1.5 மில்லியனுக்கும் அதிகமான இந்திய மின்சாரத் துறை ஊழியர்கள் தனியார்மயமாக்கத்தை எதிர்த்து போராட்டம்; பங்களாதேஷ் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி வேலைநிறுத்தப்போராட்டம்; பாகிஸ்தான் அரசாங்க ஊழியர்கள் ஊதிய உயர்வு மற்றும் ஓய்வுதியங்களை கோருகிறார்கள்.

தொழிலாளர்கள் போராட்டங்கள்: ஆசியா

17 October 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்தியா: மின்சாரத்துறை தொழிலாளர்கள் தனியார் மயமாக்கலை எதிர்த்து தேசியளவிலான ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்

மின்சார (திருத்தப்பட்ட) மசோதா, 2020 மற்றும் யூனியன் பிரதேசங்களின் மின்பகிர்வினை தனியார்மயமாக்கல் ஆகியவற்றை எதிர்த்து 1.5 மில்லியனுக்கும் அதிகமான மின்சாரத் துறை தொழிலாளர்கள் திங்களன்று இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். யூலை மற்றும் ஆகஸ்ட்டில் தேசியளவில் நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து வந்த இந்த ஆர்ப்பாட்ட போராட்டங்கள் மின்சார ஊழியர்கள் மற்றும் பொறியாளர்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புதுச்சேரி, சண்டீகர், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் லடாக் போன்ற யூனியன் பிரதேசங்களில் மின்பகிர்வு நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக ஊழியர்கள் புகார் தெரிவித்தார்கள். புர்வாஞ்சால், வித்யுத், விட்ரன், மற்றும் நிகம் ஆகிய இடங்களில் தனியார்மயமாக்கலைத் தொடங்கியிருக்கிறது. மேலும் ஒடிசா அரசாங்கம் எற்கனவே மத்திய மின்சார பகிர்வு நிறுவனத்தை (CESU) டாடா மின்சார மற்றும் திட்டங்களுக்கு அனுமதித்திருக்கிற அதேவேளை நெஸ்கோ, வெஸ்கோ மற்றும் சவுத்கோ ஆகிய மூன்று discoms டிஸ்கோம்களை தனியார்மயமாக்க திட்டமிட்டுள்ளது.

யூலை 3 அன்று பதினொரு மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் நடந்த பிறகு, மின்சார (திருத்த) மசோதா 2020 ஐ மாற்றம் செய்வதாக இந்திய மின்சார துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார். அரசாங்கம் அடுத்த பாரளுமன்ற கூட்டத்தில் மசோதாமீது நடவடிக்கையெடுக்கவில்லையென்றால் தொழிலாளர்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக எச்சரித்துள்ளார்கள்.

வடக்குடெல்லிநகராட்சிமருத்துவமனைமருத்துவர்கள்நிலுவைஊதியத்திற்காகவேலைநிறுத்தப்போராட்டம்

வடக்கு டெல்லி மாநகராட்சியிலுள்ள பெரிய மருத்துவமனையான இந்து ராவ் மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர்கள் கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்படாமலிருக்கும் நிலுவை ஊதியத்தை வழங்கக்கோரி புதன் கிழமையன்று வேலையிலிருந்து வெளிநடப்பு செய்து மருத்துவமனையின் பிரதான வாயிலில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். வழங்கப்படாத ஊதியத்தை வழங்கக்கோரி செவிலியர்களால் நடத்தப்படும் பதாகைகள் ஏந்திப் போராடும் ஆர்ப்பாட்டத்தில் அவர்களும் இணைந்துகொண்டனர்.

கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மைய மருத்துவமனையாக இது இருக்கிறது மேலும் அந்த மருத்துவமனையின் பல சுகாதார நல தொழிலாளர்கள் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு முன்னர் மருத்துவர்கள் ஒரு வாரத்திற்கு மேலாக தினமும் மூன்று மணிநேரம் மெதுவாக வேலைசெய்யும் போராட்டத்தை நடத்தினர்.

