எல்லையில் இந்தியாவும் - சீனாவும் விட்டுக்கொடுக்காத பதட்டத்தின் மத்தியில், அமெரிக்காவும் இந்தியாவும் இராணுவ-பாதுகாப்பு கூட்டாண்மையை அதிகரிக்கின்றன

Deepal Jayasekera மற்றும் Keith Jones
5 November 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பல்லாயிரக்கணக்கான இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையில் நிலவும் விட்டுக்கொடுக்காத பதட்டமான எல்லைத் பிரச்சனைகளுக்கு மத்தியில், இந்தியாவும் அமெரிக்காவும் தங்களது 2 + 2 பேச்சுவார்த்தையின் மூன்றாவது பதிப்பாக, வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களிடையேயான உச்சிமாநாட்டை செவ்வாயன்று புது டெல்லியில் நடத்தின. அமெரிக்க அரசு செயலர் மைக் பொம்பியோ மற்றும் மார்க் எஸ்பர் மற்றும் அவர்களின் இந்திய சகாக்களான முறையே சுப்ரமணியம் ஜெய்சங்கர் மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்துகொண்ட இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கம் அவர்களுடைய நாடுகளின் இராணுவ மூலோபாய கூட்டாண்மையை அதிகரிப்பதாக இருந்தது. இது எல்லாவற்றிற்கும் மேலாக சீனாவை இலக்கு வைத்ததாக இருந்தது.

ஜூன் மாதம் இந்தியாவின் ஸ்ரீநகரின் வடகிழக்கில் ககங்கீரில் உள்ள ஸ்ரீநகர்-லடாக் நெடுஞ்சாலையில் இந்திய ராணுவக் குழு செல்லும்போது காஷ்மீர் பக்கர்வால் நாடோடிகள் நடக்கின்றனர். (படக் கடன்: AP புகைப்படம் / முக்தார் கான்)

பெய்ஜிங்க்கு எதிரான வாஷிங்கடனின் இராணுவ மூலோபாயத் தாக்குதலுக்குள் புதுடெல்லியை மேலும் இணைத்துக்கொள்வதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் கடந்த மே மாதம் வெடித்த எல்லைப் பிரச்சனையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. கோவிட்-19 தொற்றுநோயால் தூண்டப்பட்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக நிலைப்பாடு மேலும் சரிந்திருப்பதற்கு பதிலளிக்கும் விதமாக, ட்ரம்ப் நிர்வாகம் கைம்மாறுக்கும் அதிகப்படியாக செய்யத் தயாராக உள்ளது. அது சீனா மீது இராஜதந்திர, பொருளாதார மற்றும் மூலோபாய அழுத்தத்திற்கான அதன் பிரச்சாரத்தை வியக்கத்தக்கவகையில் தீவிரப்படுத்துகிறது மேலும் அதன் அணு ஆயுத எதிராளியுடன் போருக்கான அதன் திட்டத்தை துரிதப்படுத்துகிறது.

இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இரு கட்சிக்குமான கொள்கையாக இருக்கிறது. அது அடுத்த வார ஜனாதிபதி தேர்தலின் முடிவை பொருட்படுத்தாமல் தொடரும்.

சர்ச்சைக்குரிய இமயமலை எல்லை தொடர்பாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான அவர்களுடைய மோதல்கள் தொடர்ந்து நீடிக்கின்றன. இரு தரப்பினரும் 50,000 துருப்புகள் மேலும் முன்னிலையில் நிறுத்தும் போர் விமானங்கள், ஏவுகணை மற்றும் ஏவுகணை எதிர்ப்பு மின்கலன்கள் ஆகியவற்றை தற்போதைய கட்டுப்பாட்டு கோட்டுக்கு (LAC) அருகே முன்னோக்கி அணிதிரட்டியுள்ளன. உலகில் மக்கள்தொகையை அதிகமாகக் கொண்ட இரண்டு பிரதான நாடுகள் வரையறுக்கப்படாத எல்லைகளால் பிரிக்கப்பட்டிருக்கின்றன.எல்லை மோதல் தற்போது கிழக்கில் குவிமையப்படுத்தப்பட்டுள்ளது, அங்கே இந்திய கட்டுப்பாட்டிலுள்ள லடாக் சீனாவின் பிடியிலுள்ள அக்சாய் சின் உடன் இணைந்துள்ளது.

