ட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு பாதை அமைக்கும் நோக்கில் பென்டகன் மறுஒழுங்கமைப்பு செய்யப்படுகிறது

25 November 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அரசியலமைப்பு-விரோத ஆட்சி சதியைக் கொண்டு 2020 தேர்தலை செல்லுபடியற்றதாகச் செய்வதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முயற்சிகளுக்கு மத்தியில், பைடெனும் சரி ஜனநாயகக் கட்சியினரும் சரி, அல்லது அமெரிக்க பெருநிறுவன ஊடகங்களும், அமெரிக்க இராணுவ மற்றும் அதன் பென்டகன் கட்டளையகத்திற்குள் நடந்து வரும் அச்சுறுத்தலான அபிவிருத்திகள் குறித்து அமெரிக்க மக்களையும் உலக மக்களையும் எச்சரிக்கையூட்ட பொருத்தமானவர்களாக இல்லை.

இந்த ஆட்சி சதியின் புறவடிவங்கள் கடந்த சில நாட்களில் கூர்மையாக முன்னிலைக்கு வந்துள்ளன. இந்த விடயம் வெறுமனே ட்ரம்பின் உத்தேசங்கள் சம்பந்தப்பட்டதல்ல, மாறாக நிஜமாகவே இந்த நேரத்தில் நடத்தப்பட்டு வருகின்ற இந்த ஆட்சி சதியைச் செயல்படுத்துவதை நோக்கமாக கொண்ட நடவடிக்கைகளாகும்.

President Donald Trump on a phone call with leaders of Sudan and Israel in the Oval Office of the White House, Oct. 23, 2020, in Washington [Credit: AP Photo/Alex Brandon]

வெள்ளிக்கிழமை மிச்சிகன் குடியரசுக் கட்சியின் மாநில சட்டமன்ற உறுப்பினர்களை ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு அழைத்திருந்தமை ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான ஒரு தீர்க்கமான மூலோபாயத்தை அப்பட்டமாக எடுத்துக்காட்டி உள்ளது. ட்ரம்பும் அவரின் ஆதரவாளர்களும் வாக்குச்சீட்டு மோசடி குறித்த பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறி, அதிகரித்தளவில் பாசிசவாத சூழ்ச்சி தத்துவங்களுடன் மக்கள் வாக்குகளை மறுத்தளித்து ட்ரம்ப் ஆதரவு தேர்தல் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க செய்வதற்காக மிச்சிகன் போன்ற மாநிலங்களில் குடியரசுக் கட்சி கட்டுப்பாட்டிலான மாநில சட்டமன்றங்களுக்கு ஒரு சாக்குப்போக்கை வழங்கி, தேர்தலைச் சட்டத்தின்படி செல்லாததாக்க ஒரு ஆக்ரோஷமான பிரச்சார நடவடிக்கையை நடத்தி வருகின்றனர்.

இந்த சட்டத்திற்குப் புறம்பான செயல்திட்டம் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் போய் நிற்குமென அவர்கள் கணக்கிட்டு வருகின்றனர், அங்கே நீதியரசர்களில் முழுமையாக மூன்றில் ஒருவர் ட்ரம்பால் நியமிக்கப்பட்டவர்கள் உள்ளனர், இதற்கான முன்மாதிரி ஏற்கனவே 2000 புஷ்-கோர் வழக்கின் தீர்ப்பில் நிறுவப்பட்டுள்ளது, அது புளோரிடாவில் மக்கள் வாக்குகளின் எண்ணிக்கையை நிறுத்தி, ஜனநாயகக் கட்சியின் எதிர்ப்பு இல்லாமல், ஜனாதிபதி பதவியைக் குடியரசுக் கட்சியாளர் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷிற்கு வழங்கியது.

இதுபோன்று ஆணவத்துடன் ஒரு தேர்தலை தலைகீழாக மாற்றுவதற்கான ஒரு முயற்சி, குறிப்பாக பலமான தொழிலாள வர்க்க நகர்புற பகுதிகளில் ட்ரம்பைப் பதவியிலிருந்து நீக்குவதற்காக தங்களின் வாக்குகளைச் செலுத்திய மில்லியன் கணக்கானவர்களிடேயே தவிர்க்கவியலாமல் வெடிப்பார்ந்த எதிர்ப்பைத் தூண்டும். ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு ஆட்சி வடிவங்களில் எஞ்சியிருக்கும் எச்சசொச்சங்கள் மீதான இதுபோன்றவொரு தாக்குதலை மிகப் பெரியளவில் ஒடுக்குமுறையில் தஞ்சமடையாமல் செயல்படுத்த முடியாது.

