Turkey

கராபாக் மீதான ஆர்மீனிய-அஸெரி போருக்கு ரஷ்யா, துருக்கி போர்நிறுத்த பேச்சுவார்த்தை நடத்துகின்றன

Alex Lantier, 13 November 2020

ரஷ்யாவின் சோவியத் ஒன்றியத்திற்குப் பிந்தைய முதலாளித்துவ தன்னலக்குழுவினால் ஏற்படுத்தப்பட்ட இந்தப் போர் நிறுத்தம் முடிவு அல்ல, ஆனால் சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் பிராந்தியத்தில் ஒரு போருக்கான ஆரம்பம் என்று நிரூபிக்க முடியும் என்ற கவலைகள் அதிகரித்து வருகின்றன

அமெரிக்க தரகு போர் நிறுத்தம் முறிவடைந்ததால் ஆர்மீனிய-அஸெரி போரில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன

Alex Lantier, 2 November 2020

காக்கசஸில் இரண்டு முன்னாள் சோவியத் குடியரசுகளுக்கிடையேயான போர் ரஷ்யா, ஈரான் மற்றும் நேட்டோ சக்திகள் சம்பந்தப்பட்ட போராக விரிவடையக்கூடும் என்ற ஆபத்து அதிகரித்து வருகிறது

இஸ்லாம் மீதான சட்டத்தை துருக்கி விமர்சித்தமை தொடர்பாக துருக்கிக்கான தூதரை பிரான்ஸ் திருப்பியழைத்தது

Alex Lantier, 27 October 2020

உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மனன் நவ-பாசிச ஜனாதிபதி வேட்பாளர் மரின் லு பென்னுக்கு தனது மரியாதையை வலியுறுத்தியதோடு, முஸ்லீம் சமூக அமைப்புக்களை தடை செய்யவும் அழைப்பு விடுக்கின்றார்

அஸெரி-ஆர்மீனிய போரில் ரஷ்ய தரகு போர் நிறுத்தம் முறிந்துபோகிறது

Alex Lantier, 14 October 2020

கடந்த மூன்று தசாப்தங்களாக, மோதல் அவ்வப்போது மீண்டும் வெடித்தது, நீடித்த தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கான அனைத்து முயற்சிகளையும் மீறி, தேசிய-அரசு அமைப்பின் பிற்போக்குத்தனமான மற்றும் சாத்தியமற்ற தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது

ஆர்மீனிய-அஸெரி போர் தீவிரமடைவதற்கு ரஷ்யாவும் பிரான்சும் துருக்கிக்கு கண்டனம் தெரிவிக்கின்றன

By Alex Lantier, 2 October 2020

காக்கசஸில் நடந்து கொண்டிருக்கும் போர் என்பது, தேசிய-அரசு அமைப்புமுறையின் திவால்நிலை குறித்தும் யூரேசியா முழுவதும் தேசிய மற்றும் இன மோதல்களால் எழுந்த பாரிய அளவிலான போரின் ஆபத்து குறித்தும் ஒரு தெளிவான எச்சரிக்கையாகும்

காக்கசஸில் ஆர்மீனிய-அஸெரி மோதல் வெடித்து பரந்த போருக்கு அச்சுறுத்துகிறது

By Ulaş Ateşçi and Alex Lantier, 30 September 2020

சோவியத் ஒன்றியத்தின் 1991 ஸ்ராலினிச கலைப்புக்கு முன்னர் தொடங்கிய இரண்டு முன்னாள் சோவியத் குடியரசுகளுக்கு இடையிலான 1988-94 மோதலுக்குப் பின்னர் இது மிகவும் தீவிரமான ஆர்மீனிய-அஸெரி மோதலாகும்

கிழக்கு மத்தியதரைக்கடலில் கிரேக்க-துருக்கி போர் வேண்டாம்!

International Committee of the Fourth International, 18 September 2020

1991 ல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்ட பின்னர் நேட்டோவிற்கான முக்கிய இராணுவ-அரசியல் எதிர்ப்பலம் இல்லாது போன பின்னர், கடந்த 30 ஆண்டுகளில் அமெரிக்க தலைமையிலான மத்திய கிழக்கு போர்களின் தோல்வி, விரைவாக ஒரு புதிய உலகப் போரை நோக்கி இட்டுசெல்கிறது

துருக்கியுடனான போர் பதட்டங்களுக்கு மத்தியில் கிரீஸ் பிரெஞ்சு ஆயுதங்களுக்காக பில்லியன்களை செலவிடுகிறது

By Alex Lantier, 16 September 2020

ஆபிரிக்காவிலும், குறிப்பாக லிபியாவிலும் துருக்கியின் நிலையை கீழறக்க பாரிஸ் முயல்கிறது, அங்கு பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் போர் பிரபு கலீஃபா ஹப்தாரை ஆதரிக்கிறார், துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் தேசிய உடன்படிக்கை அரசாங்கத்தை ஆதரிக்கிறார்

