புலம்பெயர்ந்தோரும் அகதிகளும்

நேப்பியர் இராணுவ குடியிருப்புகளில் ஏற்பட்ட தீ விபத்து பிரித்தானிய அரசாங்கம் புகலிடம் கோருபவர்களை மிருகத்தனமாக நடத்துவதை அம்பலப்படுத்துகிறது

Thomas Scripps, 4 February 2021

வெள்ளிக்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது, ஒரு கட்டிடத்தை அழித்து, சுமார் 300 பேர் மின்சாரம், வெப்பம் அல்லது குடிநீர் இல்லாமல் இராணுவ குடியிருப்புகளில் தங்க வைக்கப்பட்டனர்

43 அகதிகள் லிபிய கடற்கரை பகுதியில் மூழ்கினர்: இவர்கள் ஐரோப்பிய ஒன்றிய அகதிகள் கொள்கையின் பலியாட்கள்

Martin Kreikenbaum, 28 January 2021

உள்நாட்டுப் போர், வறுமை மற்றும் துயரத்திலிருந்து தப்பியோடும் மக்களின் இந்த அர்த்தமற்ற மரணங்களுக்கு பேர்லின், ரோம், பாரிஸ், வியன்னா மற்றும் தி ஹேக் அரசாங்கங்கள் தான் முக்கிய பொறுப்பாக உள்ளன

ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டவர்கள் மனிதத்தன்மையற்ற நிலைமைகளை எதிர்க்கின்றனர்

Max Boddy, 11 January 2021

அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்வதற்கான உரிமை மறுக்கப்பட்ட பின்னர், கைதிகள் குடிவரவு சிறையில் மெத்தை மற்றும் கட்டிடங்களுக்கு தீ வைத்தனர்

“மிருகங்களை விட எங்களுக்கு மிகக் குறைவான உரிமைகள்தான் உள்ளன”: கிரேக்க காரா டெப்பே அகதிகள் முகாமில் தாங்கிக்கொள்ள முடியாத வாழ்க்கை நிலைமைகள்

Katerina Selin, 9 January 2021

ஐரோப்பிய அரசாங்கங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) குற்றவியல் தன்மையை அறிய விரும்பும் எவரும் கிரேக்க தீவான லெஸ்போஸில் உள்ள தற்காலிக முகாமான காரா டெப்பைப் பார்க்க வேண்டும்

ஜோன்சன் மற்றும் மக்ரோன் அரசாங்கங்கள் புலம்பெயர்ந்தோர், அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோரை துன்புறுத்துவதில் ஒத்துழைப்பை அதிகரிக்கின்றன

Simon Whelan, 14 December 2020

பிரிட்டனிலும், பிரான்சிலும் உள்ள சோசலிச சமத்துவக் கட்சிகள் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் மீதான பாசிசத் தாக்குதல்களை எதிர்க்க முன்வருமாறு ஐரோப்பா முழுவதிலுமுள்ள தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றது

முஸ்லீம் விரோத ஒடுக்குமுறை தொடர்ந்து வரும் நிலையில், பெருமளவில் மசூதிகளை மூடுவதாக பிரெஞ்சு அரசாங்கம் அறிவிக்கிறது

Samuel Tissot, 7 December 2020

மக்ரோனின் “பிரிவினைவாத எதிர்ப்பு சட்ட” வரைவு அவைக்கு சமர்ப்பிக்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, உள்துறை அமைச்சகம் மசூதிகள் மீது புதிய தாக்குதலை நடத்துகிறது

பிரதான முஸ்லிம் உரிமைகளுக்கான குழுவை கலைப்பதற்கு பிரெஞ்சு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது

Samuel Tisso, 2 December 2020

Collectif Contre Islamophobie en France இன் தலைமை நிறைவேற்றுக் குழு அரசாங்க கலைப்பு உத்தரவு நடைமுறைக்கு வருவதற்கு முன்பே தன்னைக் கலைக்க வாக்களித்துள்ளது

