ்தானில் நடப்பு முதலாளித்துவ அதிகாரத்தை ஏற்படுத்திய ஒவ்வொரு தூணையும் அழித்தெறியும் சக்திவாய்ந்த புரட்சிகர அலையை விடுதலை செய்யவோ அனுமதிக்க முடியாது.

அதன் சாரத்திலேயே, வங்காளத்தின் கிழக்கு பாதியை மட்டும் உள்ளடக்கிய பங்களாதேஷ் பங்களாதேஷாகவே இருக்க முடியாது. ஒரு தனித்துவமான பங்களாதேஷ் கிழக்கும் மேற்கும் ஒன்றிணைவதை தேவைப்பாடாக கொண்டிருந்தது, அதன் மூலம் தவிர்க்க இயலாமல் ஏகாதிபத்தியத்தால் கவரப்பட்டு இந்தியாவால் உருவாக்கப்பட்ட வடிவத்திற்கு முடிவு கட்டும் கேள்வியையும் முன்நிறுத்துவதாய். பாக்கிஸ்தான் இந்தியா ஆகிய இரண்டு ஏகாதிபத்தியத்தால் உருவான அரசுகளில் ஒன்றும், தேசிய அடக்குமுறைக்கான முடிவையும் சுய-நிர்ணய உரிமையையும் பொறுத்துக் கொள்ள முடியாது, அவர்களால் எப்படி துணைக்கண்டத்திற்குள் மக்கள் புரட்சி இயக்கங்களை பொறுத்துக் கொள்ள முடியாதோ அதே வகையில்.

கிழக்கு வங்காளத்தில் முக்தி பாஹினியின் கரங்களில் பாக்கிஸ்தான் இராணுவப் படைகள் பெற்ற படுதோல்வியால் உருவான அரசியல் வெற்றிடமானது சோவியத் அதிகாரத்தின் கரு வடிவங்களான மக்கள் அடிப்படையிலான புதிய அதிகார உறுப்புகளின் வளர்ச்சியால் நிரப்பப்படுகிறது. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதன் மூலம் பூர்சுவா-ஜனநாயக கட்டமைப்பினை தாண்டி பங்களாதேஷ் இயக்கத்தினை முன்னெடுத்துச் செல்ல சூழ்நிலைகள் சாதகமாக உருவாகிக் கொண்டிருந்தன. கிழக்கு வங்காளத்தின் புரட்சிகர பாட்டாளி வர்க்கமானது, மில்லியன்கணக்கான போராடும் விவசாயிகளின் தலைமையில் இருந்து கொண்டு, இந்தியா மற்றும் பாக்கிஸ்தானில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் தங்களின் பாதுகாப்புக்கு அணிதிரள அழைப்பு விடுப்பதன் மூலமும், புரட்சிகர ஒன்றிணைப்பின் மூலம் பங்களாதேஷில் ஒரு புரட்சிகர சோசலிச குடியரசை சோசலிச இந்தியாவின் ஒரு அங்கமாக உடனடியாக முன்நிறுத்துவதன் மூலமும், புரட்சி வெள்ளத்தை கட்டவிழ்த்து விட்டிருக்க முடியும்.

கிழக்கு வங்காளத்தின் மக்கள் இயக்கத்தை கட்டுப்படுத்தும் பங்களிப்பை நீண்ட காலமாக ஆற்றி வந்த, மேற்கு பாக்கிஸ்தான் முதலாளித்துவத்துடன் உகந்த பேரத்தை முடிப்பதற்கே உழைத்து வந்த, அவாமி லீக் தலைமையின் துரோகமானது, இந்த முக்கிய தருணத்தில் மீண்டும் முன்னால் வந்து, ஒட்டுமொத்த விடுதலை போராட்டத்தையும் மரண அபாயத்தில் தள்ளியது. வேறெதனையும் விடவும் புரட்சிகர மக்கள் எழுச்சிக்கு அச்சமுற்று, இந்திய ஆளும் வர்க்கத்தின் கரங்களில் மக்களின் ஒட்டுமொத்த போராட்டத்தையும் முன்நிறுத்தி வஞ்சித்தது.

