குடியரசுக் கட்சியின் மாநாட்டில் ட்ரம்ப்பின் பேச்சு குறித்த WSWS இன் கட்டுரையை ரெடிட் மதிப்பீட்டாளர்கள் தணிக்கை செய்கிறனர்

By Kevin Reed
31 August 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வெள்ளிக்கிழமை, உலக சோசலிச வலைத்தள தள கட்டுரையான “ட்ரம்ப் பாசிச தலைவரைப் போல் போட்டியிடுகின்றார்” ரெடிட் மதிப்பீட்டாளர்களால் தணிக்கை செய்யப்பட முன்னர் 9,000 க்கும் மேற்பட்ட உயர்வுகளைப் பெற்று தளத்தின் முதல் பக்கத்திற்கு உயர்த்தப்பட்டது.

குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் ஜனாதிபதி போட்டிக்கான தேர்வை ஏற்றுக்கொள்ளும் உரையை ஒரு பாசிச வார்த்தையாடலாக குணாதிசப்படுத்திய கட்டுரையின் இணைப்பு, ரெடிட் பயனர் u/VoteProgress ஆல் காலை 7:10 மணிக்கு subreddit r/அரசியலில் வெளியிடப்பட்டது.

WSWS கட்டுரை இணைப்பில் “ட்ரம்ப் பாசிச தலைவரைப்போல் போட்டியிடுகின்றார்” என்பது நீக்கப்பட்டது என்ற ரெடிட் மதிப்பீட்டாளர்களின் அறிவிப்பு

“ட்ரம்ப் பாசிச தலைவரைப்போல் போட்டியிடுகின்றார்” என்ற கட்டுரை ஆயிரக்கணக்கான ரெடிட் பயனர்களால் விரைவாகப் படிக்கப்பட்டது. பிற்பகல் 1:30 மணியளவில், WSWS கட்டுரை 9,000 க்கும் மேற்பட்ட உயர்வு வாக்குகளையும் 600 க்கும் மேற்பட்ட கருத்துகளையும் பெற்றுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை WSWS இன் ட்ரம்ப் தொடர்பான மதிப்பீட்டை ஆதரித்தன.

அதில் சிறந்த கருத்துக்களில் ஒன்று, “ஊடகங்கள் அவரை எவ்வாறானவர் என்று அழைக்கத் தொடங்கிய நேரம் இது. அவர் சாதாரணமாகவும் தெளிவாகவும் ஒரு பாசிசவாதி”.

ஏறக்குறைய 2:30 மணியளவில், r/அரசியல் பகுதி மதிப்பீட்டாளர்கள் தலையிட்டு, WSWS கட்டுரையை "ஏற்றுக்கொள்ள முடியாத மூலத்திலிருந்து" வந்ததாக பெயரிட்டனர். subreddit கலந்துரையாடல் விரைவாக நிறுத்தப்பட்டது மற்றும் கட்டுரையின் இணைப்பு முன்மாதிரி அகற்றப்பட்டு அதற்கு பதிலாக “மன்னிக்கவும், இந்த இடுகை r/அரசியலின் மதிப்பீட்டாளர்களால் அகற்றப்பட்டது என்ற ஒரு பெட்டியில் குறிப்பிடப்பட்டு மாற்றப்பட்டது. மதிப்பீட்டாளர்கள் பல்வேறு காரணங்களுக்காக ஊட்டங்களிலிருந்து இடுகைகளை அகற்றுகிறார்கள். சமூகங்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும், மற்றும் அவற்றின் நோக்கத்திற்கு உண்மையானவையாகவும், பொதுவானதாகவும்.” வைத்திருப்பதற்காக என்றனர்.

கட்டுரையின் இணை ஆசிரியரான ஆண்ட்ரே டேமன் ட்விட்டரில் “பெரிய தலைவரைப் பற்றிய‘ பொதுவான ’கருத்துக்கள் மட்டுமே ரெடிட்டில் அனுமதிக்கப்படுகின்றன.” எனக்குறிப்பிட்டார்.

டேமனின் கருத்தை மறு ட்வீட் செய்து, இணைய தணிக்கை பற்றிய முக்கிய விமர்சகரான ரோலிங் ஸ்டோன் பத்திரிகையாளர் மாட் தைபி, "எங்கள் மொழி-காவல்துறை எதிர்காலத்திற்கு நல்வரவு" என்று எச்சரித்தார்.