கடந்த வாரம், வடக்கு டெல்லி மாநகராட்சியின் 9,000க்கும் அதிகமான ஆசிரியர்கள் மே மாதத்திலிருந்து வழங்கப்படாத நிலுவை ஊதியத்தை வழங்க கோரி வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

ஒடிசாவின் பல்கலைக்கழக ஆசிரியர்கள் புதிய விதிமுறைகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

திங்களன்று, சர்ச்சைக்குரிய ஒடிசா பல்கலைக் கழகங்கள் (திருத்த) சட்டவரைவு - 2020ஐ எதிர்த்து புவனேஸ்வரில் உள்ள உட்கல் பல்கலைக் கழகத்திற்கு முன்னால் ஒடிசா முழுவதிலுமுள்ள பல்கலைக் கழக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

ஒடிசா பொது சேவை ஆணையத்தினூடாக நியமிக்கும் ஆசிரியர்களால் பல்கலைக் கழத்தின் தன்னாட்சியை இல்லாமல் செய்தவற்கான முயற்சியாக நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் சட்டவரைவு இருக்கிறது என்று ஒடிசாவிலுள்ள பல்கலைக் கழக ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழு குற்றம் சாட்டியுள்ளது.

கர்நாடகா ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தர வேலைகள் வேண்டும் என்று கோருகிறார்கள்

கர்நாடகா, பெலகாவி நகர மருத்துவர்கள் உட்பட, செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவ துறையல்லாத பணியாளர்கள் வெளியிலிருந்து பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த சுகாதார ஊழியர்கள் திங்களன்று நிரந்தர வேலைகள், ஊதிய உயர்வு மற்றும் பிற தேவைகள் ஆகியவற்றை கோரி போராடினார்கள். ஒப்பந்த மற்றும் வெளிப்பணித் தொழிலாளர்கள் சங்கத்தினர் துணை கமிஷனர் அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

கோவிட்-19 நோயாளிகளை சிகிச்சையிளிப்பதில் அவர்களுடைய உயிர்களை ஆபத்தான நிலையில் வைத்துக்கொண்டிருக்கும் போராட்டத் தொழிலாளர்கள் “எங்களுக்கு ஊதியம் வேண்டும், கைதட்டல்கள் அல்ல” மற்றும் “கொரோனா போராளிகளுக்கு நீதி வேண்டும்” என்று கோஷங்களை எழுப்பினர். நிரந்தரத் தொழிலாளர்களுக்கு இணையாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்கவேண்டும் என்று அவர்கள் வேண்டுகொள் விடுத்தனர். ஓய்வூதிய பலன், வைப்புநிதி மற்றும் சிறந்த வேலை நிலைமைகள் ஆகியவரை பிற கோரிக்கைகளாக இருந்தன.

தமிழ்நாடு ஜின்சங் தொழிலாளர்கள் பணிநீக்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கொரியாவை மையமாக கொண்டு இயங்கும் ஜின்சங் என்ஜினியரிங் நிறுவனம் கடந்த மாதம் 27 தொழிலாளர்களை திடீரென பணி நீக்கம் செய்ததற்கு எதிராக அக்டோபர் 1 அன்று ஸ்ரீபெரும்புதூர் டோல் கேட்டுக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். இந்த தொழிலாளர்கள் 5 தொடக்கம் 12 வருடங்களாக நிறுவனத்தின் பகுதியாக இருந்துவந்துள்ளார்கள். வேலைநீக்கம் செய்யப்பட்டதற்கு எந்த காரணங்களையும் நிறுவனம் வழங்கவில்லை.

புதுச்சேரி மருத்துவமனை தொழிலாளர்கள் காவல்துறையினரின் தாக்குதலுக்கு எதிராக போராட்டம்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தின் மருத்துவர்கள் மற்றும் பிற ஊழியர்கள் ஒரு பணிமருத்துவரை காவல்துறை அலுவலரால் தாக்கப்பட்டதை எதிர்த்து அக்டோபர் 2 அன்று இரண்டு நாட்கள் வெளிநடப்பு போராட்டத்தை மேற்கொண்டனர். அந்த காவலர் கைது செய்யப்படவேண்டும் மற்றும் பிணையில் வெளியே விடாமல் இருக்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தார்கள். காவலர் மற்றும் அவருடைய உறவினர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் உறுதியளித்ததற்கு பிறகு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினார்கள்.

கேரளா அரசு மருத்துவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக வேலைநிறுத்தப்   போராட்டம்

கேரளா, திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் திங்களன்று கோவிட்-19 நோடல் அலுவலராக இருந்த ஒரு மூத்த சக ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டதற்காக ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர். நோயாளிக்கு சிகிச்சையளிப்பதில் அலட்சியம் காட்டியதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

வேலைநிறுத்தத்திற்கு முன்னதாக மாநிலம் முழுவதிலுமிருந்து மருத்துவ கல்லூரிகளின் மருத்துவர்கள் இரண்டு நாட்களாக காலையில் இரண்டு மணிநேரம் வெளிநோயாளிகள் பணியினை புறக்கணித்து போராட்டத்தினை நடத்தினர். சுகாதராத் துறை அமைச்சருடன் கலந்துகொண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு மருத்துவர்கள் பணிக்கு திரும்பினர்.