இந்த சூழலில், ஆயுதப்படையின் கிரீன் பெரெட்ஸ், கடற்படையின் SEALS மற்றும் ஏனைய உயர்மட்ட படுகொலை பிரிவுகளை உள்ளடக்கி அமெரிக்க இராணுவ சிறப்பு நடவடிக்கை கட்டளையகத்தின் வடக்கு கரோலினா தலைமை செயலகத்தில் புதன்கிழமை ஒரு விழா நடத்தப்பட்டது, இது பேராபத்தான ஒரு எச்சரிக்கையாக சேவையாற்றுகிறது. இந்த சிறப்பு நடவடிக்கை கட்டளையகத்தின் அந்தஸ்து, ஆயுதப்படைப் பிரிவுகள், இராணுவம், கடற்படை, விமானப்படை, இன்னும் இதரவற்றின் இப்போதிருக்கும் பிரிவுகளுக்கு நிகராக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த மாற்றத்தைக் குறித்து இராணுவத்துடன் நன்கு தொடர்புபட்ட வலைத் தளம் breakingdefense.com பின்வருமாறு விவரித்தது: “இந்த மாற்றத்தின் சாராம்சம், பென்டகனில் உள்ள உயர்மட்ட சிறப்பு நடவடிக்கை அதிகாரிகள் உயர்மதிப்பார்ந்த இலக்குகளுக்கு எதிரான இரகசிய வேட்டைகள் உள்ளடங்கலாக செயல்திட்ட விவகாரங்களில்… பாதுகாப்பு செயலத்திற்கு நேரடியாக செய்ய முடியும். அந்த செயலகத்தை எட்ட இனிமேல் அந்த அலுவலகம் அதை விட பெரிய DoD கொள்கை எந்திரத்தின் மூலமாக நகர வேண்டியதில்லை.”

பென்டகன் தலைவராக நியமிக்கப்பட்டதிலிருந்து ஊடகங்களின் எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்க மறுத்துள்ள மில்லர், கூடியிருந்த துருப்புகளிடையே கூறுகையில், “சிறப்பு செயல்திட்டங்களின் நிர்வாக தலைமை தற்போதைய அதிகாரத்துவ வழிமுறைகள் மூலமாக செல்லாமல் அதற்கு பதிலாக நேரடியாக என்னிடம் வருமாறு அறிவுறுத்தி உள்ளதை இங்கே இன்று நான் தெரியப்படுத்திக் கொள்கிறேன்,” என்றார்.

ஒரு வாரத்திற்கும் சற்று அதிகமாக பதவி வகித்து வரும் மில்லர் அமெரிக்க செனட்டால் உறுதி செய்யப்பட்டவர் இல்லை, உறுதி செய்யப்படவும் மாட்டார். ஓர் ஓய்வு பெற்ற கர்னலாக 30 ஆண்டு சிறப்பு படைப்பிரிவின் அதிகாரியான அவர், ட்ரம்பிடம் வழுவாத விசுவாசம் கொண்டவர் என்பதற்கு அப்பாற்பட்டு அந்த பதவியை வகிக்க அவருக்கு வேறெந்த தகுதிகளும் இல்லை.

வழமையான சூழ்நிலைகளின் கீழ், வெறும் இரண்டு மாதங்களில் பைடென் நியமிக்கும் நபரிடம் மில்லர் அவர் அலுவலகத்தை ஒப்படைக்க வேண்டி இருந்திருக்கும், மேலும் இடைப்பட்ட காலத்தில், அவர் இடத்திற்கு வரவிருக்கும் நபருடன் நெருக்கமாக ஒத்துழைக்க வேண்டி இருந்திருக்கும். ஆனால் அவ்வாறில்லாமல், அவர் இராணுவக் கட்டளையக சங்கிலியில் நினைவிலுள்ள சமீபத்திய காலம் வரையில் மிகவும் அதிக தாக்கம் கொண்ட மாற்றத்தை அறிவித்து வருகிறார்.

