ட்ரம்ப் ஜனாதிபதி பதவி

பெருந்தொற்றும் ட்ரம்பின் ஆட்சிக் கவிழ்ப்பு சதியும்

Andre Damon, 16 January 2021

சமூக நோயெதிர்ப்பு பெருக்க கொள்கையை நடைமுறைப்படுத்த, ஆளும் உயரடுக்கு முன்பினும் அதிக வன்முறை மற்றும் சர்வாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கி நகர்கிறது

தெற்காசியாவில் அமெரிக்க ஜனாதிபதியின் சதி முயற்சி பற்றிய கவலை

K. Ratnayake, 16 January 2021

தெற்காசிய ஆளும் உயரடுக்குகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை பொருளாதார ரீதியாகவும் மூலோபாய ரீதியாகவும் பெரிதும் தங்கியிருப்பதோடு வாஷிங்டனில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மை அவர்கள் அனைவரையும் நேரடியாக பாதிக்கிறது.

ஜனவரி 6 சதித்திட்டத்திற்காக வாஷிங்டனுக்கு பயணித்தவர்களில் பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் உள்ள "டஜன் கணக்கான" நவ நாஜிக்கள் மற்றும் வெள்ளை மேலாதிக்கவாதிகள் இருந்ததாக FBI வெளிப்படுத்துகின்றது

Jacob Crosse, 16 January 2021

நவ நாஜிகள் மற்றும் பாசிஸ்டுகள் வாஷிங்டனுக்கு வரப்போகிறார்கள் என்பது உள்நாட்டு புலனாய்வு அமைப்புகளுக்குத் தெரியும் என்பது, இராணுவச் செயலாளர் ரியான் மெக்கார்த்தி போன்ற நபர்களின் பொய்யான கூற்றுக்களை மேலும் அம்பலப்படுத்துகிறது

குடியரசுக் கட்சியினர் இரத்தம் சிந்த அழைக்கையில் ஜனநாயகக் கட்சியினர் இரு கட்சியும் இணைந்து செயற்பட அழைப்புவிடுகின்றனர்

Patrick Martin, 15 January 2021

ஜனநாயகக் கட்சியினர் தங்கள் "குடியரசுக் கட்சி சகாக்கள்" என்று குறிப்பிடும் நபர்களின் தன்மை நேற்று வெளிப்பட்டது. ட்ரம்பிற்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் அறிவிப்பில், சபையில் 211 குடியரசுக் கட்சியினரில் 197 பேர் பதவிவிலக்கல் குற்றச்சாட்டுக்கு எதிராக வாக்களித்தனர்

பிரான்சின் புதிய முதலாளித்துவக் கட்சி வாஷிங்டனில் ட்ரம்பின் பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு சதியை மறுக்கிறது

Alex Lantier, 14 January 2021

ஒரு தீவிர வலதுசாரி கும்பலால் நாடாளுமன்ற கட்டிடம் தாக்கப்பட்ட பின்னர், நடுத்தர வர்க்க NPA, ஒரு சதி முயற்சிக்கப்படவில்லை என மறுத்து, ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை எச்சரித்தவர்களை "பூர்சுவாக்கள்" என்று கண்டித்தது

ஜனநாயகக் கட்சியினர் "ஒற்றுமை" மற்றும் "குணப்படுத்துதல்" ஐ போதிக்கின்றனர், அமெரிக்க பாசிஸ்டுகள் வன்முறையைத் தயாரிக்கிறனர்

Eric London, 14 January 2021

ஆட்சி கவிழ்ப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், குடியரசுக் கட்சி சதிகாரர்களுடன் சமரசம் செய்வதற்கான ஜனநாயகக் கட்சியின் தேடல் அமெரிக்காவில் பாசிசத்தின் எழுச்சியைத் தடுக்க ஒரு சுயாதீனமான தொழிலாள வர்க்க இயக்கத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது

ட்ரம்ப்பின் சதிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு! அரசியல் பொது வேலைநிறுத்தத்திற்கு தயார்செய்!

Statement of the Socialist Equality Party, 13 January 2021

ஜனவரி 20, பதவியேற்பு தினத்தை மையமாகக் கொண்டு அமெரிக்கா முழுவதுமான வலதுசாரி வன்முறை அச்சுறுத்தல்களை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் மற்றும் தொழிலாள வர்க்க இயக்கத்தால் எதிர்க்கப்பட வேண்டும்

ஜனவரி 6 வன்முறை பற்றி வெளிவரும் புதிய விவரங்கள் அதுதொடர்பான முழு அளவிலான விசாரணையின் அவசியத்தை வெளிப்படுத்துகின்றன

Eric London, 12 January 2021

ட்ரம்பின் ஜனவரி 6 பாசிசக் கிளர்ச்சிக்கு குடியரசுக் கட்சி, காவல்துறை மற்றும் இராணுவ-உளவுத்துறை அமைப்பின் முக்கியமான பிரிவுகளிலிருந்து உயர்மட்ட ஆதரவைப் பெற்றிருந்தது

புதன்கிழமை ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் அரசு உயர் மட்டத்திலிருப்போர் ஈடுபட்டிருந்த விவரங்கள் வெளிப்படுகின்றன

Eric London, 11 January 2021

இராணுவம், பொலிஸ் மற்றும் குடியரசுக் கட்சியின் பிரிவுகளின் ஈடுபாட்டுடன் பாசிச ஆட்சிக் கவிழ்ப்பு தயாரிக்கப்பட்டதையும், ஆபத்து கடந்துவிடவில்லை என்பதையும் புதிய தவல்கள் வெளிப்படுத்திக் காட்டுகின்றன

பைடென் குடியரசுக் ஆட்சியின் ஆட்சிக்கவிழ்ப்பு சதிகாரர்களைப் பாதுகாக்கிறார்

Joseph Kishore, 11 January 2021

ஜனாதிபதி ட்ரம்பால் தூண்டப்பட்டு, குடியரசுக் கட்சியின் உயர் அதிகாரிகளின் ஆதரவுடன், நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்ற கட்டிடத்தை தாக்கிய 48 மணி நேரத்திற்குள், பைடென் தனது "குடியரசுக் கட்சி சகாக்களுடன்" நல்லிணக்கத்திற்கு அழைப்பு விடுத்தார்

ஐரோப்பிய அரசியல்வாதிகளும் ஊடகங்களும் அமெரிக்க சதியை ஆபத்து இல்லாததாக காட்டுகின்றன

Peter Schwarz, 9 January 2021

அவர்களின் முக்கிய கவலை அமெரிக்க ஜனநாயகத்திற்கு அது அச்சுறுத்தல் என்பதாலல்ல, மாறாக ஜனவரி 6 ஆம் திகதி மிகவும் அப்பட்டமாக வெளிப்பட்ட அதன் மேம்பட்ட சிதைவு, சர்வாதிகார மற்றும் பாசிச போக்குகள் மிகவும் வளர்ச்சி கண்டுள்ள ஐரோப்பாவிலும் இதேபோன்ற நிகழ்வுகளுக்கான எதிர்ப்பை வலுப்படுத்த முடியும் என்ற அச்சத்தாலாகும்

ஜனவரி 6 பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு

David North, 8 January 2021

வாஷிங்டன் டி.சி.யில் நடந்த பாசிச கிளர்ச்சி அமெரிக்காவின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகும்

தேர்தல் முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்க காங்கிரஸ் சபை ஒன்றுகூடுகையில், ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ட்ரம்ப் தீவிரப்படுத்துகிறார்

Andre Damon, 7 January 2021

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2020 ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை நிராகரிப்பதற்கும், அரசியலமைப்பை அகற்றுவதற்கும், அமெரிக்காவில் ஒரு சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கும் ஒரு சதித்திட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்பதை இந்த வார நிகழ்வுகள் தெளிவுபடுத்தியுள்ளன

