பிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சி கூட்ட விவாதம் கோர்பினிசத்தின் தோல்வியிலுள்ள முக்கிய பிரச்சினைகளை விளங்கப்படுத்துகிறது

Our reporters
24 November 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரிட்டிஷ் சோசலிச சமத்துவக் கட்சி (SEP-UK) நடத்திய "பிளேயரிசவாதிகளின் யூத-எதிர்ப்புவாத சூனியவேட்டையும் கோர்பினிசத்தின் தோல்வியும்" என்ற இணையவழி கூட்டம் ஒரு விவாத அமர்வையும் கொண்டிருந்தது, அதில் முக்கிய பிரச்சினைகள் எழுப்பப்பட்டன.

அக்கூட்டத்தில் பிரதான உரை வழங்கிய சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலர் கிறிஸ் மார்ஸ்டன், உலக சோசலிச வலைத் தளத்திற்குக் கடிதம் எழுதியிருந்த ஜெர்மி கோர்பின் ஆதரவாளர் ஒருவரின் பின்வரும் அறிக்கையை வாசித்துக் காட்டினார்.

“ஜெர்மி கோர்பின் அவர் எதிரிகளிடம் சரணடைகிறார் அல்லது பணிந்து போகிறார் என்று தொடர்ந்து இடது குரல்கள் குற்றஞ்சாட்டுகின்ற நிலையில் அவர் அவ்வாறு செய்யவில்லை என்பதையும், ஜெர்மி கோர்பினுக்கு எதிராக பூசிமொழுகிய சூழ்ச்சியுடன் பிரச்சாரம் செய்யும் மிகப் பிரதான ஊடகங்கள் (MSM) அவற்றின் பொய்கள் மற்றும் அவதூறுகளை எதிர்த்து கூறவோ அல்லது/மற்றும் அவற்றை மறுத்து கூறவோ அவருக்கு அவை ஒருபோதும் வாய்ப்பே வழங்கப் போவதில்லை என்பதோடு, அவர் என்ன கூறினாலும், அது இந்த MSM களாலும் வழமையான ஐயுறவாதிகளாலும் கண்டிக்கப்படுகிறது என்பதே யதார்த்தமாக உள்ளது என்பதை நான் முன்வைக்கிறேன்.

“இந்த MSM களாலும் ஏனையவர்களாலும் நியாயமான செய்திகள் கிடைப்பதற்கு சாத்தியமே இல்லை, அவை அவர் என்ன கூறினாலும் அவற்றை பூசிமொழுகி அவதூறு பரப்புகின்றன என்பதோடு, அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்தே, அவர் பதவியிலிருந்து விலகியதற்குப் பின்னரும், இதுதான் யதார்த்தமாக இருந்துள்ள நிலையில், அவர் மீது அவதூறு பரப்புபவர்கள் அவர் சரணடைந்துவிட்டார் அல்லது அடிபணிந்துவிட்டார் என்று அவரைக் குற்றஞ்சாட்டுவது அநீதியானது, ஆனால் WSWS இதை மீண்டும் மீண்டும் செய்துள்ளது என்பதே என் வழியில் நான் குறிப்பிடும் புள்ளி. சரணடைந்துவிட்டார் என்றும் இன்னும் பலவிதமாகவும் அவரை நீங்கள் குற்றஞ்சாட்டுகின்ற நிலையில்… பிரதான ஊடகங்களும் (MSM) ஏனையவர்களும் அவர் செய்வதை வெறுமனே வசைபாடி அவதூறு பரப்பும் போது… எவ்வாறு அவர் அந்த வாதங்களை மறுத்திருக்கலாம் என்பதை நீங்கள் விளங்கப்படுத்தினால் உண்மையிலேயே எனக்கு மிகவும் உதவியாக இருக்கும். சொல்லப் போனால் பிரதானமாக நான் யூத-எதிர்ப்புவாத அவதூறு பிரச்சாரத்தைக் குறிப்பிடுகிறேன். பின்குறிப்பு: இதுவொரு நேர்மையான கோரிக்கையாகும்.”

