இஸ்லாம் மீதான சட்டத்தை துருக்கி விமர்சித்தமை தொடர்பாக துருக்கிக்கான தூதரை பிரான்ஸ் திருப்பியழைத்தது

Alex Lantier
27 October 2020

மொழிபெர்ப்பின்மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் மீதான விமர்சனங்கள் தொடர்பாக ஆலோசிப்பதற்காக துருக்கிக்கான பிரெஞ்சு தூதர் ஹெர்வே மாக்ரோவை பாரிஸுக்கு திருப்பி அழைப்பதாக நேற்று பிரெஞ்சு வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.

இரண்டு நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு இடையிலான இந்த பரிமாற்றம் அட்லாண்டிக் கடந்த கூட்டை கிழித்தெறியும் பதட்டங்களை சுட்டிக்காட்டுகிறது. தூதரை திருப்பியழைத்தல் என்பது இராஜதந்திர உறவுகள் மற்றும் போர் முற்றிலும் முறிவடையும் குறுகிய காலத்திற்கு இடையில் எடுக்கப்பட்ட மிக முக்கியமான இராஜதந்திர சைகை காட்டலாக இருக்கிறது. பிரெஞ்சு மற்றும் துருக்கிய படைகள் லிபியாவிலிருந்து கிழக்கு மத்தியதரைக்கடல், சிரியா மற்றும் காக்கசஸில் ஆர்மீனிய-அஸெரி போர் வரை ஒன்றுக்கொன்று எதிரான ஒரு பரந்த வளைவு மோதல்களில் ஒருவருக்கொருவர் எதிராக பினாமிப் போர்களை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் இது வருகிறது.

மக்ரோனின் திட்டமிட்ட "பிரிவினைவாத எதிர்ப்புச் சட்டத்தை" எர்டோகன் விமர்சித்தார், இது பிரான்சில் இஸ்லாம் மீது அரசு கட்டுப்பாட்டை நிறுவும் மற்றும் அரசியல் மற்றும் சமூக அமைப்புக்கள் மீது அரசுக்கு விசுவாச உறுதிமொழிகளை எடுக்கத் திணிக்கும் பிரதம மந்திரி ஜோன் காஸ்டெக்ஸின் புதிய அரசாங்கத்தின் அதிவலது முன்மொழிவை விமர்சித்தார். இந்த கடுமையான சட்டம் 1905 இல் பிரான்சின் மதச்சார்பின்மை சட்டத்தை நசுக்குவதாக இருக்கும். இது மத வாழ்வில் அரசு தலையிடுவதை தடை செய்கிறது. பிரான்சில் COVID-19 வைரஸின் ஒரு வெடிப்பார்ந்த மீளெழுச்சிக்கு இடையே, அதிகாரத்துவம் முஸ்லீம்-விரோத மற்றும் யூத-விரோத வெறுப்பை கிளறி, பல்பொருள் அங்காடிகளில் ஹலால் மற்றும் கோஷர் உணவுகளுக்கு கண்டனம் தெரிவிக்கிறது.

Turkey's President Recep Tayyip Erdogan (left) and French President Emmanuel Macron, in Berlin, Germany January 20, 2020 (AP Photo/Michael Sohn, File)

இந்தப் பிற்போக்குத்தனமான சட்டம் பற்றிய பொது விவாதத்திற்கு மத்தியில்தான், ஒரு இளம் செச்செனிய இஸ்லாமியவாதி, Conflans-Sainte-Honorine இல் ஒரு பள்ளி ஆசிரியரான சாமுவேல் பட்டியை ஒரு பள்ளி வகுப்பில் கருத்து சுதந்திரம் பற்றி விவாதிக்க வகுப்பறையில் முகமது நபியின் ஆபாசமான கேலிச் சித்திரங்களை காட்டியதற்காக கொடூரமாக கொலை செய்தார்.

குவைத், கட்டார் மற்றும் முஸ்லிம் உலகம் முழுவதிலும் பிரெஞ்சு பொருட்களின் பகிஷ்கரிப்புக்கான அழைப்புக்கள் பரவியபோது, எர்டோகன் பகிரங்கமாக மக்ரோனை விமர்சித்தார். "மக்ரோன் என்று அழைக்கப்படும் இந்த தனிநபர் இஸ்லாத்திற்கும் முஸ்லீம்களுக்கும் என்ன பிரச்சனை?" எர்டோகன் சனிக்கிழமை மத்திய துருக்கிய நகரமான Kayseri இல் ஒரு உரையின் போது கேட்டார். அதாவது "மக்ரோனுக்கு மனநல சிகிச்சை தேவை. ... நம்பிக்கை சுதந்திரத்தைப் புரிந்து கொள்ளாத, வேறுபட்ட நம்பிக்கையில் உறுப்பினர்களாக இருக்கும் தனது நாட்டில் வாழும் மில்லியன் கணக்கான மக்களுக்கு இந்த வழியில் நடந்து கொள்ளும் ஒரு அரச தலைவருக்கு வேறு என்ன சொல்ல முடியும்?”