தேர்தல் ஆட்சிக்கவிழ்ப்புச் சதியைத் தொடர்வதில் ட்ரம்பின் அடாவடித்தன அணுகுமுறைகளை ஒலிநாடா அம்பலப்படுத்துகிறது

Patrick Martin, 5 January 2021

உடனடியான விளைவு என்னவாக இருந்தாலும், வெள்ளை மாளிகையில் பைடெனைக் கொண்டு ட்ரம்பைப் பிரதியீடு செய்வது அரசியல் நெருக்கடி முடிந்துவிட்டதைக் குறிக்காது, மாறாக அது புதிய மற்றும் இன்னும் வெடிப்பார்ந்த அத்தியாயத்தின் தொடக்கமாக மட்டுமே இருக்கும்

ஜனாதிபதி தேர்வுக்குழு ஜனநாயகக் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்திய பின்னரும்

பைடென் வெள்ளை மாளிகை நோக்கிச் செல்ல தடுமாறுகிறார்

Patrick Martin மற்றும் Joseph Kishore, 16 December 2020

“ஒற்றுமை” குறித்து பைடென் உபதேசித்தாலும், அமெரிக்காவில் சமூக பதட்டங்கள் ஜனநாயகத்தின் பாதுகாப்பு சுவிட்சுகளில் மின்குறுக்கீட்டை ஏற்படுத்தும் புள்ளியை எட்டிவிட்டன என்பதே யார்த்தமாக உள்ளது

பைடென் வெற்றியை மாற்றியமைக்க பதினெட்டு மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தை வலியுறுத்துகின்றன

Patrick Martin, 14 December 2020

டெக்சாஸ் மற்றும் பிற 17 மாநிலங்கள் தேர்தல் முடிவுகளை சவால் செய்கையில், ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஜோ பிடென் வென்ற வாக்குகளின் நியாயத்தன்மையை நான்கு போர்க்கள மாநிலங்களும் 20 ஏனைய மாநிலங்களும் பாதுகாக்கின்றன

ஜனவரி 20 க்கு முன்னதாக ஐந்து பெடரல் மரண தண்டனைகளுக்குத் திட்டமிடும் ட்ரம்ப் நிர்வாகம், துப்பாக்கியால் சுடுதல், மின்நாற்காலி மற்றும் மூச்சுத்திணறடித்து கொல்லும் முறைகளைப் பயன்படுத்த அனுமதி வழங்குகிறது

Kate Randall, 8 December 2020

பதவியேற்புக்கு முந்தைய வாரங்களில் இந்த மரணதண்டனைகளை நிறைவேற்றுவதற்கான அவசரமும், கைதிகளை கொலை செய்வதற்கான பல்வேறு காட்டுமிராண்டித்தனமான வடிவங்களை அனுமதிக்கும் ஒழுங்குமுறைகளும், ஜனாதிபதி ட்ரம்ப்பின் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து மற்றும் அதைச் சுற்றியுள்ள பாசிச சக்திகளால் ஊக்குவிக்கப்பட்ட வன்முறைகளுக்கு ஏற்ப உள்ளன

பாரியளவிலான வாக்கு மோசடி குறித்து பேஸ்புக் உரை பொய்யாக வாதிடுகிறது

டொனால்ட் ட்ரம்பின் எனது போராட்டம் (Mein Kampf)

Patrick Martin, 5 December 2020

"திருடப்பட்ட தேர்தல்" என்ற ஆதாரமற்ற கூற்றுக்களோடு ட்ரம்ப் வேண்டுமென்றே பாசிச சக்திகளைத் தூண்டுகிறார்

பைடெனின் பொருளாதார அணி: நேரடியாக வோல் ஸ்ட்ரீட்டில் இருந்து

Patrick Martin, 4 December 2020

இன மற்றும் பாலின வேறுபாட்டின் திரைக்கு பின்னால், பைடென் நிர்வாகம் ஆளும் வர்க்கத்தின் அரசாங்கமாகவும் இருக்கும்

பெடரல் முகமை பைடென் மாற்றத்தின் மீதிருந்த முட்டுக்கட்டைகளை நீக்குகிறது என்றாலும், ட்ரம்ப் தேர்தல் ஆட்சிக்கவிழ்ப்பு சதியைத் தொடர அறைகூவல் விடுக்கிறார்

Barry Grey, 2 December 2020

தொடர்ந்து கொண்டிருக்கும் சர்வாதிகார அச்சுறுத்தலைக் குறித்து தொழிலாள வர்க்கத்தை எச்சரித்தாக வேண்டும், ஏற்கனவே என்ன நடந்துள்ளதோ மற்றும் என்ன தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறதோ —பதவியிலிருக்கும் ஜனாதிபதி தேர்தல்களில் அவரின் தோல்வியை ஏற்க மறுப்பது— அமெரிக்காவில் முதலாளித்துவ ஜனநாயகத்தில் என்ன எஞ்சியிருக்கிறதோ அதன் திரும்பப் பெறவியலாத பொறிவைப் பிரதிநிதித்துவம் செய்கிறது

எண்ணிக்கைகளை நீதிமன்றம் தீர்மானிக்கின்ற நிலையில்

ட்ரம்ப் தேர்தலைச் செல்லாததாக்கும் முனைவைத் தொடர்கிறார்

Patrick Martin, 1 December 2020

2020 தேர்தல் முடிவுகளைத் தலைகீழாக ஆக்குவதற்கும் மற்றும் மில்லியன் கணக்கான வாக்குகளை முடக்குவதற்குமான முயற்சிகளுக்கு அழுத்தமளிப்பதை ட்ரம்ப் தொடர்ந்து கொண்டிருக்கிறார்

ட்ரம்ப் ஈரானுக்கு எதிரான ஒரு போருக்குச் சதி செய்கிறாரா?

Bill Van Auken, 18 November 2020

தேர்தல் தோல்வியை ஏற்க மறுத்து, பென்டகனின் உயர் பதவிகளை நீக்கிய பின்னர், அமெரிக்க ஜனாதிபதி ஈரானுக்கு எதிரான போரின் வடிவத்தில் "டிசம்பர் ஆச்சரியத்தை" வெளியிடுவார் என்ற ஆபத்து அதிகரித்து வருகிறது

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் “எழ வேண்டும்” என ட்ரம்ப்பின் ஆலோசகர் அழைப்பு விடுகிறார்

Patrick Martin, 18 November 2020

ஜனநாயக கட்சி ஆளுநர் கிரெட்சன் விட்மர் அறிவித்த புதிய பொது சுகாதார நடவடிக்கைகளுக்கு எதிராக மிச்சிகன் மக்கள் "எழ வேண்டும்" என்று வெள்ளை மாளிகையின் கொரோனா வைரஸ் "ஆலோசகர்" டாக்டர் ஸ்காட் அட்லஸ் அழைப்பு விடுத்துள்ளார்

ட்ரம்ப் தேர்தல் குழு மில்லியன் கணக்கான வாக்குகளை முடக்குவதற்கான கோரிக்கைகளுக்கு அழுத்தமளிக்கிறது

Patrick Martin, 17 November 2020

பைடென் வெள்ளை மாளிகையில் நுழைகையில், அமெரிக்க இராணுவ-உளவுத்துறை யாரைக் கொல்ல, யாரைக் கவிழ்க்க அல்லது யாரைப் பதவியிலிருந்து வெளியேற்ற திட்டமிட்டு வருகிறது என்பதைக் குறித்து அவர் அறிந்திருக்க வேண்டும், ஆகவே தொடர்ச்சியான செயல்பாடுகளில் எந்த தொந்தரவும் இருக்கக் கூடாது என்று சுட்டிக்காட்டி, அவர்கள் "தேசிய பாதுகாப்பு" கவலைகளைக் குறிப்பிட்டனர்