தற்போதைய சர்ச்சையில் தொடக்கத்திலிருந்தே, சீன “ஆக்கிரமிப்பு” என்று கண்டனம் செய்துகொண்டு மேலும் ஒரு கடினமான நிலைப்பாட்டை எடுக்கும்படி இந்தியாவை ஊக்கப்படுத்தியும் வாஷிங்டன் ஆத்திரமூட்டும் வகையில் ஊடுருவியிருக்கிறது. அவ்வாறு செய்யும்போது, இத்தகைய மோதலானது போரினை கட்டவிழ்த்துவிடும் என்ற பேராபத்தை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது. இது ஏற்கனவே டசின்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. 2017 இல் சீனா மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் தங்களுடையது என்று கோரிய டோக்லாம் பீடபூமி என்ற பிரதேசத்தில் 73 நாட்கள் இந்திய மற்றும் சீனத் துருப்புக்கள் இருவருக்கும் இடையில் நடந்த மோதலின் போது, வாஷிங்கடன் கடைப்பிடித்த நடுநிலைமையான பொது நிலைப்பாடு தற்போதைய நிலைப்பாட்டிற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. புதுடெல்லி இமயமலையிலுள்ள பூட்டானை ஒரு நீண்டகாலமாக அதன் பாதுகாப்பிலுள்ள (காபந்து) நாடாகவே நடத்தி வருகிறது.

அமெரிக்காவின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அடிக்கோடிட்டு காட்டுவதாக இந்தியாவுக்கு எதிரான சீன “ஆக்கிரமிப்பு” என்பதை அமெரிக்க அதிகாரிகள் மீண்டும் மீண்டும் தென் சீன கடலில் அதன் நடவடிக்கைகளுடன் அதனை இணைத்துப் பேசினர், அங்கே அமெரிக்கா சீனாவுக்கும் அதன் அயல் நாடுகளுக்கும் இடையில் பிரதேச சர்ச்சைகளை தூண்டியிருக்கிற நிலையில் பெஜிங்குக்கு எதிராக ஒரு தொகை கடற்படை மற்றும் இராணுவ ஆத்திரமூட்டல்களை ஏற்படுத்தியிருக்கிறது.

போம்பியோ மற்றும் எஸ்பர் ஆகியோரது வருகை சீனாவுக்கு எதிரான வாஷிங்கடனில் யுத்த திட்டங்களில் இந்தியாவை மேலும் உள்ளீர்த்திக்கொள்வதற்கு வழிவகுத்துள்ளது. வாஷிங்கடனும் புதுடெல்லியும் அக்டோபர் 27 அன்று ஒரு நீண்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் (Basic Exchange and Cooperation Agreement – BECA) கையெழுத்திட்டுள்ளன. இது இரண்டு நாடுகளுக்குமிடையில் உயர்தர இராணுவ தொழில்நுட்பங்களையும், வகைப்படுத்தப்பட்ட செயற்கை கோள்களையும் மற்றும் பிற தகவல்களை பகிர்வதற்கு அனுமதிக்கும். BECA வின் இறுதிப்படுத்தல் அமெரிக்க தயாரிப்பான ஆயுதம் தாங்கி கொன்றுகுவிக்கும் ஆளில்லா விமானங்களை வாங்குவதற்கும் மேலும் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான இலக்குகளை துல்லியமாக்குவதற்கு தேவையான புவியியல் தகவலை (geospatial information) வாஷிங்கடன் மற்றும் இந்தியாவுக்கு இடையில் பகிரவும் இந்தியாவுக்கு வழி திறக்கும்.

