ஐரோப்பாவில் மட்டுப்படுத்தப்பட்ட ஊரடங்கு நடவடிக்கைகள் இருந்தபோதிலும், COVID-19 வைரஸ் பெருந்தொற்று நோய் எழுச்சியடைகிறது

Anthony Torres
23 October 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பெருந்தொற்று நோய் தொடங்கியதிலிருந்து மிக உயர்ந்த எண்ணிக்கையாக கடந்த வாரம் ஐரோப்பாவில், COVID-19 வைரஸால் 700,000 மக்கள் புதிய தொற்றுக்குள்ளானவர்களும் மற்றும் வைரஸால் 8,000 மக்களின் இறப்புகளும் பதிவாகியுள்ளன. பிராந்திய ஊரடங்கு உத்தரவு அல்லது உணவகங்கள் மற்றும் மதுக் கடைகளை மூடுவது போன்ற பெருந்தொற்று நோயின் மீளெழுச்சிக்கு பதிலளிக்கும் வகையில் ஐரோப்பிய ஆளும் வர்க்கங்கள் எடுத்துள்ள மட்டுப்படுத்தப்பட்ட சுகாதார நடவடிக்கைகள் இருந்தபோதிலும், இந்த வைரஸ் பரவிக்கொண்டிருக்கிறது.

இந்தப் பதிவு புள்ளிவிபரங்களானது தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் திருப்புதல் மற்றும் மாணவர்கள் பள்ளிக்கு மீண்டும் செல்லுதலானது வங்கிகளுக்கு ஒரு பெருந்தொற்று நோய் பரவுவதற்கு மத்தியில் ஒரு தொடர்ந்த இலாபங்கள் பாய்வதற்கான உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்ற அரச கொள்கையின் திவால்நிலையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. அரசியல்ரீதியாக குற்றவியலான "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கையின் ஒரு பகுதியாக ஒரு சாத்தியமான கொடிய வைரஸின் நீண்ட கால சுகாதார தாக்கம் இன்னும் பெரும்பாலும் அறியப்படாத நிலையில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஆபத்தான வைரஸின் தொற்றுக்கு ஆளாகின்றனர்.

கோபன்ஹேகனில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், உலக சுகாதார அமைப்பின் (WHO) ஐரோப்பாவின் பிராந்திய இயக்குனர் ஹான்ஸ் க்ளூச் நிலைமை “மிகுந்த கவலைக்குரியது” என்றார். COVID-19 வைரஸானது "இறப்புகளின் ஐந்தாவது முக்கிய காரணம் மற்றும் ஒரு நாளைக்கு 1,000 இறப்புகளின் அளவு இப்போது எட்டப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார். இறப்புகளின் எண்ணிக்கையானது இன்னும் 2020 ஏப்ரல் அளவை எட்டவில்லை என்றாலும், 2021 ஜனவரி மாதத்திற்குள் உறுதியான தடுப்புக் கொள்கைகள் இல்லாமல் கணிப்புகள் காட்டப்பட்டால், இறப்பு அளவு ஏப்ரல் மாதத்தில் பதிவு செய்யப்பட்டதை விட நான்கு முதல் ஐந்து மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று க்ளூச் எச்சரித்தார்.

A funeral at Seville's Cathedral, Spain, Thursday, Jun. 4, 2020 (AP Photo/Miguel Morenatti)

அதே தொற்றுநோயியல் மாதிரிகளை மேற்கோள் காட்டி, க்ளூச் கூறுகையில், மக்கள்தொகையில் 95 சதவிகிதத்தினர் பொதுவாக முகக்கவசங்களை அணிவது, தற்போது 60 சதவிகிதத்திற்கும் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது, பிப்ரவரி 1 ஆம் திகதிக்குள் பிராந்தியத்தின் 53 நாடுகளில் 281,000 உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்றும் கூறினார்.

இதற்கு நேர்மாறாக, சமீபத்திய நாட்களில் பெரும்பாலான ஐரோப்பிய அரசாங்கங்கள் எடுத்துள்ள மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் பேரழிவு தரும் உயிர் இழப்பை அச்சுறுத்தும் “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கையிலிருந்து விலகிச் செல்வதைக் குறிக்கவில்லை. இளைஞர்களையும் அத்தியாவசியமற்ற பணித் தொழிலாளர்களையும் வீட்டிலேயே தங்கவைக்க மறுப்பதன் மூலம், ஐரோப்பாவை பேரழிவிற்கு இட்டுச்செல்லும் பெருந்தொற்று நோய்க் கொள்கைகள் மீது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் பெருகிய முறையில் கோபமடைவதை தூங்கவைப்பதற்கான ஒரு முயற்சியே அவைகளாகும்.