330 மில்லியன் பயனர்களைக் கொண்ட ஒரு சமூக ஊடக தளமாக, ரெடிட் இதுவரை இணையத்தில் மிகவும் பிரபலமான செய்தி திரட்டல் மற்றும் வலை உள்ளடக்க மதிப்பீட்டு வலைத் தளமாகும். பதிவுசெய்த பயனர்கள் இணைப்புகள், உரைகள் மற்றும் படங்கள் போன்ற உள்ளடக்கத்தை தளத்திற்கு சமர்ப்பிக்கிறார்கள். பிற பயனர்கள் இந்த உள்ளடக்கத்தை மிகவும் பிரபலமானவை அல்லது ஒரு குறிப்பிட்ட subreddit இன் உச்சியில் என்ன உள்ளடக்கம் என்பதை தீர்மானிக்க வாக்களிக்கிறார்கள். அதிக எண்ணிக்கையிலான உயர்வுகளைப் பெறும் கருத்துக்கள் தளத்தின் முதல் பக்கத்திற்கு சென்று முடியும்.

இணைய தொழில்நுட்பத்தின் “அறிவிப்பு பலகை” வடிவமாக விவரிக்கக்கூடிய ரெடிட் தளம், செய்தி, விஞ்ஞானம், திரைப்படங்கள், உடற்பயிற்சி போன்ற ஒரு குறிப்பிட்ட தலைப்புக்கு பொருத்தமான உள்ளடக்கத்தைக் கொண்ட பயனர் உருவாக்கிய subreddit வகைகளாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

subreddit மதிப்பீட்டாளர்களின் அதிகாரங்களில் "அனுமதிப்பட்டியல்" இணைப்புகளை நிர்வகிப்பது. இது இணைய உபதலைப்புகளின் பட்டியல், பயனர்கள் subreddit இற்கான இணைப்புகளை சுதந்திரமாக இடுகையிட அனுமதிக்கப்படுகிறார்கள். உலக சோசலிச வலைத் தளம் ஜூன் மாதத்தில் அறிவிப்பு அல்லது விளக்கம் இல்லாமல் r/அரசியல் அனுமதிப்பட்டியலில் இருந்து அகற்றப்பட்டது.

WSWS கட்டுரையின் “ட்ரம்ப் பாசிச தலைவரைப்போல் போட்டியிடுகின்றார்” என்பது "ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு மூலத்திலிருந்து" வருவதாக பெயரிடுவது மற்றும் விவாதத்தை முடிப்பது r/அரசியலின் வெளிப்படையான அரசியல் தணிக்கை செயலாகும். subreddit இன் அனுமதிப்பட்டியலில் இருக்கும் சில உபதலைப்புகளின் மதிப்பாய்வு மூலம் இது அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது.

r/அரசியல் அனுமதிப்பட்டியலில் தற்போது வெளியீட்டாளர்கள், அமைப்புகள் மற்றும் அரசு துறைகளின் 1,021 உபதலைப்புகள் உள்ளன. அனுமதியளிக்கப்பட்ட தளங்களில் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளின் அனைத்து பிரிவுகளும், அதே போல் TheFederalist.com மற்றும் Breitbart.com போன்ற தீவிர வலதுசாரி வெளியீடுகளும் உள்ளன.

Federalist, 2013 இல் தொடங்கப்பட்ட ஒரு தீவிர வலதுசாரி வெளியீடாகும். உள்ளடக்கங்களைத குறிப்பாக "கறுப்பின குற்றம்" என்று குறிப்பதன் மூலம் வெளிப்படையாக இனவெறி அறிக்கையில் ஈடுபட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் பற்றிய தவறான மற்றும் ஆபத்தான பொது சுகாதார தகவல்களை வழங்கும் ஏராளமான கட்டுரைகளை இது வெளியிட்டுள்ளது.

தொற்றுநோயைப் பற்றிய Federalist கட்டுரைகளில் "மருத்துவ‘ சின்னம்மை பிரிவுகள்’ வூஹான் வைரஸின் அலைகளை எவ்வாறு மாற்ற முடியும்” என்ற தலைப்பில் ஒன்று உள்ளது, இது "தமக்காகவும் பொதுமக்களின் அதிக நன்மைக்காகவும் வேண்டுமென்றே தொற்றுநோயை எதிர்கொள்ள" மக்களை ஊக்குவிக்கிறது.