பாதுகாப்புத்துறை செயலராக மில்லரின் நியமனம் பென்டகனின் உயர்மட்ட நிர்வாக தலைமையை ஒட்டுமொத்தமாக களையெடுத்ததன் விளைவாகும், இதை ட்ரம்ப் ட்வீட் செய்தி மூலமாக பாதுகாப்புத்துறை செயலர் மார்க் எஸ்பரைப் பணிநீக்கம் செய்ததில் தொடங்கி வைக்கப்பட்டது. எஸ்பரை பணிநீக்கம் செய்வதற்கான ட்ரம்பின் தீர்மானம் கடந்த ஜூன் வரையில் பின்னோக்கி நீள்கிறது, அப்போது வெள்ளை மாளிகைக்கு அருகே பொலிஸ் வன்முறைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை ஒடுக்க மத்திய அரசின் பாதுகாப்பு படைகளையும் அமெரிக்க துருப்புகளையும் அமெரிக்க ஜனாதிபதி நிலைநிறுத்தியதுடன், மினெயாபொலிஸில் ஜோர்ஜ் ஃபுளோய்ட் மீதான பொலிஸ் படுகொலை தூண்டிவிட்ட பாரிய போராட்டங்களைக் கலைக்க நாடெங்கிலும் வீதிகளில் துருப்புகளை அனுப்புவதற்காக அவர் கிளர்ச்சி ஒடுக்கும் சட்டத்தைப் பயன்படுத்த அச்சுறுத்தினார்.

ஆயுதத் தொழில்துறைக்கான ஒரு முன்னாள் தரகரான எஸ்பர், அமெரிக்க மக்களை ஒடுக்குவதற்கு இதுபோன்று உள்நாட்டில் அமெரிக்க இராணுவத்தை நிலைநிறுத்துவதை "கடைசி புகலிடமாக" மட்டுமே உத்தரவிடலாம் என்று கூறி, அவர் எதிர்ப்பைத் தெரிவித்தார். அவர் நிலைப்பாட்டை, முப்படைகளுக்கான தலைமை தளபதிகளின் தலைவர் ஜெனரல் மார்க் மில்லியும் பகிர்ந்து கொண்ட நிலையில், அதுபோன்று அமெரிக்க துருப்புகளைப் பயன்படுத்துவது கட்டுப்படுத்தவியலாதவாறு எதிர்ப்பைத் தூண்டி, இராணுவதையே துண்டாடிவிடும் என்ற பயத்தை அவர் வெளிப்படுத்தினார். எஸ்பர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்குப் பின்னர், அவரும், மில்லியும் மற்றும் பென்டகனின் மூன்றாவது முக்கிய பதவியிலிருந்து நீக்கப்பட்ட அதிகாரியும் அனைவருமே அவர்கள் அரசியலமைப்புக்குத் தான் பதவிப்பிரமாண உறுதிமொழி ஏற்றிருப்பதாக குறிப்பிட்டு அமெரிக்க இராணுவத்தினருக்குக் நினைவூட்டி அறிக்கைகள் வெளியிட்டனர்.

இதுபோன்று எதையும் துணைக்கிழுப்பது தேர்தலுக்குப் பின்னர் இருந்து பென்டகனின் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ள ட்ரம்ப் விசுவாசிகள் மற்றும் அரை-பாசிசவாத சதிக்கூட்டத்தின் மீது எந்த தாக்கமும் ஏற்படுத்தாது. மில்லர் அவரின் மற்றொரு தேசிய பாதுகாப்புத்துறை பதவிக்கான உறுதிமொழி விளக்கத்தில், வெள்ளை மாளிகையின் உத்தரவின் பேரில் போராட்டக்காரர்களை விரட்ட மத்திய உளவுத்துறை ஆதாரவளங்களை பயன்படுத்துவதில் அவருக்கு எந்த தயக்கமும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தினார்.

“அதிகாரத்துவ வழிமுறைகள்" இடர்பாடுகளின்றி, பாதுகாப்புத்துறை செயலகத்துடன் இப்போது நேரடியான மற்றும் இரகசிய ஒத்துழைப்பை அனுபவிக்க இருக்கும் சிறப்பு செயல்திட்டத்தின் புதிய நிர்வாக தலைவர், 34 வயதான அதிதீவிர வலதுசாரி நடவடிக்கையாளரான எஸ்ரா கொஹென்-வாட்னிக் ஆவார். இவர், ட்ரம்பின் வெறித்தனமாக ஈரானிய விரோதம் கொண்ட ட்ரம்பின் பாசிசவாத முன்னாள் ஆலோசகர் ஸ்டீவ் பானன், குற்றப்பத்திரிகையில் இடம்பெற்ற முன்னாள் தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் ஜெனரல் மிக்கெல் ஃபிளின் மற்றும் ஜனாதிபதியின் மருமகன் ஜாரெட் குஸ்னர் போன்றவர்களுடன் அரசியல் தொடர்புகள் கொண்டுள்ளார் என்ற தகுதியால் மட்டுமே தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் முன்னுக்குக் கொண்டு வரப்பட்டார்.