அந்த வாசகருக்கு விடையிறுப்பாக மார்ஸ்டன் கூறினார்:

“உறுதியாக இதுவொரு நேர்மையான முறையீடு தான்… இதை இங்கே அதன் சொந்த வார்த்தைகளிலேயே சற்று விளங்கப்படுத்துவோம். என்ன கூறப்படுகிறது? கோர்பின் என்ன செய்திருந்தாலும், அவர் எதிர்ப்பாளர்களாலும் பிரதான ஊடகங்களாலும் அவர் இன்னமும் தாக்கப்படலாம் என்பதால், அவரும் அவரைப் பின்தொடர்பவர்களும் சரணடைந்தார்கள் என்று கூற முடியாது. ஆகவே, அவ்விதத்தில், வேறு விதமாக செயல்பட்டிருக்க முடியாது.

“உங்கள் எதிர்ப்பாளர்களிடம் இருந்து எதிர்ப்பைச் சந்திப்பீர்கள் என்பதற்காக கோட்பாடுகளுக்காக போராட முடியாது என்ற நிலைபாட்டின் உள்நோக்கங்கள் இப்போது என்னவாக இருக்கும்?

“ஜெர்மி கோர்பின் சம்பந்தமாகவும், பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்தில் அவர் என்ன பிரதிநிதித்துவம் செய்கிறார் என்பது சம்பந்தமாகவும் உண்மையிலேயே ஒருவித ஆழ்ந்த பிற்போக்குத்தனம் உள்ளது. அவர் வர்க்க நல்லிணக்கத்தைச் சாத்தியமாக்கும் நுண்கலை அடிப்படையில், நாடாளுமன்ற நடைமுறையை வழிபாட்டுடன், அரசியலை நோக்கி மதவாத 'மறுகன்னத்தைக் காட்டும்' ஒரு தாராளவாத வகைப்பாட்டு அடிப்படையிலான ஓர் அரசியல் போக்கு, ஃபாபினியனிச (Fabianism) சிந்தனை பள்ளியின் இற்றுப்போன நவீன-கால பிரதிநிதி ஆவார். தனிப்பட்ட அரசியலுக்கோ, கருத்துக்களுக்காக போராடுவதற்கோ அல்லாமல், உண்மையில் டோரிக்களை எதிர்ப்பதற்கான பலமான அடிப்படை நிலைமைகளிலிருந்தும், முதலாளிமார்களை எதிர்ப்பதில் இருந்தும், தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவதற்காக போராடுவதில் இருந்தும் முன்நகராத ஒரு புதிய வகை அரசியலை அவர் உருவாக்க போவதாக தெரிவித்த அப்போதிருந்தே கோர்பின் இந்த வகையான வலதுடன் தொடர்புபட்டிருந்தார். அவர் மிகப் பெரியளவில் மக்களிடையே நிலவிய ஏதோவொருவித பொதுநல உணர்வுக்கு முறையிட இருந்தார், மூர்க்கமான வர்க்க போராட்டத்தின் அடிப்படையில் சமகால சமூகத்தின் யதார்த்தங்களை ஒடுக்க ஒரு தொடர்ச்சியான முயற்சியின் அடிப்படையில் அவர் முறையீடு செய்தார்.

“ஜெர்மி கோர்பின், அரசியலை ஏதோவொரு வகை கிரிக்கெட் போட்டியைப் போல விவரிக்கிறார். 'இது நியாயமில்லை' என்று நாம் கூற வேண்டுமென அவர் ஊக்கப்படுத்துகிறார். ஆனால் அரசியல் ஒரு கிரிக்கெட் போட்டி அல்ல, அரசியல் என்பது போராகும். அது சமரசத்திற்கிடமற்ற எதிரெதிர் வர்க்க சக்திகளின் மோதலாகும். சர்வதேச அளவில் உள்ளதைப் போலவே பிரிட்டனிலும் ஆளும் வர்க்கம் அதன் நலன்களைப் பாதுகாப்பதில் முற்றுமுழுதாக ஈவிரக்கமின்றி உள்ளது. தொழிலாள வர்க்கம் அதன் சொந்த நலன்களைப் பின்தொடர்வதில் அதுவும் அதேயளவுக்கு ஈவிரக்கமின்றி இருக்க வேண்டும் என்பதையும், எதிர்த்துப் போராடுவதற்கு ஒரு சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டத்துடன் ஆயுதபாணியான ஒரு தொழிலாள வர்க்க கட்சியை அபிவிருத்தி செய்வதில் அது நனவுப்பூர்வமான அரசியல் வெளிப்பாட்டைக் காண வேண்டும் என்பதையும் அது உணரவில்லை என்பது தான் தொழிலாள வர்க்கத்தின் மிகப்பெரும் அபாயமாக உள்ளது.

