Asia

ட்ரம்ப் "அக்டோபர் ஆச்சரியத்திற்கு" தயாரிப்பு செய்து வருகிறாரா?

Bill Van Auken, 1 October 2020

யதார்த்தத்தைக் கொண்டு பார்க்கையில், ரஷ்யா அல்லது சீனாவுக்கு எதிராக அமெரிக்க இராணுவ மோதல் ஏற்படும் ஒரு சம்பவத்தில், ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்பின் போர் முயற்சிகளுக்குப் பின்னால் தான் அவர்களின் ஆதரவை வழங்குவார்கள்

மார்க்கோஸ் பிலிப்பைன்ஸில் இராணுவச் சட்டத்தை அறிவித்து நாற்பத்தெட்டு ஆண்டுகள்

By John Malvar, 28 September 2020

நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் மார்க்கோஸ் சர்வாதிகாரத்தை திணித்ததன் படிப்பினைகள் தெளிவாக உள்ளன. அவை சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாகும்

இந்தியா-சீனா எல்லை மோதல் தொடர்ந்து கத்தி முனையில் உள்ளது

By Jordan Shilton and Keith Jones, 15 September 2020

அமெரிக்க ஏகாதிபத்தியம், எப்போதும்போல, மிகவும் ஆத்திரமூட்டும் வகையிலான மற்றும் ஸ்திரமற்ற பாத்திரத்தை வகிக்கும் நிலையில், அதன் ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய போட்டியாளர்கள் தொலைவில் பின் தங்கியிருக்கவில்லை

தொழிலாளர்கள் போராட்டங்கள்: ஆசியா

29 August 2020

உலகெங்கும் உள்ள தொழிலாளர் போராட்டங்கள் பற்றி பங்களிக்குமாறு உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களையும் எமது வாசகர்களையும் அழைக்கிறது

காஷ்மீருக்கு எதிரான அரசியலமைப்பு சதித்திட்டத்தின் ஒரு வருடத்திற்கு பின்னர் மோடி அரசாங்கம் அடக்குமுறையை தீவிரப்படுத்துகிறது

By Kranti Kumara and Keith Jones, 19 August 2020

இந்திய கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரை இந்திய யூனியனுக்குள் முழுமையாக ஒருங்கிணைந்தது மற்றும் அதனை பிரித்தது ஆகியவையும் கூட சீனாவுக்கு எதிராக குறி வைக்கப்பட்டவை

கோவிட்-19 க்கு நேபாள அரசாங்கத்தின் எதிர்வினை குறித்து அதிகரிக்கும் மக்கள் கோபம்

By Rohantha De Silva, 13 August 2020

நேபாளத்தின் பொருளாதாரம் கிட்டத்தட்ட முற்றிலும் சுற்றுலா மற்றும் வெளிநாட்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தை நம்பியுள்ளது. இந்த மூலங்களிலிருந்து வருவாய் அனைத்தும் சரிந்துவிட்டது

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான அணுகுண்டு வீச்சுக்குப் பிந்தைய 75 ஆண்டுகள்

Bill Van Auken, 11 August 2020

இந்த குற்றகர நடவடிக்கையின் நினைவாண்டு ஏதேனும் குறிப்பிடத்தக்க உத்தியோகபூர்வ நினைவுகூர்தலைப் பெறும் என்பதற்கு அங்கே எந்த அறிகுறியும் இல்லை. இருப்பினும் அமெரிக்க ஏகாதிபத்தியம் அமெரிக்க மற்றும் உலக மக்களின் முதுகுக்குப் பின்னால் ஒரேசீராக பாரியளவில் அணுஆயுத தளவாடங்களைக் கட்டமைத்து, ஓர் ஆக்ரோஷமான அணுஆயுத போர் கோட்பாட்டைப் பின்தொடர்கின்ற நிலையில், அதன் முக்கியத்துவம் ஒருபோதும் இல்லாதளவிற்கு மிக பெரியளவில் உள்ளது

வீகர் துஷ்பிரயோகங்கள் குறித்து சீனா மீது அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கிறது

By Peter Symonds, 8 August 2020

வாஷிங்டனின் பலத்த கூக்குரல், வீகர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவோ, அல்லது அதே விடயத்திற்காக ஹாங்காங் மற்றும் திபெத் மக்களை பாதுகாக்கவோ எதையும் செய்யவில்லை

அமெரிக்கா பெய்ஜிங்கில் ஆட்சி-மாற்ற கொள்கையை ஏற்கிறது

Peter Symonds, 30 July 2020

பொம்பியோ வெறுமனே ட்ரம்ப் நிர்வாகத்திற்காக மட்டும் பேசவில்லை, மாறாக அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் செல்வாக்கான பிரிவுகளுக்காக பேசுகிறார்

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் சீனாவுடனான மோதலுக்கான நிகழ்வை கட்டமைக்கிறார்

By Peter Symonds, 26 July 2020

பொம்பியோ சூசகமாக, ஒரு நீடித்த புதிய பனிப்போர் தொடங்காது, ஆனால் பெய்ஜிங்கில் ஆட்சி மாற்றத்தை நோக்கமாக கொண்ட ஒரு கொள்கை இருக்கும் என்பதை அறிவிக்கிறார்

தென் சீனக் கடலில் இரண்டு அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் போர் ஒத்திகையில் ஈடுபடுகின்றன

By Peter Symonds, 8 July 2020

யதார்த்தத்தில், தென் சீனக் கடலிலும் மற்றும் சீனப் பெருநிலத்திற்கு அருகாமையில் உள்ள ஏனைய கடல் பகுதிகளிலும் அமெரிக்க கடற்படை செயல்பாடுகளுக்கும் சீனாவின் அண்டை நாடுகளைப் பாதுகாப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை மாறாக அவை போருக்கான அமெரிக்க தயாரிப்புகளுடன் நெருக்கமாக பிணைந்துள்ளன

மியான்மார் மாணிக்கக் கல் சுரங்கத்தில் நடந்த விபத்தில் 170 க்கும் மேலானவர்கள் பலி

By Oscar Grenfell, 8 July 2020

முன்பிருந்த சுரங்கப் பகுதி ஒரு பரந்த ஏரி போல மாறியிருந்த இடத்தில் டசின் கணக்கான உடல்கள் மிதந்து கொண்டிருந்த கொடூரக் காட்சியை மீட்பாளர்கள் எதிர்கொண்டனர்

போர், சமூகப் பேரழிவு, சர்வாதிகாரத்திற்கு எதிராக ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராடுவோம்

இலங்கை பொதுத் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களியுங்கள்

சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) அறிக்கை, 5 July 2020

முதலாளித்துவ எதிர்வினைக்கும் ஜனாதிபதி சர்வாதிகாரத்திற்கான தயாரிப்புகளுக்கும் எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புரட்சிகர தலைமை அவசியமாகும்

கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நடவடிக்கைக்கு!

