வணிக சார்பு ஆஸ்திரேலிய அஞ்சல் மறு சீரமைப்புக்கு எதிரான ஒரு போராட்டத்திற்கான தொழிலாளர்களின் அறைகூவலை தொழிற்சங்கம் எதிர்க்கிறது

Jim Franklin மற்றும் Oscar Grenfell
24 November 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வெள்ளிக்கிழமை ஆஸ்திரேலியா அஞ்சல் சேவை (AP) சிட்னி டிப்போவில் நடந்த கூட்டமானது, தொழிற்சங்கங்கள் ஒரு தொழில்துறை பொலிஸ் நிர்வாகமாக இருக்கிறது என்பதை மீண்டும் நிரூபித்து காட்டியிருக்கிறது. ஏற்கெனவே தாங்கமுடியாத நிலைமைகளை ஏற்படுத்தி ஆயிரக்கணக்கான வேலைகளை அச்சுறுத்தும் தேசிய அஞ்சல் சேவையின் வணிக சார்பு மறுசீரமைப்பிற்கு எதிராக தொழிலாளர்கள் மேற்கொள்ளும் எந்தவொரு போராட்டத்தையும் தடுப்பதே அவர்களின் பங்களிப்பாக இருக்கிறது.

ஆஸ்திரேலியா அஞ்சல் சேவையின் அலெக்ஸாண்ட்ரியா வளாகத்தில் ஆஸ்திரேலியா அஞ்சல் தொழிலாளர்களை உள்ளடக்கிய தகவல் தொடர்பு தொழிலாளர் சங்கத்துடன் (Communication Workers Union - CWU), தகவல் தொடர்பு, மின் மற்றும் வடிகால் பழுதுபார்ப்போர் தொழிற்சங்கம் (Communications, Electrical and Plumbing Union - CEPU) இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

அலெக்ஸாண்ட்ரியாவில் உள்ள தொழிலாளர்கள், ஒரு கூட்டம் நடைபெறுவதாக தொழிற்சங்கம் எந்தவொரு முன்கூட்டிய எச்சரிக்கையும் கொடுக்கவில்லை என்று உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினர். எந்த மின்னஞ்சலும் அனுப்பப்படவில்லை, அல்லது எந்த அறிவிப்பும் அலுவலகத்தில் ஒட்டப்படவில்லை.

அலெக்ஸாண்ட்ரியாவில் ஆஸ்திரேலியா அஞ்சல் சேவை வளாகத்தின் ஒரு பகுதி (Credit: Rork Projects)

அதற்கு பதிலாக, கூட்டம் குறித்த விவரங்கள் பெரும்பாலும் தொழிற்சங்க பிரதிநிதிகளின் வாய்வழி வார்த்தைகளால் பரப்பப்பட்டன. சில தொழிலாளர்கள் கூட்டம் ஏற்கனவே ஆரம்பித்த பின்னரே அது பற்றி தெரிந்துகொண்ட சம்பவம் நடந்திருக்கிறது. தொழிற்சங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் போலவே, தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் மறுசீரமைப்பிற்கு எதிரான போராட்டத்தில் முன்னோக்கி செல்லும் வழி குறித்த எந்தவொரு ஜனநாயக விவாதத்தையும் தடுப்பதற்கான தெளிவான நோக்கம் அங்கே இருந்தது.

CEPU இன் புதிய தெற்கு வேல்ஸ் அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு கிளையின் உதவி செயலாளர் பீட்டர் சலோனர் பேச்சாளராக வந்திருந்தார். அவருடன் கூட மற்ற மூன்று CEPU அதிகாரிகள் இருந்தனர்.

தங்களுக்கு அனேகமாக புதிய தகவல்கள் எதுவும் கூறவில்லை அல்லது கூட்டம் ஏன் அழைக்கப்பட்டது என்பதற்கான எந்தக் குறிப்பையும் கூட சலோனர் குறிப்பிடவில்லை என்று தொழிலாளர்கள் கூறியுள்ளனர். மறுசீரமைப்பின் மையப்பகுதியான மாற்று விநியோக மாதிரி (Alternative Delivery Model - ADM) ஜூன் மாதத்தில் ஒரு மத்திய அரசாங்க மறுஆய்வு முடிவடையும் வரை அது தொடர்ந்து இருக்கும் என்று அவர் கூறினார்.