“பின்தங்கிய கண்ணோட்டங்கள் அனைத்தையும் ஜெர்மி கோர்பின் தொழிலாள வர்க்கத்தில் பிரதிநிதித்துவம் செய்கிறார். வர்க்க போராட்டத்தின் முனையை மழுங்கடிக்கவும், தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு முனைவையும் ஒடுக்கவும், தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு அது அடிபணிய செய்யப்படுவதை ஊக்குவிக்கவும், என்ன விலை கொடுத்தாவது ஒரு நாடாளுமன்ற முன்னோக்குடன் அதைக் கட்டிப்போடவும், நல்லது செய்வதைப் போல மழுங்கடிப்பது நடுத்தர வர்க்கமாகும்.

“தெளிவாக நேர்மையாக இருக்கும் ஒருவரிடம், நீங்கள் போராட முடியாது ஏனென்றால் சிலர் உங்களை எதிர்ப்பார்கள் என்று கூறினார், அதில் என்ன தர்க்கும் இருக்கிறது? நீங்கள் ஏதேனும் சரியானதைச் செய்கிறீர்கள் என்றால், உங்களைப் பிரதான ஊடகங்கள் தாக்காமல் இருக்குமா? நீங்கள் சோசலிசத்திற்காக போராடுகிறீர்கள் என்றால், ஒவ்வொரு முனையிலிருந்தும் ஆளும் வர்க்க பிரதிநிதிகளால் உங்கள் மீது பழிசுமத்தப்படுவதையும், நீங்கள் காயப்படுத்தப்படுவதையும் நீங்கள் எதிர்பார்க்க வேண்டும், நீங்கள் போராடுவதற்காக, திருப்பி அடிப்பதற்காக தொழிலாள வர்க்கத்திடம் உங்கள் முறையீட்டை வழங்க வேண்டும். வெறுமனே உணர்ச்சிகரமான முறையீடாக அல்ல, மாறாக சமகாலத்திய வர்க்க சமூகத்தின் யதார்த்தங்களை அங்கீகரித்தும், ஒரு புரட்சிகர மாற்றீட்டு சர்வதேசியவாத முன்னோக்கை ஏற்றும் அதை செய்ய வேண்டும்.

“கோர்பினிசத்தின் ஒரு அணி உள்ளது அதற்கு நாங்கள் முறையீடு செய்கிறோம், அவர்கள் போராட விரும்புகிறார்கள். இதேபோல கோர்பின் ஆதரவாளர்களின் மற்றொரு அணியை நாங்கள் நிராகரிக்கிறோம், அவர்கள் அவரின் மனித அன்பின் ரசமெனும் முட்டாள்தனத்தின் அடிப்படையில் ஈர்க்கப்பட்டிருந்தனர், அவர்கள் சமரசம் சாத்தியமில்லாத போதும் எப்போதும் சமரசத்திற்காக எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