இந்திய அரசாங்கத்தின் தலையீடானது முழுக்க முழுக்க எதிர்புரட்சியான ஒன்றாகும். பங்களாதேஷ் போராட்டத்திற்கு ஆதரவு தருவதாக மோசடியாக கூறிக் கொண்டு, ஒன்றிணைந்த புரட்சிகர வங்காளம் உருவாவதை நசுக்கவும் கிழக்குக்குள் மட்டும் அடக்கப்பட்ட திறனகற்றிய பங்களாதேஷில் ஒரு ஏவல் அரசை நிறுவவும் தான் இது தலையிட்டது. இதன் இராணுவத் தலையீடானது, கிழக்கு வங்காளத்தை இணைப்பாக கொள்வது, அவாமி லீக் தலைமையின் ஜாடை ஒப்புதலுடன் இராணுவ அதிகாரத்தை திணிப்பது, மக்கள் கிளர்ச்சியை திறம்பட நசுக்குவது இதற்காகவே வடிவமைக்கப்பட்டிருந்தது.

அவாமி லீக், இந்திய அரசாங்கத்தின் உதவியை பெறுகின்ற சாக்கில், கிழக்கு வங்காளத்தில் இந்திய இராணுவ அதிகாரத்தை திணிப்பதற்கான கதவைத் திறந்து விட்டது. இந்தியர் தலைமையில் இணைந்த இராணுவ தலைமையை நிறுவ அவர்கள் ஒப்புதலளித்தது முக்தி பாஹினி படைகளின் அனைத்து சுதந்திரத்தையும் திறம்பட அழித்து விட்டது. கிழக்கு வங்காளத்தின் மக்கள் இரண்டு தசாப்தங்களாக பஞ்சாபி முதலாளித்துவத்தின் கொடுமையான அடக்குமுறைக்கு இலக்காகி வந்தனர், இன்று அதையே வேட்டையாடும் இந்திய முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் கரங்களில் அனுபவிக்கின்றனர்.

நாங்கள், பங்களாதேஷுக்கான போராட்டத்தின் புரட்சிகர இயல்பினை, சுதந்திர பங்களாதேஷ் நிறுவ உதவும் நோக்கம் கொண்டதான வெளித்தோற்றத்தில் இந்திய முதலாளித்துவத்தால் மேற்கொள்ளப்படும் எதிர்புரட்சி இணைப்பு போருடன் போட்டுக் குழப்பிக் கொள்வதில்லை.

ஏகாதிபத்தியத்தின் அரசியல் கணக்குகள் என்னவாக இருந்தாலும் சரி, அது என்ன வழிமுறைகளை பயன்படுத்தினாலும் சரி, பழைய இயல்புநிலைக்கு ஒரு போதும் திரும்ப வழியில்லை. திரும்ப முடியாத புள்ளி இப்போது தாண்டப்பட்டிருக்கிறது. ஐநாவில் அரசியல் தந்திரங்களை மேற்கொண்டும் இந்தியப் பெருங்கடலில் இராணுவத் தந்திரங்களை மேற்கொண்டும் துணைக்கண்டத்தில் பழைய உறவுகளை மறுஸ்தாபிப்பதற்கு இந்திய முதலாளித்துவத்தின் மீதான பயமுறுத்தலும் நெருக்கடியும், பழைய இயல்பு நிலை உடைந்ததில் ஏகாதிபத்தியம் கவலையுற்றுள்ளதின் உண்மையான அச்ச உணர்வினை வெளிப்படுத்துகிறது. இந்திய பாக்கிஸ்தான் முதலாளித்துவம் அவாமி லீக் தலைவர்களுடன் கைகோர்த்து செய்து கொள்ளும் ஒரு ஒப்பந்தம் - இது தான் வருங்காலத்தில் நிகழத்தக்க புரட்சிகர வளர்ச்சிகளை திறம்பட நொருக்குவதற்கு இந்த பிராந்தியத்தில் ஒரு ஒன்றுபட்ட எதிர்புரட்சி முன்னணியை பாதுகாத்து வைக்க விரும்பும் ஏகாதிபத்தியத்தின் நோக்கம். ஏப்ரல் 1971 இல் இலங்கையில் கிராம எழுச்சிக்கு எதிராக செயல்பாட்டில் வைக்கப்பட்ட தேசியவாத முதலாளித்துவம், ஸ்ராலினிசவாதிகள் மற்றும் ஏகாதிபத்தியவாதிகள் இவர்களுக்கு இடையிலான அந்த ஒத்துழைப்பையே இது பாதுகாக்க விரும்புகிறது.