தனது தொழிலாளர் விரோத சமூகக் கொள்கைகளுக்கும், கோவிட் -19 பெருந்தொற்று நோய்க்கான அவரது “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கைகளுக்கும் கடுமையாக செல்வாக்கிழந்துள்ள மக்ரோன் 2022 ஆண்டுத் தேர்தலில் தோல்வியடைவார் என்றும் எர்டோகன் சுட்டிக்காட்டினார். அவர் கூறினார், “நீங்கள் தொடர்ந்து எர்டோகனைத் தேர்வு செய்கிறீர்கள். இது உங்களுக்கு எதுவும் சம்பாதிக்காது. இருக்கும். … உங்கள் தலைவிதியை நாங்கள் காண்போம்.” மக்ரோனைப் பற்றி பேசுகையில், எர்டோகன் மேலும் கூறினார், “அவர் நீண்ட தூரம் செல்வார் என்று நான் நினைக்கவில்லை. ஏன்? அவர் பிரான்சிற்காக எதையும் சாதிக்கவில்லை, அவர் தனக்காகவேதான் செய்ய வேண்டும்.”

டுவீட்டரில், துருக்கிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் பஹ்ரெடின் அல்தூனும் மக்ரோன் நிர்வாகத்தின் "பிரிவினைவாத எதிர்ப்பு" சட்டத்தை விமர்சித்தார்: "இது முஸ்லிம்களை அச்சுறுத்துவதும், ஐரோப்பாவின் பொருளாதாரத்தை தொடர்ந்து செயற்படுத்துவதற்கு அவர்கள் வரவேற்கப்படுவார்கள், ஆனால் அவர்கள் ஒருபோதும் அதன் ஒரு பகுதியாக இருக்கமாட்டார்கள் என்பதை அவர்களுக்கு நினைவூட்டுகிறது" என்று எழுதினார். இந்த கொள்கை "மிகவும் பரிச்சயமானது" என்று அல்தூன் மேலும் கூறினார், இது "1920 களில் ஐரோப்பிய யூதர்களை அரக்கர்களாக காட்டுவதை" நினைவுபடுத்துகிறது.

பிரெஞ்சு அதிகாரிகள் உடனடியாக இந்த அறிக்கைகளை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் கடுமையான விடையிறுப்பைத் தூண்டும் என்றும் அறிவித்தனர். “ஜனாதிபதி எர்டோகனின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. கோபப்படுத்துவதும் அவமானப்படுத்துவதும் ஒருமுறை அல்ல,” என்று எலிசி ஜனாதிபதி மாளிகையின் ஊழியர் AFP இடம் கூறினார்.

நேற்று, பிரெஞ்சு வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டது: "Conflans-Sainte-Honorine இல் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் துருக்கிய அதிகாரிகளிடம் இருந்து எந்த உத்தியோகபூர்வமான கண்டனமோ அல்லது ஒற்றுமையோ இல்லாத நிலையில், சமீபத்திய நாட்களில் பிரான்சுக்கு எதிராக வெறுப்பு மற்றும் அவதூறு பிரச்சாரம், எங்களுக்கு எதிராக வெறுப்பை கிளறிவிடும் விருப்பத்தையும், அத்துடன் பிரெஞ்சு குடியரசின் ஜனாதிபதிக்கு எதிராக நேரடி அவமதிப்புகளையும் வெளிப்படுத்துகிறது, துருக்கிய அரசின் மிக உயர்ந்த மட்டத்தில் இருந்து இது வெளிப்படுத்தப்படுகிறது. இந்த நடத்தை ஏற்கத்தக்கதல்ல, குறிப்பாக ஒரு கூட்டணி தேசத்திடமிருந்து வருகிறது. துருக்கிக்கான பிரெஞ்சுத் தூதுவர் திருப்பி அழைக்கப்பட்டுள்ளார், இந்த ஞாயிறன்று 25 அக்டோபர் 2020 அன்று ஆலோசனைக்காக பிரான்ஸ் திரும்புகிறார்" என்று அதில் தெரிவித்தது.