ஆறு வாரங்களுக்குப் பிறகு, 500,000 நோய்த் தொற்றுக்குள்ளானவர்களை பதிவு செய்த முதல் ஐரோப்பிய நாடாகவும், COVID-19 வைரஸிற்கு 1 மில்லியன் பேர்களை பதிவு செய்த முதல் ஐரோப்பிய நாடாகவும் நேற்று ஸ்பெயின் மாறியிருக்கிறது. இது கடந்த வாரத்தில் 575 இறப்புகளையும் பதிவு செய்துள்ளது. எவ்வாறாயினும், மாட்ரிட் மற்றும் பிற முக்கிய நகரங்களில் வரையறுக்கப்பட்ட பிராந்திய பொது முடக்க நடவடிக்கைகள் அனைத்தும் இளைஞர்கள் மற்றும் அத்தியாவசியமற்ற பணித் தொழிலாளர்கள் தொடர்ந்து வேலைக்கும் மற்றும் மாணவர்கள் பள்ளிக்கும் செல்ல வேண்டியிருப்பது வைரஸ் தொடர்ந்து பரவுவதை உறுதி செய்கிறது.

வசந்த காலத்தில் 100,000 மக்கள் தொகைக்கு COVID-19 வைரஸினால் அதிகம் இறப்புகள் நிகழ்ந்த ஐரோப்பிய நாடான பெல்ஜியம், திங்கள்கிழமை தொடங்கிய ஊரடங்கு உத்தரவின் ஒரு பகுதியாக ஒரு மாதத்திற்கு மதுக் கடைகள் மற்றும் உணவகங்களை மூடுவதாக அறிவித்தது. ஆனால் அக்டோபர் 1 ந் திகதி, பெல்ஜியம் வெளியில் முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாயத்தையும், தனியார் ஒன்றுகூடல்களுக்கான கட்டுப்பாடுகளின் முடிவையும் ரத்து செய்தது. இந்த கொள்கைகள் வைரஸின் மீளெழுச்சிக்கு மேலும் சாதகமாக இருக்கும்.

பெருந்தொற்று நோயின் மீளெழுச்சியால் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் குறிப்பாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையத்தின்படி (ECDC), செக் குடியரசு கடந்த 14 நாட்களில் COVID-19 ஆல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடாகும், 100,000 மக்களுக்கு 521.5 நோய்த்தொற்றுகளும், பிரான்சில் (299.7) அல்லது ஸ்பெயினில் (299.8) ஆக இருக்கின்றன. பிராக் நகருக்கு வெளியே 500 படுக்கைகளுடன் ஒரு கள மருத்துவமனை கட்டுமாறு அரசாங்கம் இராணுவத்திடம் கேட்டுள்ளது.

போலந்தில், தொற்றுநோய்களின் புதிய எழுச்சியை அரசாங்கம் திங்களன்று அறிவித்தது. வார்சாவிலுள்ள தேசிய அரங்கம் தற்காலிக கள மருத்துவமனையாக மாற்றப்பட்டு வருகிறது. "சிவப்பு மண்டலங்கள்" என வகைப்படுத்தப்பட்ட வார்சா மற்றும் பிற முக்கிய நகரங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முககவசம் அணிவது இப்போது தெருக்களில் உட்பட கட்டாயமாகும்.

இந்த சிவப்பு மண்டலங்களில் அமைந்துள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டு ஆன்லைன் கற்றலுக்கு நகர்கின்றன. இரவு 9 மணிக்கு உணவகங்கள் மூடப்பட வேண்டும், திருமண விழாக்கள் தடைசெய்யப்பட்டுள்ளன மற்றும் கடைகள், பொது மக்கள் போக்குவரத்து மற்றும் மத சேவைகளுக்கு அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மட்டுபடுத்தப்படுள்ளது.