இருந்தாலும் போராட்டம் முடிந்து விடவில்லை. மாறாக இப்போது தான் ஆரம்பித்துள்ளது. கடக்கும் நாள் ஒவ்வொன்றிலும் உலக முதலாளித்துவத்தின் பொருளாதார நெருக்கடி கூர்மைப்பட்டு, சரிவை நோக்கிய போக்கையும் வர்த்தக யுத்தத்தையும் வேகப்படுத்திக் கொண்டிருக்கிறது. "தனியொரு நாட்டில் சோசலிசத்தை கட்டும்" மாயையை தகர்க்கும் விதமாக, ஸ்ராலினிசவாதிகளால் ஆதிக்கம் செலுத்தப்படும் தொழிலாளர்கள் அரசுகளை இப்போது பிடித்துள்ள பொருளாதார நெருக்கடியுடன் இது தொடர்புபடுத்தப்படுகிறது. இந்த வளர்ச்சிகள் திவாலான முதலாளித்துவ பொருளாதாரங்களான இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் மீது ஒரு செலவுமிகுந்த போர் திணித்த நெருக்கடிகளையும் சுமைகளையும் மிகப்பெரும் அளவில் மோசமாக்கும். வேறுவழியின்றி முதலாளித்துவம் இந்த நெருக்கடியை ஏற்கனவே கடும் வறுமையிலும் பட்டினி நிலையிலும் இருக்கும் மக்கள் மீது சுமத்த முயலுவார்கள். இந்த காரணிகளும் போருக்குப் பிந்தைய இயல்புநிலையின் அரசியல் உடைவும் சேர்ந்து ஒட்டுமொத்த துணைக்கண்டத்தையும் அடித்துச் செல்லத்தக்க அளவிலான முன்பாராத அளவு, ஆழம், வாய்ப்பினை கொண்ட ஒரு புரட்சிக்கான நெருக்கடி சூழ்நிலையை உருவாக்கும், இது இலங்கையிலும் பதில் எதிரொலியை காணும்.

போரால் கட்டவிழ்த்து விடப்பட்ட சக்திகள் இரத்த ஆறு ஓடும் அடக்குமுறை வழியின்றி கட்டுப்படுத்தப்பட முடியாது. முக்தி பாஹினியின் இளம் போராளிகள் டில்லியின் அதிகாரத் திணிப்பை கைகுவித்து ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கிழக்கில் பாக்கிஸ்தான் அரசாங்கத்தின் இராணுவத் தோல்வியானது மேற்கில் புரட்சிகர படைகளை கணக்கிட முடியா அளவுக்கு உறுதியாக்கும். மிக உண்மையான பொருளாதார மற்றும் அரசியல் தாக்குதல்கள் பெருகப் பெருக இந்திய மக்கள் தங்கள் தலைவர்களின் உணர்வினை தூண்டி ஆதாயம் பெறத் துடிக்கும் திறனை முழுமையாகக் காண்பார்கள்.

