இந்தியா: தனியார் மயமாக்கத்தை எதிர்த்து பெட்ரோல் சுத்திகரிப்பு மற்றும் விவசாய சந்தைப்படுத்தல் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப்போராட்டம்; ஊதியத்தை முடக்கியதற்காக பாகிஸ்தான் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

தொழிலாளர்கள் போராட்டங்கள்: ஆசியா

19 September 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்தியா: மத்திய பிரதேச மாநில வேளாண்பொருட்கள் சந்தைப்படுத்தல் வாரிய தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

மத்திய பிரதேச வேளாண்பொருட்கள் சந்தைப்படுத்தல் (மண்டி) வாரியத்தின் 35,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களும், மண்டியை சார்ந்திருக்கும் 50,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் செப்டம்பர் 3 அன்று போபாலில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். ஒரு திட்டமிடப்பட்ட மாதிரி மண்டி சட்டத்தை எதிர்த்த ஆர்ப்பாட்டத்தில் வெளிநடப்புப் போராட்டம் நடந்திருக்கிறது. அரசாங்கத்தின் செயல்பாட்டின்படி தனியார் இயக்குநர்கள் அதில் பலன்களை அடைவார்கள் என அவர்கள் குற்றம்சுமத்தியுள்ளார்கள்.

மண்டி சட்டம் 1972 ஐ பாதுகாக்கவும் மற்றும் ஊழியர்களின் பொருளாதார பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தவும் நாங்கள் போராடுகிறோம் என்று தொழிலாளர்கள் கூறினார்கள். அரசு செயலகத்திற்கு அருகே அவர்களுடைய அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினார்கள் என்று அவர்கள் குற்றம் சுமத்தினர்.

கொச்சியில் பெட்ரோல் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் தனியார் மயமாக்கத்தை எதிர்த்து வேலைநிறுத்தப் போராட்டம்

கொச்சியில் உள்ள அரசுக்கு சொந்தமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் சுத்திகரிப்பு நிலையத்தைச் சேர்ந்த 1,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திங்களன்று நிறுவனத்தின் விரைவான தனியார் மயமாக்கலுக்கான உட்பிரிவுகளைகொண்டிருக்கும் நீண்டகால ஊதிய தீர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 48 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டனர். கொச்சியின் சுத்திகரிப்பு நிலையத்தின் வாயிலில் இந்த ஆர்ப்பாட்டக் கூட்டம் நடைபெற்றது.

தனியார் மயமாக்கலுக்கு எதிரான தேசியளவிலான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கொச்சின் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் சங்கம், கொச்சின் சுத்திகரிப்பு ஊழியர் சங்கம், சுத்திகரிப்பு தொழிற்சங்கம் மற்றும் பிபிசிஎல் மஸ்தூர் சங்கம் போன்றவைகளினால் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மும்பை சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொழிலாளர்கள் நீதிமன்ற உத்தரவை மீறி வெளிநடப்பு செய்திருந்தனர்.

தமிழ்நாடு மணல் ஏற்றும் மாட்டுவண்டிக்காரர்கள் திருச்சியில் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்ட மணல் அள்ளும் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் கொள்ளிடம் ஆற்றில் பிரத்தியேகமாக மணல் செரும் இடத்தினை மாட்டுவண்டியில் ஏற்றுபவர்களுக்காக பொதுப்பணித் துறை திறக்கவேண்டும் என்று கோரி செப்டம்பர் 3 அன்று திருச்சியின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்ட போராட்டத்தை மேற்கொண்டனர். யூலையில் நடந்த மூன்றுதடவை பேச்சுவார்த்தைகளின்போது ஒப்புக்கொண்டதற்கு இணங்க ஐந்து ஆற்றகரைத் தளங்களை திறக்கவேண்டும் என்று போராட்டத்திலீடுபட்டவர்கள் கோரினார்கள்.

கோவிட்-19 பொதுமுடக்கத்திலிருந்து காவேரி ஆற்றில் தோண்டும் பகுதி மூடப்பட்டிருக்கிறது மேலும் தற்போது ஆற்றில் ஒடும் தண்ணீர் 4,000க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதரங்களைப் பாதிக்கும் வகையில் இருப்பதாக மணல் மாட்டுவண்டிக்காரர்கள் கூறினார்கள். வருவாய்த் துறை அதிகாரிகள் அவர்களுடைய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் மேலும் அவர்களுடைய கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுப்பதாக கூறியதற்குப் பிறகு மாட்டுவண்டிக்காரர்கள் மற்றும் தொழிலாளர்கள் அவர்களுடைய போராட்டத்தை முடித்துக்கொண்டனர்

பாட்னா மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

பீகார் மாநிலத்தின் பாட்னா மாநகராட்சியில் 4,000க்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் செப்டம்பர் 3 அன்று ஊதிய உயர்வுக்கான கோரிக்கைக்காக வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டனர். தினக்கூலித் தொழிலாளர்களுக்காக ஒழுங்குபடுத்தப்பட்ட வேலைகள், வேலைக்கான சரியான வருமானம், விபத்து காப்பீடாக 2.5 மில்லியன் ரூபாய்கள் மற்றும் சம்பளக் கொடுப்பனவுகள் மற்றும் ஒவ்வொரு மாதத்தின் 5 நாளில் ஓய்வூதியங்கள் போன்ற கோரிக்கைகளையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரினார்கள்.