பிரிட்டிஷ் தீவுகளில், அயர்லாந்து மற்றும் வேல்ஸ் முறையே புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தொடங்கி ஆறு மற்றும் இரண்டு வாரங்களுக்கு பொது முடக்கத்தை அறிவித்தன, பெருந்தொற்று நோயின் மீளெழுச்சியை நிறுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டி, மக்கள் சாதாரண நிலைமைகளின் கீழ் கிறிஸ்துமஸைக் கொண்டாட முடியும். அத்தியாவசிய வேலைகள் உள்ள தொழிலாளர்கள் மட்டுமே வேலைக்குச் செல்ல வீட்டை விட்டு வெளியேற முடியும், மற்றவர்கள் உடற்பயிற்சியைப் பெற புறப்படும்போது அல்லது வீட்டைச் சுற்றி 5 கி.மீ சுற்றளவில் இருக்க வேண்டும், அல்லது அபராதம் விதிக்க நேரிடும். எனினும், நோய் பரவலின் பெரும்பகுதி நடைபெறும் பள்ளிகள் திறந்த நிலையில் இருக்க வேண்டும்.

ஒரு "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" மூலோபாயத்தை கடைப்பிடிப்பதன் அர்த்தம் "நாங்கள் அதிக அளவு நோய் மற்றும் மரணத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும், மேலும் இது வைரஸின் கொடிய நீண்டகால விளைவுகளை பல மக்கள் மீது புறக்கணிக்கிறது. ... அடுத்த வாரங்களில் எழக்கூடிய ஒரு மோசமான நிலைமைக்கான சான்றுகள் மிகவும் வலுவானவை" என்று Taoiseach Micheál Martin கூறினார். எவ்வாறாயினும், இளைஞர்களை வீட்டிலிருந்து படிக்க அனுமதிக்க அவர் மறுத்துவிட்டார், இளைஞர்களுக்கு "அவர்களின் கல்வி தேவை" என்று வலியுறுத்தியதுடன், வைரஸிற்கு "முன்னணியில்" இருந்ததற்காக பள்ளி ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

உடனடி அவசர நடவடிக்கை இல்லாமல் நிலைமை “நிர்வகிக்க முடியாததாக” மாறும் என்று அயர்லாந்தின் தேசிய பொது சுகாதார அவசரக் குழுவின் (NPHET) எச்சரித்ததை அடுத்து இது நடந்தது. "வரும் வாரங்களில் மருத்துவமனைகளில் தேவைகளை பூர்த்தி செய்வதில் பெரும் சிரமம் இருக்கும், எனவே ஒரு பேரழிவைத் தவிர்க்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்" என்று அது எச்சரித்தாக Irish Post அறிவித்தது.

இந்த வாதங்கள் அயர்லாந்தை விட மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பிற ஐரோப்பிய நாடுகளின் அரசியல்-குற்றவியல் செயலற்ற தன்மையை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. அக்டோபர் 19 அன்று 1,031 நோய்த் தொற்றுக்கள் அறிவிக்கப்பட்டன, அயர்லாந்தில் நிகழ்வு விகிதம் 100,000 மக்கள் தொகைக்கு 261.7 COVID-19 வைரஸ் தொற்றுக்களாகும்.

ஐரோப்பாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான பிரான்ஸ், உணவகங்கள் மற்றும் மதுக் கடைகளை மூடிவிட்டு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஒரு டஜன் "கருஞ் சிவப்பு மண்டலம்" நகரப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவையும் விதித்தது. தொற்றுகள் நாள் ஒன்றுக்கு 30,000 ஐ தொட்டநிலையில், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஞாயிறன்று ஒரு தொலைக்காட்சி உரையில், தினமும் 3,000 முதல் 5,000 தொற்றுகளை பார்க்க விரும்புவதாகக் கூறினார். அவசரமில்லாத அறுவை சிகிச்சைகளையும், அவசர அறை படுக்கைகளை விடுவிக்க, தேர்வு நடைமுறைகளையும் மருத்துவமனைகள் தாமதப்படுத்தத் தொடங்கியுள்ளன. பிரான்சிலுள்ள 4,500 வென்டிலேட்டர் பொருத்தப்பட்ட படுக்கைகளில், 2,000 இப்போது COVID-19 நோயாளிகளால் நிரப்பப்பட்டுள்ளது.