அரச வழக்குத்தொடுனரின் அறிக்கை:

மிச்சிகன் சதிகாரர்கள் தலைநகரைத் தாக்கவும், மரணதண்டனையை நேரடியாக ஒளிபரப்பவும், சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து பூட்டி கட்டிடத்தை எரிக்கவும் திட்டமிட்டனர்

Eric London, 14 November 2020

ஜனநாயகக் கட்சி அதிகாரிகள் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான பரந்த தாக்குதலை சான்றுகள் சுட்டிக்காட்டினாலும், ஜனநாயகக் கட்சியும் இந்த தாக்குதல் குறித்து முற்றிலும் மௌனமாக இருந்து வருகிறது

2020 தேர்தல் முடிவை மறுத்தளிக்கும் முடிவை ட்ரம்ப் தீவிரப்படுத்துகிறார்

Patrick Martin, 13 November 2020

அமெரிக்க நகரங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களை துருப்புகளைப் பயன்படுத்தி ஒடுக்குவதை பாதுகாப்புத்துறை செயலர் எஸ்பர் எதிர்த்தார் என்பதற்காக திங்களன்று மதியம் ட்ரம்ப் ஒரு ட்வீட் செய்தியில் எஸ்பரைப் பணியிலிருந்து நீக்கினார்— "தோல்வியடைந்து வரும்" ட்ரம்ப், எஸ்பருக்கு அடுத்த பென்டகன் தலைவரைக் கொண்டு அதை சீர்செய்ய கருதுகிறார்

2020 தேர்தல்களை செல்லத்தகாததாக ஆக்கும் ட்ரம்பின் சூழ்ச்சியை நிறுத்துவோம்!

Socialist Equality Party (US) Political Committee, 10 November 2020

கடந்த 48 மணிநேர நிகழ்வுகள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது தேர்தல் தோல்வியை ஏற்க மறுத்து வருவதாகவும், தேர்தல்களைத் தகர்த்து ஒரு தனிப்பட்ட சர்வாதிகாரத்தை நிலைநாட்ட தீவிரமாக ஒரு சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெளிவுபடுத்தியுள்ளது

வாக்காளர்கள் ட்ரம்பை நிராகரிக்கையில் பைடென் குடியரசுக் கட்சியினரிடம் “ஐக்கியத்திற்கு” அழைப்புவிடுக்கிறார்

Eric London, 9 November 2020

ட்ரம்பிற்கு எதிராக வாக்களித்த மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை தூண்டும் உணர்வுகளுக்கும் ஜனநாயகக் கட்சி பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளின் கவலைகளுக்கும் இடையில் ஒரு பாரிய இடைவெளி உள்ளது

ட்ரம்ப் தோல்வியை ஒப்புக் கொள்ள மறுப்பது தேர்தலுக்கு பிந்தைய நெருக்கடிக்கு களம் அமைக்கிறது

Joseph Kishore மற்றும் David North, 6 November 2020

ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடென் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு போதுமான மாநிலங்களை வெல்லும் விளிம்பில் இருப்பதாகத் தோன்றுகையில், ட்ரம்ப் முடிவுகளை ஏற்க மறுப்பது, அரசியல் நெருக்கடியை தீவிரப்படுத்தும்

புதிய கோவிட்-19 நோய்தொற்றுக்கள் கட்டுப்பாடற்று பரவிக் கொண்டிருக்கையில்

ட்ரம்ப் தொற்றுநோயை "பொறுப்புணர்வுடன்" எடுத்துக் கொள்ளவில்லை என கருத்துரைத்ததற்காக வெள்ளை மாளிகை ஃபவுசியை தாக்குகிறது

Benjamin Mateus, 5 November 2020

ட்ரம்பின் கொள்கைகள் அமெரிக்காவை "முழு ஆபத்திற்கு" இட்டுச் செல்கிறது என உயர் தொற்று நோய் நிபுணர் அந்தோனி ஃபவுசி எச்சரித்ததை அடுத்து, "அரசியலை கையாள்வதாக" வெள்ளை மாளிகை கண்டித்தது

மில்லியன் கணக்கானவர்கள் ட்ரம்புக்கு எதிராக வாக்களிக்கையில், அவர் வன்முறைக்கும் வாக்குகளை முடக்கவும் முன்நகர்கிறார்

Patrick Martin, 4 November 2020

ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான மக்கள் சீற்றத்தால் தூண்டப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை சாதனை அளவில் உள்ளது

நோய்தொற்று பரவலும் 2020 தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் பதிவேடும்

David North, 3 November 2020

ஒரு பெரிய வரலாற்று நெருக்கடி, -இந்த நோய்தொற்றும் அந்த அளவிலானதே- அனைத்து கட்சிகளினதும் முன்னோக்குகளையும் வேலைத்திட்டங்களையும் வெளிப்படுத்துகிறது மற்றும் பரிசோதிக்கிறது

அறிமுகக் கருத்துக்கள், “2020 தேர்தலின் முன்வேளையில் அமெரிக்க ஜனநாயகத்தில் எஞ்சியிருப்பது என்ன?

David North, 3 November 2020

பின்வருவது சான் டியாகோ மாநில பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறையால் அழைக்கப்பட்ட நிகழ்விற்கு உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த்தினால் வழங்கப்பட்ட ஆரம்ப உரையாகும்

பௌசியை குறிவைத்து ட்ரம்ப் பாசிச கிளர்ச்சியை தீவிரப்படுத்தியுள்ளார்

Barry Grey, 24 October 2020

பிரச்சார பேரணிகள் மற்றும் ட்வீட்டுகளில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக பாசிச வன்முறையைத் தூண்டும் முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளார்

மிச்சிகன், மஸ்கீகன் கூட்டத்தில்

ட்ரம்ப் வன்முறை மற்றும் சர்வாதிகார அச்சுறுத்தலைத் தீவிரப்படுத்துகிறார்

Patrick Martin, 22 October 2020

சர்வாதிகாரம் மற்றும் பாசிசவாத வன்முறையை நோக்கிய உந்துதல் அமெரிக்காவில் நிலவும் மலைப்பூட்டும் அளவிலான சமூக முரண்பாடுகளிலிருந்து எழுகிறது

ட்ரம்ப் நிர்வாகம், கொரோனா வைரஸ் குறித்து செல்வந்த முதலீட்டாளர்களை எச்சரிக்கும் அதேவேளை, பொதுவில் அதன் அச்சுறுத்தலை குறைத்துக் காட்டுகிறது

Jacob Crosse, 20 October 2020

அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் முதன்மை அக்கறை, ஒரு கொடிய தொற்றுநோயிலிருந்து மக்களை பாதுகாப்பது பற்றியதாக இருக்கவில்லை

ஜனநாயகக் கட்சியினரும் பெருநிறுவன ஊடகங்களும் மிச்சிகன் ஆட்சி கவிழ்ப்பு சதியில் ட்ரம்பின் பங்கை மறைக்கின்றன

Eric London, 12 October 2020

இந்த நவம்பரில் கிளர்ச்சியை நடத்த எத்தனை பாசிச குழுக்கள் அணிதிரட்டப்பட்டு வருகின்றன? அடுத்து எந்த ஆளுநர்கள்? அவர்களின் “கொலை பட்டியல்களில்” உள்ள மற்ற நபர்கள் யார்?

