சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய தலைவர் டேவிட் நோர்த்தின் தகவல் சுதந்திர சட்ட ஆவண விண்ணப்பத்தை பெடரல் புலனாய்வு அமைப்பும் நீதித்துறையும் நிராகரிக்கின்றன

21 February 2020

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய தலைவரும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவருமான டேவிட் நோர்த் தாக்கல் செய்த தகவல் சுதந்திரச் சட்ட (FOIA) ஆவண கோரிக்கையை பெடரல் புலனாய்வு அமைப்பு (FBI) நிராகரித்துள்ளது. FBI இனாலும் அதனுடன் தொடர்புபட்ட உளவுத்துறை முகமைகளினாலும் -உளவுபார்ப்பின் மூலமாக அரசாங்கம் என்னென்ன ஆவணங்களைச் சேகரித்துள்ளதோ அவற்றையும் மற்றும் - அண்ணளவாக 50 ஆண்டு காலமாக சோசலிச இயக்கத்தில் அவரின் நடவடிக்கைகளைக் குறித்து அரசாங்கம் சேகரித்துள்ள ஆவணங்களை அணுகுவதற்கு நோர்த் கோரிக்கை தாக்கல் செய்திருந்தார்.

டேவிட்நோர்த்ஏப்ரல் 2019 இல்வாய்ன்அரசுபல்கலைக்கழகத்தில்பாசிசவாதஅச்சுறுத்தல்குறித்துஉரையாற்றுகிறார்

பல்வேறு சட்டபூர்வ காலக்கெடுக்கள் முடிந்து ஏறத்தாழ ஒன்பது மாத கால தாமதத்திற்குப் பின்னர், அமெரிக்க நீதித்துறை, அவரின் FOIA கோரிக்கை மறுக்கப்பட்டதாக நோர்த்துக்குத் தகவல் அனுப்பியது. தேச பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு உளவுவேலை நடவடிக்கைகளின் காரணமாக, நோர்த் மீது உளவுபார்த்தமை தொடர்பாகவோ மற்றும் அவர் அரசியல் நடவடிக்கைகளைத் தொந்தரவுபடுத்தும் சட்டவிரோத முயற்சிகளைக் குறித்தோ ஆவணங்கள் இருக்கிறதா என்பதை அரசு ஒப்பும் கொள்ளாது அல்லது மறுக்கவும்மாட்டாது என்றது குறிப்பிட்டது.

நீதித்துறை, பெப்ரவரி 15, 2019 தேதியிட்ட கடிதத்தில், ஆவணங்கள் மீதான நோர்த்தின் கோரிக்கையை நிராகரித்து பின்வருமாறு குறிப்பிட்டது:

உங்கள் கோரிக்கையின் தன்மை, FBI அதன் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு உளவுவேலை செயல்பாடுகளுக்கு ஏற்ப சேகரித்து வைத்திருக்கக் கூடிய அல்லது சேகரிக்காமலும் இருந்திருக்கக்கூடிய ஆவணங்கள் சம்பந்தப்பட்டதாக உள்ளது. ஆகவே, அதுபோன்ற ஆவணங்கள் [மூலப்பிரதியில் உள்ளவாறு] இருக்கின்றன அல்லது இல்லை என்று வெறுமனே ஒப்புக் கொள்வது தேசிய பாதுகாப்பு நலன்களுக்கே பாதிப்பாக இருக்கும் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், FBI ஆல் உங்கள் விடயம் குறித்து எந்த ஆவணமும் இருப்பதையோ அல்லது இல்லை என்றோ உறுதிப்படுத்த முடியாது. … இந்த பதில் உங்கள் விடயத்தின் பெயர் எந்தவொரு கண்காணிப்பு பட்டியலிலும் இருப்பதை உறுதிப்படுத்தவும் இல்லை அல்லது நிராகரிக்கவும் இல்லை.

மிகவும் முக்கியமான விடயங்களில் மட்டும் — சட்ட சொற்பொருளில் "இருபொருள்பட பதிலளித்தல்" (Glomar responses) என்று அறியப்படும் — "உறுதிப்படுத்தாமலும் அல்லது மறுக்காமலும்" கூறும் பதில்களை FBI வழங்குகிறது. சான்றாக, 2018 நிதியாண்டில் மட்டும் மொத்த FOIA கோரிக்கைகளில் மூன்று சதவீதத்திற்கு இவ்விதமாக பதிலளித்தது.