ஆளில்லா விமான திரள் தாக்குதல்களில் பயன்படுத்தப்படும் சிறிய ஆளில்லா விமானங்களின் உற்பத்தி உட்பட பலவிதமான ஆயுத ஒப்பந்தங்கள் மற்றும் ஆயுத மேம்பாட்டு திட்டங்கள் குறித்தும் இரு தரப்பினரும் விவாதித்ததாக கூறப்படுகிறது. ஆகஸ்ட் பிற்பகுதியில் ஆயிரக்கணக்கான துருப்புக்களை ஈடுபடுத்தி சீனாவுடன் நடத்திய ஆத்திரமூட்டும் நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட அதன் எல்லையிலிருக்கும் பின்தங்கிய மலை முகடுகள் உட்பட்ட வாழமுடியாத இமயமலை நிலப்பரப்பில் அதன் துருப்புகளை தக்கவைத்துக்கொள்ள கூடிய பயங்கர குளிர்கால சன்டையிடும் தளவாடங்களுக்காக ஒரு அவசர வேண்டுகோளை இந்தியா விடுத்துள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அமெரிக்காவும் இந்தியாவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து (CCP) வரும் “அனைத்து அச்சுறுத்தல்களுக்கும் எதிராக ஒத்துழைப்புக்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன, எங்கள் தலைவர்களும் எங்கள் குடிமக்களும் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஜனநாயகத்தின் நண்பன் அல்ல, சட்டத்தின் ஆட்சி, வெளிப்படைத்தன்மை, இந்தோ-பசிபிக் இல் கடல்வழியை பயன்படுத்துவதற்கான சுதந்திரம் [இது தான்] ஒரு சுதந்திரமான மற்றும் வளமான இந்திய – பசிபிக்குக்கான அடித்தளமாகும்.” என்று போம்பியோ கூறினார்.

"இந்திய மக்கள் தங்கள் இறையாண்மைக்கும் மற்றும் அவர்களின் சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வேளையில் அமெரிக்கா அவர்கள் பக்கம் நிற்கும்", என்று பொம்பியோ மேற்கொண்டு அறிவித்தார் மேலும் பெய்ஜிங்கின் மீது இலக்கு வைத்து விரும்பத்தகாத குறிப்பாக அவர் தேசிய போர் நினைவுச்சின்னத்தை பார்வையிடச் சென்றார், அங்கே ஜூன் 15 மாலை "கல்வான் பள்ளத்தாக்கில் சீன மக்கள் விடுதலை இராணுவத்தால் கொல்லப்பட்ட" 20 இந்திய சிப்பாய்களுக்கு மரியாதை அளித்ததாக குறிப்பிட்டார்.

2 + 2 கலந்துரையாடல்களில் "இராணுவ அரசியல்" உள்ளடக்கம் இருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: "எங்கள் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்புகள் இன்னும் பல துருவ உலகில் வளர்ந்துள்ளன. எங்கள் சொந்த நலன்களை முன்னேற்றுவதோடு மட்டுமல்லாமல், எங்கள் இருதரப்பு ஒத்துழைப்பும் உலக அரங்கில் சாதகமான பங்களிப்பை வழங்குவதை உறுதி செய்வதற்காகவே நாங்கள் இன்று சந்திக்கிறோம். ”

சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் மூலோபாய தாக்குதலில் இந்தியப் பெருங்கடலுக்கு அது வழங்கும் மையமான முக்கியத்துவத்திற்கு, இந்தியாவுடன் எப்போதும் நெருக்கமான ஒரு இராணுவ-மூலோபாய கூட்டாண்மைக்கான வாஷிங்டனின் அழுத்தும் பின்னணி ஒரு முக்கிய காரணியாகும். சீனாவின் ஏற்றுமதி வர்த்தகத்திற்கும் அதன் எண்ணெய் மற்றும் பிற மூலப்பொருட்களின் இறக்குமதிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கடல் வழிகள், இந்தியப் பெருங்கடல் வழியாக செல்கிறது.

இந்தியப் பெருங்கடலைக் கடந்து செல்லும் அமெரிக்க விமானம் தாங்கிப் போர் கப்பல் குழுக்களுடன் இரண்டு முன்கூட்டிய பயிற்சிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் சமீபத்திய வாரங்களில், அமெரிக்காவுடன் கூட்டிணைந்து இந்தியப் பெருங்கடல் கடற்படை ரோந்துப் பணிகளை மேற்கொள்வதற்கு இந்தியா ஒரு முக்கியமான ஆரம்பகட்ட நடவடிக்கையை எடுத்துள்ளது, இது வாஷிங்டனின் நீண்டகால இலட்சியமாக இருந்து வந்துள்ளது.

ஆசிய-பசிபிக் பகுதியில் சீனாவுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான பாதுகாப்பு கூட்டணியில் இந்தியா மேலும் ஒருங்கிணைப்பதை குறிப்பிட்டுக் காட்டுவதாக அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் வருடாந்திர மலபார் கடற்படைப் பயிற்சியில் பங்கேற்க ஆஸ்திரேலியாவை புதுடெல்லி கடந்த வாரம் அழைத்தது.

