மேற்கு வங்க அரசாங்க ஊழியர்கள் வேலை நிறுத்தம்; மகாராஷ்ரா செவிலியர்கள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டங்கள்

தொழிலாளர்கள் போராட்டங்கள்: ஆசியா

12 September 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்தியா: மகாராஷ்ரா செவிலியர்கள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்

மகாராஷ்ரா செவிலியர்கள் கடந்த மாதம் இறுதியில் தொடங்கி செப்டம்பர் 1 வரை கோவிட்-19 வார்டில் பணியில் இருக்கும் போது நிரந்தர வேலைகள், நீண்ட விடுப்பு உரிமைகள் மற்றும் ஆபத்துகால கொடுப்பனவு ஆகியவற்றை கோரி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். செவிலியர்கள் அவர்களுடைய கோரிக்கைகளை முன்னிலைப்படுத்துவதற்கு கருப்பு நாடாக்களை அணிந்திருந்தனர். மாநிலத்தில் அரசு மருத்துவமனைகள் முழுவதிலும் சுமார் 450 செவிலியர்கள் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் மேலும் 6 பேர் இறந்துள்ளனர்.

செவிலியர்கள் தங்களுக்கு போதுமான தனிமைப்படுத்தல் காலங்களை அனுமதிக்கவேண்டும் என்று கோரினார்கள். ஒரு மாதத்திற்கு முன்னர், கோவிட்-19 வார்டுகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கு ஏழு நாட்கள் தொடர்ந்து பணியாற்றவும், அதைத் தொடர்ந்து ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவும், ஐந்து நாட்கள் வேலை பின்னர் இரண்டு நாட்கள் விடுமுறைகள் என வேலை நேரங்களை அரசாங்கம் மாற்றம் செய்துள்ளது. மருத்துவ கல்லூரிகள் செவிலியர்களிடம் தொடர்ந்து ஏழு நாட்கள் பணியாற்றவும் பின்னர் மூன்று நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டிருக்கின்றன.

தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் (Tamil Nadu State Marketing Corporation - TASMAC) தொழிலாளர்கள் ஆகஸ்ட் 25 காலை இரண்டு மணிநேரம் அவர்கள் பணிபுரியும் கடைகளை மூடி போராட்டத்தை நடத்தினர். கோவிட்-19 க்காக மருத்துவ பாதுகாப்பீட்டுத் திட்டம், ஊழியர்களுக்கு கட்டாய வைரஸ் பரிசோதணை மற்றும் பணியிலிருக்கும்போது கோவிட்-19 தொற்று பாதிக்கப்பட்ட எந்த பணியாளரோ அல்லது அவர்களின் குடும்பங்களுக்கு மருத்துவ செலவினை டாஸ்மாக் வழங்கவேண்டும் என டாஸ்மாக் தொழிலாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் கோரினார்கள். தொற்றால் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு ரூ 50 லட்சம் ($US68,493) வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.

நிரந்தர வேலைகள் மற்றும் ஊதியம் மற்றும் ஊக்கத்தொகையினை கேரளா மாநில அரசாங்கத்தின் பெவ்கோ (BEVCO) கார்ப்பரேசன் தொழிலாளர்களுக்கு வழங்குவதைப் போன்று மற்ற கோரிக்கைகளை வைத்தனர். கேரளாவில் அரசாங்கம் கடைகள் திறக்கும் நேரத்தில் மாற்றங்களை செய்திருப்பதுடன், கையுறைகள் மற்றும் முகக்கவசங்களை தினமும் வழங்குகிறது. டாஸ்மாக் நிர்வாகம் 450 தொழிலாளர்களை வேறு கடைகளுக்கும், சென்னைக்கு வெளியேயும் பணிமாற்றம் செய்து பதிலளித்திருக்கிறது.

மேற்கு வங்க அரசாங்க நிர்வாக ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

மேற்கு வங்கத்தின் கூர்க்கலாந்து பிராந்திய நிர்வாகம் (Gorkhaland Territorial Administration – GTA), டார்ஜிலிங் தன்னுரிமை மாவட்ட கவுன்சில் மற்றும் கலிம்பொங் பகுதிகளையும் சேர்ந்த தொழிலாளர்கள் 4,000 க்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலைகள் கொடுக்கவேண்டும் என கோரி செவ்வாய்கிழமையன்று 10 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டனர். அவர்கள் காலையில் 10.00 மணிக்கு வேலைக்கு ஆஜராகிவிட்டு எந்த வேலையும் செய்யாமல் மாலை 4.30 மணிவரை அவர்களுடைய அலுவலகங்களில் இருக்கிறார்கள் என்று நிர்வாக ஊழியர்கள் கூறியுள்ளார்கள்.