மரணங்கள் அதிகரிக்கையில் ஸ்பெயினின் PSOE–போடேமோஸ் அரசாங்கம் புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதலை அதிகரிக்கிறது

Alice Summers, 2 December 2020

கடந்த வாரம் கெனாரி தீவுகளை அடைய முயன்ற குறைந்தது 9 புலம்பெயர்ந்தோர் இறந்துள்ளனர், இந்த ஆண்டு மேற்கு ஆபிரிக்க இடம்பெயர்வு பாதையில் மொத்த இறப்புகள் 500 க்கும் அதிகமானவையாக உள்ளன

பாரிஸ் அகதிகள் முகாம் மீது பிரெஞ்சு பொலிஸ் வன்முறைத் தாக்குதலைத் தொடங்கியிருக்கிறது

Will Morrow, 26 November 2020

குடியரசு சதுக்கத்திலிருந்து அகற்றப்பட்ட பின்னர், பல நூற்றுக்கணக்கான வீடற்ற அகதிகளின் ஒரு குழுவானது அவர்கள் நகரத்தைச் சுற்றியுள்ள புறநகரங்களை அடையும் வரை வடக்கு நோக்கி அணிவகுத்துச் செல்ல நிர்பந்திக்கப்பட்டனர், அவர்கள் செல்லும் போது பொலிசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசித் துரத்தினர்

டைக்ரேயில் மோதல் அதிகரிக்கையில், எத்தியோப்பியா உள்நாட்டு போருக்குள் செல்கிறது

Jean Shaoul, 18 November 2020

எத்தியோப்பிய உயரடுக்கிற்கு எதிரான வறிய மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தைத் தடுப்பதற்கு அனைத்து பிரிவுகளின் அரசியல்வாதிகளும் இனப் பதட்டங்களைத் தூண்டிவிட்டுள்ளனர். அங்கு கொலைகளும் மிரட்டல்களும் அன்றாட நிகழ்வுகளாக இருக்கின்றன

ஆங்கில கால்வாய் மூலம் புலம்பெயர்ந்தவர்களின் கொடூரமான அவலநிலை பற்றி கிளேர் மோஸ்லி கூறுகிறார்: “அவர்கள் உதவி தான் கேட்கிறார்கள், என்றாலும் அவர்கள் குற்றவாளிகளைப் போல நடத்தப்படுகிறார்கள்”

Laura Tiernan, 4 November 2020

அகதிகள் தொண்டு நிறுவனமான Care4Calais உடன், இந்த வாரம் ஆங்கில கால்வாயில் மூன்று குழந்தைகளின் இறப்பு உட்பட கொடூரமான உயிர் இழப்பு குறித்து WSWS பேசியது

செனகல் கடற்கரைப் பகுதியில் அகதிகள் படகுப் பேரழிவில் குறைந்தது 140 பேர் கடலில் மூழ்கி இறந்துள்ளனர்

Will Morrow, 4 November 2020

கடந்த வாரம் ஐரோப்பாவுக்குச் செல்வதற்காக சுமார் 200 அகதிகளை ஏற்றிச் சென்ற படகு வெடித்து செனகல் கடற்கரைப் பகுதியில் மூழ்கியதில் குறைந்தது 140 பேர் நீரில் மூழ்கினர்

பிரான்சின் நீஸில் தேவாலயம் மீதான பயங்கரவாத தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்

Will Morrow, 31 October 2020

இந்த நடவடிக்கைகள் பிரான்சின் மக்கள்தொகையில் 10 சதவிகிதத்திற்கும் குறைவான அனைத்து முஸ்லிம்களும் பயங்கரவாத தாக்குதல்களின் சாத்தியமான ஆதாரமாகக் கருதப்படும் ஒரு தீவிர வலதுசாரி சூழ்நிலையைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது

