இலங்கையில் தாதிகள் மற்றும் கல்வியாளர்கள் ஆர்ப்பாட்டம்; தமிழ்நாட்டில் வாகன உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள் தொழிற்சங்க உரிமைக்காக வேலைநிறுத்தப் போராட்டம்

தொழிலாளர்கள் போராட்டங்கள்: ஆசியா

12 December 2020

4 December 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இலங்கை சுகாதார ஊழியர்கள் நிரந்தர வேலை கோரி தேசிய அளவில் ஆர்ப்பாட்டங்கள்

டிசம்பர் 2 அன்று நூற்றுக்கணக்கான இளநிலை பொறுப்புகளிலிருக்கும் சுகாதாரத் ஊழியர்கள் அனைத்து தற்காலிக ஊழியர்களுக்கும் நிரந்தர வேலை மற்றும் விபத்துக் கொடுப்பனவு மற்றும் போக்குவரத்து வசதிகள் போன்றவற்றை மற்ற மருத்துவமனை ஊழியர்களுக்கு ஏற்ப இளநிலை ஊழியர்களுக்கும் வழங்கவேண்டும் போன்ற கோரிக்கைகளுடன் ஏழு பிரதான அரசு மருத்துவமனைகளுக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

தற்காலிக பணிபுரியும் ஊழியர்கள் ஒன்பது மாதங்களை அவர்கள் முடித்திருப்பதால் இந்த ஊழியர்களை நிரந்தரமாக்கும் நடவடிக்கைக்கு எந்த முடிவையும் அரசாங்கம் எடுக்கவில்லை என்று கூட்டு சுகாதார தொழிலாளர்களின் சங்கம் கூறியுள்ளது.

வைரஸ் சிகிச்சையில் ஈடுபட்டிருக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் தரமான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஒரு கோவிட்-19 ஆபத்துக்கால கொடுப்பனவு, சிறப்பாக கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக வரவு செலவு திட்டத்தில் போதுமான நிதி ஒதுக்க கோரி கொழும்பு தேசிய மருத்துவமனை, கண்டி மருத்துவமனை மற்றும் ஜெயவர்த்தனபுர மருத்துவமனை உட்பட நாட்டின் பிரதான மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கான சுகாதார ஊழியர்கள் நவம்பர் 25-26 தேதிகளில் பதாகைகளை ஏந்தி போராட்டத்தை மேற்கொண்டதைத் தொடர்ந்து இந்த போராட்டங்கள் முன்னிலைக்கு வந்திருக்கிறது.

இலங்கை ஆசிரியர்கள் சம்பள ஏற்றத் தாழ்வுகள் குறித்து ஆர்ப்பாட்டம்

டிசம்பர் 1 அன்று கொழும்பு பாராளுமன்றத்திற்கு அருகில் தீவு முழுவதும் உள்ள பள்ளிகளிலிருந்து சுமார் 100 ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் ஒரு மெளன போராட்ட ஆர்ப்பாட்டதை மேற்கொண்டனர். சென்ற வரவு செலவு திட்டத்தில் பத்தாண்டுகளாக இருக்கும் சம்பள ஏற்றத் தாழ்வு பிரச்சனைகள் பற்றி குறிப்பிடுவதற்கு அரசாங்கம் தவறியிருப்பதை கண்டித்து ஆசிரியர்-தலைமையாசிரியர் தொழிற்சங்க அமைப்பின் உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பி போராடினர். கோவிட்-19 நோய்த் தொற்று பரவும் சமயத்தில் பாதுகாப்பில்லாமல் பள்ளிகளைத் திறப்பதையும் எதிர்த்து கல்வியாளர்கள் சத்தமாக முழக்கமிட்டனர்..

இந்தியா: தமிழ்நாட்டில் மேக்னா காஸ்மா வேலைநிறுத்தப் போராட்டம் நான்காவது மாதம்

ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடம் தொழிற்துறைப் பகுதியில் இருக்கும் மேக்னா காஸ்மா சர்வதேச வாகன உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து 50 க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்கள் குற்றம் சுமத்தப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்ட 18 தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்த்துகொள்ளவும் மற்றும் அவர்களுடைய புதிதாக தொடங்கப்பட்ட தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கவும் கோரி வேலைநிறுத்தப் போராட்டம் செப்டம்பர் 17 இலிருந்து நடைபெற்றுவருகிறது.

மேக்னா 350 ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் 200 பயிற்சியாளர்களுடன் வெறும் 75 நிரந்தரத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தி ஒரு மிகப்பெரிய சுரண்டலை எளிதாக்க ஒரு பல அடுக்கு தொழிலாளர்கள் பிரிவை பராமரிக்கிறது.