வெள்ளை மாளிகை தொற்றுநோய்க்கு மத்தியிலும் ட்ரம்ப் அரசியல் சதியைத் தீவிரப்படுத்துகிறார்

Andre Damon மற்றும் Joseph Kishore, 12 October 2020

ஒரு காரணி ட்ரம்பிற்கு ஆதரவாக வேலை செய்து கொண்டிருக்கிறது: அதாவது, ஜனநாயகக் கட்சியின் போலித்தனமான, முதுகெலும்பற்ற, அடிப்படையில் பிற்போக்குத்தனமான தன்மை

மிச்சிகன் சதி, ட்ரம்பும் 2020 தேர்தலும்

Eric London, 10 October 2020

இந்த தாக்குதல்கள், தற்போதைய ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு அடிப்படையை அமைப்பதற்கான ஒரு திட்டமிட்ட மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இருந்தன என்பது இப்போது தெளிவாகியுள்ளது

வேலைக்கு திரும்ப செய்வதற்கான கொள்கையை பெருமைப்பீற்றவும் தேர்தல் சதித் திட்டங்களை தீவிரப்படுத்தவும் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்புவைதை அரங்கேற்றுகிறார்

Patrick Martin, 10 October 2020

தேர்தல்களில் அனேகமாக குறிப்பிடத்தக்க தோல்வி ஏற்படலாம் என்று தெரிவதால், பதவியில் தங்கியிருப்பதற்கான ட்ரம்பின் மூலோபாயம் தேர்தல்முறை அல்லாத, சட்டவிரோதமான, அரசியலமைப்புக்குப் புறம்பான, வன்முறையான அணுகுமுறைகளைப் பயன்படுத்துவதன் மீது ஒருங்குவிந்துள்ளது

ட்ரம்பின் சர்வாதிகாரத் திட்டம்: விவாதம் எதை அம்பலப்படுத்தியது

Joseph Kishore மற்றும் David North, 6 October 2020

டொனால்ட் ட்ரம்புக்கும் ஜோசப் பைடெனுக்கும் இடையே செவ்வாய்கிழமை இரவு நடந்த விவாதத்தின் சீர்கெட்ட காட்சி, வரலாற்றில் அமெரிக்காவினது உண்மையின் தருணமாக நினைவுகூரப்படும்

கோவிட்-19 உயிரிழப்புகள் ஒரு மில்லியனை நெருங்குகையில்

தொற்றுநோய்க்குத் தயாரிப்பு செய்ய தவறியதற்காக உலக சுகாதார அமைப்பு அரசாங்கங்களைக் கண்டிக்கிறது

Bryan Dyne, 23 September 2020

இந்த தொற்றுநோய் பெரிதும் ஒருங்கிணைந்த இந்த நவீன சமூகத்தின் இயல்புக்கும் மற்றும் முதலாளித்துவத்தின் பகுத்தறிவற்ற காலங்கடந்த தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான முரண்பாட்டை அம்பலப்படுத்தி உள்ளது.

அமெரிக்க மரண எண்ணிக்கை 200,000 ஐ எட்டுகையில், ட்ரம்ப் சமூக நோயெதிர்ப்புச் சக்தி பெருக்கத்திற்கு அழைப்பு விடுக்கிறார்

Andre Damon, 19 September 2020

“மருத்துவ நெருக்கடியைக் கடந்து செல்ல, நாம் இந்த வைரஸூடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும்,” என்று கடந்த மாதம் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ட்வீட் செய்தார்

உள்நாட்டு போர் தேர்தல்

Statement of the Socialist Equality Party (US) Political Committee, 12 September 2020

ஒவ்வொரு போராட்டத்திலும் அரசியல் அதிகாரம் சம்பந்தப்பட்ட கேள்வியே பிரச்சினையில் உள்ளது: அதாவது, எந்த வர்க்கத்தின் ஆட்சி, யாருடைய நலன்களுக்காக ஆள்கிறது! முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக இயக்கப்படும் ஒரு தீர்வுதான், இந்த நெருக்கடிக்கான ஒரே தீர்வாகும்.

அமெரிக்காவிற்கும் உலகிற்கும் எதிரான சதி: அமெரிக்க அரசாங்கமும் ஊடகங்களும் COVID-19 தொற்றுநோய் பற்றிய உண்மையை எவ்வாறு ஒடுக்கின

Bryan Dyne and Andre Damon, 11 September 2020

மூத்த வாஷிங்டன் போஸ்ட் நிருபரும் ஸ்தாபக உள் இரகசியங்களை அறிந்தவருமான பாப் வூட்வார்ட், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனான தொலைபேசி அழைப்புகளின் பதிவுகளை வெளியிட்டார்

அமெரிக்கா கொரோனா வைரஸ் தொற்றுநோயின் புதிய கட்டத்தில் நுழைகிறது: ஜனவரிக்குள் 400,000 க்கும் அதிகமான உயிரிழப்புகளை அறிக்கை மதிப்பிடுகிறது

Joseph Kishore—SEP candidate for US President, 9 September 2020

“சமூகளவில் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்கும்" ஆளும் வர்க்க கொள்கை —அதாவது எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் அந்த வைரஸ் பரவுவதை அனுமதிப்பது என்பது வரவிருக்கும் மாதங்களில் முன்பினும் அதிகமாக பயங்கர மரண எண்ணிக்கைக்கான நிலைமைகளை உருவாக்குவதில் பிரதான காரணியாக உள்ளது

ட்ரம்ப் “பாசிச தலைவர்” ஆக போட்டியிடுகிறார்

By Jacob Crosse and Andre Damon, 5 September 2020

இந்த புதுப்பிக்கப்பட்ட எதிர்ப்புகளுக்கு ட்ரம்பின் பதிலிறுப்பு ஒரு பாரிய ஒடுக்குமுறையை தொடங்குவதாக உள்ளது

போர்ட்லாந்து, கெனொசாவில் வலதுசாரி வன்முறையை ட்ரம்ப் ஆமோதிக்கிறார்

By Patrick Martin, 3 September 2020

ட்ரம்ப் பாசிசக் கூறுகளைத் திரட்ட முற்படுகையில், அவரது ஜனநாயகக் கட்சி எதிர்ப்பாளர் ஜோ பைடன் கொள்ளை மற்றும் கலகத்தை” கண்டிக்கிறார் மற்றும் பெருவணிகத்திற்கும் இராணுவத்திற்கும் தனது முக்கிய வேண்டுகோளை விடுக்கிறார்

சமூக நெருக்கடியும், வர்க்க போராட்டமும், 2020 தேர்தலும்

Andre Damon, 1 September 2020

கோவிட்-19 தொற்றுநோய் வெடிப்பு அமெரிக்க சமூகத்தை ஆழமாக நிலைகுலைத்துள்ளது. 185,000 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 16 மில்லியன் பேர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர்

குடியரசு கட்சியின் தேசிய மாநாடு: ஒரு பீதியடைந்துள்ள ஆளும் வர்க்கம் பாசிசவாத வன்முறையைத் தூண்டுகிறது

Patrick Martin, 28 August 2020

ஒரு பாசிசவாத இயக்கத்திற்கு இப்போது அங்கே பாரிய சமூக அடித்தளம் இல்லையென்றாலும், அதுபோன்றவொரு இயக்கத்திற்கான அடித்தளத்தை உருவாக்க முதலாளித்துவத்தின் மிகவும் பிற்போக்கான பிரிவுகளினது முனைவு தான் ட்ரம்பில் வெளிப்பாட்டைக் காண்கிறது

பைடென், ஹரீஸ் பிரச்சாரமும் “குறைந்த தீங்கு” அரசியலின் முட்டுச்சந்தும்

Joseph Kishore—SEP candidate for US president, 19 August 2020

ஜனநாயகக் கட்சியின் தேர்தல் தந்திரோபாயக் கருத்தாய்வுகளுக்கு தொழிலாள வர்க்கத்தை அடிபணியச் செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் சோசலிச சமத்துவக் கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தில் நிராகரிக்கிறது

அமெரிக்க நிதிய தன்னலக்குழு மரணத்திலிருந்து எவ்வாறு இலாபம் ஈட்டுகின்றது

Andre Damon, 17 August 2020

புளூம்பேர்க்கின் பில்லியனர்கள் பற்றிய குறியீட்டின்படி, அமெரிக்க பணக்கார பத்து பில்லியனர்களில் ஒன்பது பேர் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட இப்போது செல்வந்தர்களாக உள்ளனர். இந்த பத்து பேர்கள் மொத்தமாக கடந்த ஆண்டில் 200 பில்லியன் டாலர்களைப் பெற்றுள்ளனர். அவர்களின் ஒருங்கிணைந்த செல்வம் 906 பில்லியன் டாலர்களை எட்டி, முந்தைய ஆண்டை விட 22 சதவீதம் அதிகரித்துள்ளது.