Statement of the International Committee of the Fourth International, 24 June 2020

தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் முதன்மையானதாக இருந்தாலும் அது ஒரு மருத்துவ பிரச்சினை மட்டுமல்ல. அது எல்லாவற்றிற்கும் மேலாக, சமூக மற்றும் அரசியல் போராட்டத்துடன் தொடர்பானதாகும்

இந்தியாவும் சீனாவும் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிக்கு தொடர்ந்து துருப்புக்கள், ஆயுதங்களை விரைந்து அனுப்புகின்றன

By Keith Jones, 23 June 2020

இந்தியப் பெருங்கடலில் சீனக் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை எதிர்கொள்வதற்காக இந்தியாவின் கடற்படை எச்சரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது

யுத்த பதட்டங்கள் தொடரும் போது இந்தியாவும் சீனாவும் கத்தி விளிம்பில் உள்ளன

By Shuvu Batta and Keith Jones, 20 June 2020

தங்கள் எல்லைப் படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டால் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட மாட்டாது என்று பெய்ஜிங்குடனான பல தசாப்த கால ஒப்பந்தத்தை நிராகரிப்பதை புது தில்லி பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது

அமெரிக்கா இந்திய-சீன மோதலை தூண்டுகிறது, எல்லை மோதலுக்கு சீன “வலியத்தாக்குதலை” குற்றம் சாட்டுகிறது

By Keith Jones, 20 June 2020

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட மற்றும் போட்டி அணுசக்தி சக்திகளுக்கும் இடையில் ஒரு மோதலைத் தூண்டுவது குறித்து ட்ரம்ப் நிர்வாகம் என்ன தான் அடக்கி வைத்திருந்தாலும் இப்போது அது தெளிவாக புறந்தள்ளப்பட்டுள்ளது

ட்ரம்பிற்கு செய்தி அனுப்புவதற்காக தொடர்பு அலுவலகத்தை வட கொரியா தகர்க்கிறது

By Peter Symonds, 19 June 2020

கோவிட்-19 நோய்தொற்றுக்கான பலிகடாவாக சீனாவை மாற்ற முயற்சிப்பது, அத்துடன் அதன் மீது பொருளாதார அபராதங்களை விதிப்பது மற்றும் இந்த பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ கட்டமைப்பை விஸ்தரிப்பது என ஏற்கனவே ட்ரம்ப் நிர்வாகம் சீனவுடனான தீவிரமான மோதலில் ஈடுபட்டுள்ளது

இந்தியா-சீனா எல்லை மோதலில் டஜன் கணக்கானவர்கள் இறக்கின்றனர்

By Keith Jones, 18 June 2020

1962 ல் இரு நாடுகளும் சிறிய எல்லைப் போரை நடத்தியதற்கு பின்னர் இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையிலான மிகக் கடுமையான எல்லை மோதல் டஜன் கணக்கான உயிரிழப்புகளுக்கு வழிவகுத்ததாகக் கூறப்படுகிறது

இந்திய அனல்மின் நிலைய வெடிப்பில் நான்கு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்

By Arun Kumar, 8 June 2020

தென்னிந்தியாவில் உள்ள நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட பிரமாண்டமான வெடிப்பு நான்கு தொழிலாளர்களின் உயிரை பறித்தது

வறிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தமது நாடுகளுக்கு திரும்ப அழைக்கும்படி இந்தியா மற்றும் பிற தெற்காசிய நாடுகளை வளைகுடா நாடுகள் கட்டாயப்படுத்துகின்றன

By Shuvu Batta, 27 May 2020

நோய்தொற்று வெடிப்பதற்கு முன்னர், தெற்காசியா, பிலிப்பைன்ஸ், எகிப்து, பாலஸ்தீனம், மத்திய கிழக்கின் பிற பகுதிகள் மற்றும் கிழக்கு ஆபிரிக்காவிலிருந்து 23 மில்லியன் அல்லது அதற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வளைகுடா நாடுகளில் இருந்தனர்

மோடி “சமூக நோய் எதிர்ப்பு சக்தியை” ஊக்குவிக்கிறார், முதலீட்டாளர் சார்பு சீர்திருத்தங்களில் “பெரிய முன்னேற்றம்” என சூளுரைக்கிறார்

By Wasantha Rupasinghe and Keith Jones, 20 May 2020

பொருளாதாரத்துக்கு புத்துயிர் அளிப்பதன் பெயரில், பாஐக அரசாங்கம், தொற்றுநோய் மூர்க்கத்தனமாக சீற்றம் கண்டு வரும் நிலையிலும் வேலைக்கு திரும்புவதைக் கட்டாயமாக்க முயன்றுகொண்டிருக்கிறது

மரண எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், வெள்ளை மாளிகை இந்த தொற்றுநோய்க்காக சீனாவைப் பலிக்கடா ஆக்கும் முயற்சிகளை அதிகரிக்கிறது

By Peter Symonds, 19 May 2020

கோவிட்-19 தொற்றுநோய் சம்பந்தமாக பெய்ஜிங்கைப் பலிக்கடா ஆக்குவதை நவார்ரோ சீனாவுடனான வர்த்தகப் போருடனும் மற்றும் அவரின் பாதுகாப்புவாத திட்டநிரலுடனும் நேரடியாக தொடர்புபடுத்துகிறார்

கொவிட்-19 பூட்டுதலின் போது இலங்கை கடற்படையின் விசேட அணிக்கு அமெரிக்கா பயிற்சி அளிக்கிறது

By Vijith Samarasinghe, 7 May 2020

இலங்கை கடற்படை விசேட அணிக்கான அமெரிக்க போர் பயிற்சியானது சீனாவுக்கு எதிராக இந்தோ-பசிபிக் முழுவதும் வாஷிங்டன் மேற்கொள்ளும் இராணுவ தயாரிப்புகளின் ஒரு பகுதியாகும்.

உலக உணவுத் திட்டம் எச்சரிக்கிறது: கோவிட்-19 நோய்தொற்று “விவிலியத்தில் குறிப்பிட்டுள்ள விகிதாசாரங்களின் பஞ்சத்தை” விளைவிக்கும்

By Jean Shaoul, 27 April 2020

ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் செவ்வாயன்று, அவசர நடவடிக்கை மற்றும் நிதி ஒதுக்கீடு இல்லாமல், கோவிட்-19 நோய்தொற்றின் விளைவாக கோடிக்கணக்கானோர் பட்டினியை எதிர்கொள்ள நேரிடும் என்பதுடன், இலட்சக் கணக்கானோர் இறக்கக்கூடும் என்று எச்சரித்தது

அமெரிக்காவின் பிரச்சாரம் COVID-19 க்கு சீனாவை குற்றம்சாட்டும் பொய்களை ஊக்குவிக்கிறது

By Alex Lantier, 25 April 2020

சமீபத்திய நாட்களில், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆளும் வட்டாரங்களிலும் COVID-19 தொற்றுநோய்க்கு சீனா தான் காரணம் என்ற கூற்றை ஊக்குவிக்கும் ஒரு மூர்க்கமான ஊடக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன

தமிழ்நாட்டில் ஏழைகள் மருத்துவ பாதுகாப்பும் நிவாரணமும் இன்றி துன்பப்படும் போது செல்வந்தர்கள் கோடிகளைக் குவித்துக் கொண்டுள்ளனர்

V.Jayasakthi, 23 April 2020

தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள் உட்பட செல்வந்தர்கள் ஆயிரக்கணக்கான கோடிகளை குவித்து வைத்திருக்கும் போது கொரோனா வைரஸைத் தடுப்பதற்கான செலவை தொழிலாள வர்க்கத்தின் முதுகில் சுமத்த நிதி வழங்கும்படி மக்களிடம் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

சிங்கப்பூரில் குடியேறிய தொழிலாளர்களிடையே பாரிய COVID-19 தொற்றுதல்

Gustav Kemper, 23 April 2020

சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் திங்களன்று மட்டும் மதியம் 1,426 புதிய COVID-19 நோய்த்தொற்றுகளைப் பதிவுசெய்தது. அவர்களில் 95% ஆனோர் இந்தியா, பங்களாதேஷ் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பிற நாடுகளைச் சேர்ந்த மனிதாபிமானமற்ற குடியிருப்புகளில் சிக்கியுள்ள தற்காலிக தொழிலாளர்களாவர்.