“இது தொழிலாள வர்க்கத்தில் ஆழமாய் பொதிக்கப்பட வேண்டும். ஆளும் வர்க்கம் உங்களுக்கு ஒன்றும் வழங்காது, ஓர் அரசியல் போராட்டத்திற்கு வெளியே அது ஒரு அங்குலம் கூட விட்டுக்கொடுக்காது என்பதை தெரிந்து கொள்ள தொழிலாளர்கள் போதுமானளவுக்கு கடுமையான அனுபவங்களினூடாக சென்றுள்ளனர். நீங்கள் சோசலிசத்திற்காக போராடுகிறீர்கள், இது முதலாளித்துவ ஒழுங்கமைப்பைத் தூக்கியெறிவதாகும், அப்படியானால் இவ்விதமான பண்பு, இந்த சுயதிருப்தி, தோல்வியை ஏற்றுக் கொள்வது மற்றும் கோழைத்தனம் ஆகியவை தொழிலாளர் இயக்கத்திலிருந்து நீக்கப்பட வேண்டும். இது தன்னை ஓர் உண்மையான சோசலிசவாதி என்று கருதும் யாரொருவருக்கும் பொருந்தாது.”

Julian Assange in Belmarsh Prison sometime after his arrest on April 11 last year

ஜூலியன் அசான்ஜ் குறித்து நடைமுறையளவில் கோர்பின் மவுனமாக இருப்பதன் மீதும், பிரிட்டிஷ் அரசு அசான்ஜை வேட்டையாடி வந்த ஆரம்ப ஆண்டுகளில்—2008 இல் இருந்து 2013 வரையில்—அரசு தரப்பு விசாரணை அமைப்பின் (Director of Public Prosecutions - DPP) இயக்குனராக இருந்த தொழிற்கட்சி தலைவர் சர் கெர் ஸ்டார்மர் பகித்த பாத்திரம் மீதும் எழுப்பப்பட்ட கேள்விக்கு துணை தேசிய செயலாளர் தோமஸ் ஸ்க்ரிப்ஸ் விடையிறுத்தார்.

ஸ்க்ரிப்ஸ் கூறினார், “இதைக் கவனித்து வரும் பெரும்பாலானவர்களுக்கு அசான்ஜ் வழக்கு பரிச்சயமாக இருக்குமென நினைக்கிறேன், ஆனால் நிலைமையைத் தொகுத்தளிக்கும் விதமாக கூறுவதானால், அசான்ஜ் விக்கிலீக்ஸின் ஸ்தாபகர் ஆவார், அது போர் குற்றங்கள், குரூரமான இராஜாங்க சூழ்ச்சிகள், மனித உரிமை துஷ்பிரயோகங்கள் மற்றும் உலகின் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக சித்திரவதையைப் பயன்படுத்தியமை என உலகின் அனைத்து ஏகாதிபத்திய அரசுகளாலும் தசாப்தங்களாக இன்னலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

“இறுதியில் ஸ்வீடனுக்கு நாடுகடத்தப்படும் அச்சுறுத்தலின் கீழ் பல ஆண்டுகள் அசான்ஜ் எதேச்சதிகாரமாக இலண்டன் ஈக்வடோரிய தூதரகத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார், அந்த நாட்களில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் ஸ்வீடன் அரசால் உண்டாக்கப்பட்ட பொய்யான பாலியல் குற்றச்சாட்டுக்கள் என்பது தெளிவாக இருந்தது, அது அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கான அரங்கமாக செயல்படுத்தப்பட்டிருக்கும்.

“இவை அனைத்தும் கடந்தாண்டு முன்னேறி உள்ளன. அசான்ஜ் ஈக்வடோரிய தூதரகத்திலிருந்து பிடித்து வரப்பட்டு, உச்சபட்ச பாதுகாப்பு சிறைக்கூடமான பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டு, ஒரு போலி-சட்ட கேலிக்கூத்தாக அமெரிக்காவுக்கு அவரை அனுப்புவதா வேண்டாமா என்பதை தீர்மானுக்க வெளிநாட்டிடம் ஒப்படைக்கும் ஒரு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, அமெரிக்காவில் அவர் மரண தண்டையிலிருந்து தப்பித்தாலும் அமெரிக்க சிறைகளில் மிக மிக ஆழமான குழிக்குள் அவர் காணாமல் ஆக்கப்படுவார் என்பது அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் குற்றச்சாட்டுக்களில் இருந்து தெளிவாக தெரிகிறது.

