இந்தியா: கர்நாடகா கல்லூரி ஊழியர்கள் நிலுவை ஊதியத்தை வழங்கக்கோரி வேலைநிறுத்தப் போராட்டம்; தமிழ்நாடு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர்கள் போராட்டங்கள்: ஆசியா

1 December 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்தியா: கர்நாடகா பொறியியல் கல்லூரி ஊழியர்கள் வழங்கப்படாத நிலுவை ஊதியத்தை வழங்கக்கோரி வேலைநிறுத்தப் போராட்டம்

நவம்பர் 12 அன்று மூன்றுமாதமாக வழங்கப்படாத ஊதியத்தை வழங்கக்கோரி கர்நாடகா மாநிலம், மைசூர் இல் இருக்கும் ஸ்ரீ ஜெயச்சாமராஜேந்திர பொறியியல் கல்லூரியின் கல்வியாளர்கள் மற்றும் கல்வியாளர்களல்லாத ஊழியர்கள் ஆன்லைன் வகுப்புகளையும் மற்றும் அதோடு தொடர்புடைய பணிகளையும் செய்யாமல் வெளிநடப்பு போராட்டத்தை மேற்கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல்லூரிக்கு வெளியே உட்கார்ந்து எதிர்ப்பு போராட்டத்தை நடத்தினார்கள். அவர்களுடையை நடவடிக்கை நவம்பர் 6 இலிருந்து தொடங்கப்பட்ட ஒரு தொகை போராட்டத்திற்குப் பின்னர் வந்திருக்கிறது.

ஊதியத்தை வழங்க கல்லூரி ஒப்புக்கொண்ட 15 சதவீதத்தை வழங்கியிருக்கிறது ஆனால் மாநில அரசாங்கம் அதன் 85 சதவீத பகுதியை இன்னும் வழங்கவில்லை என்று ஊழியர்கள் கூறினார்கள். வழங்கப்படாமலிருக்கும் நிலுவை ஊதியங்களை உடனடியாக வழங்கவேண்டுமென அவர்கள் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

தமிழ்நாட்டில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் போனஸ் தொகையை அதிகரிக்க கோருகிறார்கள்

நீலகிரி மாவட்டத்திலுள்ள பன்டலூரில் இருக்கும் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தின் (Tantea) கிட்டத்தட்ட 500 தொழிலாளர்கள் நவம்பர் 11 அன்று அவர்களுடைய போனஸ் தொகையினை 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்தவேண்டும் என கோரி ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

அபோட்ஸ்லி தேயிலைத் தோட்டத் தொழிலாளி wsws

கடந்த நான்கு மாதத்தில் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் 100 மில்லியன் ரூபா (1.34 அமெரிக்க டாலர்) உபரி வருவாய் ஈட்டியிருக்கிறார்கள் என்று போராட்டத்திலீடுபட்ட தொழிலாளர்கள் குறிப்பிட்டனர். ஒரு தொழிலாளர்கள் குழு குன்னூரிலிருக்கும் நிறுவனத்தின் தலைமையலுவலகத்தில் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தின் நிர்வாக இயக்குநரிடம் ஒரு மனுவை அளித்துள்ளனர்.

அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் இந்தியாவின் கருப்பு தேயிலை உற்பத்தியில் மிகப்பெரும் உற்பத்தியாளராக இருக்கிறது. அது 250 அலுவலக பணியாளர்கள் உட்பட 5000 தொழிலாளர்களை பணியில் அமர்த்தியிருக்கிறது மற்றும் கோயம்புத்தூரில் 900 ஹெக்டர்கள் உட்பட 4,100 ஹெக்டர்கள் தேயிலைத் தோட்டங்களை சொந்தமாக வைத்திருக்கிறது.

தெலுங்கான ஆடைத்தொழில் தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதியத்தை கோருகிறார்கள்

இந்தியா டிசைன்ஸ் கார்மென்ட் நிறுவனம் மற்றும் நிஷா டிசைன்ஸ் கார்மென்ட் ஆலைகளிலிருந்து சுமார் 4,000 ஆடைத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் நவம்பர் 12 இலிருந்து குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கக் கோரி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். தெலுங்கான மாநிலத்தின் தொழிலாளர்களின் சராசரி சம்பளம் ஒரு மாதத்திற்கு சுமார் 5,000 ரூபாயாக (67 அமெரிக்க டாலர்) இருக்கிறது.

நவம்பர் 14 அன்று தொழிலாளர்களுக்கான இணை ஆணையர் தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடனும் மற்றும் நிர்வாகத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆடைத் தொழில் நிறுவனங்கள் வரும் மூன்று மாதங்களுக்கு சம்பளத்தை உயர்த்தப்போவதில்லை என்று கூறியதற்குப் பின்னர் பேச்சுவார்த்தைகள் முறிந்து போயின.