கடந்த மாதம் வெடித்த ஒரு செலவு ஊழலைத் தொடர்ந்து, முன்னாள் ஆஸ்திரேலிய அஞ்சல் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ்டின் ஹோல்கேட் இராஜினாமா செய்தது குறித்து சலோனர் சுருக்கமாக பேசினார். இடைக்கால மாற்றாக நியமிக்கப்பட்டிருக்கும் ரோட்னி பாய்ஸ் பற்றி தொழிற்சங்கத்திற்கு நன்கு தெரியவில்லை, அதாவது அவருடன் "பேச்சுவார்த்தைகள்" புதிதாக தொடங்கப்பட வேண்டும் என்று அவர் எச்சரித்தார்,

நிர்வாகத்துடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கான தொழிற்சங்கத்தின் தீர்மானத்தை இந்த அறிக்கை நிரூபித்துள்ளது. நிலைமைகளின் மீது கூட கூர்மையான தாக்குதல்களைச் நடத்துவதற்கு CEPU தயாராகி வருகிறது என்பதற்கான சமிக்ஞையாக இது இருந்தது, இது பாய்ஸ் இன் முடிவு என்றும் தொழிற்சங்கத்துடன் போதுமான "ஆலோசனை" இல்லாமலிருக்கிறது என்றும் அது கூறும்.

ஆஸ்திரேலிய அஞ்சல் ஊழியர்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகள் கேள்வி நேரத்தில் மட்டுமே வெளிப்பட்டன. ADM ஐ அனுமதித்தற்காக ஒரு தொழிலாளி தொழிற்சங்கத்தை கண்டித்தார், நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆஸ்திரேலியா அஞ்சல் ஊழியர்களின் ஜனநாயக வெகுஜனக் கூட்டத்திற்கும், வேலைகள் மற்றும் நிபந்தனைகள் மீதான தாக்குதலுக்கு எதிரான போராட்டத்திற்கும் அறைகூவல் விடுத்தார்.

தொழிலாளி ADM இன் தாக்கத்தை கோடிட்டுக் காட்டினார். கொரோனா வைரஸ் தொற்றுநோயை சாக்காக வைத்து அறிமுகப்படுத்தப்பட்ட இது, ஒவ்வொரு நாளும் கடித விநியோகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது, மேலும் அது இலாபநோக்கிலான பார்சல் துறையில் அதிக கவனம் செலுத்துகிறது.

ADM அவருக்கும் அவருடன் சேர்ந்து பணிபுரிபவர்களுக்கும் பணிச்சுமையை இரட்டிப்பாக்கியாகியுள்ளது என்று அந்த தொழிலாளி கூறினார்.

பல ஆண்டுகளாக காலால் நடந்து அஞ்சல் விநியோகித்த சில தொழிலாளர்கள், வேன் மூலம் பார்சல்களை வழங்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர். அவற்றின் நிலைமைகள் ஆபத்தான "மலிவான நிலையற்ற உழைப்பு சந்தை பொருளாதாரத்தில்" ஒப்பந்தக்காரர்களையும் தொழிலாளர்களையும் எதிர்கொள்ளும் நிலைமைகளுக்கு ஒத்தவையாக உள்ளன. மேலும் சிறப்பாக செய்யத் துடிக்கும் மற்றவர்கள், முன்பு வேலைபார்த்த பெரும் பகுதியைவிட இன்னும் மிகப் பெரிய பகுதியை பார்ப்பதற்கு நிர்பந்திக்கப்படுகிறார்கள். ஒரு முழு புதிய வர்க்கத் தொழிலாளர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர், அவர்கள் "மிதப்பவர்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கென்று எந்தவிதமான பங்கும் இல்லை, மேலும் நிர்வாகத்தால் ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்கு தள்ளுவதற்கும் வழிவகுக்கிறது.

ADM என்பதற்கு "மற்றொரு பெயர் தனியார்மயமாக்கல்" அதன் உண்மையான நோக்கம் ஆஸ்திரேலியா அஞ்சலை ஒரு இலாபகரமான தொழில் நிறுவனமாக மாற்றுவதாகும், இதன் மூலம் அது ஒரு பெரிய நிறுவனத்திற்கு விற்கப்படும் என்று அந்த தொழிலாளி எச்சரித்தார்.