இந்த ஆர்ப்பாட்டம் நிர்வாகத்தின் 90 சதவீத வேலைகளை மேற்கொள்ளும் கூர்க்கலாந்து பிராந்திய நிர்வாகத்தின் தொழிலாளர்கள் ஐக்கய சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புது டெல்லியில் ஓலா மற்றும் ஊபெர் கார் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

புதன்கிழமையன்று சுமார் 2,00,000 ஓலா மற்றும் ஊபெர் கார் ஓட்டுநர்கள் கட்டண உயர்வு மற்றும் திருப்பி செலுத்தும் கடனுக்கான தொகையை கட்டுவதற்கு டிசம்பர் 31 வரை மேலும் கால நீட்டிப்பு வழங்க கேட்டும் மேலும் அரசாங்கமே கட்டணத்தை தீர்மானிக்கவேண்டும் எனவும் நிறுவனத்தை இயக்குபவர்கள் கட்டணத்தை தீர்மானிக்ககூடாது என்ற கோரிக்கைகளுடன் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டனர். அவர்களுக்கு நிறுவனம் கொடுக்கும் கமிஷனை நிறுவனம் அதிகரிக்கவேண்டும் என்றும் கோரியுள்ளார்கள்.

உதவி செவிலியர்கள் மற்றும் மருத்துவதாதிகள் ஹரியானவில் தொடர் போராட்டம்

ஹரியானாவில் இருக்கும் பஞ்ச்குலாவில் அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர் (ஆஷா) மற்றும் துணை செவிலியர் மருத்துவ தாதி (ஏ.என்.எம்) ஆகியவற்றின் பணியாளர்கள் ஆகஸ்ட் 26 அன்று சிறந்த சுகாதார வசதிகள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுக்களுக்கு எதிரான போராட்டத்தின்போது அவர்களுடைய உயிர்களை பணயம் வைப்பதற்காக இழப்பீடு வழங்கவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வைத்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அணிவகுத்துச் சென்றனர். ஆகஸ்ட் 7 மற்றும் 8 தேதிகளில் இந்தியா முழுவதும் 6,00,000 ஆஷா அமைப்பின் தொழிலாளர்ளால் இரண்டு நாள் தேசியளவிலான வேலைநிறுத்தத்திற்குப் மேற்கொண்டதற்குப் பிறகு இந்த நடவடிக்கை வந்துள்ளது.

அரசாங்க ஊழியர் பெறும் சம்பள அளவுக்கும் மற்றும் அதனையொட்டிய சலுகைகளுடன் கூடிய முழுநேர வேலைகள் மற்றும் தனிமனித பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) வழங்கும்படி ஆஷா அமைப்பின் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். மார்ச் மாதத்திலிருந்து தனிமனித பாதுகாப்பு உபகரணத்திற்காக (PPE) தொடர்ச்சியாக கோரிக்கை வைக்கும் பட்சத்தில் குறைந்த ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு PPE வழங்கப்படுவதில்லை. இது ஒரு மோசமான சுரண்லாகும்.

இந்தியாவின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற சேரி பகுதிகளில் கோவிட்-19 முதல் பதிலளிக்கும் நிலை குழுக்களில் ஆஷா அமைப்பின் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். ஆந்திரா பிரதேஷ் ஆஷா அமைப்பின் தொழிலாளர்கள் சங்கம் தெலுங்கானா மாநிலத்திலுள்ள ஹைதராபாத்தில் திங்களன்று இதே கோரிகைகளை வைத்து ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

தமிழ் நாட்டில் வாகன உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் நிறுவன தொழிலாளர்கள் உண்ணாவிரத வேலைநிறுத்தம்

தொழிற்சங்கம் ஒன்றை உருவாக்க முயற்சித்ததாக மார்ச் 19 அன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நான்கு தொழிலாளர்கள் மீண்டும் பணியில் சேர்க்க கோரி தமிழ்நாடு, ஓரகடத்தில் உள்ள மெக்னா இன்டெர்நெஷனல் வாகன பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் தொழிலாளர்கள் ஆகஸ்ட் 26 அன்று பட்டினியிருப்பு போராட்டத்தை மேற்கொண்டனர். அதிகமான தொழிலாளர்கள் ஆலையில் தொழிற்சங்கத்தை ஆரம்பிப்பதில் ஆர்வமாக இருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியிருக்கிறார்கள். 28 நாடுகளில் 348 தொழிற்சாலைகளுடன் பூகோள அளவில் வாகனத்திற்கான மின்னணு பொருட்களை அளித்துவரும் நிறுவனமாக மெக்னா இருக்கிறது.