சண்டீகர் மருத்துவ துப்புரவுத் தொழிலாளர்கள் பண்டிகைக்கான போனஸ் கோருகிறார்கள்

திங்களன்று ஹரியானா மாநிலத்தின் சண்டீகரில் இருக்கும் அரசாங்க மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்கள் இந்த ஆண்டுக்கான பண்டிகை போனஸ் வழங்கப்படாததைக் கண்டித்து மருத்துவமனை வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். பத்தாண்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு வருடமும் தங்களுக்கு போனஸ் தொகைகள் வழங்கப்பட்டுவருவதாக தொழிலாளர்கள் கூறினார்கள்.

பங்களாதேஷ் சணல் ஆலை தொழிலாளர்கள் எதிர்ப்பு போராட்டம்

பணியிழந்த சணல் ஆலைத் தொழிலாளர்கள் அரசுக்கு சொந்தமான சணல் ஆலைகளை மீண்டும் திறக்க வலியுறுத்தி புதன் கிழமை மதியம் குல்னா மற்றும் ஜெசோர் சணல் தொழிற்துறைப் பகுதிகளில் ஒரு மணிநேரம் நீண்ட பேரணி போராட்டத்தை நடத்தினர். அரசாங்கம் யூலையில் அரசுக்கு சொந்தமான 25 சணல் ஆலைகளை அவைகள் நட்டத்தில் இயங்குவதாக கூறி மூடிவிட்டது. சுமார் 50,000 தொழிலாளர்கள் ஒரு இரவில் வேலையிழந்திருப்பதுடன் ஆயிரக்கணக்கான சணல் பயிரிடும் விவசாயிகள் எந்தவித வருமானமும் இன்றி கைவிடப்பட்டிருக்கின்றனர்.

ஆலைகள் கட்டாயம் நவீனமயப்படுத்தவேண்டும், உற்பத்தி செலவுக் குறைப்பு மற்றும் பங்களாதேஷ் அரசியலமைப்பு, தேசிய தொழிலாளர் கொள்கை மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு மாநாடுகளில் தீர்மானிக்கப்பட்டபடி அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச சம்பளத்தை வழங்கவேண்டும் என்று புதன்கிழமையன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பாட் சூதா பாஸ்ட்ரோகல் ஸ்ராமிக் கர்மோகாரி சோங்கிராம் பரிஷத் விளக்கினார்.

சணல் ஆலைத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள், ஆலைகள் மூடப்பட்டதிலிருந்து தொடர்ச்சியாக ஆர்ப்பாட்ட போராட்டங்களை நடத்திவருகிறார்கள். அக்டோபர் 19 அன்று குல்னா - ஜெசோர் நெடுஞ்சாலையில் நடந்த அவர்களுடைய போராட்டத்தைத் தடுப்பதற்காக காவல்துறையினர் தடியடி நடத்தியதுடன் கண்ணீர் புகைக் குண்டுகளையும் பயன்படுத்தியதில் நூற்றுக்கணக்கான சணல்ஆலைத் தொழிலாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் படுகாயமடைந்தனர். ஆலைகளை திறக்கும்வரை போராட்டத்தை நடத்தப்போவதாக தொழிலாளர்கள் சபதம் எடுத்துள்ளார்கள்.

பங்களாதேஷ் சுகாதாரப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக எச்சரிக்கிறார்கள்

புதன்கிழமையன்று ராஜ்ஷாஹி பத்திரிகையாளர்கள் சங்கத்தில் ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்களாதேஷ் சுகாதார உதவியாளர்கள் சங்கம், அவர்களுடைய நீண்ட காலகோரிக்கைகளை நிறைவேற்றபடவில்லையென்றால் நவம்பர் 26 அன்று ராஜ்ஷாஹி பகுதியில் அதன் உறுப்பினர்கள் ஒரு காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கப்போவதாக அறிவித்திருக்கிறது.

அவர்களின் ஊதிய வாரிய நிலையை 16 முதல் 11 வரை மேம்படுத்துதல், சுகாதார தொழிலாளர்கள் வேலையை ஒரு தொழில்நுட்ப பதவியாக அங்கீகரித்தல், அவர்களுடைய அடிப்படை சம்பளப் பிரிவில் மேலதிகமாக 30 சதவீதத்தை இடர் அல்லது பயண தொகையாக்குதல், ஒவ்வொரு 6,500 மக்களுக்கு ஒரு சுகாதார உதவியாளர்ரை நியமித்தல் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் தெரிவு செய்யப்படுவதல் ஒரு 10 சதவீத வாரிய ஒதுக்கினை அறிமுகம் செய்தல் ஆகியன அவர்களின் கோரிக்கைகளாக இருக்கின்றன.

சுகாதார பார்வையாளர்கள், சுகாதார துணை பார்வையாளர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்கள் உதாசீனப்படுத்தப்படுகிறார்கள் மற்றும் 1998 இல் அவர்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பிரதமர் ஷேக் ஹசினா உறுதியளித்தபோதிலும் எதுவுமே நடக்கவில்லை என்று சங்கத்தின் அலுவலர்கள் கூறினார்கள்.