தொழிற்சங்கங்களின் பாத்திரம் பக்கம் திரும்பிய தொழிலாளி, ADM ஐ நடைமுறைப்படுத்தியதற்காக CEPU மற்றும் CWU ஐ கண்டித்தார். முந்தைய ஆன்லைன் கூட்டங்களில், இப்போதைக்கு கட்டாய பணிநீக்கங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை அது தொழிற்சங்கங்களின் "வெற்றிகள்" என்று கூறப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

இந்த முந்தைய கூட்டங்களில் இந்த "வெற்றிகள்" என்று அழைக்கப்படுவதற்கு ஈடாக தொழிற்சங்கங்கள் என்ன கொடுத்தன என்று அவர் கேட்டதாக அந்த தொழிலாளி கூறினார். பதில் இப்போது தெளிவாக உள்ளது என்று அவர் அறிவித்தார். தொழிற்சங்கங்கள் நிர்வாகத்துடன் ஒரு "புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்" கையெழுத்திட்டன, அவை தொழிலாளர்களின் முதுகுக்குப் பின்னால் தீட்டப்பட்டன, பின்னர் ஜூலை மாதம் அவை பகிரங்கமாக அறிவிக்கப்பட்டன. CEPU மற்றும் CWU ஆகியவை ADM நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்யும் என்று அது உறுதியளிக்கிறது, மேலும் தொழிலாளர்களின் அனைத்து தொழில்துறை நடவடிக்கைகளையும் தடை செய்கிறது.

"கடந்த 40 ஆண்டுகளில் நாங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய போருக்கு முன்னதாக, நீங்கள் எங்கள் தோட்டாக்களின் துப்பாக்கிகளை காலி செய்ததோடு மட்டுமல்லாமல், முதுகுக்கு பின்னால் எங்கள் கைகள் கட்டப்பட்டு அகழிகளுக்குள் தள்ளிவிட்டீர்கள், பின்னர் போரிடுங்கள் என்று சொன்னீர்கள்!" என்று தொழிலாளி அறிவித்தார்.

"எனது உழைப்பைத் திரும்பப் பெறுவதற்கான எனது உரிமையை கையொப்பமிடுவதற்கு உங்களுக்கும் தொழிற்சங்கத்திற்கும் அந்த உரிமையை எது தருகிறது? நாங்கள் வேலைநிறுத்தம் செய்ய விரும்பினால், எங்கள் உழைப்பைத் திரும்பப் பெற விரும்பினால், அது எங்கள் உரிமை. இதை கையெழுத்திட உங்களுக்கும் தொழிற்சங்கத்திற்கும் எந்த உரிமையும் இல்லை.”

இது சாதாரண மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் என்று ADM ஐ நியாயப்படுத்தப் பயன்படுத்தப்படும் பொய்களை தொழிலாளி மறுத்தார். "இதிலிருந்து யார் வெற்றிபெறுவார்கள்?" என்று அவர் கேட்டார். “அஞ்சல் அல்லது பார்சல்களை சரியான நேரத்தில் பெறமுடியாதவர்கள் அவர்கள் வாடிக்கையாளர்கள் அல்ல. இது கூடுதல் மணிநேரம் வேலைசெய்து இரண்டுதடவை அஞ்சல் விநியோகிக்கும் அஞ்சல் ஊழியர் அல்ல. எனவே நாங்களும் வெற்றிபெறவில்லை மற்றும் வாடிக்கையாளர்களும் வெற்றிபெறவில்லை, தொழிற்சங்கமும் நிர்வாகமும் மட்டுமே வெற்றி பெறுகின்றன, தொழிலாளர்கள் அல்ல.”

தற்போதுள்ள அறுபது அல்லது அதற்கு மேற்பட்ட ஆஸ்திரேலிய அஞ்சல் ஊழியர்கள் இந்த கருத்துக்களை வரவேற்றுள்ளனர். அந்த தொழிலாளி பின்னர் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார்.