தஞ்சம் கோருவோர் மற்றும் அகதிகள் மீதான தாக்குதல்களை பிரித்தானிய அரசாங்கம் முடுக்கிவிடுகிறது

Julia Callaghan, 25 October 2020

தோல்வியுறும் முதலாளித்துவ அமைப்புமுறையின் சமூகக் கேடுகளின் பழியைச் சாட்டுவதற்கும், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் பிரித்தானியா மற்றும் ஒவ்வொரு நாட்டிலும் புலம்பெயர்ந்தவர்கள், அகதிகள், மற்றும் தஞ்சம் கோருபவர்கள் பலிகடாக்களாகப் பயன்படுத்தப்படுகிறார்கள்

மக்ரோனின் இஸ்லாமிய-விரோத பிரிவினைவாதச் சட்டம்: பிரெஞ்சு ஜனநாயகத்தின் மரணம் ஓலம்

Alex Lantier, 9 October 2020

உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மனன் டிசம்பர் 9 திகதியன்று "பிரிவினைவாதத்திற்கு" எதிரான ஒரு வரைவு மசோதாவை அறிமுகப்படுத்துவார் என்று வெள்ளியன்று ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அறிவித்தார்

ஒரு கொலைகார ஒப்பந்தம்: ஐரோப்பிய ஒன்றியம் அகதிகளை நாடு கடத்தவுள்ளது

By Peter Schwarz, 2 October 2020

பேர்லின் மற்றும் பிரஸ்ஸல்ஸ் எவ்வாறு இரக்கமற்ற தன்மையுடன் முக்கிய அடிப்படை உரிமைகளையும், அகதிகளின் உயிரையும் புறக்கணிக்கின்றதென்பதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்

“இது பரிசோதனைக்கான வதை முகாம் போன்றது என்றே நான் நினைத்தேன்”

ஜோர்ஜியா புலம்பெயர்ந்தோர் தடுப்புக்காவல் மையத்தில் கட்டாய கருத்தடையும், மருத்துவ முறைகேடும் நடப்பதாக ஒரு செவிலியர் குற்றம் சாட்டுகிறார்

By Niles Niemuth, 21 September 2020

Project South என்ற சட்ட ஆலோசனைக் குழு தாக்கல் செய்துள்ள இந்த புகாரில், தடுப்புக்காவல் மையத்தில் உள்ள நிலைமைகள் “பரிசோதனைக்கான வதை முகாமை” ஒத்திருப்பதாக முன்னாள் செவிலியர் விவரிக்கிறார்

லெஸ்போஸ் அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தால் 13,000 பேர் தங்குமிடம் இல்லாமல் தவிக்க விடப்பட்டுள்ளனர்

By Robert Stevens, 12 September 2020

“மொரியா வரவேற்பு மற்றும் அடையாள மையம்” 2015-2019 போலி இடது சிரிசா அரசாங்கத்தால் ஸ்தாபிக்கப்பட்டது. அகதிகளும் தஞ்சம் கோருபவர்களும் அங்கிருந்து நாடுகடத்தப்படுவதற்கு முன்னர் சகித்துக்கொள்ள முடியாத நிலைமைகளின் கீழ் தடுத்து வைக்கப்படுகின்றனர்

கிரேக்க அரசாங்கம் 11,000 க்கும் மேற்பட்ட தஞ்சம் கோருபவர்களை வெளியேற்றுவதைத் தொடர்கிறது

By John Vassilopoulos, 5 September 2020

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் துருக்கியுடன் கிரீஸ் ஒப்புக்கொண்ட ஒரு மோசமான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அலெக்சிஸ் சிப்ராஸின் அரசாங்கத்தின் கீழ், கிரிஸ் ஐரோப்பிய எல்லைக் காவலராகவும் சிறைக் காவலாளியாகவும் மாற்றப்பட்டது

BORTAC என்றால் என்ன, அது ஏன் போர்ட்லாந்தின் தெருக்களில் ரோந்து செல்கிறது?