அமெரிக்கா மற்றும் அதன் இரண்டு முக்கிய ஆசிய-பசிபிக் ஒப்பந்த நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இந்தியாவை ஒன்றாக இணைக்கும் முதல் கூட்டு இராணுவ பயிற்சியாக இது இருக்கும். இது அதே நான்கு சக்திகளை ஒன்றிணைக்கும் ஒரு பாதுகாப்பு உரையாடலுக்கான அமெரிக்க தலைமையிலான நாற்கர (Quad) நேட்டோ பாணி இராணுவக் கூட்டணியாக மாறுவதற்கான கதவைத் திறப்பதாக பரவலாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு சீனா எரிச்சல் அடையக்கூடும் என்ற அச்சத்தில் ஆஸ்திரேலியாவுக்கு மலபார் பயிற்சிகளில் பங்கெடுக்க அழைப்பு விட இந்தியா தயக்கம் காட்டி வந்தது.

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா-அமெரிக்க இராணுவ ஒத்துழைப்பின் விரிந்து பரந்த அளவைக் குறிப்பிடும் விதமாக, எஸ்பர் கூறினார்: “நாள் நடப்பின் சவால்களை எதிர்கொள்வதற்கு எங்கள் ஒத்துழைப்பை நிறுவனமயமாக்குதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் மற்றும் எதிர்காலத்தில் ஒரு சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக்கை சிறப்பாக நிலைநிறுத்துவதாக இப்போது எங்கள் கவனம் இருக்க வேண்டும்”. வளர்ந்து வரும் இந்த இராணுவ கூட்டின் ஒரு பகுதியாக, ரஷ்யாவுக்கு பதிலாக அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து அதிகமான ஆயுதங்களை வாங்கவேண்டும் என வாஷிங்டன் புதுடெல்லியை அழுத்துகிறது. 2007 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா தயாரித்த 21 பில்லியன் டாலர் இராணுவ தளவாடங்களை இந்தியா வாங்கியுள்ளது.

COVID-19 தொற்றுநோய் மற்றும் வளர்ந்து வரும் சமூக எதிர்ப்பால் பெரிதும் மோசமடைந்து பெருகிவரும் சமூக பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், மோடி அரசாங்கம் "சந்தை சார்பு," நவீன தாராளமய "சீர்திருத்தம்" மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் எப்போதும் நெருக்கமான உறவுகளைப் பின்தொடர்வதை இரட்டிப்பாக்கியிருக்கிறது. இது 1991 முதல் இந்திய முதலாளித்துவமும் அதன் ஒவ்வொரு அரசாங்கமும் பின்பற்றும் மூலோபாய நோக்குநிலையாக தொடர்ந்துவருகிறது.

மோடியும் அவரது பாரதீய ஜனதா கட்சி (பாஜக) அரசாங்கமும் முதலீட்டாளர் சார்பு சீர்திருத்தங்களில் “மிகப்பெரும் பாய்ச்சல்”ஒன்றைத் தொடங்கியுள்ளது, இதில் தொழிலாளர் சட்டங்களை நீக்குதல், பொது சொத்துக்களை மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்தல் மற்றும் சிறு வணிகர்களின் இழப்பில் வேளாண்மை வணிகத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும். அதே சமயம், இந்திய முதலாளித்துவத்தின் கொள்ளைக்கார பெரும் வல்லரசாக மாறும் இலட்சியங்களைப் பின்தொடர்வதிலும், உள்நாட்டில் போராடும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக தனது கையை வலுப்படுத்துவதற்காகவும், அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் சீனா எதிர்ப்பு முன்னணியின் இளைய பங்காளியாக இந்தியாவின் நிலையை மோடி அரசு உறுதிப்படுத்துகிறது.