அது கூறியது: “இந்த கூட்டம் CEPU மற்றும் CWU ஒரு வெகுஜனக் கூட்டத்திற்கு அழைப்பு விடவேண்டும், இதில் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆஸ்திரேலியா அஞ்சல் தொழிலாளர்கள் ADM க்கு எதிரான போராட்டத்திலும் நமது உரிமைகளுக்காகவும் முன்னேறக்கூடிய வழி குறித்து விவாதிக்க முடியும். தொழிலாளர்கள் அது குறித்து பேசக்கூடியதாக இருக்க வேண்டும்! அனைத்து அஞ்சல் ஊழியர்களிடமும் ஒரு தொழில்துறை மற்றும் அரசியல் ரீதியான எதிர்ப்பு போராட்டம் இருக்க வேண்டும், ஆனால் அது ஒன்று அல்லது இரண்டு டிப்போக்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்க முடியாது. எந்தவொரு தளத்திலும் நடவடிக்கை என்பது தொடக்கமாக இருக்க வேண்டும், முடிவாக இருக்கக்கூடாது, மேலும் இந்த மறுசீரமைப்பிற்கு எதிராக அனைத்து தொழிலாளர்களின் வெகுஜன தொழில்துறை மற்றும் அரசியல் போராட்டமாக வளர்ச்சி செய்யப்பட வேண்டும்.”

இந்த தீர்மானத்திற்கு யாராவது ஒரு தொழிலாளி வழி மொழிந்தாரா? என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பெரும்பாலும் இரண்டு டஜனுக்கும் அதிகமான கைகள் உடனடியாக உயர்ந்தன.

இந்த கட்டத்தில், ADM-க்கு எதிரான போராட்டம் குறித்த எந்தவொரு பேச்சையும் முடிவுக்கு கொண்டு வர சலோனர் அடி எடுத்து வைத்தார். ஒவ்வொரு தொழிற்சங்க அதிகாரியும் எப்போதும் முன் வைக்கும் வாதத்தை அவர் பயன்படுத்தினார். அது நிறைவேறினால், ஒரு வேலைநிறுத்தத்தை ஆதரிக்கும் முதல் நபராக நான் இருப்பேன் என்று சலோனர் கூறினார். மழையோ அல்லது வெய்யிலோ அவர் ஆர்ப்பாட்டத்தில் நிற்ப்பார். ஆனால் எதுவும் செய்ய முடியாது, ஏனென்றால் தொழில்துறை நடவடிக்கை சட்டவிரோதமானது, மேலும் தொழிலாளர்கள் அபார அபராதங்களையும் எதிர்கொள்ள நேரிடும்.

அனேகமாக அனைத்து தொழில்துறை நடவடிக்கைகளையும் சட்டவிரோதமாக்குவதில் தொழிற்சங்கங்களே முக்கிய பங்கு வகித்தன என்பதை சலோனர் குறிப்பிடவில்லை. முதலாவதாக, கடந்த கூட்டாட்சி தொழிலாளர் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆஸ்திரேலிய நியாயமான வேலை சட்டத்தை அவர்கள் ஆதரித்தனர், இது பெரும்பாலான வேலைநிறுத்தப் போராட்டங்களைத் தடை செய்தது. இரண்டாவதாக, அவர்கள் ஆஸ்திரேலிய அஞ்சல் நிர்வாகத்துடன் "வேலைநிறுத்தம் கிடையாது" என்ற ஒப்பந்தத்தில் சில மாதங்களுக்கு முன்புதான் கையெழுத்திட்டனர்!

உறுப்பினர்கள் தங்கள் பணிச்சுமையை சமாளிக்க முடியாவிட்டால், அவர்கள் வேலைசெய்யும் மணிநேரங்களில் மட்டுமே செய்யப் போவதாக நிர்வாகத்திடம் சொல்லலாம் என்று சலோனர் கூறினார். தீர்மானத்தை முன் மொழிந்த தொழிலாளி, பார்சல்களை வெளியே எடுத்துச் செல்ல வேண்டும் என்று பெரும் அழுத்தம் ஊழியர்களுக்கு இருப்பதாக விளக்கினார். எவ்வாறாயினும், தனிநபர்களாக நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தொழிலாளர்கள் விடப்பட்டால் தொழிற்சங்கத்தின் பயன்தான் என்ன?

பல தொழிலாளர்கள் தங்கள் அடமானங்களையும் பிற செலவுகளையும் செலுத்த கூடுதல் நேர வேலை உதவுவதால் அதை செய்ய மகிழ்ச்சி அடைவதாக சலோனர் அறிவித்து கதையை மாற்றினார். இது தொழிலாளர்களிடையே கணிசமான கோபத்தைத் தூண்டியதாக செய்தி வெளியானது, சலோனர் ADM ஐ ஒரு ஆக்கபூர்வமான வளர்ச்சியாக ஊக்குவித்துக்கொண்டிருப்பதாக அவர்கள் உணர்ந்தனர்.

