வலைத் தள ஆவணப்படம் ஜூலியன் அசாஞ்சின் உளவியல் சித்திரவதைகளை அம்பலப்படுத்துகிறது

By Oscar Grenfell
21 July 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம், ஒலி வடிவில் இங்கே கேட்கலாம்.

நேற்றிரவு, “எங்கள் பெயரில் வேண்டாம்” என்ற வலைத் தள முன்வெளியீடு ஒன்றை “அசாஞ்சை நாடு கடத்தாதே” என்ற குழு நடத்தியது. இது ஜூலியன் அசாஞ் பல தசாப்தங்களாக துன்புறுத்தியதன் மருத்துவரீதியான விளைவுகள் மற்றும் உலகளவில் ஜனநாயக உரிமைகள் மீதான அதன் தாக்கங்களை மதிப்பாய்வு செய்யும் ஒரு குறுகிய ஆவணப்படமாகும்.

இந்த நிகழ்வு பிரிட்டனின் அதிகபட்ச பாதுகாப்பு பெல்மார்ஷ் சிறைச்சாலையில் விக்கிலீக்ஸ் நிறுவனர் சிறையில் அடைக்கப்படுவதற்கு எதிரான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். அங்கு அவர் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பாதிப்பை எதிர்நோக்குகின்றார். அமெரிக்க போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காக அங்கு ஆயுள்கால தண்டனையை எதிர்பார்க்கும் அசாஞ் அமெரிக்காவிற்கு ஒப்படைக்கப்படுவதற்கான செப்டம்பர் விசாரணையின் முன்னதாக இந்நிகழ்வு நடைபெற்றது.

John Furse இயக்கிய இந்த ஆவணப்படம், பல அரசாங்கங்களின் கைகளில் அசாஞ் அனுபவித்த துஷ்பிரயோகங்களின் சுருக்கமான மற்றும் மறுக்கமுடியாத சுருக்கத்தை முன்வைக்க ஆவண காப்பக காட்சிகளையும் மூலமுதலான நேர்காணல்களையும் பயன்படுத்துகின்றது. மேலும் இது செய்தித்துறை சுதந்திரம் மற்றும் ஏகாதிபத்திய போருக்கு எதிராக போராட்டம் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளையும் கையாள்கின்றது.

Assange illegally arrested by the British police on April 11, 2019

பெருநிறுவன ஊடகங்களில் அசாங்கே வழக்கினை பற்றி கையாள்வதைப் போலல்லாமல், “எங்கள் பெயரில் வேண்டாம்” அமைப்பானது அமெரிக்காவில் அசாஞ் எதிர்கொள்ளும் குற்றச்சாட்டுகளின் தகவல்களின் உள்ளடக்கத்தில் விக்கிலீக்ஸ் நிறுவனர் தலைவிதியை உறுதியாக முன்வைக்கிறது.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் பாரிய பொதுமக்கள் படுகொலைகள் மற்றும் சர்வதேச சட்டத்தின் பிற மீறல்களை வெளிப்படுத்திய ஊடக அமைப்பின் 2010 வெளியீடுகளின் சுருக்கமான மதிப்பாய்வுடன் இது தொடங்குகிறது.

அந்தக் கால காட்சிகள் அமெரிக்க இராணுவ-உளவுத்துறை மற்றும் அரசியல் ஸ்தாபனத்தின் வெறித்தனமான பதிலை எடுத்துக்காட்டுகின்றன.

ஒரு நவ பழைமைவாத சிந்தனைக் குழுவான Hudson Institute இன் தலைவரான Kenneth Weinstein, “காட்டுக்கொடுப்போரின் தகவல் வெளிப்படுத்தும் நடவடிக்கைகள் எனக் கூறப்படுவதற்கு பொறுமை காட்டுவதில்லை” என்பது “எங்கள் அரசாங்கத்திற்கு மிகவும் முக்கியமானது” என்று அறிவிப்பதை அது காட்டுகின்றது.

விக்கிலீக்ஸ் “பென்டகன் தொடர்பான எங்கள் காப்பகங்களை அழித்து, அமெரிக்க இராணுவ தகவல் வெளிப்படுபவர்களுடன் தொடர்புகொள்வதை நிறுத்த வேண்டும்” அல்லது “நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகவேண்டும்” என்று அமெரிக்க அரசாங்கம் கோரியதாக 2010 ஊடகத்தின் முன் தோன்றியபோது அசாஞ் வெளிப்படுத்துகிறார்.