கிரேக்க-துருக்கிய விட்டுக்கொடுப்பற்ற நிலை கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் போர் அபாயத்தைத் தீவிரப்படுத்துகிறது

By Alex Lantier, 4 September 2020

1914 இல் முதலாம் உலக போர் தொடங்கிய போது இருந்ததைப் போலவே இப்போதும் கடலுக்கு அடியிலுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயுக்கான போட்டியாளர்கள் ஒரு பிரதேசத்தில் பற்ற வைத்துள்ள நெருப்பு ஒரு பிராந்திய உலகளாவிய போராக வெடிக்க அச்சுறுத்துகிறது

துருக்கியை அச்சுறுத்தும் வகையில் பிரான்ஸ் கிரீஸூடன் கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்துகிறது

By Ulaş Ateşçi and Alex Lantier, 17 August 2020

கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னரே உள்ள அரசியல் மற்றும் மூலோபாய மோதல்களை இது மேலும் தீவிரப்படுத்துவதால், நேட்டோ சக்திகளுக்கு இடையிலான போர் அபாயம் அதிகரித்து வருகிறது

துருக்கியின் வாத்தியா தளத்தின் மீது குண்டுவெடிப்பு, லிபியாவில் பிரெஞ்சு-இத்தாலிய பினாமிப் போரை அதிகரிக்கிறது

By Alex Lantier, 10 July 2020

கொரோனா தொற்று பரவுகையில், 2011 இல் லிபியாவிற்கு எதிரான நேட்டோ போரினால் தூண்டப்பட்ட போட்டி ஏகாதிபத்திய ஆதரவு போர்ப்பிரபுகளுக்கு இடையிலான தசாப்தகால உள்நாட்டுப் போர், கட்டுப்பாட்டை இழந்து வருகிறது

லிபிய போரில் துருக்கிக்கு எதிராக தலையீடு செய்யும் எகிப்தின் அச்சுறுத்தலை பிரான்ஸ் ஆதரிக்கிறது

By Alex Lantier, 25 June 2020

லிபியாவில் என்ன கட்டவிழ்ந்து வருகிறதோ அது, எண்ணெய் வளம் மிக்க லிபியாவுக்கு எதிராக 2011 இல் நேட்டோ அதிகாரங்கள் தொடுத்த இரத்தந்தோய்ந்த ஏகாதிபத்திய போர்களின் நேரடி விளைவாகும்

சிரிய போருக்கு மத்தியில், சிரிய அகதிகள் ஐரோப்பாவிற்கு செல்ல அனுமதிக்க துருக்கி தனது எல்லைகளை திறந்து வைக்கிறது

Baris Demir, 7 March 2020

சிரியாவின் வடக்கு இடலிப் மாகாணத்தில் சுமார் மூன்று டசின் சிப்பாய்களின் உயிர்களை பலிகொண்ட துருக்கி இராணுவ நிலையின் மீதான கடந்த வியாழக்கிழமை தாக்குதல், துருக்கியின் மேற்கு எல்லையில் ஒரு புதிய அகதிகள் நெருக்கடிக்கு ஏற்கனவே வழிவகுத்துள்ளது

கிரேக்க-துருக்கிய எல்லையில் அகதிகள் மீதான போரை நிறுத்து!

Johannes Stern, 6 March 2020

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் கிரேக்க-துருக்கிய எல்லையில் அகதிகளுக்கு எதிராக தொடுக்கப்பட்டு வரும் போரைக் கண்டனம் செய்கின்றன

சிரியாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு துருக்கி அறிவித்த நிலையில் இட்லிப் இல் போர் தீவிரமடைகிறது

Ulas Atesci, 5 March 2020

சென்ற வார இறுதியில், சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் சிரிய அரசாங்க படைகளுடனான தனது மோதலை துருக்கி தீவிரப்படுத்தி, இராணுவத் தாக்குதலுக்கு அறிவிப்பு விடுத்ததுடன் இரண்டு சிரிய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியது

சிரியாவில் துருக்கிய துருப்புகள் மீதான தாக்குதலை அடுத்து போர் பதட்டங்கள் அதிகரிக்கின்றன

Bill Van Auken, 3 March 2020

பேரழிவுகரமான ஓர் உலக போரைத் தூண்டக்கூடிய விதத்தில் துருக்கி மற்றும் ரஷ்யாவுக்கு இடையே ஒரு முற்றுமுதலான இராணுவ மோதலின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது

துருக்கிக்கும் சிரியாவிற்கும் இடையே அதிகரித்துவரும் எல்லை மோதல்களில் பெருமளவிலானோர் கொல்லப்பட்டனர்

Ulas Atesci, 3 February 2020

வடமேற்கு சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் துருக்கிய மற்றும் சிரிய இராணுவப் படைகளுக்கு இடையே அதிகரித்து வரும் பதட்டங்கள் நேற்று இரத்தக்களரியான மோதலாக வெடித்தது.

சிரியாவில் ஜேர்மன்-ஐரோப்பிய பாதுகாப்பு வலையம் வேண்டாம்!