இலங்கை சுகாதார பணியாளர்கள் வட மத்திய மகாண மருத்துவமனையில் வேலைநிறுத்தப் போராட்டம் செய்கிறார்கள்

வடக்கு மாகாண மருத்துவமனைகளில் அன்மையில் கைவிரல் பதிவேட்டு மின்னணு இயந்திரத்தை நீக்கக் கோரி இலங்கையின் வட மத்திய மாகாணத்தின் வவுனியா பொது மருத்துவமனையிலுள்ள சுகாதார உதவியாளர்கள் புதன்கிழமை காலை மூன்று மணிநேரம் வேளிநடப்பு செய்து பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு பகுதிகளில் மட்டுமே இந்த மின்னணு இயந்திரங்களை பொருத்தியிருக்கிறார்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூறினார்கள். அவர்களுடைய கோரிக்கைகள் கவனத்துக்கு எடுக்கப்படவில்லையென்றால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளப்போவதாக அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

இலங்கை பொதுத்துறைத் தொழிலாளர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

கூட்டு வளர்ச்சி பணிமனை அலுவலகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் புதன் அன்று பணி நிரந்தரம் மற்றும் அவர்களுடைய பயிற்சிக் காலங்கள் மேலும் தொடரபடமாட்டாது என்ற உத்தரவாதமளிக்கவேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.

அதே நாள், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனை மற்றும் தொல்பொருள் துறையின் தற்காலிக தொழிலாளர்கள் ஜனாதிபதி செயலக கட்டிடத்திற்கு வெளியே தனித் தனியே ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

அவர்கள் நிரந்தர வேலைகளை கோரினார்கள் மேலும் சில தற்காலிக தொழிலாளர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ஊடகத்திற்கு கூறினார்கள்.

வேலைநீக்கம் செய்யப்பட்ட பங்களாதேஷ் ஆடைகள் தயாரிப்பு ஆலை தொழிலாளர்கள் இழப்பீடு கோருகிறார்கள்

டாக்காவிலுள்ள இரண்டு டிராகன் குழுமத்தின் ஆலைகளில் வேலை நீக்கம் செய்யப்பட்ட ஆடைத் தயாரிக்கும் தொழிலாளர்கள் திங்களன்று வழங்கப்படாத ஊதியத்திற்காகவும் மற்றும் இதர கொடுப்பனவுகளுக்காக காலவரையற்ற ஆர்ப்பாட்டத்தை தொடங்கினார்கள். பங்களாதேஷ் ஆடை தயாரிப்பாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் அலுவலகம் இருக்கும் ஆலை உரிமையாளரின் வீட்டிற்கு வெளியே டிராகன் குழும தொழிலாளர் பணியாளர் போராட்டக் குழுவும் மற்றும் ஆடைத் தொழிலாளர்கள் தொழிற்சங்க மையமும் சேர்ந்து ஆர்ப்பாட்டம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்திருந்தன.

கோவிட்-19 தொற்று பரவலிருக்கும் சமயத்தில் வருங்கால வைப்புநிதி மற்றும் ஈட்டிய விடுப்பு உட்பட சட்டப்படி வேலைநீக்கம் செய்தால் கொடுக்கவேண்டிய தொகை எதுவும் கொடுக்காமல் சுமார் 1,500 தொழிலாளர்கள் ஆலை அதிகாரிகளால் வேலைநீக்கம் செய்யப்பட்டதாக தொழிலாளர்கள் குற்றம்சுமத்தினார்கள். அதில் சில தொழிலாளர்கள் அந்த ஆலையில் 15 வருடங்களுக்கு மேல் வேலை செய்தவர்களாவர்.

அந்த ஆலை அதே கட்டிடத்தில் தற்போது இயங்குகிறது ஆனால் தற்காலிக தொழிலாளர்களை அமர்த்தி வெறொரு பேயரில் இயங்குவதாக தொழிலாளர்கள் கூறினார்கள்.

தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கான ஆய்வுத் துறை (DIFE) இல் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே தொழிலாளர்கள் தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்தனர் ஆனால் அவை புறக்கணிக்கப்பட்டன. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் ஒரு பகுதியாக தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கான ஆய்வுத் துறை இருக்கிறது மேலும் நலன், பாதுகாப்பு மற்றும் தொழிலாளர்களின் ஆரோக்கியம் ஆகியவற்றை உறுதிசெய்வதற்கான பொறுப்புடையதாக இருக்கிறது.

கம்போடியா கைப்பை தயாரிக்கும் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

கம்போடியாவின் வட தெற்கிலிருக்கும் ஷியெம் ரீப் மாகாணத்திலுள்ள பாக்டிக்ஸ் ஆலையிலிருந்து நானூறு தொழிலாளர்கள் கடந்த வாரம் வெளிநடப்பு போராட்டத்திற்கு பிறகு இந்த வாரம் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்கள் இரண்டு தொழிற்சங்க தலைவர்ள் மேட் ராத் மற்றும் பிங் டீவ் ஆகியோரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்றும் மேலும் கோவிட்-19 காரணமாக விற்பனை சரிந்துவிட்டதால் ஏப்ரலில் 80 தொழிலாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்கள், அவர்களுக்கு வழங்க வேண்டிய முன்னைய ஊதியம் மற்றும் சலுகைகள் செலுத்தப்பட வேண்டும் என்றும் கோரினார்கள்.