சிஐஏ உடன் நெருங்கிய உறவுகளைக் கொண்ட பாதுகாப்பு நிறுவனமான ஸ்ட்ராட்ஃபோர் (Stratfor) இல் உள்ள முன்னணி நபர்களுக்கிடையேயான மின்னஞ்சல்கள், "அடுத்த 25 ஆண்டுகளுக்கு பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள அவரை [அசாஞ்சை] நாட்டிலிருந்து நாட்டிற்கு நகர்த்துவதற்கான ஒரு திட்டத்தை கோடிட்டுக் காட்டியிருந்தன". இது அமெரிக்க அதிபாதுகாப்பான ஒரு சிறையில் பயங்கரவாதிகளுடன் அவர் சிறையில் அடைக்கப்பட்டதில் உச்சக்கட்டத்தை அடையும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

மிக விரைவாக, அசாஞ் பாலியல் முறைகேடு தொடர்பான போலி சுவீடிஷ் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பிரிட்டிஷ் சட்ட அமைப்பில் சிக்கினார். அவரை அமெரிக்காவிற்கு நாடுகடத்துவதற்கான ஒரு பின்கதவு என்று கருதப்பட்டது. இது விக்கிலீக்ஸ் நிறுவனர் 2012 இல் லண்டனில் உள்ள ஈக்வடோர் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் கோரத்தள்ளியது.

ஆவணப்படத்தின் பெரும்பகுதி ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் நீல்ஸ் மெல்சரின் விசாரணைகளின் விரிவாக்கமாகும். அதில் அசாஞ் தனது நீண்டகால துன்புறுத்தலின் விளைவாக உளவியல் சித்திரவதையின் மருத்துவரீதியாக வெளிப்படுத்தக்கூடிய அறிகுறிகளைக் காண்பிப்பார் என்று அவர் தெரிவித்தார். இந்த மதிப்பீடு மெல்சர் மற்றும் இரண்டு மருத்துவ வல்லுநர்கள் 2019 மே மாதம் பெல்மார்ஷ் சிறைச்சாலையில் அசாஞ் உடன் நடைபெற்ற ஆலோசனையையும், விக்கிலீக்ஸ் நிறுவனர் மீது ஏற்படுத்தப்பட்ட சட்ட முறைகேடுகள் குறித்து ஐ.நா. அதிகாரியின் விரிவான ஆய்வையும் அடிப்படையாகக் கொண்டது.

அசாஞ் சிகிச்சையின் போது காட்டிய உளவியல் சித்திரவதை குறித்த ஐ.நா.வின் விவரணங்களின் பல அம்சங்களை இந்த படம் கோடிட்டுக் காட்டுகிறது:

* நிலையான பயம் மற்றும் பதட்டம்: அசாஞ் பத்து ஆண்டுகளாக அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்படும் சாத்தியத்தை எதிர்கொண்டார். அங்கு அவர் மரண தண்டனைக்கு உட்படுத்தப்படலாம். அந்த காலகட்டத்தில் அவர் நியாயமற்றமுறையில் தடுத்து வைக்கப்பட்டு, கொடூரமாக கைது செய்யப்பட்டு அதிகபட்ச பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் அமெரிக்க அரசாங்கத்தின் மூத்த நபர்கள் அவரது கொலைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆஸ்திரேலிய மருத்துவ உளவியலாளர் டாக்டர் லிசா ஜோன்சன் பார்வையாளர்களிடம் “பெரும்பாலும் நீங்கள் பயப்படுகின்ற ஆபத்தினை எதிர்பார்த்திருப்பதுதான் அந்த அச்சுறுத்தலின் உண்மையான நடைமுறைப்படுத்தலைவிட அதிர்ச்சிகரமானதாகவும் வேதனையானதாகவும் அனுபவிக்கப்படுகிறது” என்று கூறினார்.