உலக கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 1.6 மில்லியனைக் கடந்தது

Bryan Dyne, 11 April 2020

சீனாவில் “முன்னர் தெரியாத காரணத்துடன் நிமோனியா” பரவுவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) முதலில் குறிப்பிட்ட நாளிலிருந்து, கொரோனா வைரஸ் நோய்தொற்று பரவ ஆரம்பித்து முதல் நூறு நாட்கள் முடிவடைந்ததை நேற்றைய தினம் குறித்தது

ஏகாதிபத்தியத்துக்கு எதிரான மற்றும் ஈரானில் தொழிலாளர் அதிகாரத்திற்குமான போராட்டம் நூலின் துருக்கிய பதிப்பின் முன்னுரை

Keith Jones, 7 April 2020

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் ஈரானில் தொழிலாளர் அதிகாரத்திற்கு என்ற துருக்கிய மொழி பதிப்பிற்கான முன்னுரையை இங்கே கீழே வெளியிடுகிறோம்

நேபாளம் ஒரு வாரம் கொரொனாவைரஸ் முடக்கத்தை அறிவித்திருக்கிறது

By Rohantha De Silva, 25 March 2020

நேபாள அரசாங்கம் திங்களன்று இரண்டாவது COVID-19 தொற்றுநோய் பாதிக்கப்பட்டவரை சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்ததன் பின்னர் நாட்டினை ஒரு வாரம் முடக்குவதாக அறிவித்துள்ளது

போர், சமூகப் பேரழிவு, சர்வாதிகாரத்திற்கு எதிராக ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராடுவோம்

இலங்கை பொதுத் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களியுங்கள்

சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) அறிக்கை, 24 March 2020

முதலாளித்துவ எதிர்வினைக்கும் ஜனாதிபதி சர்வாதிகாரத்திற்கான தயாரிப்புகளுக்கும் எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புரட்சிகர தலைமை அவசியமாகும்

அமெரிக்காவில் கொரொனாவைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 500 ஆக அதிகரிக்கும் அதேவேளை, இத்தாலி பாரிய தனிமைப்படுத்தலைத் தொடங்குகிறது

Benjamin Mateus, 11 March 2020

இத்தாலி தற்போது அதன் வடக்கு பிராந்தியத்தில் பாரிய அடைத்துவைக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளமையால், கொரொனாவைரஸ் காரணமாக 16 மில்லியன் பேர் கட்டாயமாக தனிமைப்படுத்தப்படும் நிலைக்கு ஆளாவர்

இந்தியாவில் வகுப்புவாத பிற்போக்குத்தனத்திற்கு எதிரான போராட்டம் என்பது சோசலிசத்திற்கான போராட்டமாகும்

Keith Jones, 21 December 2019

இந்த சட்டத்தின் மூலம் இந்திய சுதந்திர வரலாற்றில் முதல்முறையாக மதத்தை வரையறையாக கொண்டு குடியுரிமை தீர்மானிக்கப்பட உள்ளது. இது, பிஜேபி மற்றும் அதன் நிழலுலக பாசிசவாத சித்தாந்த அறிவுரையாளர் RSS இன் வெளிப்படையான முக்கிய இலக்கை நடைமுறைப்படுத்துவதை நோக்கிய ஒரு முக்கிய படியாகும். அதாவது, இந்தியாவை ஓர் இந்து ராஷ்டிரமாக அல்லது அரசாக மாற்றுவதும், அதில் முஸ்லீம் சிறுபான்மையினர் இந்து மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் மட்டுமே அவர்கள் "சகித்துக் கொள்ளப்படுவர்.”

ஹாங் காங் போராட்டங்களில் இருந்து தொழிலாள வர்க்கத்திற்கான படிப்பினைகள்

Peter Symonds, 26 November 2019

ஒரு புரட்சிகர சோசலிச சர்வதேசியவாத முன்னோக்கை நோக்கியும் ஹாங் காங் மற்றும் சீனா முழுவதிலுமான தொழிலாள வர்க்கத்தை நோக்கியும் ஒரு திருப்பம் இல்லாததால், அந்த போராட்ட இயக்கம் வெளிப்படையாகவே வலதுசாரி, கம்யூனிச-விரோத மற்றும் ஏகாதிபத்திய-சார்பு அமைப்புகள் உட்பட பல்வேறு முதலாளித்துவ-சார்பு கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்குப் பின்னால் தடுக்கப்பட்டு வருகிறது

இந்தியா: திருச்சியில் குழந்தையின் துயர மரணம் பேரழிவு தரும் சமூக நிலைமைகளை அடிக்கோடிட்டு காட்டுகிறது

Yuvan Darwin, 20 November 2019

அக்டோபர் 25ம் தேதி சுஜித் வில்சன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தான், பல்வேறு மீட்பு முயற்சிகள் இருந்தபோதிலும் அங்கு சிக்கிக்கொண்டான், இறுதியாக அவனது துண்டிக்கப்பட்ட மற்றும் மிகவும் சிதைந்த உடல் நான்கு நாட்களுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தியா: 48,000 தெலுங்கானா போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் முக்கிய முடிவு எடுக்க வேண்டிய கட்டத்தை எட்டியுள்ளது

Kranti Kumara, 19 November 2019

TSRTC தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் சம்பளமின்றி மிகுந்த கஷ்டத்தை சகித்துக் கொண்டிருக்கின்ற போதிலும், முதலமைச்சரின் பரந்த பணிநீக்க அச்சுறுத்தலை அவர்கள் மீறி மேலும் முன்னோக்கிச் சென்று கொண்டிருப்பது குறித்து அவர்கள் மீது மிகப்பெரிய அனுதாபமும் மரியாதையும் அங்கு நிலவுகிறது.

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் உயர் இராணுவ அதிகாரி வெற்றி பெற்றார்

K. Ratnayake, 18 November 2019

முன்னாள் இராணுவ கர்னலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் சகோதரருமான கோட்டாபய இராஜபக்ஷ 2005 மற்றும் 2014 க்கு இடையில் இலங்கை பாதுகாப்பு செயலாளராக இருந்தார். 2009 மே மாதம் முடிவடைந்த பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை ஈவிரக்கமின்றி முன்னெடுத்தமைக்காக அவர் இலங்கை ஆளும் உயரடுக்கு, இராணுவம் மற்றும் சிங்கள இனவாதிகளாலும் பாராட்டப்படுபவர்.

முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் கிஸ்ஸிங்கர் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான "பேரழிவுகரமான" மோதல் அபாயத்தைச் சுட்டிக்காட்டுகிறார்

Nick Beams, 16 November 2019

சீனாவுடன் ஒத்திசைந்துபோவதன் மூலமாக அமெரிக்க வெளியுறவு கொள்கை நலன்களைச் சிறந்த முறையில் வைத்திருக்க முடியுமென கண்ட ஒரு போக்கை கிஸ்ஸிங்கர் பிரதிநிதித்துவம் செய்கிறார், இது ஆரம்பத்தில் 1970 களில் முன்னாள் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான ஒத்துழைப்பை நோக்கி திசைதிருப்பி விடப்பட்டிருந்தது.

இலங்கை ஜனாதிபதித் தேர்தல்: பொலிஸ்-அரசு ஆட்சியை நோக்கிய நகர்வுகளை எதிர்த்துப் போராட தொழிலாளர்கள் தயாராக வேண்டும்

K. Ratnayake, 16 November 2019

ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவு கொண்ட இஸ்லாமிய அடிப்படைவாத தேசிய தவ்ஹீத் ஜம்மாத் அமைப்பு ஏப்ரல் 21, ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்திய பயங்கரவாத தாக்குதல்களை இருவரும் பயன்படுத்திக்கொண்டு, "தேசிய பாதுகாப்பு," "சட்டம் ஒழுங்கு" மற்றும் "ஒழுக்கமான சமூகத்தை" வலுப்படுத்துவதற்கே தாம் முன்னுரிமை கொடுப்பதாக அறிவித்தனர்.