“இதை அம்பலப்படுத்துவதில் நாங்கள் முக்கிய பாத்திரம் வகித்துள்ளோம். நிச்சயமாக இது தனியொருவரின் தலைவிதி சம்பந்தப்பட்டதல்ல. இது ஜனநாயக உரிமைகள் மீதான அடிப்படை கேள்வி என்பதோடு, அதற்கும் அப்பாற்பட்டு அது சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கம், குறிப்பாக அதன் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவுகள், அவற்றுக்கு எதிரான ஏகாதிபத்திய ஆக்ரோஷத்திற்கு எதிராக திருப்பி தாக்குவதற்கு, அவர்களின் உரிமை பற்றிய வர்க்க கேள்வியாகும்.

“விக்கிலீக்ஸ் உலகெங்கிலும் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வுக்கு ஒரு தூண்டுதல் அளித்தது. அமெரிக்கா மற்றும் ஆளும் வர்க்கத்தைப் பொறுத்த வரையில், அது அசான்ஜின் மிகப்பெரிய குற்றமாக உள்ளது, அவர் ஏன் இன்னலுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

“அவரை பாதுகாப்பதற்காக நீதிமன்றங்கள், நீதித்துறை, அல்லது ஊடகங்களை நம்ப முடியாது என்று கூறினோம், இவை அரசின் செய்தி தொடர்பாளர்களாக இருந்து, இராணுவத்தின் உரைப்புள்ளிகளையே திரும்ப திரும்ப கூறும் இராணுவத்துடன் ஒன்றிணைந்த பத்திரிக்கையியலை நடத்துகின்றன, மற்றும் படுமோசமான குற்றங்களை மூடிமறைக்கின்றன. அசான்ஜின் பாதுகாப்பை தொழிலாள வர்க்கத்தின் பாரியளவிலான ஓர் உலகளாவிய போராட்டத்தின் அடிப்படையில் நடத்த வேண்டுமென நாங்கள் கூறினோம், அசான்ஜ் தொழிலாள வர்க்கத்திற்குச் சொந்தமானவர், அவர் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த வெளியீடுகள் பெருமதிப்புடையவையாகும்.

“கோர்பின் ஒரு மிகப்பெரிய ஆதரவு அலை மீதேறி [செப்டம்பர் 2015 இல்] தொழிற் கட்சி தலைமைக்கு வந்தார். தொழிற் கட்சியின் தலைவராக அவர் எந்தவொரு கட்டத்திலும், அசான்ஜிற்குப் பாதுகாப்பாக அதிக எண்ணிக்கையில் இல்லையென்றாலும் அவர் நூறாயிரக் கணக்கானவர்களை வரவழைத்திருக்கலாம்.

“அசான்ஜ் இலண்டனில் இருண்ட அறையில் கிடக்க விடப்பட்டுள்ளார், எதேச்சதிகாரமாக அடைக்கப்பட்டுள்ளார், கோர்பின் பதவிக்காலத்தின் பெரும்பாலான பகுதிகளில் அவர் ஈக்வடோரிய தூதரகத்தில் உளவியல்ரீதியில் சித்திரவதை செய்யப்பட்டார். பின்னர் அவரின் எஞ்சிய பதவிக்காலத்தில் [ஏப்ரல் 2019 இல்] பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.

“பிரிட்டிஷ் பொலிஸால் தூதரகத்திலிருந்து அசான்ஜ் சட்டவிரோதமாக இழுத்துச் செல்லப்படும் அந்த தருணம் வரையில், இந்த சம்பவங்கள் நெடுகிலும் கோர்பின் மவுனமாக இருந்தார். இறுதியில் நிலவிய கொந்தளிப்பு அவரை சில கருத்துக்கள் கூற நிர்பந்தித்தது, அவர் அசான்ஜ் கையாளப்படுவதன் மீது பெயரளவுக்கு ஏதோ ஒரு சில எதிர்ப்பை வழங்கினார்.