ட்ரம்ப் தேர்தலைத் தாமதப்படுத்த முனைகையில், இரண்டு கட்சிகளும் இராணுவத்தை மத்தியஸ்தராக இருக்க அழைப்புவிடுகின்றன

By Eric London, 1 August 2020

ஒவ்வொன்றும் சட்டரீதியான சவாலைச் சார்ந்துள்ள நிலையில், ஜனவரி 20 இல் யார் ஜனாதிபதி ஆவார் என்பது யாருக்கும் தெரியாது என்பதற்கான சாத்தியக்கூறு உள்ளது

அமெரிக்கா பெய்ஜிங்கில் ஆட்சி-மாற்ற கொள்கையை ஏற்கிறது

Peter Symonds, 30 July 2020

பொம்பியோ வெறுமனே ட்ரம்ப் நிர்வாகத்திற்காக மட்டும் பேசவில்லை, மாறாக அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் செல்வாக்கான பிரிவுகளுக்காக பேசுகிறார்

ட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை நிறுத்துவோம்! எதேச்சதிகாரத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவோம்!

Statement of the Socialist Equality Party, 29 July 2020

நாடெங்கிலுமான நகரங்களில் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக ட்ரம்ப் நிர்வாகம் துணை இராணுவப்படைப்பிரிவுகளை அனுப்பி இருப்பதானது மக்களுக்கு எதிரான ஒரு போர் பிரகடனத்திற்கு நிகராக உள்ளது

அமெரிக்காவில் இறப்பு 150,000 யும் தாண்டி முடிவின்றி தொடர்கிறது

Andre Damon, 27 July 2020

ட்ரம்பின் நடவடிக்கைகள் அண்ணளவாக 150,000 மக்களின் தடுக்கப்படக்கூடிய இறப்புக்களுக்கு வழிவகுத்தன, அவர் விரும்பியதைச் செய்ய முடிந்தால், மேலும் நூறாயிரக்கணக்கானவர்கள் இறந்துபோவார்கள்

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் சீனாவுடனான மோதலுக்கான நிகழ்வை கட்டமைக்கிறார்

By Peter Symonds, 26 July 2020

பொம்பியோ சூசகமாக, ஒரு நீடித்த புதிய பனிப்போர் தொடங்காது, ஆனால் பெய்ஜிங்கில் ஆட்சி மாற்றத்தை நோக்கமாக கொண்ட ஒரு கொள்கை இருக்கும் என்பதை அறிவிக்கிறார்

நூற்றுக்கணக்கான கூட்டாட்சி முகவர்களை சிகாகோவுக்கு அனுப்ப ட்ரம்ப் உத்தரவிடுகிறார்

By Patrick Martin, 25 July 2020

சமீபத்திய ஆண்டுகளில் நிகழ்ந்த இரத்தக்களரிமிக்க எழுச்சி என்பது ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்பின் சமூக சிதைவின் வெளிப்பாடாகும்

சீனாவின் ஹூஸ்டன் துணைத் தூதரகத்தை மூட அமெரிக்க உத்தரவு பிறப்பித்தமை போரின் அபாயத்தை அதிகரிக்கின்றது

Mike Head, 25 July 2020

ஹூஸ்டனில் உள்ள தனது துணைத் தூதரகத்தை மூன்று நாட்களுக்குள் மூடுமாறு சீனாவிற்கு ட்ரம்ப் நிர்வாகம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. இது சீனாவுடனான அமெரிக்க மோதலை ஆபத்தான மற்றும் முன்னோடியில்லாதவகையில் தீவிரமாக்கும் நடவடிக்கையாகும்

அமெரிக்கா எங்கிலும் துணைஇராணுவ பொலிஸை அனுப்புவதற்கான ட்ரம்பின் திட்டம்: ஆளும் வர்க்கம் உள்நாட்டு போருக்குத் தயாரிப்பு செய்கிறது

Patrick Martin, 24 July 2020

அமெரிக்க ஆளும் வர்க்கம் வரலாற்று ரீதியிலும், சட்ட ரீதியிலும், அரசியல் ரீதியிலும் வரம்பை மீறிவிட்டது. வார்ப்புரு வடிவமைக்கப்படுகிறது, கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக அமெரிக்காவில் நிலவிய ஜனநாயக ஆட்சி வடிவங்களின் அந்தி நேரத்தை காண்கிறோம்

ஒரேகன் போர்ட்லாந்தில் ட்ரம்பின் பொலிஸ்-அரசு தாக்குதல்

Patrick Martin, 23 July 2020

ட்ரம்ப், போர்ட்லாந்து நிலைமையை ஏனைய நகரங்களிலும் அதேபோன்ற நடவடிக்கைகளுக்கான ஒரு முன்மாதிரியாக பயன்படுத்த நோக்கம் கொண்டுள்ளார்

சீனாவுக்கு எதிரான அமெரிக்க போர் முனைவு தீவிரப்படுத்தப்படுகிறது

Peter Symonds, 10 July 2020

ட்ரம்பின் கீழ், 2018 இல் பென்டகன் அறிவிக்கையில், “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" அல்ல, வல்லரசு போட்டியே அதன் தலையாய முன்னுரிமை என்று அறிவித்ததுடன், ரஷ்யாவும் சீனாவும் அதன் முக்கிய போட்டியாளர்களாக அடையாளம் காட்டப்பட்டது

சமத்துவமின்மையின் தொற்றுநோய்: அமெரிக்க முதலாளித்துவம் எவ்வாறு உயிர்களை விட இலாபங்களை முன்நிறுத்துகிறது

Andre Damon, 4 July 2020

உயிரிழப்பு எண்ணிக்கை இப்போது 130,000 ஆக உள்ளது. இது, முதலாம் உலக போர், வியட்நாம் போர் மற்றும் கொரியப் போரில் அமெரிக்க போர்களத்தில் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கைக்கு ஏறத்தாழ சமமாகும்

அமெரிக்க உச்சநீதிமன்றம் சமீபத்திய புகலிடம் கோருவோருக்கு ஆட்கொணர்வு மனு அல்லது உரிய வழக்கு தொடர்வதற்கான உரிமை இல்லை என தீர்ப்பளிக்கிறது

By Eric London, 30 June 2020

துரைசிங்கத்தின் தீர்ப்பானது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் ஏற்படுத்தப்பட்ட வன்முறை மற்றும் வறுமையிலிருந்து தப்பியோடும் மில்லியன் கணக்கான ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை, விசாரிக்காமலே கூட்டாக நாடுகடத்தப்படுவதற்கான கதவைத் திறக்கிறது

அமெரிக்கா இந்திய-சீன மோதலை தூண்டுகிறது, எல்லை மோதலுக்கு சீன “வலியத்தாக்குதலை” குற்றம் சாட்டுகிறது