இலங்கை: சோ.ச.க. ஜனாதிபதி வேட்பாளர் பல்கலைக்கழக விவாதத்தில் போலி-இடதுகளின் முதலாளித்துவ சார்பு வேலைத்திட்டத்தை அம்பலப்படுத்தினார்

our correspondents, 13 November 2019

முதலாளித்துவத்தின் நெருக்கடி, போட்டி தேசிய அரசுகளுக்கு இடையிலான வர்த்தக மோதல்கள் தீவிரமடையச் செய்வதோடு, பேரழிவு தரும் வளர்ந்து வரும் உலகப் போர் ஆபத்தையும் உருவாக்கியுள்ளது. தொழிலாள வர்க்கத்துக்கு இதைத் தடுக்க உள்ள ஒரே வழி, ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்குக்காக போராடுவதே ஆகும்,

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் போக்குவரத்து வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான பொலிஸ் வன்முறை, 5,000 க்கும் அதிகமானோர் கைது

Kranti Kumara, 11 November 2019

TSRTC ஓட்டுநர்கள், பேருந்து நடத்துனர்கள், இயந்திர வல்லுநர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் அக்டோபர் 5 முதல் கைது மற்றும் அவர்களின் மோசமான ஊதியங்கள் மற்றும் பணி நிலைமைகளில் கணிசமான முன்னேற்றத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காஷ்மீர் மற்றும் இந்திய தொழிலாள வர்க்கம் மீதான மோடியின் தாக்குதல்

Keith Jones, 5 November 2019

புது தில்லி, ஏற்கனவே உலகிலேயே மிகவும் தீவிரமாக இராணுவமயமாக்கப்பட்ட மற்றும் பொலிஸ் காவலுக்கு உட்படுத்தப்பட்ட ஒரு பிராந்தியமான அம்மாநிலத்தை முன்நிகழ்ந்திராத வகையில் முற்றுகையிடுவதன் மூலமாக அதன் வெளிப்படையான சட்டவிரோத அரசியலமைப்பு மாற்றங்களை அங்கு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் நவ சம சமாஜ கட்சி வலதுசாரி ஐ.தே.க. வேட்பாளரை அரவணைத்துக்கொள்கிறது

Wilani Peris, 5 November 2019

நவ சம சமாஜக் கட்சி வேட்பாளர் பெத்தேகமகே ஒரு தொலைக்காட்சி உரையில், . ந.ச.ச.க. ஜனநாயகத்தின் ஓட்டத்துடன் இணைந்து செயல்படுவதாக அவர் பெருமிதம் கொண்டார்.....

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தனவுக்கு வாக்களியுங்கள்!

ஏகாதிபத்திய போர், சிக்கன நடவடிக்கை மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராக ஒரு சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்புவோம்

Socialist Equality Party (Sri Lanka), 25 October 2019

இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் அவசரகால சட்டத்தை பிரகடனம் செய்து, அடிப்படை ஜனநாயக உரிமைகளை மீறுவதில் நீண்ட வரலாற்றை கொண்டுள்ளன. தற்போதைய அரசாங்கமும் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பையும் தமிழ் மக்களின் உரிமைகளை துஷ்பிரயோகம் செய்வதையும் தொடர்கின்றது.

இந்தியாவில் மாவோயிச தொழிற்சங்க தலைவர்கள் மதர்சன் வாகனத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து தனிமைப்படுத்துகிறார்கள்

Moses Rajkumar and Sasi Kumar, 25 October 2019

சென்னையிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மதர்சன் தொழிற்சாலையில் பணிபுரியும் 1500 ஒப்பந்த தொழிலாளர்களையும், பயிற்சியாளர்களையும் போராட்டத்திற்கு அழைப்பதற்கு AICCTU தலைவர்கள் மறுக்கிறார்கள்.

அசாமில் வசிக்கும் 1.9 மில்லியன் பேரின் பாரிய நாடுகடத்தலுக்கு முன்னோடியாக அவர்களை “வெளிநாட்டவர்கள்” என்று இந்தியா முத்திரை குத்துகிறது

Wasantha Rupasinghe, 5 October 2019

அசாமின் வங்காள மொழிபேசும் சிறுபான்மையினரில், கணிசமான பகுதியினரை நாடற்றவர்களாக அறிவிக்கும் முயற்சிக்கு எதிராக ஏற்படும் வெகுஜன போராட்டங்களுக்கு அஞ்சி கடந்த சனிக்கிழமை இறுதியாக தயாரிக்கப்பட்ட NRC பட்டியலை வெளியிடுவதற்கு முன்னர், பாஜக மத்திய அரசானது மாநிலம் முழுவதும் மத்திய ஆயுதப் போலிஸ் படையின் (CAPF) 145க்கு மேற்பட்ட படைப்பிரிவுகளை நிறுத்தியிருகிறது.

இலங்கையின் வடக்கில் இராணுவம் மற்றும் பொலிசின் ஆதரவுடன் பௌத்த பிக்குகள் இனவாத ஆத்திரமூட்டல்களை தூண்டிவிடுகின்றனர்

Vimal Rasenthiran, 4 October 2019

அரசாங்கம் மற்றும் சிங்கள முதலாளித்துவ எதிர்க் கட்சித் தலைவர்கள் உட்பட முழு ஆளும் வர்க்கத்தினதும் பாதுகாப்பு படைகளதும் ஒத்துழைப்பைப் பெறும் பௌத்த அதிதீவிரவதிகள் ஏனைய இன மற்றும் மதத்தவர்களுக்கு எதிராக மேற்கொண்டு வருகின்ற இனவாத வன்முறைகளில் இது அண்மையதாகும்.

இந்தியா: வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான மதர்சன் வாகனத் தொழிலாளர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்

Moses Rajkumar and Sasi Kumar, 28 September 2019

சென்னையிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் மதர்சன் தானியங்கி தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் நிறுவனத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் நூற்றுக்குமதிகமான தொழிலாளர்கள் செப்டம்பர் 24 அன்று இருங்காட்டுக்கோட்டையில் இருக்கும் துணை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்துக்கு முன்னால் எதிர்ப்பு பேரணியை நடத்திக்கொண்டிருந்தபோது காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

இலங்கையில் இரண்டு இலட்சம் அரசாங்க ஆசிரியர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தை நடத்தினர்

our correspondents, 27 September 2019

தமிழர்-விரோத மற்றும் முஸ்லிம்-விரோத பேரினவாத குழுக்களின் தூண்டுதல்களை நிராகரித்தும் தரவரிசை பிரிவுகளைக் கடந்தும் அனைத்து ஆசிரியர்களும் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொண்டமை வேலைநிறுத்தத்தின் மிக முக்கியமான வளர்ச்சியாகும். இதனால் இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் உள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

இலங்கை சோ.ச.க. / ஐ.வை.எஸ்.எஸ்.இ. பொதுக் கூட்டம்: இந்திய அரசாங்கத்தின் கொடூரமான காஷ்மீர் அடைப்பில் பணையத்தில் உள்ள அரசியல் பிரச்சினைகள்

Socialist Equality Party and IYSSE (Sri Lanka), 25 September 2019

காஷ்மீரில் இந்திய மோடி அரசாங்கத்தின் கொடூரமான ஒடுக்குமுறையின் பாரதூரமான அரசியல் தாக்கங்கள் குறித்து கலந்துரையாட சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க) சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும் அக்டோபர் 11 அன்று கொழும்பில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தவுள்ளன.

இலங்கை ஆசிரியர்களின் போராட்டத்தில் வெற்றி பெறுவது எப்படி

the Socialist Equality Party teachers group, 25 September 2019

கல்வி, சுகாதாரம் மற்றும் ஏனைய அடிப்படை சமூகத் தேவைகள் மீது பெருகிவரும் தாக்குதல்களைத் தோற்கடிக்க, தொழிலாள வர்க்கத்திற்கு அதன் சொந்த சோசலிச மற்றும் சர்வதேச மூலோபாயம் அவசியமாகும். ஆசிரியர்கள் மற்றும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கான மூல காரணம், இந்த இலாப நோக்கு அமைப்பு முறையே ஆகும்.