இந்த வருடத் தொடக்கத்தில் தொழிலாளர்கள் குழுவொன்று ஏற்கனவே நிறுவனத்தின் சார்பாக இருக்கும் இந்திய தேசிய காங்கிரஸ் தொழிற் சங்கத்துக்கு எதிராக (Indian National Trade Union Congress - INTUC) ஒரு புதிய தொழிற்சங்கத்தை உருவாக்கியிருந்தார்கள். இந்த புதிய தொழிற்சங்கத்தை உருவாக்கிய போர்க்குணமிக்க தொழிலாளர்களுக்கு எதிராக ஒரு தண்டிக்கும் நடவடிக்கையை கட்டவழ்த்துவிடுவதன் மூலம் நிர்வாகம் பதிலிறுத்தது. இது ஆறு தொழிலாளர்களை பணியிடை நீக்கம் செய்ததுடன் மேலும் மற்ற 12 பேரை அதன் பூனேவில் இருக்கும் அதன் தொழிற்சாலைக்கு தன்னிச்சையாக மாற்ற உத்தரவிட்டது. வலுக்கட்டாய பணிமாற்றத்தை ஏற்றுக்கொள்வதற்கு தொழிலாளர்கள் மறுத்ததால் அவர்களும் வேலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்..

29 நாடுகளில் 316 உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் 84 தயாரிப்பு மேம்பாடு, பொறியியல் மற்றும் விற்பனை மையங்களைக் கொண்ட கனடாவை சேர்ந்த பூகோள வாகன உதிரிப்பாகங்களை வழங்கும் மேக்னா இன்டர்நெஷனலின் ஒரு பகுதியாக மேக்னா காஸ்மா இருக்கிறது.

ஆந்திர பிரதேச ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தர வேலைக்கான கோரிக்கை வைக்கிறார்கள்

விசாகப் பட்டினத்தின் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கோவிட்-19 பணிக்காக ஒப்பந்தரீதியில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் பெருநகர விசாகப்பட்டினம் நகராட்சி அலுவலகத்திற்கு அருகில் நவம்பர் 30 அன்று நிரந்தர வேலை கோரி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

கோவிட்-19 பாதிப்புகள் குறைந்துவிட்டதாகவும் மேலும் அவர்களுடைய ஒப்பந்த காலம் முடிந்ததும் நீக்கிவிடப்போவதாகவும் அதிகாரிகள் கூறியிருப்பதாக செவிலியர்கள் கூறியுள்ளனர். அரசாங்கத்தால் உறுதியளிக்கப்பட்ட சிறப்பு உதவித் தொகை தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று அந்த செவிலியர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

பாகிஸ்தான்: உருக்காலைத் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக போராட்டம் வெடிக்கிறது

செலவுக் குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அரசு நடத்தும் உருக்காலையில் உள்ள 9,000 தொழிலாளர்களில் 4,544 பேரை அரசாங்கம் பணிநீக்கம் செய்த பிறகு இந்த வாரம் கராச்சியில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

பணியிழந்த தொழிலாளர்கள் புதன் கிழமையன்று பத்து மணிநேரத்திற்கு மேலாக ரயில் பாதை மறியலில் ஈடுபட்டார்கள் அதனால் தொலைதூர தொடர்வண்டிகள் கால அட்டவணை நேரத்தை மாற்றவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டமானது நவம்பர் 27-28 தேதிகளில் தேசிய நெடுஞ்சாலை இரண்டு பக்க போக்குவரத்துக்களை தடுத்து இரண்டு நாட்கள் நடத்திய போராட்டங்களுக்குப் பிறகு வந்திருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒரு தொழிலாளியின் பிணத்தை பார்வைக்கு வைத்திருந்தனர். அவருடைய மகனின் பணிநீக்க அறிவிப்பைப் பார்த்த பிறகு அவர் இறந்துவிட்டதாக அவர்கள் கூறினார்கள்.

உருக்காலைகளை புத்துயிரூட்டுவதற்கும் மற்றும் கோவிட்-19 தொற்றநோய் காலத்தில் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யப்போவதில்லை என்றும் முன்னர் அளித்து உறுதிகளை மீறிவிட்டதாக அரசாங்கத்தை தொழிலாளர்கள் விமர்சித்தார்கள். பாகிஸ்தான் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்களில் மற்றொரு சீற்றத்தை சந்தித்துவருகிறது.

அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தால் பட்டியலிடப்பட்ட முதல் நிலையிலுள்ள உருக்காலைகளை தனியார் மயப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு தொடராக இத்தகைய பணிநீக்கங்கள் இருக்கின்றன. சிந்து மாகாண அரசாங்கத்துடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு அனைத்து தொழிலாளர்கள் சங்க குழு ஆர்ப்பாட்டத்தை திரும்பப் பெற்றுக்கொண்டுவிட்டன. அரசாங்கத்தின் முடிவை எதிர்த்துப் போராடுவதற்கு சட்டபூர்வமான நடவடிக்கையை எடுக்கும் என்று அவர்கள் கூறினார்கள்.

இஸ்லாமாபாத் மெட்ரோ பேருந்து சேவைத் தொழிலார்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

மெட்ரோ பேருந்து சேவைத் தொழிலாளர்கள் மூன்று மாதங்களாக வழங்கப்படாமலிருக்கும் நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரி நவம்பர் 26 அன்று இஸ்லாமாபாத், ராவல்பிண்டி மற்றும் லாகூருக்கு இடையிலான போக்குவரத்து சேவைகளை நிறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அரசு நடத்தும் பேருந்துகள் மூலம் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டிக்கு இடையில் ஒவ்வொரு நாளும் 1,35,000 க்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்கின்றனர்.

அவர்களுடைய ஊதியங்கள் மாத அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட தேதியில் வழங்கப்படவேண்டும், கோவிட்-19 முடக்க காலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட ஒரு 15 சதவீத சம்பளத்தை மீண்டும் திருப்பியளிக்கவேண்டும் மற்றும் ஊதியத்தில் ஒரு 20 சதவீத உயர்வு வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் ஓட்டுநர்கள் வைத்துள்ளார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் நிர்வாகத்தால் பழிவாங்ககப்படமாட்டாது என்ற உத்தரவாதத்தையும் அவர்கள் கோரியுள்ளார்கள்.

ஒரு மாத ஊதியத்தை வெள்ளிக்கிழமையும், மற்றது மாதத்தின் வருகின்ற வாரத்திலும் மற்றும் மூன்று இரண்டு வாரங்களில் மற்றவைகளை வழங்குவதற்கு அதிகாரிகள் ஒப்புக்கொண்டபிறகு இரண்டாம் நாள் தொழிலாளர்கள் அவர்களுடைய வேலைநிறுத்தப் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.

ஹாங்காங் கேபிள் டிவி செய்தி நெட்வொர்க் இல் மிகப்பெருளவில் பணிநீக்கங்கள்

செவ்வாய்க்கிழமையன்று ஹாங்காங் இன் டிவி செய்தி நிலையங்களின் ஒன்றான ஐ-கேபிள் நிலையத்தில் திடீரென 100 ஃகும் அதிகமான தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். பணிநீக்கம் செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை வளாகத்தைவிட்டு உடனடியாக வெளியேற்றுவதற்கு காவலர்கள் வலுக்கட்டாயப்படுத்தியுள்ளார்கள். போராட்டத்தில் தணிக்கை ஆசிரியர்கள் மற்றும் மூத்த தணிக்கை ஆசிரியர்கள் இராஜினாமா செய்வதற்கு இந்த பணிநீக்கங்கள் தூண்டுதலாக இருந்தன.

இந்த பணிநீக்கங்கள் ஒரு மறுகட்டமைப்புகாகத்தான் என்று நிர்வாகம் கூறியிருக்கிற அதேவேளை ஒட்டு மொத்த “இரு பக்க கூர் செய்தி” குழுவை நீக்கியதற்கு அரசியல் காரணங்கள் இருப்பதாக ஊடகவியலாளர்கள் சங்கம் கூறியிருக்கிறது. பணிநீக்கங்கள் பற்றி செய்திப் பிரிவு தலைமையிடம் கூட கலந்துரையாடப்படவில்லை என்று ஐ-கேபிள் உள்ளிருந்து வந்த தகவல்கள் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளன. மீதமிருக்கும் பணியாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுக்குமிடையே பதட்டங்கள் தோன்றியிருக்கின்றன.

2017இல் கைமாறப்பட்ட, தனியாருக்கு சொந்தமான ஐ-கேபிள் அதன் செய்திப் பிரிவுக்காக பெருமளவில் மதிக்கப்பட்டிருந்தது மேலும் அது அரசியல் செய்திகளை வரலாற்று ரீதியாக பேசியுள்ளதுடன் அதன் மற்ற டிவி போட்டியாளர்களால் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டும் இருந்தது.