By Genevieve Leigh, 31 July 2020

குடிவரவு மற்றும் குடியுரிமை வழங்கும் சேவை தடுப்புக்காவல் நிலையங்களில் குடியேறியவர்களின் எதிர்ப்பைக் கட்டுப்படுத்த 1984 ஆம் ஆண்டில் இந்த பிரிவு நிறுவப்பட்டது

ஆஸ்திரேலிய தமிழ் புலம்பெயர்ந்த தாய்க்கு பல வாரங்களாக அவசர மருத்துவ சிகிச்சை மறுக்கப்படுகின்றது

By Max Newman, 28 July 2020

இக்குடும்பம் ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதிக்கக் கோரிய ஒரு மனுவில் 200,000 க்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர். மேலும் நாடு முழுவதும் பல ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர்

அமெரிக்க உச்சநீதிமன்றம் சமீபத்திய புகலிடம் கோருவோருக்கு ஆட்கொணர்வு மனு அல்லது உரிய வழக்கு தொடர்வதற்கான உரிமை இல்லை என தீர்ப்பளிக்கிறது

By Eric London, 30 June 2020

துரைசிங்கத்தின் தீர்ப்பானது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் ஏற்படுத்தப்பட்ட வன்முறை மற்றும் வறுமையிலிருந்து தப்பியோடும் மில்லியன் கணக்கான ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை, விசாரிக்காமலே கூட்டாக நாடுகடத்தப்படுவதற்கான கதவைத் திறக்கிறது

கோவிட்-19 தொற்றுநோயும் அகதிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உலகளாவிய பரிதாபகரமான நிலையும்

Jordan Shilton, 25 June 2020

உலகின் இடம்பெயர்ந்தவர்கள் ஏதாவது ஒரு நாட்டை தமது தங்களுடைய சொந்த நாடாகக் கருதினால், அது ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரமான ஜேர்மனி அல்லது ஈரானுக்கு சமமான மக்கள்தொகையைக் கொண்டிருக்கும்

உலகளாவிய தொற்றுநோயும், புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் மீதான உலகளாவிய போரும்

Bill Van Auken, 28 May 2020

இன்று வரையில், 177 நாடுகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அவற்றின் எல்லைகளை மூடியுள்ளன, பெரும்பாலும் உலகெங்கிலும் தஞ்சம் கோருவதற்கான உரிமை நடைமுறையளவில் விட்டொழிக்கப்பட்டுள்ளது

சிங்கப்பூரில் குடியேறிய தொழிலாளர்களிடையே பாரிய COVID-19 தொற்றுதல்

Gustav Kemper, 23 April 2020

சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் திங்களன்று மட்டும் மதியம் 1,426 புதிய COVID-19 நோய்த்தொற்றுகளைப் பதிவுசெய்தது. அவர்களில் 95% ஆனோர் இந்தியா, பங்களாதேஷ் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பிற நாடுகளைச் சேர்ந்த மனிதாபிமானமற்ற குடியிருப்புகளில் சிக்கியுள்ள தற்காலிக தொழிலாளர்களாவர்.

பேரழிவுமிக்க கொரொனா வைரஸ் முடக்கத்திற்கு மத்தியிலும் நம்பிக்கையிழந்த புலம்பெயர் தொழிலாளர்களை மோடி அரசாங்கம் நசுக்குகிறது

Wasantha Rupasinghe and Keith Jones, 4 April 2020

இந்திய அரசாங்கத்தின் தவறான மற்றும் சமூக பொறுப்பற்ற 21-நாள் தேசியளவிலான கொரொனா வைரஸ் முடக்கத்திற்குள் சிக்கித் தவிக்கும் ஏழை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் புகைப்படங்களைக் கண்டு இந்தியாவிலும் உலகெங்கிலுமுள்ள மக்கள் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்துள்ளனர்