இலங்கை போக்குவரத்துச் சபை தொழிற்சங்கங்கள் தொடர் வேலைநிறுத்தத்தை நிறுத்திக்கொண்டன

Nandana Nanneththi, 23 September 2019

வேலைநிறுத்தத்தை முறியடிக்க அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்தே செயல்பட்டு வந்தது. வேலைநிறுத்தத்தில் பங்கேற்காத தொழிற்சங்கத்தின் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பயன்படுத்தி அரசாங்கம் பேருந்துகளை இயக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டது.

நூறாயிரக்கணக்கான இந்திய வாகனத் தொழிலாளர்கள் பணிநீக்கங்கள் மற்றும் ஊதிய வெட்டுக்களை எதிர்கொள்கின்றனர்

Saman Gunadasa, 18 September 2019

வரவிருக்கும் மாதங்களில் சுமார் அரை மில்லியன் வேலைகள் குறைக்கப்படும் என்று முன்கணிக்கின்றனர். இந்த தாக்குதல், அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோ, ஐரோப்பா மற்றும் ஆசியா ஆகிய நாடுகளில் உள்ள வாகனத் தொழிலாளர்களின் வேலைகள், ஊதியங்கள் மற்றும் நிலமைகள் மீது அதிகரித்து வரும் பூகோள அளவிலான தாக்குதலின் ஒரு பாகமாகவுள்ளது.

இலங்கை: தமிழ் மக்கள் பேரவை தமிழ் தேசியவாதத்தை கிளறிவிடுவதற்காக பேரணிக்கு அழைப்புவிடுத்துள்ளது

M. Thevarajah, 14 September 2019

தமிழ் மக்கள் பேரவையானது பல தமிழ் அரசியல் கட்சிகள், சிவில் சமூக குழுக்கள், தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொழும்பின் 30 ஆண்டுகால இரத்தக்களரி இனவாத போரின்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களதும் ஒரு கூட்டணி அமைப்பாகும்.

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்

Wimal Rasenthiran and M. Kalaimaaran, 13 September 2019

காணாமல் போன தமிழர்களின் உறவினர்கள் பல ஆண்டுகளாக நடத்திய தொடர்ச்சியான போராட்டத்தில் இது சமீபத்தியது. இதுவரை, இந்த போராட்டங்களில் ஈடுபட்ட 35 தந்தையர் மற்றும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளைக் கண்டுபிடிக்க முடியாமலே இறந்துவிட்டனர்.

மதர்சன் வாகனத் தொழிலாளர்கள் தமிழகத்தில் காலவரையின்றி வேலைநிறுத்தம் செய்கிறார்கள்

Sasi Kumar and Moses Rajkumar, 2 September 2019

குறைந்த ஊதியங்கள், கடுமையான வேலை நிலைமைகள் மற்றும் தரமற்ற உணவு ஆலையின் உணவகத்தில் வழங்கப்படுவதை எதிர்த்துப் போராடுவதற்காக MATE தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தை நிறுவினர். இந்தியாவின் உள்நாட்டு வாகனத் தொழிலுக்கு வடிவமைக்கப்பட்ட பாகங்கள், சேர்க்கைகள் மற்றும் தொகுதிகள் ஆகியவற்றின் மிகப்பெரிய விநியோகஸ்தராக இந்நிறுவனம் இருக்கிறது.

இலங்கை எதிர்க்கட்சி கோடாபய இராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்கிறது

K. Ratnayake, 19 August 2019

லங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ ஆகஸ்ட் 11 அன்று நடைபெற்ற ஸ்ரீ.ல.பொ.மு. தேசிய மாநாட்டில் அதன் தலைமையை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டு தனது சகோதரரின் வேட்புமனுவை அறிவித்தார்.

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பீரங்கித் தாக்குதல் காஷ்மீரை அச்சுறுத்துகிறது

Keith Jones, 19 August 2019

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆசாத் ஜம்மு-காஷ்மீர் (AJK) பகுதியின் தலைநகரம் முசாஃபராபாத்தில் புதனன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆற்றிய உரையில், இந்த பகுதியை ஆக்கிரமிக்க இந்தியா திட்டமிடுவதாக குற்றம்சாட்டியதுடன், ஒரு பெரும் இராணுவ பதிலடிக்கு அச்சுறுத்தினார்.

காஷ்மீரின் முற்றுகை நிலை: சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் எச்சரிக்கை

Bill Van Auken, 17 August 2019

இந்திய அரசாங்கமானது தொலைபேசி, கைபேசி சேவைகள் மற்றும் இணைய சேவைகள் உட்பட அனைத்து தொடர்புகளையும் துண்டித்து யாரும் தங்களது உறவினர்கள், நண்பர்கள், சக தொழிலாளர்களுடன் பேச முடியாதவாறு செய்துள்ளதுடன் எதிர்ப்பை ஒழுங்கமைப்பதற்கு சமூக ஊடகத்தை பயன்படுத்தவதை தடை செய்தமை பற்றி குறிப்பிடத்தேவையில்லை.

இலங்கை பிரதமர் இனப் பிரச்சினையை தீர்ப்பதாக பாசாங்கு செய்கிறார்

Subash Somachandran and By Athiyan Silva, 11 August 2019

விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.), நாட்டின் சிறுபான்மையினருக்கு எந்தவொரு சலுகையும் வழங்குவதை எதிர்க்கும் சிங்கள பேரினவாதத்தில் மூழ்கியுள்ள ஒரு கட்சியாகும். ஐ.தே.க., நாட்டின் நீண்ட கால தமிழர்-விரோத போரைத் தொடங்கி அதைப் பல தசாப்தங்களாக முன்னெடுத்த கட்சியாகும்.

காஷ்மீர் மீதான புது டெல்லியின் தாக்குதலுடன் இந்திய-பாகிஸ்தான் மோதல் கூர்மையடைகிறது

Keith Jones, 9 August 2019

இந்திய வசமிருக்கும் ஜம்மு-காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் வசமிருக்கும் ஆசாத் காஷ்மீர் என்று பிரிவினையின் விளைவாக பிளவுபடுத்தப்பட்ட காஷ்மீரி மக்களின் ஜனநாயக அபிலாஷைகள் மற்றும் உரிமைகள் மீது இந்திய முதலாளித்துவமும் பாகிஸ்தான் முதலாளித்துவமும் இரண்டுமே ஏறி மிதித்து, திட்டமிட்டு சூழ்ச்சிகளைக் கையாண்டுள்ளன.

இலங்கை: மஹிந்த இராஜபக்ஷ தான் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவுடன் ஒத்துழைப்பதாக சமிக்ஞை செய்கிறார்

Dilruwan Vithanage, 8 August 2019

அமெரிக்க இராஜதந்திரிகளை இராஜபக்ஷ அன்புடன் வரவேற்கிறார். 2015 ஜனாதிபதித் தேர்தலில் தன்னை அகற்றுவதற்கு வாஷிங்டன் திரைக்குப் பின்னால் இருந்து செயற்பட்டது என்பதை அறிந்த அவர், பழைய பிரச்சினைகளை மறக்க அழைப்பு விடுக்கிறார்.