* பொது அவதூறு: மெல்சர் தனது ஆரம்ப கண்டுபிடிப்புகளில், அரசாங்கங்கள் மற்றும் பெருநிறுவன ஊடகங்களில் இருந்து எண்ணற்ற அவதூறுகளை உள்ளடக்கிய "பொது அவதூறு" (“public mobbing”) என்ற முன்னோடியில்லாத பிரச்சாரத்திற்கு அசாஞ் பலியானார் என்று கூறினார்.

ஒரு முன்னணி ஓய்வுபெற்ற உளவியலாளர் டாக்டர் டெரெக் சம்மர்ஃபீல்ட், இது "ஒரு நபரை அவர்கள் யார், அவரை சுற்றி என்ன நடக்கின்றது என்ற உணர்விலிருந்து மேலும் தனிமைப்படுத்தவும், அவர்களின் பெயரை மதிப்பிழக்க செய்யவும் உதவி, இதன் மூலம் ஒரு அரசாங்கம் அந்த நபருடன் செய்ய விரும்புவதை இலகுவாக்குகின்றது" என விளக்கினார்.

பாலியல் பலாத்காரத்திற்கு எதிரான பெண்களின் அமைப்பின் லிசா லாங்ஸ்டாஃப், ஸ்வீடிஷ் குற்றச்சாட்டுகள் "அரசு கையாளுதலுக்கு" உட்பட்ட விதத்தை கோடிட்டுக் காட்டினார். அவர்கள் அசாஞ்சின் உரிமைகளை இரத்து செய்வதற்கான ஒரு சாக்குப்போக்காக மட்டுமல்லாமல், ஒரு திட்டமிட்ட அவதூற்று பிரச்சாரத்தின் அடித்தளமாகவும் சேவையாற்றியது எனத்தெரிவித்தார்.

* சுயதன்மை இழப்பு: புதிய ஈக்வடார் அரசாங்கம் 2017 ஆம் ஆண்டில் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக்கொண்டு அசாஞ்சிற்கு எதிராக திரும்பியபோது இது தெளிவாகத் தெரிந்தது. அசாஞ், ஒரு அரசியல் அகதியாக இருந்தபோதிலும், சிஐஏ இன் அறிவுறுத்தலின் பேரில் செயல்படும் ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனத்தால் தொடர்ந்து உளவு பார்க்கப்பட்டார். மற்றும் எந்த நேரத்திலும் தூதரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார் என்ற அச்சுறுத்தலை எதிர்கொண்டதுடன், மேலும் அவரது தகவல்தொடர்புகள் துண்டிக்கப்பட்டு, இதனால் அவரை மேலும் தனிமைப்படுத்தப்பட்டார்.

* உதவியற்ற தன்மை மற்றும் நம்பிக்கையற்ற தன்மை: ஜோன்சன் தனது அரசியல் தஞ்சத்தை சட்டவிரோதமாக இரத்துசெய்தல் மற்றும் பிரிட்டனில் பக்கச்சார்பான அரசியல் மற்றும் நீதித்துறை அதிகாரிகளை எதிர்கொண்டார் என்று அவர் அறிந்துகொண்டமை உட்பட அசாஞ்ச் மீது ஏற்படுத்தப்பட்ட பல சட்ட முறைகேடுகள், “எதுவும் நடக்கலாம்” என்ற சூழ்நிலையை உருவாக்கியதாக ஜோன்சன் குறிப்பிட்டார். இது ஆழமாக குழப்பித்திற்குரியது. உங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்ள முடியும் என்று உங்களுக்குத் தெரியாது, அடுத்து என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாது”.

ஏப்ரல், 2019 இல் அசாஞ் கைது செய்யப்பட்டதிலிருந்து இது தீவிரமடைந்தது. பெல்மார்ஷ் சிறைச்சாலையில் அவருக்கு போதுமான மருத்துவ வசதி மறுக்கப்பட்டது, தனது சொந்த பாதுகாப்பிற்கான விசாரணையில் பங்கேற்பதைத் தடுத்து மற்றும் ஒரு போலி-விசாரணைகளின் தன்மையைக் கொண்டிருந்த தொடர்ச்சியான பிரிட்டிஷ் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.