கேரளா அரசாங்கம் கையகப்படுத்தவேண்டும் என்று கண்ணாடித் தொழிலாளர்கள் கோரிக்கை

செப்டம்பர் 4 அன்று உற்பத்தி நிறுத்தப்பட்டிருக்கும் நிறுவனத்தை மாநில அரசாங்கம் கையகப்படுத்தவேண்டும் என்று கோரி கேரளா மாநிலம் பதிரபள்ளியிலிருக்கும் தனியாருக்கு சொந்தமான எக்ஸெல் கண்ணாடித் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு வெளியே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். எக்ஸெல் கண்ணாடி தொழிலாளர்கள் சங்கத்தால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிறுவனம் பிரதானமாக மதுபாட்டில், உணவு மற்றும் மருந்து உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு பிளின்ட் கண்ணாடி பாட்டில்கள் மற்றும் ஜாடிகளை உற்பத்திசெய்வதுடன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியினையும் மேற்கொள்ளுகிறது. எக்ஸெல் கண்ணாடி லிமிட்டெட் 1970 இல் உருவாக்கப்பட்ட ஒரு அரசாங்கம் சாராத நிறுவனமாக வரையறுக்கப்பட்ட ஒரு பொது ஒருங்கிணைந்த நிறுவனமாகும் மேலும் இங்கு 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள்.

மேற்கு வங்க தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

செப்டம்பர் 3 அன்று மேற்கு வங்கத்திலுள்ள சுமார் 200 க்கு மேற்பட்ட தேயிலைத் தோட்டங்களில் பல்வேறு கோரிக்கைகளை வைத்து பாரதிய தெராய் தூர்ஸ் தொழிலாளர்களின் தொழிற்சங்கம் (BTDWU) ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. வருடத்திற்கு ஒரு முறை ஒன்பது நாள் இந்து விழாவான துர்கா பூஜா இந்த வருடம் வருவதற்கு முன்னதாக 20 சதவீத போனஸ், தோட்டக் குடியிருப்பாளர்களுக்கான நில உரிமைகள் மற்றும் நிலையான குறைந்தபட்ச ஊதியங்கள் அவர்களின் பிரதான கோரிக்கைகளாக இருந்தது.

பாகிஸ்தான்: கைபர் பக்துன்க்வா அரசாங்க ஊழியர்கள் ஊதிய உயர்வு கோருகின்றனர்

பாகிஸ்தான் வடமேற்கிலுள்ள கைபர் பக்துன்க்வா அரசாங்க ஊழியர்கள் ஊதிய உயர்வு, ஒப்பந்த ஊழியர் முறையை முடிவுக்கு கொண்டுவரவும் மற்றும் இதர சலுகைகள் ஆகியவற்றை கோரி புதன்கிழமையன்று மாகாணம் முழுவதிலும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர். மாகாணத்தின் தலைநகர் பெஷாவர் மற்றும் மற்ற மாவட்டங்களின் தாழ்வான பகுதி மற்றும் மேட்டு பகுதி, ஷன்கலா, பஜ்யெளர் மற்றும கைபர் ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசாங்க ஊழியர்கள் அரசாங்கத்தின் வரவுசெலவு திட்டத்தின் ஊதிய முடக்கத்திற்கு கண்டனம் தெரிவித்தனர் மேலும் மிக வேகமாக உயரும் வாழ்க்கைச் செலவுகளை சுட்டிக்காட்டினர்.ஊதிய உயர்வு 50 இலிருந்து 100 சதவீதம் அளவில் இருக்கவேண்டும் என்றும் அனைத்து வாரியத்தின் ஊதிய அளவீடுகளில் கணிசமான மாற்றத்துடன் அடிப்படை ஊதியத்தில் தற்காலிக கொடுப்பனவுகள் உட்படுத்துவதற்கும் அவரகள் கோரிக்கை வைத்தனர். மருத்துவ கொடுப்பனவு 10,000 ரூபாயாக ($US60.09) அதிகரிக்கவேண்டும் என்ற மேலும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஒப்பந்த தொழிலாளர் முறையை தொழிலாளர்கள் எதிர்ப்பதுடன் அதை ரத்துசெய்ய வேண்டும் என்றும் விரும்பினார்கள். செலவீனங்களை வெட்டுவதற்கும் வேலை பாதுகாப்பைக் குறைப்பதற்கும் இந்த முறை அரசாங்கத்தால் அதிக அளவில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஒய்வுபெற்ற ஊழியர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு மேலும் ஓய்வூதி அளவை அதிகரிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