இலங்கை பிரதமர் அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஊக்குவிக்கிறார்

Vijith Samarasinghe and K. Ratnayake, 15 July 2019

வாஷிங்டனுக்கு மற்றும் யுத்தம் ஏற்பட்டால் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவை பொருளாதார ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் தடுப்பதற்கான அதன் தயாரிப்புகளுக்கு இலங்கை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது

வாகன உதிரிப்பாக தொழில்துறை வேலைநிறுத்தங்களை தமிழ்நாடு அரசு தடை செய்கிறது

Arun Kumar and Kranti Kumara, 6 July 2019

மாபெரும் நாடுகடந்த பெருநிறுவனங்களிடமிருந்து இலஞ்சம் பெற்ற மற்றும் அவற்றின் விருப்பத்திற்குரிய முகவராக இருக்கும் அஇஅதிமுக அரசாங்கம், பெரியளவில் சுரண்டலுக்குள்ளான வாகன மற்றும் வாகன உதிரிபாகத் தொழிலாளர்கள் சென்ற ஆண்டில் நடத்திய வெடிப்புறும் வகையிலான மற்றும் பரவலான போராட்டங்களின் பின்னணியில் இந்த இரும்புப் பிடியிலான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

கலை மற்றும் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைக் குழு

By Socialist Equality Party and International Youth and Students for Social Equality (Sri Lanka), 5 July 2019

பௌத்த தீவிரவாத குழுக்களின் போலிப் புகாரின் அடிப்படையில் எழுத்தாளர் சக்திக சத்குமாரா சிறைவைக்கப்பட்டுள்ளமை மற்றும் மேலும் பல எழுத்தாளர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சுமத்துவதானது, இலங்கையில் கருத்து வெளியிடும் சுதந்திரத்திற்கு எதிரான தொடுக்கப்பட்டுள்ள மோசமான தாக்குதல் ஆகும்.

இலங்கை: குருணாகல்லில் முஸ்லிம் மருத்துவர் மீதான சிங்கள இனவாதிகளின் குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப்பட்டன

Kapila Fernando, 3 July 2019

இனவாதத்துக்கு ஒத்துழைக்கும் ஊடகங்களின் மோசமான பிரச்சாரத்தின் மத்தியில், எந்தவொரு விசாரணையும் இன்றி மருத்துவரை ஒரு குற்றவாளியாக ஆக்கிய இனவெறி கும்பலின் முக்கிய நோக்கம், முழு முஸ்லீம் சமூகத்திற்கும் எதிராக பரவலான ஆத்திரமூட்டல்களை கிளறிவிடுவதே ஆகும்.

இலங்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் அப்பாவி முஸ்லிம்கள் கண்மூடித்தனமாக கைது செய்யப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது

Sakuna Jayawardane, 1 July 2019

"பயங்கரவாத" மற்றும் "பயங்கரவாத தாக்குதல்களுக்கு" முஸ்லீம் சமூகமே காரணம் என்று கூறி, அரசாங்கமும் ஸ்தாபகத்தின் பிற கட்சிகளும் தூண்டிவிட்ட விஷமத்தனமான முஸ்லிம் விரோதத்தின் மத்தியிலேயே, ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை அரசாங்கம் முஸ்லிம் விரோத வன்முறைகளுக்கு மத்தியில் தீவு முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது

K. Ratnayake, 14 May 2019

இந்த பயங்கரவாத தாக்குதல்கள், இஸ்லாமிய அடிப்படைவாத ஈராக் மற்றும் சிரிய இஸ்லாமிய அரசு இயக்கத்தால் இலங்கையில் உள்ள இஸ்லாமிய குழுவான தேசிய தவ்ஹீத் ஜம்மாத் உடன் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டிருப்பது வெளிப்படையானதாகும். இது குண்டுத் தாக்குதல்களுக்காக முஸ்லீம் சமூகத்தின் மீது குற்றம் சாட்டுவதற்கு பற்றிக்கொள்ளப்பட்டது.

ஜே.வி.பி. தலைவர் "முஸ்லிம் அதிதீவிரவாதத்துக்கான" பொறுப்பை "முஸ்லிம் சமூகத்தின்" மீது திணித்து முஸ்லிம் விரோத பிரச்சாரத்திற்கு எண்ணெய் வார்க்கின்றார்

Pani Wijesiriwardena, 11 May 2019

"இலக்கய" (இலக்கு) நிழக்ச்சியில் ஜே.வி.பி. தலைவரின் இந்த முயற்சிகள் இன்னும் தெளிவாக வெளிப்ட்டன. திசாநாயக்க, அதிதீவிரவாத இயக்கங்களின் வளர்ச்சிக்கு காரணம், "திறனற்ற அரசாங்கங்களே" என்று திசாநாக்க அங்கு குறிப்பிட்டார். அவரின் கூற்றுப் படி, நெருக்கடியின் வேர் முதலாளித்துவமல்ல, முதலாளித்துவத்தின் கீழூம் கூட திறமையான அரசாங்கத்தின் மூலம் பயங்கரவாதம் உட்பட, நெருக்கடியை தடுத்துக்கொள்ள முடியும்.

இலங்கையில் பயங்கரவாத குண்டுவீச்சிற்கு பின்னர் முஸ்லிம்களுக்கு எதிரான பரந்த வேட்டையாடல்

our reporters, 7 May 2019

இஸ்லாமிய அடிப்படைவாத முஸ்லீம் அதி தீவிரவாத குழுவான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு, தேசிய தவஹீத் ஜமாத் முஸ்லிம் அடிப்படைவாத குழுவைப் பயன்படுத்தி நடத்திய தாக்குதல், முஸ்லீம் விரோத பிரச்சாரத்தை கிளறிவிடுவதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் அரசாங்கத்தின் பொலிஸ் அரச நடவடிக்கை தொடர்பாக போலி இடதுகள் மௌனம் காக்கின்றனர்

Wasantha Rupasinghe, 2 May 2019

போலி-இடதுகளோ ஆளும் வர்க்கத்தின் இந்த ஒடுக்குமுறை தொடர்பாக முக்கிய கவணத்தை செலுத்தவோ அல்லது அது தொடர்பாக பிரதானமாக தொழிலாள வர்க்கமும் ஒடுக்கப்பட்ட மக்களும் எடுக்க வேண்டிய சோசலிச வேலைத் திட்டம் தொடர்பாக பேசுவதை திட்டமிட்டு தவிர்த்துள்ளனர்.

இலங்கை: குருநாகல் பாடசாலை ஆசிரியை சிறையிலடைப்பு

கல்வி வெட்டின் அழிவுகரமான விளைவுகளின் பொறுப்பை ஆசிரியர்கள் மீது சுமத்தும் முயற்சி

Kapila Fernando, 29 April 2019

ஒரு ஆசிரியரது சாதாரண அடிப்படை சம்பளம் 28,000 ரூபாய்களாகும். சில கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு 35,000 ரூபாய் வரை வழங்கப்படும். 20 வருட கால சேவை வழங்கிய ஆசிரியர் கூட 45,000 ரூபாவை மட்டுமே சம்பளமாக பெறுவார். பெற்ற கடன்களுக்காக மாத தவணைப் பணம் அறவிடப்பட்டபின் கையில் கிடைப்பது அற்ப சொற்ப பணமேயாகும்.

இலங்கை ஜனாதிபதி இராணுவ ஒடுக்குமுறையை முன்னெடுக்கிறார்

K. Ratnayake, 27 April 2019

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வியாழக்கிழமை கூட்டிய அனைத்துக் கட்சி மாநாடு, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பயங்கரவாத குண்டு வெடிப்புகளை அடுத்து தீவு முழுவதுமான இராணுவ பொலிஸ் பாய்ச்சலை வலுப்படுத்துவதை மையமாகக் கொண்டிருந்தது.

இலங்கை ஜனாதிபதி அவசரகால அதிகாரங்களுக்கு முத்திரை குத்த "அனைத்துக் கட்சி மாநாட்டுக்கு" அழைப்பு விடுக்கின்றார்

Wasantha Rupasinghe, 25 April 2019

த்தகைய "அனைத்து கட்சி" மாநாடுகள், முந்தைய காலங்களிலும் கடுமையான அரசியல் நெருக்கடியின் மத்தியில் முதலாளித்துவ ஆட்சியை தூக்கி நிறுத்தவும், ஆளும் வர்க்கத்தினதும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களினதும் தொழிலாள வர்க்க விரோத செயற்பட்டியலை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாக கூட்டப்பட்டன.