Breitbart.com 2010 இல் நிறுவப்பட்டது மற்றும் தீவிர வலதுசாரி சித்தாந்தவாதி ஸ்டீபன் பானன் என்பவரால் "வலதுசாரிகளின் தளம்" என்று பெயரிடப்பட்டது.

உலக சோசலிச வலைத் தளம் r/அரசியலில் தடைசெய்யப்பட்டு தடைசெய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் போலி விஞ்ஞான, இனவாத மற்றும் வலதுசாரி வன்முறை ஆகியவற்றின் ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக கருதப்பட்ட உபதலைப்புகள் அனுமதிப்பட்டியலில் வைக்கப்படுகிறன. இது சப்ரெடிட் மதிப்பீட்டாளர்களின் அரசியல் சார்பான தன்மையை வெளிப்படுத்துகிறது.

ரெடிட் 2006 இல் வெளியீட்டு நிறுவனமான Condé Nast ஆல் கையகப்படுத்தப்பட்டதுடன் மற்றும் விளம்பரத்தால் இயக்கப்படும், இலாபகரமான சமூக ஊடக தளமாக செயல்படுகிறது என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். இது வோல் ஸ்ட்ரீட் மதிப்பீட்டில் சுமார் 2 பில்லியன் டாலர்களை கொண்டுள்ளது. மைக்ரோசாப்ட், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களுடன் அதன் தலைமை அமெரிக்க அரசாங்க புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து “தேர்தல் பாதுகாப்பு”, இணைய அரசியல் தணிக்கைக்கு ஆதரவானது.

டொனால்ட் ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சி ஒரு அமெரிக்க வடிவிலான பாசிசத்திற்கான அடிப்படையை உருவாக்குவதற்கான முயற்சிகள் குறித்து உலக சோசலிச வலைத் தளத்தின் அரசியல் பகுப்பாய்வை ரெடிட் வாசகர்களிடமிருந்து தடுக்கும் முயற்சி, குறிப்பாக ஜனநாயகக் கட்சியின் அரசியல் நலன்களுக்கு உதவுகிறது. ஜனநாயகக் கட்சியினரும் பைடென் மற்றும் ஹாரிஸின் ஜனாதிபதி பிரச்சாரமும் ஒரு தனிப்பட்ட ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நோக்கிய ட்ரம்ப்பின் நகர்வுகளையும், நாடு முழுவதும் உள்ள நகரங்களில் உள்ள எதிர்ப்பாளர்களுக்கு எதிராக அமெரிக்க இராணுவ மற்றும் கூட்டாட்சி சட்ட அமுலாக்க முகமைகளை அணிதிரட்டுவதால் ஏற்படும் ஜனநாயக உரிமைகளுக்கான அச்சுறுத்தலையும் குறைத்து மதிப்பிடுகின்றன. இது பொலிஸ் வன்முறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்பவர்களுக்கு எதிராக பாசிச விழிப்புணர்வை ட்ரம்ப் தூண்டியது போன்றதே.

இந்த அரசியல் கோழைத்தனம் மற்றும் மூடிமறைப்புக்கான காரணங்கள் எமது கட்டுரையின் முடிவில் பின்வருமாறு குறிப்பிட்டிருப்பதை r/அரசியல் மதிப்பீட்டாளர்களால் அகற்றப்பட்டுள்ளதன் மூலம் விளங்கப்படுத்தப்படுகின்றது:

பொருளாதார நெருக்கடியால் பேரழிவிற்குள்ளான அமெரிக்க தொழிலாள வர்க்கம், ட்ரம்ப் வழிநடத்துகின்ற வேலைக்குத் திரும்பும் பிரச்சாரத்திற்கு பெருகிய முறையில் விரோதப் போக்கையும், முதலாளித்துவத்திற்கு இன்னும் வெளிப்படையாக விரோதப் போக்கையும் கொண்டு அரசியல் அரங்கில் தன்னை வெளிப்படுத்துகிறது.

இந்த சமூக சக்திதான், ஒரு அமெரிக்க பாசிசத்தை உருவாக்க ட்ரம்ப்பின் முயற்சிகளுக்கு உண்மையான எதிர்ப்பே தவிர முதுகெலும்பு இல்லாத ஜனநாயகக் கட்சியும் மற்றும் வோல் ஸ்ட்ரீட்டின் பிரிவுகளின் சார்பாக பேசும் வசதியான உயர் நடுத்தர வர்க்கமும் அல்ல.