தொழிற்சங்கங்களின் மோசமான காட்டிக்கொடுப்புகள் மற்றும் நிர்வாகத்துடனான ஒப்பந்தங்கள் ஆகிய அனைத்தையும் சர்வ சாதாரணமாக நியாயப்படுத்துவதற்கு அவர் திரும்பினார். CEPU அது செய்ததை செய்திருக்காவிட்டால் 25 சதவீத தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தொழிலாளர்கள் தங்களுக்கு இன்னும் ஒரு வேலை இருப்பது குறித்து மகிழ்ச்சியடைய வேண்டும், மேலும் அதன் நிலைமைகள் குறித்து அமைதியாக இருக்க வேண்டும்.

ஆனால் தொழிலாளி பதிலளித்ததன்படி, அவரது சக ஊழியர்கள் பலர் ADM கோரிக்கைகளை சமாளிக்க முடியாததால் இராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டிருக்கின்றனர். நிர்வாகத்தின் நோக்கம் 25 சதவீத தொழிலாளர்களைக் குறைப்பதன் மூலம் அடையப்படுகிறது, மேலும் கட்டாய பணிநீக்கத்திற்கான அச்சுறுத்தல் நீடித்துள்ளது.

எந்தவொரு போராட்டமும் இருக்க முடியாது என்று சலோனர் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்த சமயத்தில், பல தொழிலாளர்கள் கூட்டத்திலிருந்து வெளியேறினர். தொழிற்சங்கங்கள் தங்கள் நலன்களுக்காக எந்த போராட்டத்தையும் எடுக்கப்போவதில்லை என்று அவர்களுக்கு தெரியும்.

தீர்மானத்தை முன்மொழிந்த அந்த தொழிலாளி உலக சோசலிச வலைத் தளத்துடன் (WSWS) வார இறுதியில் தனது நோக்கங்களை பற்றி பேசினார். தனது சொந்த வாழ்நிலை சகிக்க முடியாததாகிவிட்டது என்று கூறினார். ஒரு காலத்தில் சிறந்த வேலையாக இருந்தது, இப்போது ஒரு பதட்டமூட்டும் கனவாக இருக்கிறது. எந்தவொரு கலந்துரையாடலும் இன்றி, முந்தைய ஐந்து ஆண்டுகளில் அவர் பணியாற்றிய துடிப்பான வேலையிலிருந்து அவர் நகர்த்தப்பட்டார். அவர் இப்போது அதிகாலை 5:30 மணிக்கு வேலையைத் தொடங்குகிறார், அவருடைய அனைத்து அஞ்சல் விநியோகங்களை முடிக்க முடியாமல் சில நாட்களாக இரவு 8 மணிக்கு வேலையை முடிக்கிறார்.

"நாங்கள் ஒரு நடவடிக்கைக் குழுவை உருவாக்க வேண்டும். போதும் போதும் என்றாகிவிட்டது. கொடியின் மீது பழம் அழுகி வளர்ந்து வருகிறது. நாங்கள் எங்கள் சொந்த பிரச்சாரங்களை உருவாக்கத் தொடங்க வேண்டும். என்னால் தொழிற்சங்கத்தை விமர்சிக்க முடியும், ஆனால் நாம் விடயங்களை நம் கையில் எடுக்கும் நேரம் இது. சம்பவங்கள் நகர்ந்திருக்கின்றன. அஞ்சல் ஊழியர்களுக்கு ஒரு புதிய தலைமை இல்லை என்றால், அவர்கள் மேலும் மனச்சோர்வடைவார்கள், மேலும் நிர்வாக தாக்குதல்களும் தொடரும்.” என்று அவர் அறிவித்தார்.

ADM, தனியார்மயமாக்கல் மற்றும் நிலைமைகள் மீதான தாக்குதல் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தில் முன்னேறி செல்வதற்கான பாதை குறித்த ஒரு ஜனநாயகபூர்வமான விவாதத்தை விரும்பும் அனைத்து தொழிலாளர்களுக்கும் சோசலிச சமத்துவ கட்சி எங்களை தொடர்பு கொள்ளும்படி அறைகூவல் விடுக்கிறது. தொடர்புக்கு: sep@sep.org.au