பிரான்சின் ஐரோப்பிய விவகாரங்களுக்கான இளநிலை அமைச்சர் ClŽment Beaune அங்காராவைக் கண்டித்தார். "இது மிகவும் தீவிரமானது, எனவே நாங்கள் மிகவும் தீவிரமான சைகையுடன் பதிலளிக்கிறோம், எங்கள் தூதரை நாங்கள் ஆலோசனைக்காக திருப்பி அழைக்கிறோம். இது மிகவும் அரிதானது," என்று Beaune கூறினார். பிரெஞ்சு ஆதரவுடைய சக்திகளுக்கு எதிராக துருக்கியின் "ஆத்திரமூட்டும், ஆக்கிரோஷமான, தாக்குதல் அரசியல் மூலோபாயத்தை" அவர் தாக்கினார்: அதாவது கிழக்கு மத்தியதரைக்கடல் வாயு ஆகழ்வு தொடர்பான மோதலில் கிரேக்கம், லிபிய உள்நாட்டு போரில் லிபிய தேசிய இராணுவம், சிரியாவில் குர்திஷ் தேசியவாத போராளிகள் மற்றும் ஆர்மீனியா துருக்கியின் கடலோரப் பகுதியில் இன்னும் கூடுதலான பிரெஞ்சுப் போர்க் கப்பல்களை நிறுத்தப்போவதாக அவர் உறுதியளித்தார்.

Conflans-Sainte-Honorine நடந்த கொலை தொடர்பாக துருக்கி "உத்தியோகபூர்வமான பிரதிபலிப்பு" எதையும் செய்யவில்லை என்று மீண்டும் வலியுறுத்திய Beaune, இந்தப் படுகொலைக்கு அங்காரா தான் காரணம் என்று குற்றம் சாட்டினார். "திரு எர்டோகன் ஒரு மிதவாத அரசியல் இஸ்லாத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றார் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால், மனித முகத்துடன் அரசியல் இஸ்லாம் என்று எதுவும் இல்லை." ஐரோப்பிய ஒன்றியம் துருக்கியின் பொருளாதாரத்தை நெரிக்கும் வகையில் கடுமையான பொருளாதாரத் தடைகளைக் கொண்டு வரும் என்று அவர் கூறினார்.

உண்மையில், பிரெஞ்சு வெளியுறவு அமைச்சரகம் மற்றும் Beaune இன் துருக்கிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தவறானவையாக இருந்தன. ஆச்சரியப்படும் விதத்தில், தங்களுடைய தூதரை திருப்பி அழைக்கும் அவசரத்தில், துருக்கிய அதிகாரிகள் உண்மையில் பட்டியின் கொலையை அதிகாரபூர்வமாக கண்டித்ததை பிரெஞ்சு அதிகாரிகள் யாரும் கவனிக்கவில்லை.

கொலை நடந்த மறுநாள் அக்டோபர் 17 அன்று, பிரான்சிற்கான துருக்கிய தூதர் இஸ்மாயில் ஹக்கி மூஸா பிரெஞ்சு மொழியில் ட்டுவீட் செய்தார்: அதாவது "Conflans-Sainte-Honorine இல் ஒரு ஆசிரியர் கொடூரமாக கொல்லப்பட்டதையிட்டு நான் திகிலடைகிறேன். இதை நியாயப்படுத்த முடியாது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். துருக்கிய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "சாமுவேல் பட்டியின் கொலையால் அது வருந்துவதாக" மீண்டும் வலியுறுத்தியது.

ஆனால் இப்போதைக்கு, மக்ரோன், அப்படியிருந்தாலும், மக்ரோவை அங்காராவிலிருந்து பாரிசுக்கு ஆலோசனைகளுக்காக திருப்பி அழைப்பதை பின்தொடர்வார் என்று தோன்றுகிறது.

பிரான்சின் தூதரை திரும்பப் பெறுவது, இராஜதந்திர உறவுகளை துண்டித்துக் கொள்ள பாதிப்பை ஏற்படுத்த அச்சுறுத்துவது மற்றும் துருக்கியை இராணுவ ரீதியாக சுற்றி வளைக்கும் வேலை ஆகியவைகளால் அச்சுறுத்தும் மக்ரோனின் முடிவு ஒரு பிற்போக்குத்தனமான ஆத்திரமூட்டலாக இருக்கிறது. 1991 ஆண்டில் சோவியத் ஒன்றியத்தை ஸ்ராலினிச அதிகாரத்துவம் கலைத்ததில் இருந்து மூன்று தசாப்தகால ஏகாதிபத்திய போருக்குப் பின்னர், மத்தியதரைக்கடல்-மத்திய கிழக்கு-மத்திய ஆசியப் பிராந்தியம் முழுவதும் ஒரு வெடிமருந்துக் கிடங்காக இருக்கிறது. இப்பிராந்தியம் 2020 முழுவதும் போரின் விளிம்பில் நிற்கின்றது, இந்த மோதல்கள் இப்போது COVID-19 வைரஸிற்கு முதலாளித்துவத்தின் "சமூக நோயெதிர்ப்புக் பெருக்கும் கொள்கை" உடன் பிணைந்துள்ள ஐரோப்பாவில் மேலும் இந்த மோதல்கள் இப்போது நச்சுத்தனமான உள் மோதல்களுடன் குறுக்கிடுகின்றன.