Johannes Stern, 24 October 2019

ஜேர்மன்-ஐரோப்பிய பாதுகாப்பு வலையத்தை ஸ்தாபிப்பது என்பது ஒரு மிகப் பெரிய சிரிய இறையாண்மை மீறலை மட்டும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. அது படிப்படியாக பிரதான சக்திகளுக்கு இடையே ஒரு நேரடி மோதல் ஏற்படும் சாத்தியக்கூறையும் மற்றும் அடிப்படையில் ஜேர்மன் சமூகத்தையே மாற்றியமைக்க வேண்டிய சாத்தியக்கூறையும் அதிகரிக்கிறது.

சிரியாவில் துருக்கிய இராணுவ தாக்குதலை எதிர்ப்போம்!

By the International Committee of the Fourth International, 14 October 2019

ஞாயிற்றுக்கிழமை துருக்கிய பாதுகாப்புத்துறை அமைச்சக அறிக்கை ஒன்றின்படி, துருக்கிய துருப்புகள் அத்தாக்குதலின் முதல் ஐந்து நாட்களில் 550 குர்திஷ் துருப்புகளைக் கொன்றுள்ளன.

சிரியாவில் துருக்கிய படையெடுப்புக்கு எதிராக சிரிய இராணுவமும், ஈரானும் எதிர்தாக்குதலுக்கு அச்சுறுத்துகின்றன

Alex Lantier, 14 October 2019

ஈரானின் அதியுயர் தலைவர் அலி காமெனியின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகர் அலி அக்பர் விளாயதி ஈரானுக்கான சிரிய தூதர் அட்னன் மஹமொத்தை நேற்று தெஹ்ரானில் சந்தித்தார். அவர் "சிரியாவின் இறையாண்மை மற்றும் எல்லை ஒருமைப்பாட்டுக்கு முழு ஆதரவை" வழங்கியதுடன், “துருக்கிய படைகள் பின்வாங்குவதற்கு அழைப்பு விடுத்தார்" என்று SANA அறிவித்தது.

புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி சிரியாவில் துருக்கிக்கு எதிராக இராணுவ அதிகரிப்பை கோருகிறது

Alex Lantier, 12 October 2019

“எர்டோகனுக்கு எதிரான தடைகள் பற்றிய கேள்வியும் முன்நிறுத்தப்பட வேண்டும்,” என்று அறிவிக்கும் NPA, மற்றொரு கட்டுரையில், “துருக்கிக்கு எதிராக விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்ட பகுதியைக் கொண்டு வருவதும், பொருளாதார மற்றும் இராஜாங்க தடைகளை விதிக்க செய்வதும் ஒட்டுமொத்த பிரெஞ்சு இடதின் கடமையாகும்,” என்பதை சேர்த்துக் கொள்கிறது.

சிரியாவில் குர்திஷ் படைகள் மீதான துருக்கிய தாக்குதலுக்கு வாஷிங்டன் பச்சைக்கொடி காட்டுகிறது

Alex Lantier and Ulaş Atesci, 8 October 2019

துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனை ட்ரம்ப் தொலைபேசியில் அழைத்து பேசிய பின்னர், வெள்ளை மாளிகை ஞாயிறன்று இரவு பின்வருமாறு குறிப்பிட்டு ஓர் அறிக்கை வெளியிட்டது: “துருக்கி விரைவிலேயே வடக்கு சிரியா மீது, நீண்டகாலமாக திட்டமிட்டு வந்துள்ள அதன் நடவடிக்கையை முன்னெடுக்க நகரும்.

ஹலீல் செலிக், ஒரு சோசலிசப் போராளி (1961-2018)

By Peter Schwarz, 8 February 2019

டிசம்பர் 31,2018 அன்று சோசலிச சமத்துவம் குழுவின் தலைவரும் நிறுவனருமான ஹலீல் செலிக் இஸ்தான்புல்லில் தனது 57ம் வயதில் புற்றுநோயால் காலமானார். அவர் தனது வாழ்வின் கடைசி காற்பகுதி காலகட்டத்தை துருக்கியில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் ஒரு பகுதியைக் கட்டுவதற்கு அர்ப்பணித்திருந்தார்

ஹலீல் செலிக் (1961-2018) நினைவாக

the International Committee of the Fourth International, 2 January 2019

ஹலீல் தனிப்பட்ட வகையிலும் அரசியல் ரீதியாகவும் ஒரு அசாதாரண மனிதர். 1977ம் ஆண்டின் பிற்பகுதியில், தமது 16ம் வயதில் சோசலிச நடவடிக்கையில் ஈடுபட்ட அவர் தமது வாழ்வின் இறுதிதிக்காலம் வரை ஒரு புரட்சிகரப் போராளியாகவே தொடர்ந்து இருந்தார்

நாம் காக்கும் மரபியம் நூலின் துருக்கிய பதிப்புக்கான முன்னுரை

David North, 23 June 2017

ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்த ஒரு நாடான துருக்கியில், நாம் காக்கும் மரபியம் நூல் பிரசுரிக்கப்படுவதை நான் வரவேற்கிறேன்