மே 2018 இல் தாக்கல் செய்யப்பட்ட நோர்த்தின் FOIA விண்ணப்பத்திற்குப் பதிலளிக்க FBI 270 நாட்களை எடுத்தது. FOIA இன் கீழ், அரசு 20 நாட்களுக்குள் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளது அல்லது கூடுதலாக 10 நாட்கள் தாமதம் அவசியப்படுப்படும் "அசாதரண சூழ்நிலைகளை" குறித்து விண்ணப்பித்தவருக்கு தெரியப்படுத்த வேண்டும். FBI, “சாதாரண" கோரிக்கைகளுக்கு சராசரியாக ஒன்பது நாட்களில் விடையிறுக்கிறது, “சிக்கலான" கோரிக்கைகளுக்கு 121 நாட்கள் எடுத்துக் கொள்கிறது.

(1) கேள்வியின் ஆவணங்கள் பல "துறை அலுவலகங்களில்" பரவி இருந்தாலோ, (2) "ஒரேயொரு கோரிக்கையில் கேட்கப்பட்ட வெவ்வேறு தனித்துவமான ஆவணங்கள் பெரும் எண்ணிக்கையில் இருந்தாலோ," அல்லது (3) “அந்த கோரிக்கையின் தீர்மானத்தில் குறிப்பிடத்தக்க நலன்களைக் கொண்ட வேறெந்த முகமையுடன் … ஆலோசிக்க வேண்டிய அவசியம்" FBI க்கு இருந்தாலோ" மட்டுமே தாமதத்திற்கான "அசாதாரண சூழ்நிலை" நியாயமாகிறது என்பதை FOIA சட்டசாசன வரிகள் நிறுவுகின்றன.

மேலும் ஒரு கோரிக்கையை மறுக்கையில் அரசு, "அதற்கு பொறுப்பான ஒவ்வொருவரின் பெயர்கள் மற்றும் பதவிகள் அல்லது விபரங்களை வழங்க வேண்டும்" என்பதையும் சட்ட சாசனம் கோருகிறது. நோர்த்தின் விடயத்தில், FBI அதன் தாமதத்தை நியாயப்படுத்த "அசாதாரண சூழ்நிலைகளை" குறித்து எந்த விபரமும் வழங்கவில்லை என்பதுடன், அந்த மறுப்புக்குப் பொறுப்பான தனிப்பட்ட முகவர்களைக் பட்டியலிடவும் தவறியுள்ளது.

அரசின் மறுப்புக்கு, ஏப்ரல் 15, 2019 இல் தாக்கல் செய்த மேல் முறையீடு ஒன்றில், நோர்த்திற்கான வழக்கறிஞர்கள் பின்வருமாறு நீதியரசர்களுக்கு எழுதினர்:

திரு. நோர்த் 48 ஆண்டுகளாக அரசியலமைப்பு ரீதியில் பாதுகாக்கப்பட்ட சோசலிச இயக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். 1976 இல் இருந்து இப்போது வரையில், திரு. நோர்த் அமெரிக்க ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குத் தலைமை ஏற்று நடத்தியுள்ளார், அவர் 1976 இல் இருந்து 2008 வரையில் வேர்க்கர்ஸ் லீக்கின் தேசிய செயலராகவும் மற்றும் 2008 இல் இருந்து இப்போது வரையில் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய தலைவராகவும் சேவையாற்றி வருகிறார். அவர் 1998 இல் உலகசோசலிசவலைத்தளம் நிறுவப்பட்டதில் இருந்து அதன் சர்வதேச ஆசிரியர் குழு தலைவராகவும் சேவையாற்றி உள்ளார்.

அந்த மேல்முறையீடு தொடர்ந்து குறிப்பிட்டது:

அவரின் நீண்டகால அரசியல் வாழ்வின் போக்கில், திரு. நோர்த் பிரசுரிக்கப்பட்ட பல ஆயிரக் கணக்கான கட்டுரைகளை எழுதியுள்ளார் மற்றும் திருத்தம் செய்துள்ளார், அத்துடன் அமெரிக்கா எங்கிலும் மற்றும் சர்வதேச அளவிலும் பிரதான பல்கலைக்கழகங்களில் நூற்றுக் கணக்கான சொற்பொழிவுகளை நிகழ்த்தி உள்ளார். பல புத்தகங்களுக்கும் ஆசிரியரான அவர், நான்காம் அகில வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க சோசலிச தத்துவவாதியாக மற்றும் ஆளுமையுள்ளவராக உலகெங்கிலும் மதிக்கப்படுகிறார்.

FBI இன் விடையிறுப்பு பேச்சு சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்திற்கான நோர்த்தின் ஜனநாயக உரிமையை மீறுவதாக அந்த முறையீடு வாதிட்டது.