பென்டகனின் மூன்றாவது உயர்மட்ட பதவியான கொள்கை துணை செயலாளர் பதவிக்கு ஓய்வு பெற்ற தளபதியும் அவ்வபோது Fox News கருத்துரையாளராக தோன்றும் ஆன்டனி டாடா பெயரிடப்பட்டுள்ளார், அவர் ஒபாமாவை ஒரு "பயங்கரவாத தலைவர்" என்றும், “மன்சூரியன் வேட்பாளர்" மற்றும் ஒரு முஸ்லீம் என்றும் கண்டித்துள்ளார் என்பது வெளியானதும் இதே பதவிக்காக முன்னர் அவர் பரிந்துரைக்கப்பட்டதில் இருந்து திரும்ப பெறப்பட்டிருந்தார்.

இதேபோன்ற பிரமுகர் ஒருவர், “ஐரோப்பாவை ஓர் இஸ்லாமிய அரசாக மாற்றும்" விதத்தில் "தேவையற்ற முஸ்லீம் படையெடுப்பாளர்கள்" நுழைந்து கொள்கிறார்கள் என்று ஐரோப்பிய நாடுகளைக் கண்டித்ததற்காக அறியப்பட்ட ஓய்வு பெற்ற இராணுவக் கர்னலும் Fox News இன் கருத்துரையாளருமான டக்ளஸ் மக்கிரேகர், மில்லரின் தலைமை ஆலோசகராக பெயரிடப்பட்டுள்ளார். யூத இனப்படுகொலையை "நோய்வாய்பட்ட மனநிலை" என்று கருதுவதற்கான ஜேர்மனியின் முயற்சிகளையும் கண்டித்துள்ள இவர், அமெரிக்க-மெக்சிகன் எல்லையில் புலம்பெயர்ந்தவர்களை நீதிவிசாரணையின்றி படுகொலை செய்ய இராணுவச் சட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளார்.

குறிப்பாக சங்கிலித்தொடர் போன்ற கட்டளையகங்களின் அந்தஸ்துக்கு இப்போது மேலுயர்த்தப்பட்டுள்ள சிறப்புப்படை பிரிவுகளுக்கு ட்ரம்ப் ஒரு முறையீடு செய்துள்ளார். ஈராக் போர் குற்றங்களுக்காக கடற்படை பிரிவின் உறுப்பினர் Eddie Gallagher மீதான இராணுவ நீதிமன்ற விசாரணையில் கடந்தாண்டு அவர் ஆக்ரோஷமாக குறுக்கிட்டு, “நாம் நமது ஆட்களை கொல்லும் எந்திரங்களாக பயிற்றுவிக்கிறோம், பின்னர் அவர்கள் கொல்லும் போது அவர்கள் வழக்கில் இழுக்கிறோம்,” என்று எதிர்த்து நின்றார்.

தேர்தலுக்கு வெறும் ஐந்து நாட்களுக்கு முன்னர் ட்ரம்ப் அவர் பிரச்சாரத்தை நிறைவு செய்கையில், அவர் சிறப்பு படை துருப்புகள் மற்றும் அவற்றின் தளபதிகளுடன் மூடிய கதவுக்குப் பின்னால் நடந்த கூட்டங்களுக்காக ஃபோர்ட் பிராங் சென்றார். அடுத்தடுத்த சம்பவங்களைக் கொண்டு பார்க்கையில், அங்கே நிலைநிறுத்தப்பட்டுள்ள இராணுவப் படைப்பிரிவுகளுக்குள்ளும், அவற்றின் தளபதிகள் மத்தியிலும், அவருக்கான ஆதரவு மட்டத்தை மதிப்பிடுவதும் மற்றும் தேர்தலைக் களவாடி ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான அவரின் திட்டங்களுக்கு வெடிப்பார்ந்த எதிர்ப்பு ஆயுதங்களைக் கொண்டு விடையிறுப்பதற்கான திட்டங்களை விவாதிப்பதுமே அந்த பயணத்தின் நோக்கமாக இருந்திருக்கும் என்று நம்புவதற்கு அங்கே எல்லா காரணங்களும் உள்ளன.

ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற தந்திரோபாயங்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி நிர்வாகங்கள் இரண்டின் கீழும் எண்ணற்ற முறை வெளிநாடுகளில் ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளன. அமெரிக்க ஆதரவிலான ஆட்சிக்கவிழ்ப்பு சதிகளை நியாயப்படுத்தவும், ஜனாதிபதிகளைப் பதவியிலிருந்து நீக்கவும், ஹோண்டுராஸ், பொலிவியா மற்றும் வெனிசுவேலாவில் இருந்து உக்ரேன் மற்றும் ஜோர்ஜியா வரையில் "வண்ணப் புரட்சிகளை" தூண்டிவிடவும் தேர்தல் மோசடி என்ற இட்டுக்கட்டப்பட்ட வாதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

எல்லாவற்றுக்கும் மேலாக மலைப்பூட்டும் சமூக சமத்துவமின்மை மட்டங்களால் குணாம்சப்பட்டுள்ள மற்றும் கோவிட்-19 தொற்றுநோயாலும் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் வேலைக்குத் திரும்ப செய்வதற்கான கொள்கை, மனிதப்படுகொலை கொள்கையான "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கை ஆகியவற்றால் தீவிரப்படுத்தப்பட்டுள்ள தீர்க்கவியலாத பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி நிலைமைகளின் கீழ், இப்போது அதே வகைமுறைகள் "உள்நாட்டில்" கொண்டு வரப்பட்டு வருகிறது.

ட்ரம்பின் தந்திரங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து ஜனநாயகக் கட்சிக்கு நன்கு தெரியும். சந்தேகத்திற்கு இடமின்றி ட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு சதி திட்டத்திற்கு இராணுவத்தின் நிலைப்பாட்டை மதிப்பீடு செய்வதற்காக, அங்கே பைடெனின் இடைக்கால குழுவுக்கும் பென்டகனுக்கும் இடையே தொடர்ச்சியான பல்வேறு தொடர்புகள் உள்ளன. இராணுவ அதிகாரிகள் மத்தியில் பரந்த தொடர்புகளைக் கொண்டுள்ள ஓய்வு பெற்ற கடற்படை பிரிவின் தளபதியும் ட்ரம்பின் முன்னாள் பாதுகாப்புத்துறை செயலருமான ஜேம்ஸ் மாத்தீஸிற்கும் பைடென் முகாமுக்கும் இடையே நிலவும் பரவலாக செய்திகளில் குறிப்பிடப்பட்ட விவாதங்கள், வெறுமனே பெருங்குவியலில் ஒரு துளி தான்.

முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா புதன்கிழமை இரவு கூறுகையில், தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ள ட்ரம்ப் விட்டுக்கொடுக்காமல் மறுப்பதற்கு விடையிறுப்பாக, “அங்கிருந்து அவர்களை வெளியேற்ற நாம் எப்போது வேண்டுமானாலும் கடற்படை SEAL களை அனுப்பலாமென நினைக்கிறேன்,” என்றார். இந்த கருத்து ஊடகங்களால் ஒரு நகைச்சுவையாக முன்வைக்கப்பட்டாலும், இறுதி பகுப்பாய்வில், ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்பைப் பதிவியிலிருந்து நீக்க மக்கள் எதிர்ப்பைச் சார்ந்திருக்கவில்லை மாறாக இராணுவத்தைச் சார்ந்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகிறது. இதுபோன்றவொரு முடிவு இராணுவமே அமெரிக்க அரசியலைத் தீர்மானிப்பதாக ஆக்கும்.

ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதி மற்றும் சர்வாதிகார அச்சுறுத்தலுக்கு அப்பாற்பட்டு, பைடெனும் ஜனநாயகக் கட்சியும் ட்ரம்ப் மற்றும் அவரின் சக-சதிகாரர்களுக்கு எதிராக அடிமட்டத்திலிருந்து மக்கள் போராட்டமும் பெருந்திரளான எதிர்ப்பும் வெடிக்குமென அஞ்சுகின்றனர். ட்ரம்புடன் அவர்களுக்கு என்னதான் தந்திரோபாய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவர்கள் வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

தொழிலாள வர்க்கம், ட்ரம்ப் வெள்ளை மாளிகை மற்றும் அதன் இராணுவ கூட்டாளிகளின் சூழ்ச்சிகளை எதிர்த்து, வர்க்க போராட்ட அணுகுமுறைகள் மற்றும் சமூகத்தின் சோசலிச மாற்றத்திற்கான போராட்டம் மூலமாக, இந்த முன்நிகழ்ந்திராத நெருக்கடியில் ஒரு சுயாதீனமான சமூக அரசியல் சக்தியாக தலையீடு செய்ய வேண்டும்.

Bill Van Auken