நேற்று 52,000 க்கும் அதிகமான மக்கள் வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக பிரான்ஸ் பதிவு செய்த நிலையில், ஐரோப்பாவில் ஒரு விரைவான பெருந்தொற்று மீளெழுச்சிக்கு மத்தியில், மக்ரோன் முஸ்லீம்-விரோத, சட்டம்-ஒழுங்கு வெறிக்கான தேசியவாத முறையீடுகளை இரட்டிப்பாக்குகிறார். உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மனன் நவ-பாசிச ஜனாதிபதி வேட்பாளர் மரின் லு பென்னுக்கு தனது மரியாதையை வலியுறுத்தியதோடு, முஸ்லீம் சமூக அமைப்புக்களை தடை செய்யவும் அழைப்பு விடுக்கின்றார். அவர் தீவிர வலதின் அரசியல் ஆயுதக் கூடத்திலிருந்து நேரடியாக எடுக்கப்பட்ட ஆயுதங்களான கோஷர் மற்றும் ஹலால் உணவுகளுக்கு கண்டனம் தெரிவித்து தலைமை தாங்குகிறார்.

முஸ்லிம்களின் பாதுகாவலனாக எர்டோகனின் ஜனரஞ்சகமான தோரணை சந்தேகத்திற்கு இடமின்றி பாசாங்குத்தனமானது. லிபியா மற்றும் சிரியா இரண்டிலும் CIA ஆதரவு பெற்ற இஸ்லாமியவாத ஆயுத குடிப்படைகளால் தொடுக்கப்பட்ட நேட்டோ பினாமிப் போர்களுக்கு ஆதரவு கொடுத்ததும், மற்றும் பிராந்தியம் முழுவதும் இராணுவ நடவடிக்கைகளுக்கான ஒரு நேட்டோ தளமாக அதன் பிராந்தியத்தை வழங்கியதும், மத்திய கிழக்கின் ஏகாதிபத்திய கொள்ளைக்கு துருக்கிய முதலாளித்துவம் உண்மையில் உடந்தையாக உள்ளது. COVID-19 வைரஸ் பெருந்தொற்று நோய் குறித்த அதன் கொள்கைகளும் பேரழிவு தருவதாக இருக்கின்றது. ஆனால் எர்டோகனின் அறிக்கைகள் மீது பிரெஞ்சு அதிகாரிகள் நடத்திய தாக்குதல்கள் தவறானவை மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு ஆபத்தான தாக்கங்களை கொண்டுள்ளன.

பிரான்சில் மில்லியன் கணக்கான மக்கள், இந்தப் பெருந்தொற்று நோயை மக்ரோனின் பேரழிவுகரமான முறையில் கையாண்டவிதம், தொழிலாளர் போராட்டங்கள் மீதான அவரது காட்டுமிராண்டித்தனமான போலீஸ் ஒடுக்குமுறை, மற்றும் உயர்மட்ட நிர்வாக அதிகாரத்துவத்திடமிருந்து அரசியல் இனவாதம் மற்றும் நவ-பாசிசத்திற்கு வெட்கமின்றி அழைப்பு விடுதல்களால் மிகவும் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். மக்ரோனே பிரான்சின் மிகவும் பரவலாக ஒருவேளை வெறுக்கப்பட்ட ஜனாதிபதியாக இருக்கிறார். ஆயினும்கூட மக்ரோனின் சட்டம் மீதான அனைத்து விமர்சனங்களையும் "இஸ்லாமிய-இடதுசாரிவாதம்" என்று கண்டனம் செய்து, மக்ரோனுக்கு எதிரான எதிர்ப்பை பயங்கரவாதத்திற்கான ஆதரவைக் கொண்டு திறம்படச் சமன்படுத்தும் ஒரு பத்திரிகை பிரச்சாரம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மத, இன வெறுப்புகளுக்கு அழைப்பு விடுத்து தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தும் முயற்சிகளை முழுமையாக நிராகரித்து, ஏகாதிபத்திய போர்கள், "சமூக நோயெதிர்ப்பு பெருக்கும்" கொள்கைகள் (“herd immunity” policies) மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அதிவலது தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களை ஐக்கியப்படுத்துவதே முன்னோக்கிய வழியாக இருக்கிறது.