By Keith Jones, 20 June 2020

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட மற்றும் போட்டி அணுசக்தி சக்திகளுக்கும் இடையில் ஒரு மோதலைத் தூண்டுவது குறித்து ட்ரம்ப் நிர்வாகம் என்ன தான் அடக்கி வைத்திருந்தாலும் இப்போது அது தெளிவாக புறந்தள்ளப்பட்டுள்ளது

வெள்ளை மாளிகை வாராந்தர $600 அவசரகால வேலையிழப்பு நிதியுதவியை நிறுத்தக் கோருகிறது

Andre Damon, 17 June 2020

அமெரிக்க தொழிலாளர் சக்தியில் 20 சதவீதத்திற்கும் அதிகமானோரான சுமார் 36.5 மில்லியன் பேர் கோவிட் 19 தொற்றுநோயின் காரணமாக வேலையிலிருந்து தூக்கியெறியப்பட்டுள்ளனர்

பொலிஸ் படுகொலைக்கு எதிரான போராட்டங்கள்: முன்னோக்கிய பாதை

Statement of the Socialist Equality Party (US), 16 June 2020

இந்த பாரிய இயக்கம் இன்னமும் அதன் ஆரம்பக் கட்டங்களில் தான் உள்ளது. அது, அரசியல் அர்த்தத்திலும் சரி வேலைத்திட்ட அர்த்தத்திலும் சரி, இன்னும் தனித்துவமான தொழிலாள வர்க்க மற்றும் சோசலிச தன்மையைப் பெறவில்லை

கொடுங்கோன்மை ஆட்சியாளரான ட்ரம்ப் சதித்திட்டத்தை முடுக்கிவிடுவார்

Patrick Martin, 15 June 2020

ட்ரம்ப், இராணுவ சட்டத்தை அறிவிப்பதற்கான ஒரு சாக்குப்போக்கை உருவாக்கவும் மற்றும் அமெரிக்க வீதிகளில் இராணுவத்தை நிலைநிறுத்தவும் தனது முயற்சிகளை முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கிறார்

வோல் ஸ்ட்ரீட் எழுச்சியின் முரண்பாடு

Nick Beams, 11 June 2020

ஆளும் பெருநிறுவன மற்றும் நிதியியல் செல்வந்த தட்டுக்கள் கொரோனா வைரஸுடன் அவற்றால் வாழ முடியும் என்பதை மட்டுமல்ல, மாறாக அதிலிருந்து அவற்றால் இலாபமீட்டி தழைத்தோங்க முடியும் என்பதையும் கற்று வருகின்றன

அதிகாரம் இல்லாத பொலிஸ் சீர்திருத்த மசோதாவை ஜனநாயகக் கட்சியினர் அறிவிக்கின்றனர்

By Barry Grey, 10 June 2020

ஒரு அரசியல் வித்தையுடன் இணைந்த பெரும் வார்த்தைஜாலங்களுடன், ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் தலைமை திங்களன்று தனது “2020பொலிஸ்துறையில் நீதி” என்ற மசோதாவை வெளியிட்டது

பொலிஸ் வன்முறை மற்றும் ட்ரம்பின் சதித்திட்டத்திற்கு எதிராக பிரான்சில் எதிர்ப்புக்கள் வெடிக்கின்றன

By Alex Lantier, 8 June 2020

உண்மையில், 244 ஆண்டுகள் பழமையான அமெரிக்க ஜனநாயகத்தின் மீதான நிதிய பிரபுத்துவத்தின் நேரடி தாக்குதல் என்பது, ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்பும் முறிவின் மோசமான கொடிய நெருக்கடியை எதிர்கொள்கிறது என்பதற்கான எச்சரிக்கையாகும்

வாஷிங்டனில் அரசியல் சதி: ட்ரம்ப் அரசியலமைப்பின் மீது போர் பிரகடனம் செய்கிறார்

Statement of the Socialist Equality Party, 3 June 2020

அமெரிக்க வரலாற்றிலேயே இனவாத பொலிஸ் வன்முறையை எதிர்த்து பல இனங்களையும், பல வம்சாவழியை சேர்ந்த தொழிலாளர்களும் இளைஞர்களும் மிகவும் முக்கியமான ஒற்றுமையைக் காட்டியிருப்பதால் ட்ரம்ப் சீற்றமடைந்துள்ளார்

ஆர்ப்பாட்டக்கார்களுக்கு எதிரான பொலிஸ் வன்முறை வெறியை ட்ரம்ப் தூண்டுகிறார்

Statement of the Political Committee of the Socialist Equality Party, 2 June 2020

ஆர்ப்பாட்டக்கார்களுக்கு எதிராக நாடு தழுவிய வன்முறை, ஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் உயிரைக் கொன்ற கொலைகாரத் தாக்குதலின் தொடர்ச்சியும் விரிவாக்கமும் ஆகும்

ஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் கொலையும் அமெரிக்காவில் பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டமும்

Joseph Kishore—Socialist Equality Party candidate for US president, 30 May 2020

ஆபிரிக்க அமெரிக்கரான ஜோர்ஜ் ஃபுளோய்ட், திங்கள்கிழமை அவரை விட்டுவிடுமாறு கோரிய ஒரு தொகை மக்களின் முன்னால் நான்கு காவல்துறை அதிகாரிகளால் தரையில் அழுத்தப்பட்டதால் இறந்தார்

தொற்றுநோய் மரண எண்ணிக்கை 100,000 ஐ எட்டுகையில், டோவ் ஜோன்ஸ் 25,000 ஐ தொடுகிறது

David North, 29 May 2020

முழுமையாக முதிர்ச்சியடைந்த ஹிட்லராக இருப்பதற்கு கூட இயலாத மிகவும் முட்டாளாக விளங்கும் அவருக்கு, ஓர் உண்மையான பாசிசவாத இயக்கத்திற்கான பாரிய அடித்தளம் எதுவும் இல்லை

மரண எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், வெள்ளை மாளிகை இந்த தொற்றுநோய்க்காக சீனாவைப் பலிக்கடா ஆக்கும் முயற்சிகளை அதிகரிக்கிறது

By Peter Symonds, 19 May 2020

கோவிட்-19 தொற்றுநோய் சம்பந்தமாக பெய்ஜிங்கைப் பலிக்கடா ஆக்குவதை நவார்ரோ சீனாவுடனான வர்த்தகப் போருடனும் மற்றும் அவரின் பாதுகாப்புவாத திட்டநிரலுடனும் நேரடியாக தொடர்புபடுத்துகிறார்

உலகளாவிய கொரொனா வைரஸ் உயிரிழப்புகள் 300,000 ஐ கடந்து அதிகரிக்கையில்

காலத்திற்கு முந்தியே வேலைக்குத் திரும்ப செய்வது "முன்னொருபோதும் இல்லாதளவில் நோய் மற்றும் மரணங்களை" ஏற்படுத்துமென அமெரிக்காவின் இரகசிய ஆவண வெளியீட்டாளர் எச்சரிக்கிறார்

By Bryan Dyne, 18 May 2020

நோய்தொற்று எண்ணிக்கையிலும் உயிரிழப்புகளிலும் உலகில் அமெரிக்கா தான் முன்னிலையில் உள்ளது, அத்துடன் ஒவ்வொரு நாளும் அதிக புதிய நோய்தொற்றுக்கள் மற்றும் உயிரிழப்புகளையும் கொண்டுள்ளது

அமெரிக்க செல்வந்த தட்டு மரணங்களுக்கு சார்பாக முடிவெடுக்கிறது

Niles Niemuth, 6 May 2020

இந்த மாத இறுதியில் நாளொன்றுக்கு 200,000 புதிய நோயாளிகள் உருவாவார்கள், ஜூன் 1 வாக்கில் நாளொன்றுக்கு 3,000 உயிரிழப்புகள் ஏற்படலாமென அந்த அறிக்கை முன்கணிக்கிறது