FBI, அதன் இருபொருள் பதிலில் (Glomar response), திரு. நோர்த்தின் தொலைபேசி அழைப்புகளைக் குறுக்கீடு செய்தும், அவர் வீட்டில் உளவுக்கருவிகள் பொருத்தியும், அவரின் மின்னஞ்சல்களை வாசித்தும், அவரின் நடவடிக்கைகளை பின்தொடர்ந்தும் அல்லது வேறு ஏதேனும் விதத்தில் அவரின் அந்தரங்க நடவடிக்கைகளையும் அரசியல் பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகளைக் கண்காணித்தும் அல்லது குறுக்கீடு செய்தும், அவரை அது உளவுபார்த்ததா அல்லது உளவுபார்த்து வருகிறதா என்பதைக் கூற மறுப்பதற்கான அதிகாரம் அதற்கிருப்பதாக வாதிடுகிறது. திரு. நோர்த் எதேனும் இரகசிய கண்காணிப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளரா என்பதையும் அந்த முகமை கூற மறுக்கிறது. எந்த காரணி அவரை உளவுபார்ப்பின் கீழ் அல்லது வேறேதும் பட்டியலில் வைப்பதற்கு இட்டுச் சென்றுள்ளது என்பதைக் குறித்து அது எந்தவித குறிப்பும் வழங்க மறுக்கும் அந்த பதில், அத்துடன் தொடர்புபட்ட பின்விளைவுகள் இருக்குமா என்பதையும் விவரிக்கவில்லை.

அந்த மேல்முறையீடு தொடர்ந்து வாதிட்டது:

அவர் முழுமையான சட்டபூர்வ ஜனநாயக உரிமைகளையும் அமெரிக்க பிரஜைகளுக்கு சட்ட உத்தரவாதம் அளிக்கும் பாதுகாப்புகளையும் அவர் அனுபவிக்கிறாரா மற்றும் முழு சட்ட அணுகுதல் அவருக்கு இருக்கிறதா என்பதை தீர்மானிக்க முடியாதவாறு, அந்த விடையிறுப்பானது, ஆவணங்கள் இருப்பதை ஒப்புக் கொள்ளாமலும் அல்லது மறுக்காமலும், திரு. நோர்த்தைச் சட்டத்திற்கு வெளியிலும் மற்றும் அரசியலமைப்புரீதியில் "யாருமில்லா தீவிலும்" நிறுத்துகிறது. ஒரு சிலரை, வாழ்வதற்கான உரிமை உள்ளடங்கலாக சட்ட பாதுகாப்புக்கு வெளியே அரசால் நிறுத்த முடியும் என்று குறிப்பிடும் homo sacer கோட்பாடு மற்றும் நாஜி நீதியரசர் கார்ல் ஷிமித் இன் "விதிவிலக்கான நிலை" உட்பட, இந்த முகமையின் வாதம் பாசிசவாத சட்ட தத்துவங்களுக்கு நிகரானதாக உள்ளது. டிரோன் தாக்குதல்கள் மற்றும் "CIA இன் அகற்றப்பட வேண்டியவர்களின் பட்டியல்" என்ற சமகாலத்திய சூழலில், இத்தகைய மீறல்களின் உள்நோக்கங்கள் விளைவுகளைக் குறித்து எச்சரிக்கை மணி ஒலிக்கிறது.

தகவல் கொள்கைக்கான நீதித்துறை அலுவலகம் அந்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக நோர்த்தின் வழக்குரைகளுக்குத் தகவல் அனுப்பி உள்ளது.

உலகசோசலிசவலைத்தளத்திற்கான ஓர் ஆறிக்கையில் நோர்த் அறிவித்தார்:

அமெரிக்க அரசு, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் மீது சட்டவிரோத உளவுபார்ப்பு மற்றும் தொந்தரவுக்குட்படுத்தும் ஒரு நீண்ட வரலாறைக் கொண்டுள்ளது. எனது FOIA விண்ணப்பத்திற்கு அரசாங்கத்தினது விடையிறுப்பின் அடிப்படையில், நான் உளவுபார்ப்பிற்குரிய இலக்காக வைக்கப்பட்டுள்ளேன் என்பது தெளிவாக உள்ளது. அவ்வாறு இல்லையென்றால், அதுபோன்ற சட்டவிரோத சர்ச்சைக்குரிய நடவடிக்கையில் அது ஈடுபடவில்லை என்று சர்வசாதாரணமாக மறுப்பது அரசாங்கத்திற்குப் போதுமானளவுக்குச் சுலபமாக இருந்திருக்கும்.

எனது நடவடிக்கைகளை அது உளவுபார்த்து வருகிறது என்பதை அது ஒப்புக் கொள்ள முடியாது அல்லது மறுக்கவும் முடியாது என்று அரசாங்கம், நிஜமான அச்சுறுத்தும் மொழியில், அறிவிக்கிறது. ஆனால் ஐந்த தசாப்தங்களாக எனது பணி மார்க்சிச தத்துவம் குறித்தும் மற்றும் ட்ரொட்ஸ்கிச நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டம் குறித்தும் பேசுவது மற்றும் எழுதுவதை உள்ளடக்கி உள்ளது. உளவுபார்ப்பு சம்பந்தமான ஆவணங்கள் உள்ளன என்பதை அது ஒப்புக் கொள்ளவோ அல்லது மறுக்கவோ முடியாதளவுக்கு, அரசியலமைப்புரீதியில் பாதுகாக்கப்பட்ட எனது நடவடிக்கைகளை அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக பார்க்கிறது என்ற உண்மை, சோசலிசம் மீதும், குறிப்பாக லியோன் ட்ரொட்ஸ்கியின் அரசியல் மரபியத்தை அடிப்படையாக கொண்ட சிந்தனைகள் மீதும் நிலவும் அரசாங்கத்தின் அச்சத்தை ஊர்ஜிதப்படுத்துகிறது.