இந்தியாவை சீனாவுக்கு மாற்று உற்பத்தி சங்கிலி மையமாக மாற்ற அமெரிக்க மற்றும் மேற்கத்திய நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுப்பதில் இந்தியாவுக்கு உதவுவதாக வாஷிங்டன் உறுதியளித்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், புது தில்லி மற்றும் வாஷிங்டன் இரண்டும் ஆயுதத் தயாரிப்பு மேற்கொள்வதற்கு இந்த திட்டத்தை ஒரு முக்கிய அங்கமாகக் பார்க்கின்றன. வாஷிங்டன் இந்திய மலிவு உழைப்பை சுரண்டுவதற்கும், அதேவேளை இந்தியாவை அதன் கொள்ளையடிக்கும் மூலோபாய நிகழ்ச்சி திட்டத்திற்கு பயன்படுத்த மேலும் ஒரு பொறிமுறையாக விரிவாக்கப்பட்ட முதலீடுகளை பயன்படுத்துவதற்கும் ஆர்வமாக உள்ளது.

நான்கு "அடித்தள" ஒப்பந்தங்களில் கடைசியான அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் (BECA) மூலம் நெருக்கமான இந்திய - அமெரிக்க இராணுவ ஒத்துழைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கைக்கான கட்டமைப்பை உருவாக்க கையெழுத்திடுமாறு வாஷிங்டன் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. முதல் அடித்தள ஒப்பந்தம், இராணுவ தகவல் ஒப்பந்தத்தின் பொது பாதுகாப்பு (GSOMIA), 2002 இல் கையெழுத்தானது. அது இந்தியாவுடன் அமெரிக்கா பகிர்ந்துள்ள முக்கியமான தகவல்களைப் பாதுகாப்பதற்கான பாதுகாப்புத் தரங்களை உறுதி செய்தது. 2016 ஆம் ஆண்டில், அமெரிக்கா இந்தியாவை ஒரு "முக்கிய பாதுகாப்பு பங்காளி" என்று நியமித்தது, இது வாஷிங்டனின் நெருங்கிய நேட்டோ மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நேட்டோ அல்லாத ஒப்பந்த நட்பு நாடுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட அமெரிக்க ஆயுத தளவாடங்களை வாங்க இந்தியாவை அனுமதிக்கிறது.

2016 ஆம் ஆண்டில், வாஷிங்டன் மற்றும் புது தில்லி இரண்டாவது அடித்தள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, தளவாட பரிமாற்ற குறிப்பாணை ஒப்பந்தம் (Logistics Exchange Memorandum of Agreement - LEMOA), இது பென்டகன் போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களுக்கு இந்தியத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்குகிறது. மேலும் 2018 ஆம் ஆண்டில், அவர்கள் மூன்றாவது அடித்தள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர், தகவல் தொடர்பு இணக்கத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம் (Communications Compatibility and Security Agreement - COMCASA), இது இரு இராணுவங்களுக்கிடையில் இயங்கக்கூடிய தன்மையையும், அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு உயர் தொழில்நுட்பத்தை விற்பனை செய்வதையும் வழங்குகிறது.

மோடியும் அவரது இந்து மேலாதிக்கவாத பாஜகவும் ஆட்சிக்கு வந்து எட்டு மாதங்களுக்குப் பிறகு, 2015 ஜனவரியில் நடந்த ஒரு பெரிய மாற்றத்தின் மூலம், தென் சீனக் கடல் பிரச்சனை குறித்த அமெரிக்காவின் நிலையை இந்தியா ஏற்றுக்கொண்டது மேலும் அன்றிலிருந்து அதை கிளிப்பிள்ளை போல் ஒப்பித்து வருகிறது. பொம்பியோ-எஸ்பர் வருகையின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் இந்த பிரச்சனை முன்கூட்டியே தெரிந்தவாறாக எழுப்பப்பட்டது.

இந்தியாவுக்கு ஒரு தெளிவான மூலோபாய ஆதரவு வழங்குவதாக, இந்தியாவின் வரலாற்றுரீதியான போட்டியாளராக இருக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான எச்சரிக்கைகளும் அந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டது, இந்தியாவின் கட்டுப்பாட்டிலிருக்கும் காஷ்மீரில் முஸ்லீம் மக்கள் பெருமளவில் அதிருப்தி அடைவது மற்றும் முஸ்லீம் பிரிவினைவாத கிளர்ச்சிகள் தொடர்வது ஆகிய அனைத்துக்கும் புதுடெல்லி பாகிஸ்தான் மேல் குற்றம்சாட்டுகிறது. அந்த அறிக்கை “மறைமுகமான பயங்கரவாதிகளின் பயன்பாட்டை” கண்டித்திருக்கிறது மற்றும் “எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் கடுமையாக கண்டனம் செய்திருக்கிறது.” மேலும் அந்த அறிக்கை "பயங்கரவாத தாக்குதல்களுக்கு அதன் கட்டுப்பாட்டில் உள்ள எந்த பிராந்தியத்தையும் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை" என்பதை உறுதிப்படுத்த "உடனடியான, நீடித்த மற்றும் மீள செயற்பட முடியாத நடவடிக்கை" எடுக்குமாறும் மேலும் "26/11 மும்பை, ஊரி மற்றும் பதான்கோட் உள்ளிட்ட அனைத்து தாக்குதல்கள் நடத்திய குற்றவாளிகள் மற்றும் திட்டமிடுபவர்களை விரைவாக தண்டிக்க வேண்டும்." என்றும் அது பாகிஸ்தானை வலியுறுத்தியது.