Defender 2020: 25 ஆண்டுகளில் ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோ துருப்புகளின் மிகப்பெரிய அணித்திரட்டல்

Markus Salzmann, 7 March 2020

நேட்டோவின் ஆத்திரமூட்டும் இந்த இராணுவப் பயிற்சியின் அளவே, இரண்டாம் உலக போர் முடிந்து 75 ஆண்டுகளில் போருக்கான தயாரிப்புகள் எந்தளவுக்கு முன்னேறி உள்ளன என்பதை எடுத்துக்காட்டுகிறது

சிரிய போருக்கு மத்தியில், சிரிய அகதிகள் ஐரோப்பாவிற்கு செல்ல அனுமதிக்க துருக்கி தனது எல்லைகளை திறந்து வைக்கிறது

Baris Demir, 7 March 2020

சிரியாவின் வடக்கு இடலிப் மாகாணத்தில் சுமார் மூன்று டசின் சிப்பாய்களின் உயிர்களை பலிகொண்ட துருக்கி இராணுவ நிலையின் மீதான கடந்த வியாழக்கிழமை தாக்குதல், துருக்கியின் மேற்கு எல்லையில் ஒரு புதிய அகதிகள் நெருக்கடிக்கு ஏற்கனவே வழிவகுத்துள்ளது

கிரேக்க-துருக்கிய எல்லையில் அகதிகள் மீதான போரை நிறுத்து!

Johannes Stern, 6 March 2020

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் கிரேக்க-துருக்கிய எல்லையில் அகதிகளுக்கு எதிராக தொடுக்கப்பட்டு வரும் போரைக் கண்டனம் செய்கின்றன

ஆஸ்திரேலிய அரசாங்கம் தமிழ் அகதி குடும்பத்தை இலங்கைக்கு நாடு கடத்த முயல்கிறது

Oscar Grenfell, 30 August 2019

குடும்பத்திற்கான வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது, குடியேற்ற அதிகாரிகளின் மிருகத்தனமான நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டினர்.

பாரிஸில் புலம்பெயர்ந்தோர் கூடார முகாம்கள்: அகதிகளுக்கு எதிரான பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியப் போரில் பாதிக்கப்பட்டவர்கள்

Will Morrow, 13 August 2019

பிரெஞ்சு அரசாங்கமும் ஐரோப்பிய ஒன்றியமும் ஸ்தாபித்த மிருகத்தனமான அகதிகள் எதிர்ப்பு முறை என்பது, ஒட்டுமொத்த தொழிலாள வர்கத்திற்கும் விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கையாகும்.

பெருந்திரளானவர்கள் லிபியா அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவமும், அகதிகள் பாதுகாப்புக்கான போராட்டமும்

Alex Lantier, 27 July 2019

முதலாளித்துவம் உருவாக்கிய சமூக நெருக்கடிக்கு புலம்பெயர்ந்தவர்கள் மீது பழிசுமத்துவதற்கான முயற்சிகளை நிராகரிப்பது மற்றும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் எந்தவொரு நாட்டிற்கும் பயணிக்க, வாழ, வேலை செய்வதற்கான அவர்களின் உரிமையைப் பாதுகாப்பது என்பதை இது அர்த்தப்படுத்துகிறது

டெக்சாஸில் நடந்த மிகப்பெரிய ICE பணியிட சுற்றிவளைப்பு சோதனை 280 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சிறையிலிட்டது

Matthew Taylor, 5 April 2019

அந்த பகுதியில் ஹெலிகாஃப்டர்கள் மேலே பறந்து கொண்டிருக்க மற்றும் உள்ளூர் பொலிஸ் ரோந்து செய்ய, ICE ஆவணமற்றவர்களாக கருதிய புலம்பெயர்ந்தோர் நான்கு பேருந்துகளில் ஏற்றப்பட்டு பின்னர் தடுப்புக்காவல் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.