இது பெரும்பாலும் உலகின் மிகச் சிறந்த ஒன்றாக காட்டப்பட்டாலும், வசந்த காலத்தில் பெருந்தொற்று நோயின் தொடக்கத்தில் பிரான்சின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறை கிட்டத்தட்ட சரிந்து போயிருந்தது. ஐரோப்பா முழுவதிலுமுள்ள மற்றய நாடுகளைப் போலவே, பிரான்ஸ் இப்போது மார்ச்-ஏப்ரல் மாதங்களின் மிக மோசமான தொற்றுநோய்களின் நிலைமையை நெருங்குகிறது. மேலும், பல மாதங்களாக சுகாதாரப் பணியாளர்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததால், மருத்துவ அமைப்புமுறை வரவிருக்கும் அதிர்ச்சியைச் சமாளிக்க முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை, மேலும் மக்ரோன் சுகாதார அமைப்புமுறையை வைரஸின் மீளெழுச்சிக்கு தயாரிப்பு செய்யாததால் இதற்கெதிராக ஒரு ராஜினாமா அலை சுகாதாரப் பணியாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது..

பணி நிலைமைகளை மேம்படுத்துவதற்காகவும் நோயாளிகளின் சிறந்த சேவைகளுக்காகவும் பொது மருத்துவமனைகளுக்கு 15,000 புதிய ஊழியர்களை நியமிப்பதாக இந்த கோடையில் அரசு அளித்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. பாரிஸிலுள்ள Pitié-Salpêtrière மருத்துவமனையின் ஒரு மயக்க மருந்து நிபுணர் பத்திரிகையாளர்களிடம் "வசந்த காலத்துடன் ஒப்பிடும்போது, நாங்கள் குறைவாக இருக்கிறோம், குறிப்பாக துணை மருத்துவ ஊழியர்களைப் பொறுத்தவரை" என்று கூறினார்.

மருத்துவமனைகளில் மனித வளம் இல்லாததன் ஒரு முக்கியமான விளைவு என்னவென்றால், புதிய வென்டிலேட்டர் பொருத்தப்பட்ட படுக்கை அறைகளை இயக்க இயலாது, மயக்க மருந்து நிபுணர் ரோலண்ட் அமதியு விளக்கினார்: “நாங்கள் பொதுவாக 13 படுக்கைகளுடன் ஒரு சேவையைக் கொண்டிருக்கிறோம், ஆனால் இப்போது ஒன்பது மட்டுமே திறந்திருக்கின்றன, ஏனெனில் பணியாளர்கள் பிரச்சினைகள் மற்றும் ஒரு மூன்றாவது தற்போது COVID-19 நோயாளிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளது.”

வசந்த காலத்தில் பெருந்தொற்று நோய் தொடங்கியதற்கு மத்தியில் சுகாதார ஊழியர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்ட உழைக்கும் மக்களின் பரந்த வெகுஜனங்களையும், தங்கள் சொந்த சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையால் உருவாக்கப்பட்ட வைரஸின் மீளெழுச்சியை எதிர்கொள்ள மருத்துவமனைகளிலுள்ள பணியாளர்கள் மற்றும் அதற்கான நிதிகளையும் கைவிட்டுவிட்ட முதலாளித்துவ அரசாங்கங்களிலிருந்து பிரிக்கும் வர்க்க இடைவெளியை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் சிறு வணிகர்களும் தங்கள் வேலைகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்த நிலையில், முக்கிய வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கு டிரில்லியன் யூரோக்கள் பிணையெடுப்புகளை வழங்குவதில் அவர்கள் ஆர்வமாக இருந்தார்கள்.

COVID-19 க்கு எதிரான போராட்டத்திற்கு ஆளும் வர்க்கத்தின் குற்றவியலான பொறுப்பற்ற கொள்கைகளுக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை அரசியல்ரீதியாக அணிதிரட்டுவது அவசியமாகும். வீட்டில் தங்கியிருத்தலுக்கான ஒரு பொது ஆணை, இதில் தொழிலாளர்கள், சுய தொழில் மற்றும் சிறு தொழில்களில் அவர்கள் வேலை செய்ய முடியாதபோது முழு நிதியைப் பெறுவதானது பேரழிவை தவிர்க்க ஒரே வழியாக இது அமைகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தை அகற்றவும், நிதிப் பிரபுவத்திடமிருந்து பறிமுதல் செய்யவும், தேவையான நிதிய மற்றும் தொழிற்துறை வளங்களை கையகப்படுத்தவும், ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளை கட்டமைக்கவும் கண்டம் முழுவதும் மற்றும் சர்வதேச அளவிலும் ஒரு தொழிலாள வர்க்கப் போராட்டம் இதற்குத் தேவைப்படுகிறது.