இலங்கையில் கடுமையான பொலிஸ்-அரச நடவடிக்கைகள் அமுலுக்கு வருகின்றன

Pani Wijesiriwardena and K. Ratnayake, 24 April 2019

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடும் சாக்குப் போக்கின் கீழ், உலகம் முழுவதும் உள்ள அதன் சம தரப்பினரைப் போலவே, கொழும்பு அரசாங்கமும் அதன் பொலிஸ்-அரச இயந்திரத்தை பலப்படுத்துகிறது. இது தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் எழுச்சியை அடக்குவதற்கு பயன்படுத்தப்பட உள்ளன.

பயங்கரவாத குண்டுவெடிப்புகளுக்குப் பின்னர், இலங்கை அரசாங்கம் கடுமையான தேசிய அவசரகால நிலையை திணிக்கிறது

K. Ratnayake and Peter Symonds, 23 April 2019

கடந்த வருடம் ஏப்பிரல் 21ல் இலங்கையில் நடந்த பயங்கரவாத தொடர் குண்டுத்தாக்குதலின் வேளையில் சோசலிச சமத்துவக் கட்சியும் உலக சோசலிச வலைத் தளமும் பிரசுரித்த கட்டுரைகளை வாசகர்களுக்காக மீழபிரசுரிக்கிறோம்

இலங்கையில் குண்டுத் தாக்குதலில் தப்பிப் பிழைத்தவர்களும் உள்ளூர் வாசிகளும் பயங்கரவாத தாக்குதலை கண்டனம் செய்கின்றனர்

our correspondents, 22 April 2019

“குண்டுத்தாக்குதல் நடந்து அரை மணித்தியாலத்துக்குப் பின்னர், ஒரேயொரு அம்புலன்ஸ் மட்டுமே வந்திருந்தது. பாதிக்கப்பட்டவர்கள், உள்ளூர் வாசிகளுக்குச் சொந்தமான பஸ்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் வாடகை கார்கள் மூலமே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.”

இலங்கை தபால் ஊழியர்கள் 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தம் செய்தனர்

Kapila Fernando, 22 April 2019

தபால் உட்பட முழு தொழிற்சங்க அதிகாரத்துவமும், அரசாங்கத்தின் அடக்குமுறையை ஆசீர்வாதமாக எடுத்துக்கொண்டு வர்க்கப் போராட்டத்தை அடக்குவதற்கு செயல்பட்டு வருகின்ற போதிலும், தொழில்கள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீதான தீவிரமான தாக்குதல்களுக்கு மத்தியில் புதிய வர்க்கப் போராட்டங்கள் உருவாகி வருகின்றன.

இலங்கையில் பயங்கரவாத குண்டுவீச்சில் குறைந்தபட்சம் 290 பேர் கொல்லப்பட்டனர்

K. Ratnayake, 22 April 2019

கொழும்பில் உள்ள புனித அந்தோனியார், தலைநகருக்கு வடக்கில் நீர்கொழும்பில் புனித செபஸ்டியன் மற்றும் தீவின் கிழக்கு கரையிலுள்ள மட்டக்களப்பில் ஸியோன் தேவாலயம் ஆகிய மூன்று தேவாலயங்கள் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை பூஜைக்காக வந்தவர்களால் நிரம்பி வழிந்தன. குண்டுவெடிப்புகளில் கூரைகள் பொறிந்துகொட்டியதுடன் உடைந்த கூழங்கள் மேல் உடல் பாகங்கள் வீசுபட்டுக் கிடந்தன.

இந்திய தேசிய தேர்தலின் இரண்டாம் கட்டத்தில் தமிழ் நாட்டு வாக்காளர் வாக்களிக்க செல்கின்றனர்

V. Gnana, 18 April 2019

தமிழ்நாட்டில் தேர்தல் இரண்டு பிற்போக்குத்தனமான கூட்டணிகளினால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது, அவை இரண்டு போட்டி தமிழ்-தேசியவாத கட்சிகளினால் தலைமை தாங்கப்படுகிறது, அவை முறையே இரண்டு "தேசிய" கட்சிகளான பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டில் உள்ளது.

இலங்கையில் சோ.ச.க. மற்றும் IYSSE அசான்ஜ் மற்றும் மானிங்கை பாதுகாக்க ஆர்ப்பாட்டம் நடத்தின!

our reporters, 17 April 2019

"ஜூலியன் அசான்ஜை விடுதலை செய், செல்சீ மானிங்கை விடுதலை செய்", "பேச்சு சுதந்திர உரிமையை பாதுகாத்திடு, ஜனநாயக உரிமைகளை பாதுகாத்திடு", மற்றும் "இணைய தணிக்கையை நிறுத்து, உலக போர் வேண்டாம், உலக சோசலிசத்திற்காகப் போராடு," ஆகியவை உட்பட பல சுலோகங்களை சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்வத்துடன் கோஷமிட்டனர்.

இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் மீது எதேச்சதிகாரமான ஊதிய வெட்டு திணிக்கப்படுகின்றது

W.A. Sunil, 12 April 2019

தோட்டத் தொழிலாளர்கள் தங்களது அன்றாட அடிப்படை ஊதியமான 500 ரூபாயை (2.86 அமெரிக்க டாலர்) 100 சதவீதம் அதிகரிக்கக் கோரினர். தொழிற்சங்கங்கள் காட்டிக்கொடுப்பதற்கு முன்னதாக அவர்கள் கடந்த டிசம்பரில் ஒன்பது நாள் தேசிய வேலைநிறுத்தத்தை நடத்தினர்.

சம்ஜௌதா விரைவு இரயில் குண்டு வெடிப்பு:

வன்முறைமிக்க இந்து மேலாதிக்கவாதிகள் தண்டனையின்றி தப்பிக்க இந்திய நீதிமன்றம் அனுமதிக்கிறது

Kranti Kumara, 8 April 2019

துணைக்கண்டம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்று 1947 இல் பிற்போக்கான வகுப்புவாதப் பிரிவினையினால் நிரந்தரமாக பிரிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் பரஸ்பரம் விஜயம் செய்து கொள்ளும் வகையில், “சமாதான” இரயில் என்று பெயரிடப்பட்ட, சம்ஜௌதா விரைவு இரயில், இந்திய தலைநகரம் புது தில்லிக்கும் பாகிஸ்தானின் லாகூர் நகரத்திற்கும் இடையில் இருவாரங்களுக்கு ஒருமுறை இயங்கி வருகிறது.

பங்களதேஷில் நிகழ்ந்த கட்டிட தீ விபத்தில் அலுவலக பணியாளர்கள் பலி

Rohantha De Silva, 6 April 2019

அடுத்தடுத்த பங்களதேஷ் அரசாங்கங்கள், பாதுகாப்பு மற்றும் கட்டிட குறியீட்டு மீறல்கள் குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறி வந்துள்ளன, என்றாலும் எந்தவொரு உண்மையான மாற்றங்களும் செயல்படுத்தப்படவில்லை, ஏனென்றால் திட்டமிடல், கட்டுமானம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் என அனைத்தும் இலாபத்தை நோக்கிய உந்துதலுக்கு அடிபணிந்தவையாக உள்ளன.

இலங்கை புத்தளத்தில் குப்பைகளை கொட்டும் திட்டத்துக்கு பொதுமக்களின் எதிர்ப்பு விரிவடைகிறது

Nihal Geekiyanage and Srikantha Fernando, 2 April 2019

இலங்கை புத்தளத்தில் குப்பைகளை கொட்டும் திட்டம் விஞ்ஞான ரீதியாக கட்டப்படுகிறது என அரசாங்கம் கூறினாலும், அது அவ்வாறு இல்லை என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக முதலாளித்துவ அரசாங்கங்களால் தொடங்கப்பட்ட இத்தகைய திட்டங்களால் மக்களின் வாழ்க்கை எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதற்கான எடுத்துக்காட்டுகளை தந்து இந்த திட்டமும் பேரழிவு தருவதாக குடியிருப்பாளர்கள் வாதிட்டனர்.