பிரத்யேகமாக ஒரு சோசலிச வேலைத்திட்டத்தைப் பரப்பும் அடிப்படையில் ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் (Sozialistische Gleichheitspartei - SGP) எனது சக சிந்தனையாளர்களை விரோதமான அமைப்புகளின் உத்தியோகபூர்வ பட்டியலில் இருத்துவதற்கான ஜேர்மன் அரசாங்கத்தின் சமீபத்திய முடிவின் உள்ளடக்கத்தில், எனது FOIA விண்ணப்ப மறுப்பைப் பார்க்க வேண்டும். அந்த நடவடிக்கையை நியாயப்படுத்த, உத்தியோகபூர்வ ஜேர்மன் அரசின் அறிக்கை, குறிப்பாக நிலைகுலைக்கும் நடவடிக்கைக்கு ஓர் எடுத்துக்காட்டாக SGP எனது எழுத்துக்களை ஜேர்மன் மொழியில் பிரசுரித்ததைக் குறிப்பிட்டுக் காட்டியது. அந்த முடிவு உலகசோசலிசவலைத்தளத்தை அணுகுவதைத் தணிக்கை செய்வதற்கான கூகுள் மற்றும் பேஸ்புக்கின் முயற்சிகள் மீதும் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எனது தனிப்பட்ட விடயமாக நான் பார்க்கவில்லை. புலம்பெயர்ந்தோருக்கான சித்திரவதை முகாம்களின் கட்டமைப்பு மற்றும் "தேசிய அவசரநிலை" என்ற அடித்தளத்தில் இராணுவ நிலைநிறுத்தலில் இருந்து விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் மற்றும் இரகசிய இராஜாங்க ஆவண வெளியீட்டாளர் செல்சியா மானிங்கை இன்னலுக்கு உட்படுத்துவது வரையில், குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி இரண்டினது அரசியல் உயரடுக்கும் ஜனநாயக உரிமைகள் மீது முன்னொருபோதும் இல்லாத தாக்குதல்களைத் தொடுத்து வரும் ஒரு பிற்போக்குத்தனமான அரசியல் சூழலில் தான் FBI மற்றும் நீதித்துறையின் விடையிறுப்பு வருகிறது.

நோர்த்தும் அவர் வழக்குரைஞர் Emery Celli Brinckerhoff & Abady இன் டானியல் கொர்ன்ஸ்டீனும் பெடரல் நீதிமன்றத்தில் நீதித்துறையின் நடவடிக்கைகளை அடுத்து சவால் விடுவதற்கான சாத்தியக்கூறுகளைக் குறித்து சட்ட அடித்தளங்களை ஆராய்ந்து வருகிறார்கள்.

“எனது FOIA விண்ணப்பத்தை அரசாங்கம் மறுத்திருப்பதை சவால்விடுக்க அங்கே சட்ட வழிவகைகள் இருக்கும்,” என்று நோர்த் WSWS க்குத் தெரிவித்தார். “ஆனால் நீதிமன்றங்களில் இந்த முயற்சிகளின் வெற்றியானது, அமெரிக்காவுக்குள்ளும் சர்வதேச அளவிலும் ஜனநாயக உரிமைகள் மீது தீவிரப்படுத்தப்பட்டு வரும் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர்கள் இளைஞர்கள் மத்தியில் ஒரு பாரிய இயக்கம் அபிவிருத்தி அடைவதிலேயே முற்றிலும் தங்கியுள்ளதுடன் அதனையே சார்ந்துமுள்ளது.”

பரிந்துரைக்கப்படும்ஏனையகட்டுரைகள்:

லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதற்குப் பிந்தைய எழுபத்தியெட்டு ஆண்டுகள்

[21 August 2018]

பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலம், கெல்ஃபான்ட் வழக்கும் மார்க் ஸ்பொரோவ்ஸ்கியின் சாட்சியமும்

[10 November 2015]

The origins and findings of the HYPERLINK "https://www.wsws.org/en/articles/2018/11/14/scfi-n14.html"Security and the Fourth InternationalHYPERLINK "https://www.wsws.org/en/articles/2018/11/14/scfi-n14.html" investigation 
[14 November 2018]

WSWS Editorial Board