ராஜஸ்தான் பாங்க்ஆப்இந்தியா ஊழியர்கள் ஊதிய உயர்வுக்காக வேலைநிறுத்தப் போராட்டம்

ராஜஸ்தான் மாநிலம் முழுவதிலுமுள்ள கிளைகளில் 500க்கும் அதிமான பாங்க் ஆப் இந்தியா ஊழியர்கள் திங்களன்று மேலதிக ஊதியம் மற்றும் பல்வேறு நிபந்தனைகளுக்காக வேலைநிறுத்தப் போராட்டத்தினை மேற்கொண்டார்கள். ஜெய்பூர், ஜோத்பூர், கொட்டா, உதய்பூர், அஜ்மெர், பில்வாரா, ஸ்ரீகங்காநகர் மற்றும் பிற நகரங்களிலுள்ள அலுவலங்களுக்கு வெளியே தொழிலாளர்கள், எழுத்தர்கள் உட்பட, உதவியாளர்கள், துப்புரவுத் பணியாளர்கள் மற்றும் காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். சிறந்த ஊதியமும் பலன்களும் மற்றும் உடல்நல பரிசோதணையின்போது அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்குமிடையில் சமநிலையை கையாளவேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கைவைத்தார்கள்.

இந்திய தொலைதொடர்புத் துறை தொழிலாளர்கள் தேசியளவிலான உண்ணா விரதப் போராட்டம் நடத்துகின்றனர்

அரசுக்கு சொந்தமான தொலைதொடர்புத் துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிட்டெட் (பிஎஸ்என்எல்) தொழிலாளர்கள் அக்டோபர் 1 அன்று நிறுவனம் மற்றும் அதன் வாடிக்கையாளர்களின் தேவைகளை தேசிய அரசாங்கம் புறக்கணிப்பதை எதிர்த்து ஒரு தேசிய அளவில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர். பிஎஸ்என்எல் க்கு அரசாங்கம் 4ஜி அலைவரிசையை ஒதுக்க காலதாமதப்படுத்துவதாக அவர்கள் கண்டித்தனர். இது நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை “இரத்தம் சிந்த” வைத்து போட்டியாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் இருப்பதாக அவர்கள் குற்றம் சுமத்தினார்கள்.

இந்த வேலைநிறுத்தமானது நவம்பர் 25 அன்று பிஎஸ்என்எல் தொழிலாளர்களால் 4ஜி பிரச்சனை உட்பட அவர்களால் நடத்தப்பட்ட ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வந்துள்ளது. உரிய நேரத்தில் சம்பளம், ஒப்பந்த ஊழியர்களின் நிலுவை ஊதியங்களை வழங்கவும் மற்றும் தன்னார்வ ஓய்வுதிய திட்டத்தில் பங்குபற்றிய தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய முரண்பாடுகளை திருத்தவேண்டும் எனவும் தொழிலாளர்கள் மேலும் கோரிக்கை வைத்தனர்.

பங்களாதேஷ் வடக்கு மாவட்டங்களில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்

பங்களாதேஷ் வட கிழக்கிலுள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி இந்த வாரம் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டனர். தேயிலைத் தோட்ட முதலாளிகளுடன் ஊதியம் உயர்த்துவது தொடர்பாக பங்களாதேஷ் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சங்கம் பேச்சுவார்த்தைகளை ஒரு வருடத்திற்கும் மேலாக நடத்திவந்திருப்பதாக ஏழ்மையிலிருக்கும் தொழிலாளர்கள் கூறினார்கள்.

இந்து மத விழாவான துர்கா பூஜைக்கு ஊதிய உயர்வு மற்றும் போனஸ் கோரி மெளல்விபஜார் மாவட்டம் முழுவதும் தொழிலாளர்கள் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமையன்று வேலைநிறுத்தப் போராட்டம் செய்தனர். ஸ்ரீமனாஹல் பகுதியின் துணை மாவட்டத்திலுள்ள 14 தேயிலைத் தோட்டங்கள் தொழிலாளர்கள் புதன் மற்றும் வியாழன் நாட்களில் இரண்டு மணிநேரம் வேலைநிறுத்தப்போராட்டம் நடத்தியிருக்கும் வேளையில், புதன்கிழமை மனு-தலாய் பள்ளத்தாக்கு பகுதியில் 23 தேயிலைத் தோட்டங்களிலிருந்து தொழிலாளர்கள் இரண்டு மணிநேர வேலைநிறுத்தப்போராட்டத்தை நடத்தினர்.