* தனிமைப்படுத்தல் மற்றும் உணர்ச்சி இழப்பு: பிரிட்டன் சிறையில் அடைக்கப்பட்ட கூடுதலான காலம் முழுவதும் அசாசஞ் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் ஒப்படைப்பு கோரிக்கைகளை வசதியாக்குவதற்கு மட்டுமே அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தாலும் இது தொடர்கிறது.

Lissa Johnson speaking in defence of Assange earlier this year (Credit: WSWS)

இதன் பின்விளைவுகளைச் சுருக்கமாக ஜோன்சன் பின்வருமாறு குறிப்பிட்டார்: “நாங்கள் குறுகிய மன அழுத்தத்தினை தாங்கிக்கொள்ளும் இயல்பையே கொண்டிருக்கின்றோம். ஆனால் அது நிலையானதாகவும் இடைவிடாமல் இருக்கும்போது, நோய் எதிர்ப்பு தொடர்பான மிகவும் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்துகிறது. நோயெதிர்ப்பு கலங்கள் சுய அழிவை ஏற்படுத்தி, உங்கள் உடல் அவற்றை உற்பத்தி செய்வதை நிறுத்துகிறது. இதனால் நோயெதிர்ப்பு மண்டலத்துடனான தொடர்பு உடைகிறது. இது புற்றுநோயால் பாதிக்கப்படக்கூடிய நிலைமைக்கு நபர்களை உள்ளாக்குவதுடன், வழமைக்குமாறான நோய்த்தொற்றுகளுக்கு ஆளாக்கும். மற்றும் கொரோனா வைரஸுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடியதாக ஆக்குகிறது.

"இந்த வழிமுறைகள் அடிப்படையில் யாரையாவது வாழ விரும்பாத அளவுக்கு, அவர்களால் செயல்பட முடியாதளவிற்கு உடைக்க வடிவமைக்கப்பட்டுள்ளன."

விக்கிலீக்ஸ் நிறுவனர் அவரை கடந்த கிறிஸ்துமஸ் இற்கு முன்னர் தொலைபேசியில் அழைத்தபோது, அவர் பெல்மார்ஷ் சிறைச்சாலையில் "மெதுவாக இறந்து கொண்டிருப்பதாக" எச்சரித்ததாக அசாஞ்சின் நண்பர் வாகன் ஸ்மித் நினைவு கூர்ந்தார்.

திரையிடலுக்குப் பின்னர், லண்டன் Reporters Sans Frontiéres இன் இயக்குனரான ரெபேக்கா வின்சென்ட், மெல்சர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஜோன் ஃபர்ஸுடன் ஒரு கலந்துரையாடலை நடத்தினார்.

உளவியல் சித்திரவதையை "வலுவற்ற சித்திரவதை" என்ற எந்தவொரு கருத்தையும் மெல்சர் மீண்டும் நிராகரித்தார். உடல்ரீதியான சித்திரவதைகளில், வன்முறையை தூண்டுவது ஒரு வழிமுறையாகும். ஆனால் அது அதன் முடிவு அல்ல என்று அவர் குறிப்பிட்டார். உளவியல் சித்திரவதைகளைப் போலவே, அதன் நோக்கமும் “ஒரு நபரின் சிந்தனையை பாதித்து உடைப்பதாகும். அவர்களின் சிந்தனையை அடைய நீங்கள் அவர்களின் உடலை உடைக்கிறீர்கள்.

எந்தவொரு சித்திரவதைச் செயலின் உண்மையான இலக்கு சிந்தனையாகும். இது எப்போதும் உளவியல் ரீதியானது… உடல் வலி அல்லது உடல் அல்லாத வலி மற்றும் துன்பம் மூலம் நீங்கள் அதை அடைய முடியும். எனவே தனிமைப்படுத்தல், அவமானத்துடன், மிரட்டலுடன் இணைந்து, ஆழ்ந்த தன்னிச்சையுடன் இணைந்து, ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு, நோக்குநிலை மற்றும் அடையாளத்தின் மிகவும் உள்ளார்ந்த தேவைகளை இலக்கு வைக்கிறது ...இவை நம் உடலைக் காட்டிலும் நம் அடையாளத்துடன் மிக நெருக்கமாக இருக்கும் உளவியல் தேவைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன”.