30க்கு மேற்பட்ட தொழிற்சங்கங்களைக் கொண்ட ஒரு குடையின் கீழ் செயல்படும் தொழிற்சங்கமான அனைத்து அரசாங்க ஊழியர்கள் மாபெரும் கூட்டுத் தொழிற்சங்கம் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இந்த கூட்டுச் சங்கம் செப்டம்பர் 24 அன்று மாகாணம் முழுவதும் பரந்தளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறது

இலங்கை ஆடைத் தொழிலாளர்கள் ஊதிய வெட்டுக்கு எதிராக வேலைநிறுத்தப் போராட்டம்

கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக மையத்தில் சுமார் 300 சட்டை தொழிற்சாலை தொழிலாளர்கள் கோவிட்-19 தொற்று பரவும் நேரத்தில் ஊதிய வெட்டு நடைமுறைப்படுத்தியதற்காக செப்டம்பர் 8 மற்றும் 9 தேதிகளில் வெளிநடப்பு செய்து வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டனர். நிர்வாகத்தால் மேற்கொள்ப்பட்ட ஊதிய வெட்டு மற்றும் பணி நீக்க அறிவிப்புகள் போன்றவற்றுக்கு எதிராக கடந்த மூன்று மாதங்களாக நடந்த தற்காலிகள ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து இந்த வேலைநிறுத்தப்போராட்டம் நடந்துள்ளது.

தகுந்த குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரியுள்ளார்கள் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு 400 ரூபாய் (2.2 அமெரிக்க டாலர்) வழங்கப்படும் என்ற அடிப்படையில் தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டது. தாங்கள் ஆதரவற்றவர்கள் என்றும், வாடகை செலுத்தவோ, உணவுக்காக பணம் செலுத்தவோ முடியாத நிலையில் இருப்பதாக தொழிலாளர்கள் கூறினார்கள்.

தென்கொரிய மருத்துவர்கள் சங்கம் ஒரு மாத வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிக்கின்றது

தென் கொரிய மருத்துவர்கள் சங்கம் ஒரு மாத தொழில்துறை நடவடிக்கையை முடிக்கிறது

கொரிய மருத்துவ சங்கம் (KMA) திங்களன்று சுகாதார அமைச்சகத்துடன் ஒரு உடன்பாட்டை எட்டிய பின்னர் பொது மருத்துவமனை பயிற்சியாளர்கள் மற்றும் வதிவிட மருத்துவர்கள் வேலைநிறுத்தங்கள் உட்பட ஒரு மாத கால தொழில்துறை நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வந்தது. இந்த ஒப்பந்தம் அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய சுகாதார சீர்திருத்தங்களை நிறுத்துகிறது. எவ்வாறாயினும், பயிற்சி மருத்துவர்களின் ஒரு முக்கிய குழு இறுதி பேச்சுவார்த்தைகளில் இருந்து விலக்கப்பட்டது, ஏனெனில் அவர்கள் வெளிநடப்பை தொடர உறுதி அளித்தனர்.

ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கி பல வாரங்கள் நீடித்த வெளிநடப்புகளைத் தொடர்ந்து, பொது மருத்துவமனைகளில் கொரிய இன்டர்ன் ரெசிடென்ட் அசோசியேஷனின் சுமார் 16,000 உறுப்பினர்கள் ஆகஸ்ட் 21 அன்று வேலைநிறுத்தம் செய்தனர். 130,000 பேர் கொண்ட KMA குடியிருப்பு மருத்துவர்கள் மற்றும் பிராந்திய கிளினிக்குகளைச் சேர்ந்த பயிற்சியாளர்களை உள்ளடக்கியது, அது ஆகஸ்ட் 26 அன்று வேலைநிறுத்தத்தில் இணைந்தது. முன்மொழியப்பட்ட மருத்துவ சீர்திருத்தங்கள் காரணமாக வேலைநிறுத்தம் வெடித்தது, அவை மருத்துவ பயிற்சி, தீவிர பணிச்சுமை மற்றும் வேலை நிலைமைகள் மற்றும் கிராமப்புற மாகாணங்களில் மோசமான மருத்துவ உள்கட்டமைப்பு ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யத் தவறியதாக மருத்துவர்கள் கூறினர். பாரம்பரிய மருத்துவத்திற்கான முன்மொழியப்பட்ட மானியங்களை மருத்துவர்கள் எதிர்த்தனர், இது விஞ்ஞானமற்ற மருத்துவ நடைமுறை என்று அவர்கள் கூறினர்.