“ஒரு நாளுக்குள், தொழிற் கட்சி வலதுசாரி அணி அசான்ஜ் மீது தாக்குதலைத் தொடங்கியது… முற்றிலும் மதிப்பிழந்த சுவீடன் பாலியல் அவதூறு தாக்குதல் மீண்டும் கூறப்பட்டதுடன், கோர்பின் அவர் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்க வேண்டுமென கோரப்பட்டது. கோர்பினும் உடனடியாக அதை செய்தார். சுவீடன் குற்றச்சாட்டுக்களில் இருந்து 'மறைத்து விடவில்லை' என்றும், [அசான்ஜ்] அவற்றை முகங்கொடுக்க வேண்டுமென்றும் அவர் தொலைக்காட்சியில் கூறச் சென்றார். அவர் இன்னும் ஒருபடி சென்று அசான்ஜின் தலைவிதி நேருக்கு நேராக சுவீடனா அல்லது அமெரிக்காவா என்பது 'பிரிட்டிஷ் நீதிமன்றங்களின் விடயம்', அது அதனுடையது என்று கூறுமளவுக்குச் சென்றார். பின்னர் டிசம்பர் 2019 பொதுத் தேர்தல் பிரச்சாரம் நெடுகிலும் உள்ளடங்கலாக, பல மாதங்களுக்கு அது கைவிடப்பட்டது. 'அசான்ஜ்' என்ற வார்த்தையே கோர்பினின் உதடுகளில் இருந்து வரவில்லை.

“நாங்கள் அந்த தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளர்களை நிறுத்தி அசான்ஜின் விடுதலைக்கு அழைப்புவிடுப்பதை எங்கள் மத்திய கோரிக்கைகளில் ஒன்றாக வைத்தோம். கோர்பின் முற்றிலும் மவுனமாக இருந்தார்… [இப்போது] அசான்ஜின் தலைவிதி மீதான எல்லா எதிர்ப்பையும் போரிஸ் ஜோன்சனின் அரசாங்கத்திற்கு முறையீடு செய்யும் விதத்தில் திருப்பி விடுகிறார்.

“பணிவடக்கத்துடன் போரிஸ் ஜோன்சன் தலையீடு செய்யுமாறு கோருவதும், அல்லது நீதிமன்றங்கள் ஏதேனும் கண்ணியத்தைக் காட்டுமாறு கோருவதுமே கோர்பின் அரசியலின் வேட்கையாக உள்ளது.

“எந்தவொரு பிரச்சினை மீதும் தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவதைத் தடுப்பதே மொத்த கோர்பின் அரசியலின் புள்ளியாக உள்ளது. இந்த பிரச்சினையில், அது 21 ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய பத்திரிகையாளரைப் பாதுகாப்பது சம்பந்தப்பட்டதாகும்.

“ஈக்வடோரிய தூதரகத்தில் தொடர்ந்து அசான்ஜ் அடைக்கப்பட்டிருப்பதற்கு ஒரு சாக்குப்போக்காக சேவையாற்ற, அசான்ஜிற்கு எதிரான சுவீடன் அரசின் போலி குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து தொடருமாறு கோரி, சுவீடன் அரசுக்கு ஒரு சேதி அனுப்பிய துறையை பொது விசாரணைகளின் இயக்குனராக கோர்பின் நன்கறிந்திருந்த சர் கெய்ர் ஸ்டார்மரிடம் தொழிற் கட்சியை அவர் ஒப்படைத்துள்ளார்.

“DPP இன் சுவீடன் சமதரப்பினர்களுக்கு 'நடுங்காதீர்கள், தைரியமாக இருங்கள்" என்று குறிப்பிட்டு DPP மின்னஞ்சல்கள் அனுப்பியது. இது வெறுமனே மற்றொரு வழக்கு என்பதாக நினைத்து விடாதீர்கள். இது பிரிட்டிஷ் அரசுக்கு மிகவும் மதிப்புடையது. இப்போது தொழிற் கட்சி தலைவரான ஸ்டார்மர் அமெரிக்காவுக்கு அசான்ஜை நாடு கடத்துவதை உறுதிப்படுத்தி வருகிறார். கோர்பின் தொழிற் கட்சி தலைவராக இருந்த காலத்தில் அவரின் மிகவும் குறிப்பிடத்தக்க காட்டிக்கொடுப்புகளில் இதுவும் ஒன்றாகும்.