அமெரிக்காவுடன் புதுடில்லியின் வளர்ந்து வரும் இராணுவ-மூலோபாய கூட்டணியையும் மற்றும் சீனாவுக்கு எதிரான ஆக்ரோஷமான நிலைப்பாட்டையும் முழு இந்திய ஆளும் உயரடுக்கு ஆதரிக்கிறது. "சீன ஆக்கிரமிப்பை" எதிர்கொள்ள மோடியின் அரசாங்கம் போதுமானதை செய்யவில்லை என்று குற்றம் சாட்டும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி மோடியை வலதுசாரி நிலையில் நின்று பலமுறை தாக்கியுள்ளது. இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் இந்திய -அமெரிக்க கூட்டணியை எதிர்ப்பதாகக் கூறும் அதே வேளை, காங்கிரசுடனான தனது கூட்டணியை ஆழப்படுத்துகிறது, இது பாஜகவுக்கு ஒரு "ஜனநாயக, மதச்சார்பற்ற" மாற்றாக இருப்பதாக எக்காளம் போடுகிறது. இது 2014 மே மாதம் மோடியின் தேர்தலுக்கு ஒரு தசாப்தத்திற்கு முன்னர், ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் கீழ் அமெரிக்காவுடன் முதலில் "பூகோள மூலோபாய கூட்டாண்மை" (global strategic partnership) ஒன்றை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் உருவாக்கியது.

தெற்காசியாவின் நாடுகளை சீனாவுக்கு எதிரான யுத்த நோக்கத்திற்காக ஒருங்கிணைத்து மற்றும் எந்தவொரு பொருளாதார தடைகளை எற்படுத்துவதற்கும் அல்லது சீனாவுடனான போருக்கு ஒரு முக்கிய அரங்கமாக இந்தியப் பெருங்கடலை, குறிப்பாக இந்தியப் பெருங்கடலில் பல்வேறு முடக்கி திணறடிக்கும் புள்ளிகளை உருவாக்குவதற்கும் ஒரு பரந்த அமெரிக்க உந்துதலின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கான பொம்பியோ-எஸ்பர் விஜயம் இருக்கிறது.

செவ்வாய்க் கிழமை மாலை இந்தியாவில் இருந்து பொம்பியோ இலங்கைக்கு விமானத்தில் புறப்பட்டார் மேலும் புதன்கிழமையன்று இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்க்ஷ மற்றும் வெளியுறவு மந்திரி தினேஷ் குணவர்தன ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அங்கிருந்து அவர் மாலைத்தீவுக்கு பறந்தார். இலங்கையைப் போலவே, முக்கிய இந்தியப் பெருங்கடல் கடல் பாதைகளுக்கு அருகில் அமைந்துள்ள ஒரு சிறிய, ஆயிரக்கணக்கான தொடர் தீவுகளைக் கொண்ட நாடாக அது இருக்கிறது. செப்டம்பரில், வாஷிங்டன் மாலைத்தீவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தை அறிவித்திருந்தது. கடந்த காலங்களில் தனது கொல்லைப்புறமாகக் கருதும் விஷயத்தில் அமெரிக்கா ஒரு மூலோபாய அடி எடுத்து வைப்பதை தடுக்க முயன்ற இந்தியா, இந்த ஒப்பந்தத்திற்கு உடனடியாக அதன் வலுவான ஆதரவுக்கான குரலை கொடுத்துள்ளது, அவற்றில் சில விவரங்கள் பகிரங்கமாகவும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.