மெளல்விபஜார் மற்றும் சில்ஹெட் மாவட்டங்களில் 550, 000க்கும் அதிகமான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மார்ச் இறுதி வாரத்தில் கோவிட்-19 பரவிக்கொண்டிருந்த நேரத்தில் அபாயகரமான மற்றும் பாதுகாப்பற்ற வேலைநிலைமைகளை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 102 டக்கா (1.20 அமெரிக்க டாலர்) மட்டுமே சம்பாதிக்கின்றனர். அவர்கள் ஒரு உடனடி ஊதிய உயர்வு வேண்டும் என்று கோருகிறார்கள் மேலும் பொருட்களின் விலைவாசி உயர்ந்து வரும் நிலையில் அவர்களுடைய பிள்ளைகளை படிக்கவைப்பதற்கு அவர்களால் முடியாமல் இருப்பதாக வலியுறுத்தினார்கள்.

பங்களாதேஷ் தனியார் பள்ளி ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

டாக்கா விலுள்ள ஜத்திய பத்திரிகையாளர் சங்கத்திற்கு வெளியே உலக ஆசிரியர்கள் தினமான அக்டோபர் 5 அன்று அரசாங்க மாதந்தா சம்பள வழங்கல் உத்தரவுத் திட்டத்தில் (monthly pay order - MPO) சேர்க்கப்படாத தனியார் மேல்நிலைப் பள்ளிகளின் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். அனைத்து தனியார் மேல்நிலைப் பள்ளிகள் தேசியமயமாக்கப்பட்டு MPO திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கங்களான பங்களாதேஷ் ஆசிரியர்கள் சங்கம் மற்றும் எம்பிஓ புக்தோ ஷிக்கா புரோடிஸ்தான் ஜாதியாகோரோன் தொழிலாளர் மன்றம் ஆகியவை கோரியுள்ளன.

மார்ச் மாதம் கோவிட்-19 பொதுமுடக்கம் தொடங்கப்பட்ட போது தனியார் பள்ளி ஆசிரியர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார்கள். பணிநீக்கம் மற்றும் 50 சதவீத ஊதிய வெட்டுக்கள் ஆகியவற்றுக்கு அவர்கள் உட்படுத்தப்பட்டனர். MPO அல்லாத மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் 2,00,000 க்கும் அதிகமான ஆசிரியர்கள் பாதிக்கபட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் ஆசிரியர்களின் கோரிக்கைகளை திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.

பாகிஸ்தான் அரசுத்துறை ஊழியர்கள் ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியத்திற்காக போராட்டம்

இஸ்லாமாபாத்தில் செவ்வாய் கிழமையன்று பல்வேறு மாகாணங்களிலிருந்து 10,000 க்கும் அதிமான அரசுத் துறை ஊழியர்கள் ஊதிய உயர்வு, ஓய்வூதிய அதிகரிப்பு மற்றும் மருத்தவ செலவில் ஒரு 100 சதவீத அதிகரிப்பு வேண்டும் என கோரி பேரணியொன்றினை நடத்தியுள்ளனர். அவர்கள் தேசிய சட்டமன்றம் மற்றும் பிற அரசு கட்டிடங்கள் உள்ள பெரும் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் உட்கார்ந்து போராட்டங்களை நடத்தினர்.

சர்வதேச நாணய நிதியத்தால் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை பூர்த்தி செய்வதற்கு வரவு செலவுத் திட்டத்தின் பற்றாக்குறையை குறைப்பதன் ஒரு பகுதியாக அரசாங்கம் 2020-21 நிதி ஆண்டுக்காக அனைத்து அரசு ஊழியர்களின் ஊதியத்தின் மேல் உறையவைக்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தொழிலாளர்களின் ஓய்வூதிய பலன்களை ஒட்டுமொத்தமாக துடைத்தெறிவதற்கு அரசாங்கத்தின் திட்டம் இருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளார்கள்.

அரசாங்கத்துடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அனைத்து பாகிஸ்தான் எழுத்தர்கள் சங்கம் மாலையில் போராட்டத்தை முடித்துக்கொண்டது. தொழிலாளர்களின் கோரிக்கைகளை ‘’ “பார்ப்பதற்கு” ஒரு குழுவை உருவாக்குவது குறித்த ஒரு தெளிவற்ற அரசாங்கத்தின் வாக்குறுதியை அது ஏற்றுக்கொண்டுள்ளது.