இலங்கையில் மார்ச் 17 நடந்த தொழிலாளர் மாநாட்டின் முக்கியத்துவம்

W.A. Sunil, 1 April 2019

தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் முற்போக்கு சிந்தனையுள்ள புத்திஜீவிகளை இந்த முக்கிய அனுபவங்களை நோக்கி திரும்புவதோடு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியை புரட்சிகர கட்சியாக கட்டியெழுப்புவது அவசியமாகும்.

இலங்கை: என்ஃபீல்ட் பெருந்தோட்ட கம்பனி வேலை நீக்கம் செய்த தொழிலாளி பாலசுப்பிரமணியத்துக்கு மீண்டும் வேலை கொடுக்க மறுக்கிறது

M. Thevarajah and W.A. Sunil, 29 March 2019

பாலசுப்பிரமணியம் உறுப்பினராக இருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) உட்பட பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள், இந்த பழிவாங்கலுக்கு எதிராக எந்தவொரு போராட்டத்தையும் ஏற்பாடு செய்வதை முற்றிலும் கைவிட்டுவிட்டன.

பெருகிவரும் சமூக எதிர்ப்புக்கு மத்தியில் இந்திய உயரடுக்கு தேசிய அளவிலான தேர்தலுக்கு பதட்டத்துடன் தயாராகிறது

Wasantha Rupasinghe and Keith Jones, 27 March 2019

இந்தியாவின் வளர்ச்சியின் பலன்களை ஒரு சிறிய முதலாளித்துவ உயரடுக்கு ஏகபோகமாக கொண்டுள்ளது. 2015 மற்றும் 2017 க்கு இடையில், உச்சத்திலிருக்கும் 1 சதவீதத்தினருக்கு சொந்தமான இந்தியாவின் செல்வம், 53 இலிருந்து 73 சதவிகிதம் வரை உயர்ந்தது, மீதமுள்ள 99 சதவிகிதத்தை 27 சதவிகிதத்தினர் பகிர்ந்து கொண்டனர்.

ஆதிகரித்துவரும் சமூக சமத்துவமின்மை குறித்து இலங்கை சிந்தனை குழு எச்சரிக்கின்றது

Dilruwan Vithanage, 26 March 2019

அரசாங்க மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களினால் நிதியளிப்பு செய்யப்படுகின்ற சிந்தனை குழு, இலங்கையில் தற்போதைய வருமான சமத்துவமின்மையானது ஒரு பாரிய பிரச்சினையாக இருப்பதோடு இதற்கு கொள்கை வகுப்பாளர்களின் உடனடி கவனம் தேவை” என பதட்டத்துடன் குறிப்பிடுகின்றது

இலங்கையில் ஒரு இந்து சமுத்திர போர் பயிற்சியை ஆஸ்திரேலியா நடத்தியது

Vijith Samarasinghe, 25 March 2019

இலங்கையில் தனது படைகளை "மனிதாபிமான நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகள்" போன்ற பயிற்சிகளில் ஈடுபடுத்துவதன் மூலம், இலங்கை பாதுகாப்பு பிரிவுடன், குறிப்பாக கடற்படையுடன் தொடர்புகளை ஆழப்படுத்துக்கொண்டுள்ளது

இலங்கையின் வடக்கில் மருத்துவ அதிகாரி கைது செய்யப்பட்டதுடன் “பயங்கரவாதத்தின்” எழுச்சி குறித்த பிரச்சாரம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

Subash Somachandran and S. Jayanth, 15 March 2019

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் கட்டியெழுப்ப இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கிடைத்த ஒரு தகவலின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

அமெரிக்கா இலங்கையுடன் இராணுவ உறவுகளை ஊக்குவிக்கிறது

Vijith Samarasinghe, 17 January 2019

உலகின் இரண்டாவது ஆழமான இயற்கை துறைமுகமான திருகோணமலை, இந்திய சமுத்திரத்தில் பெரும் மூலோபாய இராணுவ பெறுமதியைக் கொண்டுள்ளது.

இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் கம்பனிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் விற்றுத்தள்ளும் முயற்சிகளை எதிர்க்கின்றனர்

our reporters, 8 January 2019

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரான வடிவேல் சுரேஷ், தொழிற்சங்கங்கள் ஜனவரி 16 அன்று பெருந்தோட்டக் கம்பனிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடன் (EFC) மூடிய கதவுகளுக்குள் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இலங்கை: ஹட்டனுக்கு அருகில் ஃபோடைஸ் தோட்டத்தில் நடந்த தீ விபத்தில் இருபத்தி நான்கு குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன

M. Thevarajah, 7 January 2019

இலங்கையில் பெருந்தோட்டங்களில் வரிசை வீடுகள் தீ பற்றுவது தொடர்ச்சியாக நிகழ்கிறது. 2011 ஏப்ரலில் மஸ்கெலியாவில் ப்ரௌன்ஸ்வீக் மற்றும் உள்ள பார்கோ தோட்டங்களில 20 வீடுகள் தீயில் எரிந்தன.

இந்திய தொழிற்சங்கங்கள் அடுத்த வாரம் இரண்டு நாள் "பொது வேலைநிறுத்தம்" செய்யவுள்ளன

Deepal Jayasekera, 5 January 2019

நரேந்திர மோடி தலைமையில், நான்கு அரை ஆண்டுகால பா.ஜ.க அரசாங்கம் வகுப்புவாத எதிர் வினையை ஊக்குவித்து, இந்தியாவின் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான இராணுவ-மூலோபாய கூட்டினை விஸ்தரித்து, மேலும் இந்தியாவை உலக முதலாளித்துவத்துக்கு மலிவு கூலியின் புகலிடமாக மாற்றுவதற்கான ஆளும் வர்க்கத்தின் உந்துதலை தீவிரப்படுத்தியது.

இலங்கை: பெருந்தோட்ட நிர்வாகிகள் வேலைநிறுத்த செயற்பாட்டாளர்களை வேட்டையாடுகின்றனர்

our correspondents, 3 January 2019

தொழிலாளர்கள் அனைவரும் ஹட்டன் பொலிஸ் நிலயத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அங்கு, அவர்களுக்கு எதிரான மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் தோட்ட நிர்வாகம் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இலங்கை பெருந்தோட்ட தொழிற்சங்கம் கம்பனிகளுடன் கொடுத்து வாங்கும் உடன்பாட்டைப் பற்றி கலந்துரையாடுகிறது

Pani Wijesiriwardena, 3 January 2019

இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் ஒரு சிரேஷ்ட அதிகாரியை மேற்கோள் காட்டி டிசம்பர் 31 அன்று டெயிலி எப்.டி. வெளியிட்ட செய்தியில், பெருந்தோட்ட கம்பனிகள் வழங்கிய மூன்று சலுகைகளை பற்றி “அக்கறை காட்டுவதன் பேரில் தொழிற்சங்கங்கள் கொஞ்சம் வளைந்து கொடுப்பதற்கான தமது விருப்பத்தை” வெளிப்படுத்தியுள்ளன.

சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) ஸ்தாபிக்கப்பட்டதன் ஐம்பதாவது ஆண்டு

தமிழர்-விரோத உள்நாட்டுப் போருக்கு எதிரான RCL/SEP இன் போராட்டம்

Wasantha Rupasinghe, 28 December 2018

இலங்கை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்த பிரதமரை மீண்டும் அதிகாரத்தில் அமர்த்தினார்

K. Ratnayake, 17 December 2018

கொழும்பு ஊடகங்களின் கூற்றுகளுக்கு மாறாக, விக்கிரமசிங்கவை மீண்டும் பதவியில் அமர்த்துவதற்கு எடுக்கப்பட்ட முடிவு, அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவரப்போவதில்லை.