அமெரிக்க நிர்வாகத்தின் தோல்விகளுக்கு சீனாவை பலிக்கடா ஆக்குதல்

ட்ரம்ப் மற்றும் பொம்பியோவின் "பெரும் பொய்"

Andre Damon, 5 May 2020

“பெரும் பொய்யின்" ஒரு நவீனகால வடிவத்தில், ட்ரம்ப் நிர்வாகம் இந்த கோவிட்-19 தொற்றுநோய் சீன அரசாங்கத்தின் திட்டமிட்ட நடவடிக்கைகளின் விளைபொருள் என்று வாதிட்டு வருகிறது

கோவிட்-19 க்கு எதிரான போராட்டம் ஆதாரவளங்களுக்காக வறண்டு கிடக்கையில், ஆயுதங்களுக்கான உலகளாவிய செலவுகள் 1.9 ட்ரில்லியன் டாலருக்கு உயர்கிறது

By Bill Van Auken, 1 May 2020

சமாதானத்திற்கான ஸ்டாக்ஹோம் சர்வதேச சமாதான ஆராய்ச்சி அமைப்பு (SIPRI) வெளியிட்ட வருடாந்தர அறிக்கையின் தகவல்படி, உலகளாவிய இராணுவ செலவுகள் 2019 இல் 1.9 ட்ரில்லியன் டாலருக்கு அதிகரித்து, பனிப்போருக்குப் பிந்தைய ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது

தொற்றுநோயும், இலாபங்களும் மற்றும் துயரத்தினதும் மரணத்தினதும் மீதான முதலாளித்துவ நியாயப்படுத்தலும்

David North, 23 April 2020

நிதியியல்-பெருநிறுவன செல்வந்த தட்டைப் பொறுத்த வரையில், இந்த தொற்றுநோயானது, வேறு அனைத்திற்கும் மேலாக, ஒரு பொருளாதார நெருக்கடியாக பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் இருந்தே அதன் பிரதான நோக்கம், ஏற்படக்கூடிய உயிரிழப்புகளைக் குறித்ததாக இருக்கவில்லை, மாறாக செல்வந்த தட்டுக்களின் தனிப்பட்ட செல்வவளத்தில் கணிசமான வீழ்ச்சி குறித்ததாக இருந்தது

அமெரிக்க இறப்புக்கள் 40,000 இனை கடக்கையில் பொறுப்பற்ற முறையில் ட்ரம்ப் தனது வேலைக்கு திரும்பு பிரச்சாரத்தை தீவிரப்படுத்துகின்றார்

Andre Damon, 21 April 2020

ஞாயிற்றுக்கிழமை, COVID-19 தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் 40,000 ஐ தாண்டியுள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 20,000 பேர் உயிரிழந்துள்ளனர்

ட்ரம்ப் நிறைவேற்று அதிகார உத்தரவு விண்வெளியில் அமெரிக்க சொத்து உரிமைகளை வலியுறுத்துகிறது

Don Barrett, 14 April 2020

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று "விண்வெளியிலுள்ள மூலவளங்களை கண்டுபிடிப்பதற்கும் மற்றும் பயன்படுத்துவதற்கும் சர்வதேச ஆதரவை ஊக்குவித்தல்" என்ற ஒரு நிறைவேற்று ஆணையில் கையெழுத்திட்டார்

ஜெனரல் மோட்டார்ஸ் இலாபங்களைக் கோருகின்ற நிலையில், அமெரிக்காவில் சுவாச கருவிகளின் பற்றாக்குறை பத்தாயிரக் கணக்கான உயிர்களை அச்சுறுத்துகிறது

Andre Damon, 30 March 2020

அமெரிக்கா எங்கிலுமான நகரங்களில், COVID-19 தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் இரட்டிப்பாகி வருகின்ற நிலையில், மருத்துவமனைகளோ அவற்றின் முழுமையான கொள்திறனை நெருங்கி வருகின்றன

கொரோனா வைரஸ்: இத்தாலிய நெருக்கடிக்கு பிரான்ஸ் தயாராகி வருகிறது

Anthony Torres, 18 March 2020

ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஒரு இத்தாலிய சூழ்நிலை ஏற்படும் என்ற அச்சத்தில், பிரெஞ்சு அரசாங்கம் சனிக்கிழமை மாலை 3 ஆம் கட்டத்தை அறிவித்ததை தொடர்ந்து, அத்தியாவசியமற்ற பொது நிறுவனங்கள் மூடப்பட்டன

மோடியின் ஆதரவாளர்கள் டெல்லியை வகுப்புவாத வன்முறையில் மூழ்கடிக்கையில், ட்ரம்ப் அவரை புகழ்கிறார்

Keith Jones, 2 March 2020

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று அகமதாபாத்தில் நடந்த ஒரு பேரணியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சிங்கமாக வருணித்தார்

ட்ரம்ப் நிர்வாகத்தின் உளவுபார்ப்பு பொறி

Niles Niemuth, 12 February 2020

அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோரை நாடு கடத்தவும் மற்றும் அவர்கள் எல்லை கடக்கும் போது அவர்களைக் கண்டறியவும் உதவுவதற்காக மில்லியன் கணக்கான கைபேசிகளின் இடம் மற்றும் நகர்வைக் கண்காணிக்கும் ஒரு வர்த்தகரீதியிலான தகவல் களஞ்சியத்தை அணுகும் உரிமையை ட்ரம்ப் நிர்வாகம் விலைக்கு வாங்கியிருப்பதாக இவ்வாரயிறுதியில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அறிவித்தது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் உளவுபார்ப்பு பொறி

Niles Niemuth, 11 February 2020

அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோரை நாடு கடத்தவும் மற்றும் அவர்கள் எல்லை கடக்கும் போது அவர்களைக் கண்டறியவும் உதவுவதற்காக மில்லியன் கணக்கான கைபேசிகளின் இடம் மற்றும் நகர்வைக் கண்காணிக்கும் ஒரு வர்த்தகரீதியிலான தகவல் களஞ்சியத்தை அணுகும் உரிமையை ட்ரம்ப் நிர்வாகம் விலைக்கு வாங்கியிருப்பதாக இவ்வாரயிறுதியில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அறிவித்தது.

உலகளாவிய கடன் நெருக்கடி மீது அதிகரிக்கும் அச்சம்

Nick Beams, 22 January 2020

அதிகரித்து வரும் வர்த்தகப் பதட்டங்களும், முதலீடு குறைந்து வருவதும், பலவீனமான நம்பிக்கை மற்றும் உயர் கடன் அபாயமும் உலக பொருளாதாரத்தின் ஒரு நீடித்த வளர்ச்சிக் குறைவின் அபாயத்தைக் கொண்டுள்ளன,” என்று உலக பொருளாதார கருத்தரங்கின் வருடாந்தர உலகளாவிய அபாயங்கள் குறித்த அறிக்கை குறிப்பிட்டது.

முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் கிஸ்ஸிங்கர் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான "பேரழிவுகரமான" மோதல் அபாயத்தைச் சுட்டிக்காட்டுகிறார்

Nick Beams, 16 November 2019

சீனாவுடன் ஒத்திசைந்துபோவதன் மூலமாக அமெரிக்க வெளியுறவு கொள்கை நலன்களைச் சிறந்த முறையில் வைத்திருக்க முடியுமென கண்ட ஒரு போக்கை கிஸ்ஸிங்கர் பிரதிநிதித்துவம் செய்கிறார், இது ஆரம்பத்தில் 1970 களில் முன்னாள் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான ஒத்துழைப்பை நோக்கி திசைதிருப்பி விடப்பட்டிருந்தது.