துணைக்கண்டத்தில் சோசலிச புரட்சி மலர்வதன் முதல் கட்டத்தில் நிகழும் பாடங்களை கற்றுக் கொள்வதற்கு, இப்போதிலிருந்து அவர்கள் மேல் வந்து விழத்தக்க போராட்டங்களுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளும் வகையில் துணைக்கண்டத்தில் உள்ள அத்தனை போராளிகளையும் இலங்கை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் அழைக்கிறார்கள்.

ஸ்ராலினிசம், மாஸ்கோ பீக்கிங் இரண்டு வகைகளுமே, தன்னை முழுக்கவும் சமரசத்திற்குள்ளாக்கிக் கொண்டு விட்டது. இரண்டு அதிகாரத்துவங்களும் வங்காளத்தின் விடுதலைப் போராட்டத்திற்கு முழுமையான விரோத நிலைப்பாட்டை எடுத்தன. புரட்சிகர மக்களுக்கு எதிராக, அவர்கள் பூர்சுவாக்கள் பக்கம் அணி திரண்டனர். இது வரை மாவோயிசம் குறித்து தீவிரவாதிகள் என்ன கற்பனை கருத்துகள் கொண்டிருந்திருந்தாலும் அவை எல்லாம் இனி எப்போதைக்குமாக தகர்க்கப்பட்டு விட்டது, உலகின் பூர்சுவா ஒழுங்கிற்கான ஒரு தூணாக ஸ்ராலினிசம் குறித்த ட்ராட்ஸ்கியின் பகுப்பாய்வும் மிகமிகச் சரி என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

அதே சமயத்தில் தேசிய முதலாளித்துவம் இன்றைய மக்கள் போராட்டங்களில் ஒரு எதிர்புரட்சி பங்களிப்பை மட்டுமே ஆற்ற முடியும் என்பதை பங்களாதேஷ் போராட்டம் தீர்மானமாக நிரூபித்திருக்கிறது. அவாமி லீக் தலைமையின் துரோகமானது ஏற்கனவே பல போராளிகளுக்கு தெளிவாகி விட்டது. அது நாளை இன்னும் தெளிவாகி விடும்.

தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வாகவும் அதே சமயத்தில் மக்களுக்கு முன் செல்வதற்கான வழியையும் காட்டுவதாக இருக்கும் ஒரு சோசலிச குடியரசை நிறுவ போரிடுவதற்கு நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டம் மட்டுமே வழிகாட்டுகிறது. நான்காம் அகிலம் மட்டுமே 1947 இல் இந்தியாவின் ஏகாதிபத்திய வடிவமைப்பை எதிர்த்தது. நான்காம் அகிலம் மட்டுமே பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கும், தொழிலாளர்கள் விவசாயிகளுக்கு இடையிலான கூட்டணிக்கும், நாடுகளின் சுயநிர்ணய உரிமைக்கும், மற்றும் துணைக்கண்டத்தில் அனைத்து நாடுகளின் தாமே மனமுவர்ந்த மற்றும் புரட்சிகர கூட்டமைப்புக்கும் போரிட்டது, தொடர்ந்து போரிட்டு வருகிறது.

இந்திய துணைக்கண்டத்தில் உள்ள பாட்டாளி வர்க்கத்தின் வெற்றிக்கு இந்த வேலைத்திட்டம் அவசியப்படுகிறது. இதனால் இன்றைய மிக முக்கிய பணியாக, உலக அளவில் நான்காம் அகிலத்தை கட்டுவதன் பாகமாக இந்த பிராந்தியத்தில் நான்காம் அகிலத்தை கட்டுவது அவசியமாகிறது.