விக்கிலீக்ஸ் வெளிப்படுத்திய அரச குற்றங்களிலிருந்து கவனத்தை திசை திருப்புவதை நோக்கமாகக் கொண்டு அசாஞ்சை இழிவுபடுத்துவதாக மெல்சர் கூறினார். அசாஞ்சிற்கு எதிராக அவதூறுகளைப் பற்றி பேசிய அவர், “நாங்கள் பூனைகள் மற்றும் ஸ்கேட்போர்டுகளைப் பற்றி விவாதிக்கிறோம், ஆனால் போர்க்குற்றங்கள் என ஆவணப்படுத்தப்பட்ட விஷயங்களைப் பற்றி நாங்கள் விவாதிக்கவில்லை”.

அவரது கண்டுபிடிப்புகளுக்கான பிரதிபலிப்பை பற்றி கேட்டபோது, அரசாங்கங்கள் அவரை "முரட்டுத்தனமாக சகித்துக்கொண்டாலும்", அவரது தீர்ப்புகளை அவர்கள் நிராகரித்த போதிலும், அவரது வெளிப்படுத்தல்களுக்கு "அரசியல் விலை செலுத்த வேண்டியிருக்கும்" என்று அவரிடம் கூறப்பட்டதாக மெல்சர் கூறினார்.

முந்தைய ஆண்டுகளில் சர்வதேச சட்ட விதிமுறைகள் அழிக்கப்பட்ட வழியை ஐ.நா. அதிகாரி குறிப்பிட்டார்: “நாங்கள் 40 ஆண்டுகளாக பொது சேவையை தனியார்மயமாக்கி வருகிறோம், இப்போது நாங்கள் அரசாங்கங்களை தனியார்மயமாக்கி வருகிறோம். சிறைச்சாலைகள், படைகள், பொலிஸ் ஆகியவற்றை நாங்கள் தனியார்மயமாக்கியுள்ளோம், எனவே தாமும் தனியார்மயமானவை என்று அரசாங்கங்கள் நினைப்பதில் ஆச்சரியமில்லை”.

அசாஞ்சின் வழக்கு முக்கிய நிதிய நலன்களின் பலத்தையும், ஜனநாயக உரிமைகளை இல்லாதொழித்ததையும் வெளிப்படுத்தியதாகவும் ஃபர்ஸ் குறிப்பிட்டார்.

Nils Melzer addressing a public meeting in London last January

அசாஞ்சின் துன்புறுத்தலின் பரந்த முக்கியத்துவத்தை விளக்கி, மெல்சர் அறிவித்தார்: “சித்திரவதையின் உண்மையான நோக்கம், பெரும்பாலும் அச்சுறுத்தலாகும். மேலும் இது பாதிக்கப்பட்டவரை அச்சுறுத்துவது அவசியமில்லை. இது மற்ற அனைவரையும் அச்சுறுத்துகிறது. அதனால்தான் மக்கள் பொது இடங்களில் சித்திரவதை செய்யப்படுகிறார்கள், கிராமத்து சதுக்கத்தில் ஆயுத மோதல்களில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள், மக்கள் பகிரங்கமாக தூக்கிலிடப்படுகிறார்கள்.

“ஜூலியன் அசாஞ்சிற்கு அதுதான் நடக்கிறது. இது அவரை தண்டிப்பது [அல்லது] அவரை விசாரிப்பது மற்றும் உண்மையைக் கண்டுபிடிப்பது பற்றியது அல்ல. இது மற்ற எல்லா செய்தியாளர்களையும் வெளியீட்டாளர்களையும் மிரட்டுவதும், அவர் செய்ததை யாரும் செய்யக்கூடாது என்பதை உறுதி செய்வதும் ஆகும். ஏனென்றால் இதுபற்றித்தான் அரசாங்கங்களுக்கு பயமாக இருக்கிறது”.

மெல்சர் "இந்த நோக்கம் ஏற்கனவே அடையப்பட்டுள்ளது" என்று எச்சரித்தார். இதன் பொருள் "இந்த மோதல் சாதாரணமாக பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாப்பதை விட உண்மையில் அதை மீண்டும் ஸ்தாபிப்பதாகும்."

இந்த நிகழ்வை இங்கே கூட்டமைப்பின் செய்திகளில் முழுமையாகக் காணலாம்.