உலகளாவிய இளைஞர்களின் தீவிரப்படலும், சோசலிசத்திற்கான போராட்டமும்

Eric London, 30 October 2019

இன்றைய இளைஞர்கள், சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு "வரலாற்றின் முடிவை" குறிக்கிறது என்றும், இளைஞர்கள் தாராளவாத ஜனநாயகத்தின் வெற்றியால் குறிக்கப்பட்ட, வர்க்க போராட்டம் மற்றும் போர் இல்லாத ஓர் உலகில் வளர்வார்கள் என்ற அனைத்து வாதங்களையும் மறுத்துரைக்கும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

சிரியாவில் துருக்கிய இராணுவ தாக்குதலை எதிர்ப்போம்!

By the International Committee of the Fourth International, 14 October 2019

ஞாயிற்றுக்கிழமை துருக்கிய பாதுகாப்புத்துறை அமைச்சக அறிக்கை ஒன்றின்படி, துருக்கிய துருப்புகள் அத்தாக்குதலின் முதல் ஐந்து நாட்களில் 550 குர்திஷ் துருப்புகளைக் கொன்றுள்ளன.

பொய்கள் அடிப்படையிலான போரில் மில்லியன் கணக்கானவர்களை அமெரிக்கா கொன்றதாக ட்ரம்ப் ஒப்புக்கொள்கிறார்

Van Auken, 10 October 2019

ட்ரம்பின் ட்வீட்டர் கணக்கு, அவர் பதவியேற்றதிலிருந்து, முன்னொருபோதும் இல்லாதளவில் அமெரிக்க செய்தி சுழற்சியில் ஆதிக்கம் செலுத்தியது. ட்வீட் செய்திகள் புலம்பெயர்ந்தோர் மீதான புதிய பாசிசவாத கொள்கைகளை அறிமுகப்படுத்தி உள்ளது, வெள்ளை மாளிகை உயரதிகாரிகள் மற்றும் மந்திரிசபை உறுப்பினர்களின் அவ்வப்போதைய நீக்கங்களை அறிவித்துள்ளது, அமெரிக்க வெளியுறவு கொள்கை மாற்றங்களைச் சமிக்ஞை செய்துள்ளது.

அமெரிக்க-கிரேக்க இராணுவ ஒப்பந்தம் ஈரான், ரஷ்யா மற்றும் சீனாவை அச்சுறுத்துகிறது

Alex Lantier and V. Gnana, 7 October 2019

பொம்பேயோவின் பயணத்தின் முக்கிய நோக்கம், ஈரான், ரஷ்யா மற்றும் சீனாவை இடையறாது கண்டனம் செய்வதாக இருந்ததோடு, இந்த மூன்று நாடுகளுக்கு எதிராகவும், அமெரிக்காவின் நேட்டோ நட்பு நாடு என்று கூறப்படும் துருக்கிக்கு எதிராகவும் இயக்கப்படும் ஒரு அமெரிக்க இராணுவ ஒப்பந்தத்தில் கிரீஸ் உடன் கையெழுத்து இடுவதுமாகும்.

ஹூஸ்டனில் ட்ரம்ப்-மோடி இன் காதல் விழா இந்திய-அமெரிக்க கூட்டணியின் போர் மற்றும் பிற்போக்கினை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது

Keith Jones, 23 September 2019

2014 முதல் இந்திய பிரதம மந்திரி மோடி, சீனாவிற்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய தாக்குதலில், இந்தியாவும் ஒருங்கிணைந்து செயல்படுவதை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளார்.

அணுஆயுத போட்டியில் அமெரிக்கா ஏவுகணைகளைக் கொண்டு சீனாவை இறுக்க உள்ளது

Andre Damon, 5 August 2019

மத்திய தூர ஏவுகணைகளைப் பசிபிக்கில் நிலைநிறுத்துவது சீன கடற்பகுதிகளையும் மற்றும் அதைச் சுற்றியுள்ள பசிபிக் தீவுகளையும் ஓர் அணுஆயுத போர்முகப்பாக மாற்றிவிடும் என்பதுடன், சீனா, கொரியா, ஜப்பான், தாய்வான் மற்றும் பரந்த அப்பிராந்தியத்தின் பில்லியன் கணக்கானவர்களின் வாழ்வை அபாயத்தில் நிறுத்தும்.

பதட்டங்கள் தீவிரமடைகையில், மத்திய உளவுத்துறைக்கு (சிஐஏ) உளவுபார்த்ததாக ஈரான் 17 பேர் மீது குற்றஞ்சுமத்துகிறது

Steve James and Robert Stevens, 23 July 2019

கட்சி தலைவராகவும் பிரதம மந்திரியாகவும் ஆகவிருக்கின்றவரும் டோரி தலைமைக்கான ஹன்ட் இன் போட்டியாளருமான முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் போரிஸ் ஜோன்சன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான 2016 கருத்து வாக்குப்பதிவுக்குப் பின்னர் இருந்து, ட்ரம்புடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி கொண்டுள்ளார்.

மத்திய கிழக்கு போர் அபாயம் அதிகரிக்கின்ற நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் பிரிட்டனின் எண்ணெய் கப்பலை சிறைப்பிடிக்கிறது

Jordan Shilton, 20 July 2019

அனைத்து ஆட்சிகளினது பெரிதும் ஸ்திரமற்ற தன்மை மொத்தத்தில் மிகப் பெரியளவில் ஓர் இரத்தம்தோய்ந்த இராணுவ மோதல் அபாயத்தை ஏற்படுத்துகிறது. ஹோர்முஸ் ஜலசந்தியில் இந்த சமீபத்திய சம்பவங்கள், ட்ரம்ப் நிலைகுலைக்கும் பாங்குள்ள சோசலிசவாதிகளுக்கு எதிராக அச்சுறுத்தியும் மற்றும் அவர் கொள்கைகளை விமர்சிப்பவர்களை அமெரிக்காவுக்கு விசுவாசமற்றவர்கள் என்று தாக்கியும் அவரின் அரசியல் எதிர்ப்பாளர்களை பாசிச வார்த்தைகளில் கண்டித்த வாரத்தின் இறுதியில் நடக்கின்றன.

டொனால்ட் ட்ரம்பின் பாசிசவாத மூலோபாயம்

Eric London, 17 July 2019

சோசலிச சமத்துவக் கட்சி பாசிசவாத அச்சுறுத்தலுக்கு ஒரு வர்க்க விடையிறுப்புக்காக போராடுகிறது. உலகெங்கிலுமான பில்லியன் கணக்கான மக்கள் அமெரிக்காவில் சமீபத்திய அபிவிருத்திகளால் பீதியடைந்துள்ளனர். அமெரிக்காவில் குழந்தைகளைக் கூண்டுகளில் அடைப்பதற்கும் மற்றும் நிர்வாக கட்டளை ஆட்சிக்கும் அங்கே பெருந்திரளான மக்கள் ஆதரவு இல்லை. ட்ரம்பின் சொந்த வாக்காளர்களில் பெரும்பான்மையினரே கூட ஒரு பாசிசவாதியை தேர்ந்தெடுக்க விரும்பவில்லை.

ஈரான் எண்ணெய் ஏற்றுமதிகளை "பூஜ்ஜியமாக" குறைக்க வாஷிங்டன் தடையாணைகளை இறுக்குகிறது

Bill Van Auken, 23 April 2019

திங்கட்கிழமை அமெரிக்க நடவடிக்கையை அறிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ, வாஷிங்டனின் கட்டளைகளை மீறுவதற்குத் துணியும் எவரொருவருக்கு எதிராகவும் பழிவாங்கும் ஓர் அடாவடித்தனமான அச்சுறுத்தும் மொழியைப் பயன்படுத்தினார்.