வரலாற்றின் இந்த முக்கிய தருணத்தில் தான் நான்காம் அகிலத்தின் இந்தியப் பிரிவை சிதைத்த திருத்தல்வாதிகளின் கிரிமினல் பங்களிப்பு தெள்ளத் தெளிவாகிறது. 1942 இல் தொடங்கப்பட்ட நான்காம் அகிலத்தின் பகுதியான, இந்திய போல்ஷ்விக்-லெனினிஸ்ட் கட்சி (BLPI), பல்வேறு பலவீனங்கள் இருந்த போதிலும், காங்கிரஸ் தலைமையின் துரோகத்திற்கு எதிராக ஏகாதிபத்திய மற்றும் ஸ்ராலினிச அடக்குமுறைக்கு எதிராக அந்த கடினமான நாள்களில் தீரத்துடன் போராடியது. ஆனால் அதன் உறுதியளிக்கும் தொடக்கங்கள் நான்காம் அகிலத்தையே ஏறக்குறைய அழித்து விட்ட பப்லோவாதம் என்னும் திருத்தல்வாத புற்றுநோயால் தடுத்து நிறுத்தப்பட்டு விட்டது. 1950 இல் காங்கிரஸ் சோசலிச கட்சிக்குள் நீர்த்துப் போகச் செய்ததன் மூலம் ஙிலிறிமி இன் அழிவுக்கு முழுப் பொறுப்பும், "நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகம்" என்ற பெயரில் வேஷமிடுபவர்கள் மற்றும் இலங்கை LSSP இல் உள்ள அவர்களின் கூட்டாளிகள் தலையில் தான் இடப்பட வேண்டும்.

வரலாற்றின் மிக முக்கிய தருணத்தில் ஒரு புரட்சிகர கட்சி இல்லாத ஒரு நிலைக்கு இன்று இந்திய பாட்டாளி வர்க்கத்தை தள்ளியிருக்கும் திருத்தல்வாத வரலாறு மற்றும் வழிமுறையுடன் சமரசமற்ற ஒரு மோதலில் ஈடுபட்டு இந்தியாவில் ட்ரொட்ஸ்கிசத்தின் மறுபிறப்புக்கான போராட்டத்தை தொடக்க வேண்டும் என்றும் அனைத்து நேர்மையான மற்றும் புரட்சிகர போராளிகளையும் இலங்கையின் ட்ரொட்ஸ்கிசவாதிகள் கேட்டுக் கொள்கிறார்கள்.

அடிப்படை வேலைத்திட்டமான நான்காம் அகிலத்தின் இடைமருவு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒன்றிணைய அனைத்து பாட்டாளி வர்க்க போராளிகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மற்றும் விவசாய போராளிகளிடம் இலங்கை ட்ரொட்ஸ்கிசவாதிகள் கேட்டுக் கொள்கிறார்கள். திருத்தல்வாதத்திற்கு எதிராக அனைத்துலக கமிட்டியால் 1953 இல் தொடங்கி நடத்தப்பட்டு வரும் போரின் மூலமான நான்காம் அகிலத்தின் வளர்ச்சியால் குறிப்பிடப்படும் ட்ரொட்ஸ்கிசத்தின் மறுபிறப்பு இலங்கையில் ஏற்கனவே தொடங்கி விட்டது. இது இப்போது கட்டாயமாகவும் அவசரமாகவும் முக்கிய பகுதியான இந்தியா மற்றும் பாக்கிஸ்தானுக்கு விரிவாக்கப்படும் அவசியம் உள்ளது.

தோழர்களே, உழைப்பவர்களின் தலைமைக் கட்சியாகவும் பாட்டாளி வர்க்கத்தின் கட்சியாகவும் நான்காம் அகிலத்தை கட்டுவதன் மூலம் இந்த வரலாற்றுப் பணியின் ஒரு வெற்றிகரமான முடிவுரைக்கு முன்னெடுத்துச் செல்ல எங்களுடன் ஒன்று சேருங்கள்.

* சுதந்திர, சோசலிச, ஐக்கியப்பட்ட பங்களாதேஷ் நீடூழி வாழ்க!

* ஏகாதிபத்திய-ஐநா தலையீடு ஒழிக!

* பாக்கிஸ்தான் அடக்குமுறையும் இந்திய ஊடுருவலும் ஒழிக!

* முக்தி பாஹினி வெற்றி பெறட்டும்!